Saturday, March 31, 2012

புதிய மதிப்பீட்டினால் ஏப்ரல் 1முதல் பத்திர செலவு பலமடங்கு உயரும்!கீழக்கரையிலும் எதிரொலிக்கும்!



பட விளக்கம் : ஏப்ரல் 1 முதல் புதிய மதிப்பீடு அமலுக்கு வந்தால் பத்திர செலவு அதிகரிக்கும் என கருதி பொதுமக்கள் கீழக்கரை பத்திர பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு 7 மணிவரை குவிந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது ஒரே நாளில் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து இடம் மற்றும் மனைகளுக்கான அரசின் வழிகாட்டுதல் மதிப்புக்கான
(Guideline Draft) வரைவை தயாரித்து அரசிற்கு அளித்தனர்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் “நிலத்தின் வழிகாட்டி மதிப்பு” வருகின்ற ஏப்ரல் 1– ந் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அரசிற்கு கூடுதலாக ரூ 600 கோடி வருவாய் கிடைக்கும்.இதனால் பத்திர பதிவின் செலவு அதிகரிக்கும்தமிழகம் முழுவதும் இது எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

கீழக்கரையில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை நிர்ணயம் செய்துள்ளார்கள்.முழு விபரத்தை இத்தளத்தில் காணலாம் Madurai Zone -> ramanathapuram Taluk

http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp

கீழக்க‌ரையில் ஏற்கெனவே இருந்த வழிகாட்டுதல் மதிப்பை விட நான்கு மடங்குக்கு மேல் கூடுதலாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

உதாரணத்திற்கு அரசின் பழைய வழிகாட்டுதல் படி சதுர அடி ரூ200 என்று வைத்து கொள்வோம் இதன் மூலம்1000 சதுர அடிக்கு ரூ200000 ஆகிறது. இதற்கு பத்திரபதிவுக்கான செலவு ரூ 18000ம்தான் ஆகும் ஆனால் அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி ஒரு இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 400 என்றால் 1000 சதுர அடிக்கு ரூபாய்400000 விலையாகிறது.இதில் 9% பத்திர செலவு மட்டும் ரூ36000 ஆகிறது. என‌வே புதிய‌ வ‌ழிகாட்டுத‌லின் ப‌டி ப‌த்திர‌ப‌திவுக்கான செல‌வு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும் என்று கூற‌ப்படுகிற‌து.

இது குறித்து ரிய‌ல் எஸ்டே தொழில் செய்து வ‌ரும் ஜ‌குப‌ர் கூறிய‌தாவ‌து,
கீழக்கரையில் த‌ற்போதுள்ள‌ வ‌ரைவு மிக‌ அதிக‌ விலையில் நிர்ண‌ய‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னால் ப‌த்திர‌ப‌திவு செல‌வு எக்க‌ச்ச‌க்க‌மாக இருக்கும் இத‌னால் இட‌த்தை வாங்குப‌வ‌ர்க‌ள் அதிக‌ ஆர்வ‌ம் காட்ட‌ மாட்டார்க‌ள்.குறிப்பாக‌ கீழ‌க்க‌ரை ப‌குதியில் அதிக அளவில் இடங்களை விற்பது,வாங்குவது நடைபெற்று வருகிறது இந்த வரைவு நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த வியாபாரம் குறைந்து விடும் அரசு இந்த விலை நிர்ணயத்தை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்கு முன் கலெக்டரிடம் மனு கொடுத்தபோது எடுத்த படம்.

புதிய வழிகாட்டுதல் மதிப்பீடு வெளியான போது கீழக்கரை சேர்ந்த ஏராளமானோர் ராமநாதபுரம் கலெக்டரை சந்தித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். இக்கோரிக்கை என்னவாயிற்று என்று தெரியவில்லை

Thursday, March 29, 2012

கீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா க‌ல்லூரியில் மரக்கன்று ந‌டும் நிக‌ழ்ச்சி !


கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மரம் நடுவிழா கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் மேலாண்மைத் துறை தலைவர் நாசர் மரக்கன்று நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சி குறித்து வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த வாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் தேசிய வனநாள், உலக தண்ணீர் தினம் ஆகியவற்றை இந்த வாரத்தில் நாம் கொண்டாடி வருகிறோம். வனத்தை பாதுகாப்பதற்கும் தண்ணீரை சேமிப்பதற்கும் மரங்களே இன்றியமையாதவை. ஆகவே மாணவ, மாணவியர் அனைவரும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்த், முகம்மது இபுராகீம், அக்பர் ஜகான் ஆகியோர் செய்திருந்தனர்.
கல்லூரியின் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.நெல்சன் டேனியல், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டினார்.

கீழக்கரை கல்லூரி முதல்வருக்கு சென்னையில் விருது!



சென்னை தேசிய‌ ஒருமைபாட்டு கலாச்ச‌ர‌ அக‌டாமி க‌லை ம‌ற்றும் திரை உல‌கில் சிறந்த‌ ந‌ப‌ர்க‌ள்,ச‌மூக‌ மேம்பாட்டு ப‌ணிக‌ளுக்காக‌ சேவை செய்து வ‌ரும் அமைப்புக‌ள் பிர‌திநிதிக‌ளை தேர்வு செய்ய‌ப்ப‌ட்டு வ‌ழ‌ங்கும் சென்னையில் நடைபெற்ற‌து.

ஆண்டு தோறும் ந‌டைபெறும் இவ்விழாவில் இந்த‌ ஆண்டில் சேடோ தொண்டு நிறுவ‌ன‌ம் சார்பாக‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் க‌ல்வி ப‌ணியுட‌ன் கிராம‌ப்புர‌ இளைஞ‌ர்க‌ளின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சிக்காக‌ ப‌ல்வேறு இல‌வ‌ச‌ தொழில் திற‌ன் மேம்பாட்டு ப‌யிற்சிக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ரும் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீனுக்கு விஷ்வ‌ஜோதி 2012 விருது வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌து.இந்த‌ விருதை திரை உல‌கின் முண்ண‌னி பாட‌கி எல்.ஆர் ஈஸ்வ‌ரி நீதிப‌தி ஞான‌பிர‌காச‌ம் முன்னிலையில் வ‌ழ‌ங்கினார்.

விருது பெற்று மாவ‌ட்ட‌த்திற்கும்,க‌ல்வி நிறுவ‌ன‌த்திற்கும் பெருமை சேர்த்த‌ முத‌ல்வ‌ர் அலாவுதீனை முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்து காத‌ர்,க‌ல்லூரி தாளாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் உள்ளிட்டோர் பாராட்டின‌ர்.

Wednesday, March 28, 2012

நில அபகரிப்பில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்! கீழக்கரை பகுதியில் விழிப்போடு இருக்க வேண்டுகோள்



விழிப்போடு இருக்க வேண்டுகோள் விடுக்கும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் தமீமுதீன் துணை த‌லைவ‌ர் மாணிக்க‌ம்,பொருளாள‌ர் சாலிஹ் ஹுசைன் ஆகியோரை காண‌லாம்

தமிழக அரசின் நடவடிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் தற்போது நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். நம் கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளிலும், இது போன்ற கட்டப்பஞ்சாயத்து கும்பலின் ஊடுருவல்கள் துவ‌ங்கியுள்ள‌தாக‌வும் ம‌க்க‌ள் விழிப்போடு இருக்க‌ வேண்டுமென‌ ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌க‌த்தின‌ர் வேண்டுகோள் விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் தமீமுதீன்,செயலாளர் முகைதீன் இப்ராகிம் ஆகியோர் கூறியதாவது ,
இது போன்ற நில அபகரிப்புகளில் பெரிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமின்றி, கிராம புறங்களில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் கரை வேட்டி, கட்டப் பஞ்சாயத்தார்கள், இது போன்ற விசயங்களில் நாட்டாமை பண்ணுவது வருத்தத்துக்குரியது. இந்த நாட்டாமைகள், சில குறுக்குப் புத்தி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு , தாசில்தார் , சர்வேயர் , கிராம அதிகாரி (VAO ), இவர்களுடன் சிநேகம் வைத்து கொண்டு ஊரில் இருக்கும் வசதி வாய்த்தவர்கள் மற்றும் சிறுக சேர்த்து நிலங்கள் வாங்கி வைதோர்களிடமும் கைவரிசை காட்டுகிறார்கள்.

உதாரணமாக முதலில் வேலி அடைப்பு இல்லாமல் அல்லது கவனிப்பாரின்றி கிடக்கும் நிலங்கள் அல்லது விலை உயர்த்த நிலங்கள் இப்படி பட்ட நிலங்களை தேர்ந்து எடுத்து அதில் உள்ள சர்வே எண்ணை அறிகிறார்கள். பின்பு சம்பந்தப்பட்ட பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, அந்த இடத்தின் பட்டாகளில் தன்னுடைய பெயரை அடுத்தடுத்து இணைத்து விடுகிறார்கள். இதை வைத்து அவர்களுக்கு அறிந்தவர்களிடம் முதலில் விலைக்கு விற்று விடுகிறார்கள். கீழக்கரையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏனோ புகார் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட இவர்கள் புகார் தெரிவிக்க முன் வர வேண்டும் மேலும் இது சம்பந்தமாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்ப உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இது குறித்து துணை தலைவர் மாணிக்கம் அவர்கள் கூறும் போது

"கவனிப்பாரற்று கிடக்கும் சொத்துக்களை, இது போன்ற கும்பல், அவர்கள் சொந்த இடம் போல் அடைக்க முயற்சி மேற்கொள்ளுகிறார்கள். பின்பு நிலத்தின் உண்மையான சொந்தகாரருக்கு தெரியவந்ததுடன் இருவருக்கும் பல பஞ்சாயம், பல வாக்குவாதம் நடந்தபின் இறுதில் சமாதான பேச்சுவார்த்தை என்று அமர்கிறார்கள்.இந்த பேச்சு வார்த்தையில், கணிசமான தொகையை பாதிக்கப்பட்டவரால் இந்தகும்பலுக்கு வழங்கப்படாமல் முடிவு எட்டப் படுவதில்லை எனபது வேதனையான செய்தி.

இதில் சிக்கும் பாமர மக்கள் பலர் 'தொல்லை வேண்டாம்' என்று விட்டு கொடுத்ததும் இருக்கிறார்கள். அதுபோல அரசு அலுவலகங்களில் உள்ள சில கறுப்பாடுகளின் ஒத்துழைப்போடு பல வசதி படைத்தவர்களின் நிலங்களை அபகரிப்பு மற்றும் பேரம் பேசுகிறார்கள். இது போன்ற செயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை நம் கீழக்கரை மக்கள் தற்சமயம் கட்டாயமாக பெறுவது அவசியம்" என்று தெரிவித்தார்.

பொருளாளர் சாலிஹ் ஹுசைன் கூறியதாவது,
ஒருவர் தன நிலத்தை விற்க முயற்சி செய்தால் எந்த ஒரு நில தரகரிடமும் அவர்களின் மூலபத்திரம் அல்லது ஒரே பத்திரத்தில் ஷெட்யூலாகவோ தனித் தனியாக குடும்ப பத்திரங்களையும் கொடுக்க கூடாது. அதுபோல் தன்னுடைய நிலங்களை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வில்லங்கம் ( E .C ) போட்டு பார்த்து கொள்வது நல்லது. அவ்வாறு செய்யும் போது, முறைகேடுகள் நடந்திருந்தால் உடனடியாக, நம் பார்வைக்கு கிடைக்கும் என்றார்.

கீழக்கரை புதிய கடல் பாலத்தில் ஆபரேசன் ஹம்லா -2 ஒத்திகையால் பரபரப்பு !


ஒத்திகையில் பங்கேற்ற காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புபடையினர் .

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தீவிரவாத தடுப்பு ஒத்திகையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆபரேசன் ஹம்லா-2 என்ற பெயரில் ஒத்திகை கீழக்கரை கடல் பகுதியில் நடத்தப்பட்டது.ஒத்திகை என்று அறியப்படாததால் தீவிரவாதிகள் பிடிபட்டதாக கீழக்கரையில் செய்திகள் பரவியது

அரசின் பாதுகாப்பு படையினர் மாறுவேடத்தில் டம்மி ஆயுதங்கள் ,வெடிபொருட்களுடன் கடல் மார்க்கமாகவோ,தரை வழி மார்க்கமாகவோ வருவார்கள் இவர்களை காவல்துறையினர் கடல் மார்க்கமாகவோ,தரைவழிமார்க்கமாகவோ தப்ப விடாமல் சதி ஒத்திகையை தடுத்து பிடிக்கப்படவேண்டும் .இதன் மூலம் காவல்துறையினரை கூடுதல் உஷார் படுத்த முடியும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற ஒத்திகை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் டி.எஸ்.பி முரளிதரன் தலைமையில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சுரேஸ்,கீழக்கரை எஸ்.ஐ.கார்மேகம்,தனிப்படை ஏட்டு செல்வராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆப்ரேஷன் ஹம்லா-2 என்ற பெயரில் கீழக்கரையில் ந‌ட‌ந்த‌ இந்த ஒத்திகையின் போது இரவில் தூத்துக்குடி ஆந்தோனி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைபடகில் பத்து பேர் கீழக்கரை புதிய ஜெட்டி பாலத்தில் வந்து இறங்கினர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இவ‌ர்க‌ளை சோத‌னை செய்து கைது செய்த‌ன‌ர்.

இந்த‌ ப‌த்து பேரில் த‌மிழ்நாடு க‌மாண்டோ ப‌டையை சேர்ந்த‌ பாண்டிய‌ராஜ‌ன்(22),முர‌ளித‌ர‌ன்(21)பாஸ்க‌ர்(22),இளையராஜா ம‌ற்றும் இந்திய‌ காவ‌ல் ப‌டையை சேர்ந்த‌ பிராசாந்த்(34),க‌ருப்ப‌ச்சாமி(22) மேலும் தூத்துக்குடி மீன‌வ‌ர்க‌ள் ஜான்ச‌ன்(48) அந்தோணி(34),பெல்லாரிமெயின்(44) தாம‌ஸ்(62) உள்ளிட்டோர் இந்த‌ ஒத்திகையில் ப‌ங்கேற்ற‌ன‌ர்.


ஒத்திகையின் போது விழிப்புட‌ன் செய‌ல்ப‌ட்டு 10பேரையும் பிடித்த‌ கீழ‌க்க‌ரை காவ‌ல்துறையின‌ரை எஸ்.பி.ம‌கேஸ் குமார் பாராட்டினார்.

கீழக்கரை பகுதியில் அழிந்து வரும் தென்னை விவசாயம்! விழித்துகொள்ளுமா விவசாயத்துறை ?


பட விளக்கம் : கீழக்கரை அருகே மாயாகுளம் செல்லும் வழியில் தனியார் தோட்டத்தில் அமைந்திருந்த நான்கு கிளையுடன் கூடிய தென்னை மரம் (பழைய படம்)



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ,ஏர்வாடி,காஞ்சிரங்குடி,மாயாகுளம்,மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.நூற்றுக்கணக்கானோர் இப்பகுதியில் தென்னை விவாசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .ஆண்டுதோறும் லட்சக்கணக்கான‌ தேங்காய்கள் இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு ஏற்றுமதியாகி வந்தன.ஆனால் தொடர்ந்து ஏற்படும் பல்வேறு சிரமங்களால் பெரும்பாலானோர் தென்னை விவாசாயத்தை விட்டு வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு'என்பார்கள் ஆனால் "தென்னையை வளர்த்தாலும் கண்ணீர்தான் என்கிறார்கள்.இப்பகுதி தென்னை விவசாயிகள்.

இது குறித்து தென்னை விவசாயம் செய்யும் சித்தீக் என்பவர் கூறியதாவது,

பல்லாண்டு காலமாக‌ தென்னந்தோப்பு வைத்துள்ளோம்.இப்ப‌ சரியான காய்ப்பும் இல்லை. தண்ணியும் உப்பாகிப் போச்சு. இருந்தாலும் விடாம விவசாயம் செய்யுறோம். நஷ்டமானாலும் தொடர்ந்து செய்யுறோம்.ஆனா, வேளாண்துறையோ எங்களுக்கு எந்த விதமான நன்மையும் செய்யுறதில்லை.நஷ்டம் சரியாயிரும்ங்கற நம்பிக்கை இருக்கு ஆனால் எவ்வளவு காலத்துக்குத்தான் நஷ்டத்துல செய்ய முடியும்னு தெரியல அவ்வப்போது தென்னைகளுக்கு வாடல் நோய் வந்திடுது. காண்டாமிருக வண்டு வந்து தென்னைகளை நாசம் பண்ணுது. இதுக்கு கண்டிப்பா அரசு எங்களுக்கு நஷ்ட ஈடு தரணும்.கீழக்கரையில் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.அடிக்கடி தென்னை விளைபொருட்கள் கண்காட்சி நடத்தலாம் இதன் மூலம் ஏராளமான மொத்த‌ வியாபாரிகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றார்.


தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கேரளாவில் பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு அவர்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஏற்றுமதிக்கான சந்தைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மேலும் தென்னைக் கழிவுகளில், பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தைக்கு எடுத்து செல்கிறது.இதனால் அங்கு தென்னை விவசாயம் பெருகுகிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி தென்னை விவாசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் தொடர்ந்து நஷ்டத்தை விவாசாயிகள் சந்திப்பார்களேயானால் அவர்கள் அத்தொழிலிருந்து விலகி தற்போது மிஞ்சியிருக்கும் தென்னந்தோப்புகளும் அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும்.இப்பகுதி விவசாயத்துறை விழித்து கொள்ள வேண்டும்.

Monday, March 26, 2012

கழிவுநீரால் மாசுப‌டும் க‌ட‌ல்!சீர்ப‌டுத்த பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ம்! நக‌ராட்சி தலைவ‌ர் பேட்டி !




கீழக்கரையில் 21 வார்டுகள் உள்ளன. சுமார் 50000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.கீழ‌க்க‌ரையில் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌ம் இல்லாத‌தால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மூலமாக‌ சுத்திகரிக்கப்படாமல் சாக்க‌டையாக‌
கடலில் கலக்கின்றன.இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது.

ஏற்கேனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட‌ பல்வேறு காரணங்களால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் இது போன்ற சாக்கடை கலப்பதால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன் வளம் குறைந்து வருவதாக கடல் வாழ் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் பல இடங்களில் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு நிர்வாகம் கால்வாய் அடைப்பை சரி செய்வது,மருந்து தெளிப்பது உள்ளிட்ட‌ நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்காலிக தீர்வாகவே உள்ளது.


சாக்கடை நீரை சாலையில் ஓடாமலும் ,கடலில் கலப்பதையும் தடுப்பதென்றால் நிர‌ந்த‌ர‌ தீர்வாக கீழக்கரை நகரில் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை அம‌ல் ப‌டுத்தினால் ம‌ட்டுமே ச‌ரி செய்ய‌ முடியும். இதன் மூலம் சாக்கடை தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீரை விவசாய‌ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் .ஆய்வு ப‌ணிக‌ளெல்லாம் முடிக்க‌ப்பட்ட இத்திட்டம் ப‌ல‌ ஆண்டுக‌ளகாக விரைவில் துவ‌ங்கும் என‌ அறிவிப்பு ம‌ட்டுமே உள்ள‌து.ஆண்டுக‌ள் க‌ட‌க்கும் போது இத‌ற்கான‌ திட்ட‌ ம‌தீப்பீடும் அதிக‌ரிக்கும்.என‌வே விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்த‌ முய‌ற்சி செய்து வ‌ருகிறோம். இத்திட்ட‌த்திற்கான ம‌தீப்பீடு ரூ50 கோடி வ‌ரை இருக்கும் என‌ எதிர்பார்க்கிறேன்.உரிய நிதியை பெற்று அடுத்த‌ ஆண்டு இத்த்திட்ட‌ம் துவ‌ங்குவ‌தற்கு வேண்டிய‌ அனைத்து ஏற்பாடுக‌ளையும் செய்து வ‌ருகிறோம்.இத‌ன் மூல‌ம் மேல் கூறியுள்ள பிர‌ச்ச‌னைக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ப்ப‌டும் என்றார்

செய்யது முகமது அப்பா தர்காவில் கந்தூரி விழா துவங்கியது


மகான் செய்யது முகமது அப்பா ஒலியுல்லா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜாதி, மத பேதமின்றி ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

கீழக்கரை மேலத்தெரு பகுதியில் மகான் செய்யது முகமது அப்பா ஒலியுல்லா தர்ஹா உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கந்து�ரி விழா தொடங்கியது. கந்தூரி விழாவில், ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக உலக ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும், மாவட்ட ஹாஜி சலாஹூதீன் ஆலிம் சிறப்பு பிராத்தனை (துஆ) ஓதினார்.

தொழில் அதிபர் சித்திக் முன்னிலையில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மவுலீது சரீப் (புகழ்பாடி) நடை பெற்று நார்ஸா வழங்கப்பட்டது. ஏப். 6ல் (முஸூவு) சந்தனம்பூசும் விழா, ஏப். 22ல் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு (தப்ரூக்) செய்சோறு வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை தர்ஹா இயக்குனர் சதக்கத்துல்லா மற்றும் விழா குழு வினர்கள் மக்பூல் சுல்தான், பீர்முகம்மது ஆலிம், கே.எம்.மீராசா, அடுமை, பாரூக், காசிம், மற்றும் பலர் செய்திருந்தனர்.

Sunday, March 25, 2012

ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு!


ப‌ட‌ விள‌க்க‌ம் : த‌லைமை ஆசிரியை ஹ‌மீதுன் நிஷாவுக்கு நினைவு ப‌ரிசு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த ஹமீதுன் நிஷா,பள்ளியின் தாளாளர் சிராஜிதீன் உள்ளிட்ட சிலருக்கு பதினெட்டு வாலிபர் தர்ஹா கமிட்டி சார்பில் பாராட்டு விழா கமிட்டியின் உறுப்பினர் ஜப்பார் தலைமையில் சாலை தெரு பெண்கள் தொழுகைப்பள்ளியில் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா முன்னிலையில் நடைபெற்றது.

ஹமீதியா தொடக்கப்பள்ளி தாளாளர் சிராஜுதீன் ,ஆசிரியை ஆலியா,கமிட்டி தலைவர் சாகுல் ஹமீது உறுப்பினர் சீனிமுகம்மது,காதர்,நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஜகுபர் சாதிக் வரவேற்றார்.நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.கமிட்டி செயலாளர் சித்தீக் அலி நன்றி கூறினார்.

1938ம்வருடம் துவங்கிய ஹமீதியா தொடக்கப்பள்ளியில் முதன்முறையாக கீழக்கரையை சேர்ந்த ஒரு பெண் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

நீண்ட கால தேவையான குப்பைதளம் அமைக்கும் பணி தீவிரம்!


பட விளக்கம் : குப்பை தளம் அமைக்கும் பணியை நேரில பார்வையிடும் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா

கீழக்கரை நகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்கென்று தளம் இல்லாமல் இருந்து வந்தது.தில்லையேந்தல் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் தனியாரால் கீழக்கரை நகராட்சிக்கு குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தளம் அமைப்பதற்கு தளம் வழங்கப்பட்டது. ஆனால் குப்பை தளம் அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி முடங்கியது.

இந்நிலையில் புதிய நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று இது குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்பட்டதால் தற்போது அத்தளத்தில் சுற்றுசுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் எக்ஸ்னோர‌ அமைப்பின‌ர் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் இத்த‌ள‌த்தை செம்மைப‌டுத்தி செய‌ல்ப‌டுத்த‌ ந‌க‌ராட்சியுட‌ன் இணைந்து செய‌ல்ப‌ட‌ உள்ள‌தாக‌ அறிவித்துள்ள‌ன‌ர்.

இத்தளம் அமைவதற்கு உள்ள இடையூறுகளை அகற்ற முக்கிய பங்காற்றிய ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா இத்த‌ள‌ம் அமைப்ப‌த‌ற்கான‌ ப‌ணியை நேரில் அடிக்கடி சென்று பார்வையிட்டு வ‌ருகிறார்.இது போன்று நக‌ராட்சி துணை த‌லைவ‌ர் ,கவுன்சிலர்களும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.

இது போன்று நேரில் சென்று பார்வையிட்டு வருவது ப‌ணியை விரைவாக‌வும்,நேர்த்தியாக‌வும் செய்வ‌த‌ற்கு வ‌ழிவ‌குக்கும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
த‌ற்போதைய கீழக்கரை குப்பைக‌ள் கீழ‌க்க‌ரை வெல்பேர் தொண்டு நிறுவனம் உதவியால் த‌னியார் தோட்ட‌த்தில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தால் கொட்ட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

குப்பைதளம் அமைக்கும் பணி முடிவடைந்து கீழக்கரையில் உள்ள குப்பைகள் முழுவதுமாக‌ அக‌ற்ற‌ப்ப‌ட்டு சுத்த‌மான‌ ந‌க‌ராக‌ ந‌ம் கீழ‌க்க‌ரை திக‌ழ‌ வேண்டும் என்ப‌தே ந‌ம் ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.இப்ப‌ணியை இணைந்து செய்து முடிக்கும் ஒவ்வொருவ‌ரும் பாராட்டுக்குறிய‌வ‌ர்க‌ள் என்ப‌தில் மாற்று கருத்தில்லை.

சதக் பாலிடெக்னிக்கில் அதிக மதிப்பெண்‌ பெற்ற‌ மாணவ,மாணவியருக்கு பாராட்டு !


பட விளக்கம்: அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கல்லூரி இயக்குநர் ஹபீப் பரிசு வழங்கினார்

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி துனை முதல்வர் நவநீதராஜன் வரவேற்றார். இதில் கடந்த ஆண்டு 100சதவீத வருகை பதிவு ,மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அயூப்கான் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை மரியதாஸ் அலுவலர் மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Saturday, March 24, 2012

நகராட்சியில் அதிகாரிகளை நியமிக்காததால் சான்றிதழ்கள் தாமதம்! பொதுமக்கள் அவதி !



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் அதிகாரிகள் நியமிக்கபடதாதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு பிறப்பு ,இறப்பு சான்றிதழ்கள் கிடைப்பதே அரிதாகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மிக முக்கியமாக நகராட்சி கமிஷனர் இது வரை நியமிக்கப்படவில்லை ராமநாதபுரம் கமிஷனர்தான் கூடுதல் பொறுப்பாக கீழக்கரையிலும் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா சம்பந்தப்பட்ட அமைச்சரையும்,உயர் அதிகாரிகளையும் சந்தித்து இது குறித்து உடனடி ஏற்பாடு செய்ய கோரிக்கை வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஆணையருக்கு ( நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகராட்சிகள் நிர்வாக ஆணையகம்) இது குறித்து மனு அனுப்பியுள்ளார்

அதில் கூறியிருப்பதாவது,

கிழக்கரை நகராட்சியில் பல மாதங்களாக அணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணியில் இருந்த சரவணன் என்பவர் மாற்றப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றன. இது நாள் வரை கீழக்கரை நகராட்சிக்கு சுகாதார ஆய்வாளர் நியமிக்கபடவில்லை. மேலும் கீழக்கரை நகராட்சியில் ஒவர்சீராக பணியில் இருந்த மணி என்பவர் மாற்றப்பட்டு மதுசூதணன் என்பவர் வந்தார் அவரும் அலுவலகத்திற்கு சரியாக வருவது இல்லை. விடுமுறையில் இருந்து வருகின்றார். கீழக்கரை நகராட்சியில் அசிஸ்டெண்ட் பணியில் உள்ள சந்திரசேகர் என்பவரும் பணியை சரவர செய்வதில்லை. மொத்தத்தில் கீழக்கரை நகராட்சியில் முக்கிய பொறுப்புகளில் ஆள் இல்லாமல் உள்ளதால் அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கி விட்டன. அலுவலகத்தில் அனைத்து பணிகளையும் சில அலுவலக இளநிலை உதவியாளர்கள் தான் செய்து வருகின்றார்கள்.

கீழக்கரை நகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், வீட்டு வரிபெயர் மாற்றம் மற்றும் கட்டிட வரை பட அனுமதி போன்றவற்றிற்காக கீழக்கரை நகர் மக்கள் பல மாதங்களாக நகராட்சி அலுவலகம் வந்து அலைகின்றனர். நகருக்கு அத்தியாவசிய திட்ட பணிகள் செய்ய முடியாமல் முடங்கிப்போய் உள்ளன.

கீழக்கரை நகராட்சியில் பணியாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த காலகட்டத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக இருந்த (Sanitary workers) பொது சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கை தான் இன்றைய தேதி வரை நீடிக்கின்றது. நகர் கடந்த 30 ஆண்டுகளில் பல மடங்கு விரிவடைந்துள்ளது மக்கள் தொகையும் கனிசமாக உயர்ந்துள்ளது.

கீழக்கரை நகராட்சியின் அவசியம் கருதி உடனடியாக ஒரு நல்ல நிர்வாக திறமையுள்ள ஆணையாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒவர்சீர் (பணிமேற்பார்வையாளர்) ஆகிய மூன்று முக்கிய காலி பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நகராட்சி அந்தஸ்த்துக்கு உயர்ந்துள்ள கீழக்கரை நகருக்கு தேவையான புதிய பணியிடங்களை நிரப்ப உடன் அரசு ஆணை ஏற்படுத்தி தர வேண்டுமாறு நகராட்சிகள் நிர்வாக ஆணையர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, March 22, 2012

நகராட்சியை கண்டித்து வித்தியாச கெட்டப்பில் ஊர்வலமாக வந்த கவுன்சிலர்கள் !



கீழக்கரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமையில் துணை தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலையில் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டிப்பதாக கூறி திமுக கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா நஜிமுதீன்(20வது வார்டு) வாயில் பணத்தை ஒட்டி கொண்டு பண மாலை அணிவித்து கொண்டும்,5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது குடிநீர் மேல் தொட்டி போல் மாதிரி செய்து தலையில் அணிந்து கொண்டு ஊர்வலமாக நகராட்சி கூட்டத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து இடிமின்னல் ஹாஜா கூறுகையில் ,
நகராட்சியில் புதியதாக குடிநீர் பைப்கள் அமைப்பதற்கு ரூ1 கோடியும்,வாறுகால் வாய்கால் கட்டுவதற்கு ரூ50லட்சமும்,குப்பைகிடங்கு தளம் மற்றும் சுற்று சுவர் கட்டுவதற்கு ரூ 50 லட்சமும் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பப்பட்டது.இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது.இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த‌ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது போன்று பணமாலை அணிந்து வந்துள்ளேன் என்றார்.

இது குறித்து கவுன்சிலர் சாகுல்ஹமீது கூறுகையில் ,இரண்டு குடிதண்ணீர் மேல்நிலை தொட்டிகள் பழுதடைந்துள்ளது.அதை புதியதாக கட்டாமல் பைப் மட்டும் அமைப்பது சரியல்ல என்பதை தெரியப்படுத்த தண்ணீர் தொட்டிபோல் மாதிரி செய்து தலையில் மாட்டி வந்துள்ளேன் என்றார்.

கிடப்பில் போடப்பட்ட கீழக்கரை தனி தாலுகா அறிவிப்பு!விரைந்து செயல்படுத்தப்படுமா ?


ராமநாதபுரம் தாலுகா அலுவலகம்

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ், உள்பட பல்வேறு சான்றிதழ்கள் தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.

கீழக்கரை ராமாநாதபுரம் தாலுகாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு அலுவல்களுக்கு ராமாநாதபுரம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டுய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்லாண்டுகளாக கீழக்கரையை சேர்ந்த‌ பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர் .இக்கோரிக்கையை ஏற்று கடந்த திமுக அரசு கீழக்கரையை தனி தாலுகவாக அறிவித்தது.இதன் பேரில் கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை தாலுகா அலுவலகத்துக்குத் தர முன் வந்ததைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அவ்விடத்தை பார்வையிட்டனர் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்றனர்.இது நடைபெற்று மாதாங்களாகி விட்டது .

விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ கோரி த‌மிழ‌க‌ அர‌சுக்கு ம‌னு அனுப்ப‌ உள்ள‌தாக‌ ச‌மூக‌ ந‌ல‌ நுக‌ர்வோர் அமைப்பின‌ர் தீர்மான‌ம் நிறைவேற்றி உள்ள‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ச‌மூக‌ ந‌ல‌ நுக‌ர்வோர் சேவை இய‌க்க‌த்தின் பொதுக்குழு கூட்ட‌ம் ந‌டைபெற்றது. நிர்வாகிகள் செய்யது இப்ராகிம்,ந‌ல்ல‌ இப்ராகிம் ,த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

காரைக்குடியிலிருந்து கீழ‌க்க‌ரை வ‌ழியாக‌ க‌ன்னியாகும‌ரி வ‌ரை புதிய‌ அக‌ல‌ ர‌யில் பாதை திட்ட‌த்திற்கு ம‌த்திய‌ ப‌ட்ஜெட்டில் நிதி ஒதுக்காத‌து குறித்து ம‌த்திய‌ அர‌சிற்கு ம‌னு அனுப்புவ‌து என்றும்,கீழ்க்க‌ரை த‌னி தாலுக‌வாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டும் கிட‌ப்பில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து இதை விரைவாக‌ செயல்ப‌டுத்த கோரி த‌மிழ‌க‌ அர‌சிற்கும்,ராமாநாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ருக்கும் ம‌னு அனுப்புவ‌து என்றும் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தீர்மாண‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கமாக ச‌தக்‌ பாலிடெக்னிக் க‌ல்லூரியில் அர‌சு லேப்டாப் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி !



மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்க தமிழக அரசு அறிவித்ததின் பேரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கலை, மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் லேப்-டாப் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கமாக‌ கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் ந‌ந்த‌குமார் த‌லைமை வ‌கித்து லேப்டாப்க‌ளை மாண‌வ‌ர்க்ளுக்கு வ‌ழ‌ங்கினார்.

கல்லூரி முதல்வர் ஜகாபர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்று பேசுகையில் ,
இந்த கல்லூரியில் ஆயிரத்து 394 லேப்டாப்கள் கொடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அனைத்து லேப்டாப்களும் இரண்டு கட்டமாக வழங்கப்படும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

ஏழை எளிய‌ மாண‌வ‌ர்களுக்கு எட்டாக்க‌னியாக‌ இருந்த‌ லேப்டாப் இன்று எட்டுக‌னியாக‌ கிடைத்துள்ள‌து. மேலும் இந்த‌ லேப்டாப்பில் திருக்குற‌ள் அனைத்து குற‌ள்க‌ளும் அத‌ன் தெளிவுரையும் உள்ள‌து.அனைத்துதுறையுன் பாட‌த்திட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் அண்ணா ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர்க‌ளின் பாட‌தொகுப்பும் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அனைத்து துறையின் பாட‌த்திட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் அண்ணா ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர்க‌ளும் பாட‌தொகுப்பும் இதில் இணைக்கப்ப‌ட்டுள்ள‌து.இத‌ன் மூலம் மாணவ‌ர்கள் ந‌ல்ல‌ அறிவாற்ற‌லையும்,க‌ல்விய‌றிவையும் அதிக‌ரித்து கொள்ள‌ வேண்டும் என்றார்.

சாலைக‌ளில் சுற்றி திரியும் ம‌ன‌நோயாளிக‌ள்!ப‌ராம‌ரிக்க‌ அர‌சு ம‌ன‌ந‌ல‌ காப்ப‌க‌ம் அமைக்க‌ கோரிக்கை !


ப‌டம் :keelakaraichairman.blogspot.com(ம‌ஹ்மூத் நெய்னா & ஹுசைன் )
இராமநாதபுரத்தில் மனிதநேய அறக்கட்டளை சார்பில் செஞ்சோலை மனித நேய காப்பகம் என்ற நல காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது.

நாகேஷ்வரன் என்பவர் இந்த அமைப்பின் நிறுவன தலைவராவார். இந்த காப்பகத்துக்கு கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா வருகை தந்தார். அங்கு இருக்கும் மன நோயாளிகளை கண்டு அவர்களின் நலனை விசாரித்தவர். அவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். மேலும் காப்பக திட்டங்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார்.

மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,
தனியார்கள் சமூக அக்கறையோடு இதுபோன்று சேவைகளில் ஈடுபடுவது பாராட்டுக்குறியது.மேலும் பராமரிப்பின்றி சாலைக‌ளில் சுற்றி திரியும் ம‌ன‌நோயாளிக‌ளை பாதுகாக்க‌ அர‌சு சார்பில் ம‌ன‌ ந‌ல‌ காப்ப‌க‌ம் தேவை. ஏர்வாடி த‌ர்ஹா ப‌குதியில் அமைய‌ இருப்பதாக த‌க‌வ‌ல் உள்ளது.அரசு ம‌ன‌ ந‌ல‌ காப்ப‌க‌ம் அமைவ‌த‌ற்கான‌ முய‌ற்சியில் என்னால் இய‌ன்ற‌ ப‌ங்க‌ளிப்பை செய்வேன் என்றார்.

வெளியூரை சிலர் மன நோயாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து ஏர்வாடி தர்ஹா - கீழக்கரை சாலைகளில் இறக்கி விட்டு செல்லும் அவலம் நீண்ட காலமாக இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு இறக்கி விடப்பட்ட மனநோயாளிகள் அருகிலுள்ள ஏர்வாடி தர்காவிற்கும்,எஞ்சியவர்கள் கீழக்கரை மற்றும் அருகிலுள்ள ஊர்களில் பரிதாபமாக சுற்றி திரிகிறார்கள்.

ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் மன நலகாப்பகத்தில் தீவிபத்து நடந்தது. இதில் 28 மனநோயாளிகள் தீயில் கருகி உயிரழந்தனர்.இது குறித்து நடவடிக்கை எடுத்த அரசு அங்கு அனுமதியில்லாமல் நடத்தப்பட்டு வந்த அனைத்து மன நலகாப்பகங்களும் முடபட்டன.இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனற்று உள்ளது. ஏர்வாடி த‌ர்ஹாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ன‌ ந‌ல காப்ப‌க‌ம் அமைப்ப‌த‌ற்கு அரசுக்கு இட‌ம் த‌ருவ‌தாக‌ அறிவித்து நீண்ட‌ கால‌மாகி விட்ட‌து ஆனால் மனநல காப்பகம் அமைப்பதற்கு அர‌சு எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை.

விரைவில் அர‌சு ஏர்வாடி த‌ர்ஹாவில் ம‌ன‌ந‌ல‌ காப்ப‌க‌ம் அமைக்கப்பட்டால் இது தொட‌ர்பான‌ ப‌ல்வேறு பிர‌ச்ச‌னைக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.

Wednesday, March 21, 2012

கீழக்கரையில் புதிய கடைகள் திறப்பு விழா !


கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழாக்கள்

கீழக்கரை என்.எம்.டி. தெருவில் "பரியா அபாயா"(கவரிங் மற்றும் பேன்சி கலெக்சன்) என்ற பெயரில் கடை திறப்பு விழா நடைபெற்றது.

இக்கடையின் நிர்வாகியான ஹபீப் முஹம்மது கூறுகையில் ,நியாயமான விலையில் தரமான பொருட்களை நமதூர் மக்களுக்கு தருகிறோம்.அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிப்பு : இது போன்ற‌ நிக‌ழ்ச்சிகளை கீழ‌க்க‌ரைடைம்ஸில் வெளியிட‌ keelakaraitimes@yahoo.com என்ற‌ முக‌வ‌ரியில் அனுப்பி த‌ர‌லாம்.எவ்வித‌ க‌ட்ட‌ண‌மும் இல்லை என்ப‌தை தெரிவித்து கொள்கிறோம்.



இதே போல் ப‌ணிய‌க்கார‌ தெருவில் ஊறுகாய்க‌டை திற‌ப்பு விழா ந‌டைபெற்ற‌து.

ந‌கராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் த‌லைமை வ‌கித்து திற‌ந்து வைத்தார்.இந்நிக‌ழ்ச்சியில் அலிகான்,சின்ன‌வ‌ர் க‌பீர்,ம‌தார் சாகிபு,ஹாமிது இப்ராகிம்,க‌வுன்சில‌ர் அன்வ‌ர் அலி,ஜெய‌பிர‌காஷ் ம‌ற்றும் அமானுல்லா,த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கடையின் நிர்வாகியான அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் கூறுகையில் ,
உய‌ர் த‌ரமான் அனைத்து வகையான ஊறுகாய்க‌ளை ம‌க்க‌ளுக்கு ம‌லிவான‌ விலையில் வ‌ழ‌ங்குகிறோம்.ம‌க்க‌ள் ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என்றார்.

கீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலையில் பேச்சாளை மீன் ஏற்றி வந்த‌ லாரிக‌ள் சிறைபிடிப்பு !



கீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலை திருப்புல்லாணி முனை ரோட்டில் பேச்சாளை மீன் ஏற்றி வ‌ந்த‌ இர‌ண்டு லாரிக‌ளை திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கார‌னேந்தல் ம‌க்க‌ள் சிறைபிடித்த‌தால் அப்ப‌குதியில் ப‌ர‌ப‌ர‌ப்பு ஏற்ப‌ட்ட‌து.

ராமேஸ்வ‌ர‌ம் ,பாம்ப‌ன் ப‌குதிக‌ளிலிருந்து பேச்சாளை மீன்க‌ளை லாரிக‌ளில் ஏற்றி கிழ‌க்கு கட‌ற்க‌ரை சாலை வ‌ழியாக‌ கொண்டு செல்ல‌ப்ப‌டுகிற‌து.உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காமல் லாரிக‌ளில் மீன்களை ஏற்றுவதால் வ‌ழிந்தோடும் மீன்க‌ழிவு த‌ண்ணீரால் வ துர்நாற்றம் ஏற்பட்டு லாரி செல்லும் வழியில் உள்ள‌ ஊர்களுக்கு சுகாதார கேடு விளையும் சூழ்நிலை ஏற்படுவதாகவும்.மேலும் லாரிக‌ளில் வ‌ழிந்தோடும் மீன்க‌ழிவு த‌ண்ணீர் ப‌சைத‌ன்மையுட‌ன் இருப்ப‌தால் வாக‌ன‌ங்கள் பிரேக் உபயோகித்தாலும் வாகனம் நிற்க‌மால் அடிக்க‌டி விப‌த்துக்க‌ள் ந‌டைபெறுவ‌தாக அப்ப‌குதி ம‌க்க‌ள் குற்ற‌ஞ்சாட்டி வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் இது குறித்து ப‌ல்வேறு புகார்க‌ள் கொடுத்து அரசாங்கம் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை என்று கூறி பொக்கார‌னேந்தல் கிராம‌ ம‌க்க‌ள் கீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலையில் திருப்புல்லானி முக்கு ரோடு அருகே பாம்ப‌னிலிருந்து உரிய‌ பாதுகாப்பின்றி பேச்சாளை மீன் ஏற்றி வ‌ந்த‌ இர‌ண்டு லாரிக‌ளை சிறை பிடித்து திருப்புல்லாணி போலீசாரிட‌ம் ஒப்படைத்த‌ன‌ர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,எஸ்.ஐ மணிமாறன் லாரிகளை ஓட்டி வந்த திருமலை புதூர் மரிய தாஸ்(31),தூத்துக்குடி புகழ்ராயபுரம் மாரியப்பன்(42) ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய ந‌க‌ராட்சி ப‌த‌வியேற்று அடிப்ப‌டை தேவைக‌ளை நிறைவேற்ற‌வில்லை !கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு க‌ழ‌க‌ம் கண்டன தீர்மான‌ம்!


படம் : சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் ஒரு பகுதி

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் தமீமுதீன் தலைமையில் நகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் மாணிக்கம், செயலாளர் முகைதீன் இப்ராகீம், இணை செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, பொருளாலர் முகம்மது சாலிஹ் ஹுசைன்(கீழை இளையவன்), செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கீழக்கரை நகர்மன்றம் பொறுப்பேற்று நான்கு மாதம் ஆகியும் நகருக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்தும்,
இக்குறைபாடுகள் களைய கீழக்கரை நகராட்சிக்கு தனி ஆணையர் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டு நேரத்தை விட கூடுதலாக மின்சாரத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் கீழக்கரை மின்சார வாரியத்தை கண்டித்தும்,

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிரான ஐக்கிய நாட்டு சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் முசம்மில் உசேன், சீனி முகம்மது சேட், பக்ருதீன், உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தலைவர் தமீமுதீன் கூறியதாவது,

எங்களது அமைப்பான மக்கள் நல பாதுகாப்பு கழகத்தில் பொருளாளர் பதவி வகித்த சா லிஹ் ஹுசைன்(கீழை இளையவன்) அவர்கள் சில நாட்களுக்குமுன் அமைப்பில் ஏற்பட்ட சில குறைபாடுகளால் மனவருத்தம் அடைந்து வலைபதிவு மற்றும் முக புத்தகத்தில் தனது பதவியை ராஜினாமா பண்ணுவதாக அறிவித்து இருந்தார் , இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்தது.

அமைப்பு தொங்கி 10 வருட காலமாக நமது ஊர் கீழக்கரை சுகாதாரம் மற்றும் அரசு அலுவலக குறைபாடுகளை சுட்டிக்காட்டி பல தீர்வுகள் எடுத்ததில் எங்களது அமைப்பு முக்கியம் வகித்துள்ளது. இதற்க்கு பல ஆதாரங்களும் ஆவணகளும் எங்களிடம் உள்ளன, மேலும் சாலிஹ் ஹுசைன்(கீழை இளையவன்) அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை கழகம் அங்கீகரித்ததின் பேரில் அவர் மீண்டும் பதவி தொடர்வதாக கூறியுள்ளார்,

இன்ஷாஅல்லா வரும் காலங்களில் நம் அமைப்பின் நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள் அமைப்பு மற்றும் அமைப்பு சாரா குறைகளை தலைமையில் தெரிவித்தபின், பிறர் அறிய செய்யும் படி கேட்டு கொள்கிறோம், மேலும் நாம் நமது நகராட்சி செயல்களின் குறைகளை மட்டும் காணாது அவர்கள் செய்த நன்மைகளையும் அறிந்து வாழ்த்து தெரிவிப்பது கடமையாகும்" என்று தெரிவித்தார்.

Tuesday, March 20, 2012

சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூரோடு விபத்து அபாயம்!




கீழக்கரையின் மெயின் ரோடு வள்ளல் சீதக்காதி சாலை பகுதியில் 50க்கும் அதிகமான மாடுகள் தினமும் சுற்றி திரிகின்றன.பெரும்பாலான‌ மாடுகள் சாலையில் படுத்து கொள்வதால் வாகன போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.

சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும் தொடர் மின்சார தடையால் தெரு மின் விளக்குகளும் இரவில் எரிவதில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் சாலையில் மாடு படுத்திருப்பதை அறியாமல் வேகமாக வரும் வாகன‌ங்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. ஊரில் பெரும்பாலானோர் இந்த சாலை வழியாகத்தான் செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அப்புறப்படுத்தி,அரசு நிர்வாகத்தினர் உரிமையாளர்களிடம் முறையாக பராமரிக்க வலியுறுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இது குறித்து கீழக்கரையை சுல்தான் என்பவர் கூறுகையில் ,

மெயின் ரோட்டில் ஏராள‌மான‌ மாடுக‌ள் சுற்றி திரிவதால் போக்குவ‌ர‌த்து பெரும் இடையூராக‌ உள்ள‌து.இர‌வு நேர‌ங்க‌ளில் சாலையிலே மாடுக‌ள் ப‌டுத்துவிடுவ‌தால் வாகன‌ங்க‌ளை ஓட்டி செல்வ‌து பெரும் சிர‌மமாக‌ உள்ள‌து ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்

டில்லியில் கீழக்கரை சதக் கல்லூரி மாணவர் சாதனை !


டில்லியில் உள்ள இந்திய தொழில் நுடபக் கழகம் சார்பில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சதீஸ் பிரபாகர் இரண்டாம் பரிசு பெற்றார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் அதிகமான கணித துறையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.

""காந்த புலத்தின் உதவியால் உலோகத்தை கண்டறியும் இயந்திர மனிதன்'' என்ற ஆய்வுக்கட்டுரையை படைத்த கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சதீஸ் பிரபாகர் இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம் பெற்றார்.

கல்லூரி நிர்வாக தலைவர் ஹமீது அப்துல் காதர், தாளாளர் யூசுப் சாஹிப்,இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முதல்வர் முகம்மது ஜகபர், கணினி துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவரை பாராட்டினர்.

Monday, March 19, 2012

அம்மை நோய் புகார் எதிரொலி! பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை !



கீழக்கரை பகுதியில் ஏராளமானோர் 'பொன்னுக்கு வீங்கி அம்மை" நோயால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.

இது தொற்று நோய் வகையை சேர்ந்தது என்பதால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு நோய் பரவியது.இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.


இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகீம் மாவட்ட சுகாதரத்துறையினர் இணை இயக்குநர் மற்றும் நகராட்சி கமிஷனருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று பகல் இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் அரசு டாக்டர்கள் செய்யது ராசிக் தீன்,வெங்கடேஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட‌ மாணவ,மாணவிகளை பரிசோதித்து உரிய மருத்துவம் மற்றும் ரத்த சேகரிப்பு செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டாக்டர் செய்யது ராசீக்தீன் கூறுகையில் ,

வைரஸ் கிருமிகளால் இந்நோய் ஏற்படுகிறது .இது தொற்று நோய் என்பதால் குழந்தைகளுக்கு வேகமாக பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.அறிக்கை வந்ததும் மேல் சிகிச்சை அளிக்கப்படும்

இந்த நோயின் தாக்கம் 2 அல்லது 3 வாரங்களுக்கு இருக்கும் இந்த நோயினால் சிறியவர்களை விட பெரியவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.. இந்த நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்

நடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் அரசின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்!





தகவல் :- சாலிஹ் ஹுசைன்
கீழ‌க்க‌ரையில் சில நாட்க‌ளுக்கு முன் த‌மிழ‌க‌ அர‌சின் ம‌ருத்துவ‌ காப்பீட்டு அட்டை வ‌ழ‌ங்குவ‌து தொட‌ங்க‌ப்ப‌ட்டு 1500க்கும் மேற்ப‌ட்டோருக்கு கார்டுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு விட்ட‌து.

அட்டை பெறாத‌வ‌ர்க‌ளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று 10 மணி முதல் நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு தற்போது ஏராளமான பெண்கள், மற்றும் முதியவர்கள், புதிய அட்டைகளை பெற்று செல்வதற்காக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிகழ்வினை நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலையில் பெரும்பாலான வார்டு கவுன்சிலர்களின் முயற்சியால் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இராமநாதபுரம் மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டு, அடையாள அட்டை வழங்கும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

இது குறித்து சுரேஷ்குமார் கூறும் போது "ஏற்கனவே மருத்துவ காப்பீட்டுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் ரேசன் கார்டினைக் காட்டியோ அல்லது பழைய மருத்துவ காப்பீட்டு அட்டையை காண்பித்தோ, புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மின்வெட்டினால் கொஞ்ச நேரம் பணிகள் தொய்வடைந்தாலும், தற்போது மிக துரிதமான முறையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 5 மணி வரை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அட்டைகள் வழங்கப்படும்.

அதே நேரம், ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் இல்லாத நபர்கள், விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழும், ரேசன் கார்டு நகலும் இணைத்து அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடமோ அல்லது அதற்கான சிறப்பு முகாம்கள் நடை பெரும் போதோ கொடுக்கலாம்." என்று தெரிவித்தார்.

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவ காப்பிட்டுத் திட்ட முகாம் அலுவலகத்தை நேரிலோ கட்டணமில்லா தொலை பேசியிலோ (தொலைபேசி எண் 1800 425 3993) அணுகலாம்.

கீழக்கரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்!பள்ளி குழந்தைகள் பாதிப்பு !



கீழக்கரையில் பள்ளி,மாணவர்களுக்கு பொன்னுக்கு வீங்கி அம்மை பரவுவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு கழுத்தில் வீக்கத்துடன் பொன்னுக்கு வீங்கி அம்மை நோய் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோய் என்பதால் ஏராளமானோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,

எங்கள் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் கீழக்கரை நகரில் பெரும்பாலான குழந்தைகள் பொன்னுக்கு வீங்கி அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது இந்த நோய் விரைவாக பரவி பெரியவர்களையும் பாதித்து வருகிறது.

இந்நோய் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் பரவாமல் தடுத்து பொதுமக்களை காத்திட வேண்டும் இது குறித்து சுகாதாரத்துறை உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.

ராமநாதபுரம் சுகாதார துறை துணை இயக்குனர் உமா மகேஷ்வரி கூறியதாவது: கீழக்கரையில் நோய் பரவியது குறித்து தகவல் தெரியாது. திருப்புல்லாணி மருத்துவ குழுவினரை நேரில் அனுப்பி, நோய் குறித்து கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கீழக்கரை சதக் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கம் !


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை சார்பாக மாணவர்களின் தனிதிறன் வெளிபடுத்தும் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் ஹபீப் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் முன்னிலை வகித்தார். துறை தலைவர் முகம்மது ரபி வரவேற்றார்.

சென்னையை தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கணிப்பொறி தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக மாணவர்களின் அறிவுதிறனை வெளிபடுத்தும் விதமாக தனிதிறன் வெளிபாடு,வினாடி வினா,மென்பொருள் பிழை நீக்கம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்றவர்களுக்கு சம்பந்தன் பரிசுகள் வழங்கினார்.

ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

கீழ‌க்கரை அரசு மருத்துவமனையில் ம‌ருத்துவம‌னை தின‌விழா !




அரசு மருத்துவமனைகளின் மருத்துவ குழுவினர் ,ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக‌ம் முழுவதும் ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை தின விழா அரசின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்படுகிறது .

இந்நிலையில் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ தின‌ விழா ந‌டைபெற்ற‌து.
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா த‌லைமை வ‌கித்தார்.டாக்ட‌ர் செய்ய‌து அப்துல்காத‌ர்,டாக்ட‌ர் ராஜ்மோக‌ன் உள்பட‌ ஏராள‌மான‌ பொதும‌க்க‌ளும் இந்நிகழ்ச்சியில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

மருத்துவமனை தின விழா கொண்டாடும் இத்தருணத்தில் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெண் ம‌ருத்துவ‌ர் நிய‌மிக்க‌ வேண்டும் என்ற‌ கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வ‌ருகிற‌து அதை உட‌ன‌டியாக‌ அர‌சு நிறைவேற்றி தர‌‌ வேண்டும் என்ப‌து பொதும‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

Saturday, March 17, 2012

கீழக்கரையில் அரசு மருத்துவ காப்பீடு அட்டை வ‌ழ‌ங்க‌ல்!உரிய‌வ‌ர்கள் அட்டை பெறுவதற்கான இடம் அறிவிப்பு!


ப‌ட‌ விள‌க்க‌ம்- ம‌ருத்துவ‌ காப்பீடு அட்டை வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியை ந‌க‌ராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் தொட‌ங்கி வைத்தார்

கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட மக்கள் அரசின் மருத்துவ காப்பீடு அட்டையை முஸ்லீம் பஜாரில் உள்ள‌ க‌பீர் தைக்கா வ‌ளாக‌த்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விரிவாக‌ காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 1.34 கோடி மக்களுக்கு மருத்துவ சேவை பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வருவாய் கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள். காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவ வசதி, ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் வீதம், நான்கு ஆண்டுக்கு 4 லட்சம் வரை செலவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.


இந்நிலையில் கீழக்கரையில் தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்துக்கான புதிய அடையாள அட்டை வழங்கும் விழா நகராட்சி துணைதலைவர் ஹாஜா முகைதீன் தலைமையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் முஸ்லீம் பஜார் கபீர் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் தொடங்கி வைத்தார்.
இதில் ம‌ருத்துவ‌ காப்பீடு திட்ட‌ மாவ‌ட்ட‌ ஒருங்கினைப்பாள‌ர் சுரேஷ்குமார்,த‌க‌வ‌ல் தொட‌ர்பு அதிகாரிக‌ள் ச‌ந்தோஷ் க‌ண்ண‌ன்,நாக‌குமார்,கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,அன்வர் அலி உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்டு பொதும‌க்க‌ளுக்கு காப்பீடுதிட்ட‌ அடையாள‌ அட்டையை வ‌ழ‌ங்கின‌ர்.


மேலும் இது குறித்து சுரேஷ் குமார் கூறிய‌தாவ‌து, ம‌ருத்துவ‌ காப்பீடு அடையாள‌ அட்டையை த‌ங்க‌ள் ரேஷ‌ன் கார்டுக‌ளை காண்பித்து முஸ்லீம் பஜாரில் உள்ள‌ க‌பீர் தைக்கா வ‌ளாக‌த்தில் பெற்றுக் கொள்ள‌லாம் என்றார்.

இத்திட்டத்தில் குழந்தைகள் சிகிச்சை முறை உட்பட 1,016 சிகிச்சை முறைகள், 113 தொடர் சிகிச்சை வழிமுறை, 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகள் உள்ளன. குழந்தைகள் முதல் முதியோர் வரை பயன்பெறலாம். இருதயம் மற்றும் இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், சிறுநீரக கோளாறு, மூளை, நரம்பு மண்டலம், கண் நோய், குடல் நோய்கள், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை, காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், கருப்பை மற்றும் ரத்த உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

Friday, March 16, 2012

கீழக்கரை முக்கிய சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்!சீர்படுத்த கோரிக்கை !





கீழக்கரையில் கடந்த சில‌ மாதங்களுக்கு முன் வள்ளல் சீதக்காதி சாலை பழைய பஸ் நிலையம் அருகில் கால்வாய் அடைப்பை சீர் செய்வதற்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் கார் மற்றும் டூவீலர்கள் செல்லும் போது டயர்கள் பள்ளத்திற்குள் விழுந்து விபத்துகுள்ளவாதவும் இதை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் பொருளாளர் செய்யது இப்ராகிம் கூறுகையில்,

வள்ளல் சீதக்காதி சாலை பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன் கால்வாய் அடைப்பை சரி செய்வதற்காக நகராட்சி ஊழியர்கள் நடு ரோட்டில் குழி தோண்டினர். பிறகு அந்த பள்ளத்தை மூடவில்லை இதனால் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.மேலும் இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் விழுவதும் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும் தற்போதையால் மின் தடையால் நடந்து செல்பவர்களு பள்ளத்தில் விழுந்து சிறு காயங்களுக்கு உள்ளாகிறார்கள். பெரிய விபத்து ஏற்படும் முன் நகராட்சி இந்த பள்ளத்தை அடைத்து சரி செய்ய வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி!


சர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி!

உத்தரகோஷமங்கையில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி , சமூக மேம்பாடு,மகளிர் மேம்பாடு மற்றும் சேடோ தொண்டு அமைப்பு நடத்திய விழாவில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆசிரியைக்கு பரிசு வழங்கினார்.

சர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி!


உத்தரகோஷமங்கையில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி , சமூக மேம்பாடு,மகளிர் மேம்பாடு மற்றும் சேடோ தொண்டு அமைப்பு நடத்திய விழாவில் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆசிரியைக்கு பரிசு வழங்கினார்.

உரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் !கீழக்கரையில் அதிகாரி தகவல்!


திருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபாரிகள் உரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று திருப்புல்லானி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகலிங்கம் கூறினார்

கீழக்கரை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்களின் சட்டம் 2006 பற்றிய வணிகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் கீழக்கரை ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.

கீழக்கரை வர்த்தக் சங்க தலைவர் அகமது சகாப்தீன் தலைமை வகித்தார்.செயலாளர் சுப்பிரமணியன்,பொருளாளர் சந்தான கிருஸ்னன், முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்புல்லானி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில் ,

திருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி உள்ளிட்ட சிறுவியாபாரிகள், மீன்கடை வியாபாரிகள்,சாலையோர வியாபாரிகள்,தள்ளுவண்டி வியாபாரம் செய்வோர்,தெருக்களில் கூவி விற்கும் வியாபாரிகள் அனைவரும் தங்களின் வியாபாரத்தை அரசிடம் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று கொள்ளலாம்.

மேலும் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபாரிகள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பால்விற்பனை மற்றும் கொள்முதல் செய்பவர்கள்,டீக்கடை,ஹோட்டல்,மளிகைடை,பெரிய வணிக நிறுவனங்கள்,குடிசை தொழில் செய்பவர்கள் கட்டாயம் பதிவு செய்வதுடன் உரிமம் பெற வேண்டும்.

மேலும் குடிசை தொழில் செய்பவர்கள் கட்டாயம் தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் தயாரிக்கும் தேதி,காலவதியாகும் தேதி ஆகியவை தயாரிப்பு பொருள்கள் மீது இருத்தல் வேண்டும்.கடைகளில் கால‌வ‌தியான‌ பொருட்க‌ளை விற்ப‌னை செய்தால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கைப்ப‌டும்.

வியாபாரிக‌ள் தங்க‌ள் வியாபார‌த்தை ப‌திவு செய்வ‌த‌ற்கு ராம‌நாத‌புர‌ம் க‌ருவூல‌த்தில் ரு100 விண்ண‌ப்ப‌த்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3ம், குடும்ப‌ அட்டை ம‌ற்றும் வாக்காள‌ர் அடையாள‌ அட்டை ந‌க‌லுட‌ன் விண்ணப்பம் 'ஏ'யை நிர‌ப்பி திருப்புல்லாணி ஒன்றிய‌த்தில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.

உரிம‌ம் பெறுவ‌த‌ற்கு இவ‌ற்றுட‌ன் விண்ண‌ப்ப‌ம் 'பி'யையும் இணைத்து ராம‌நாதபுர‌ம் க‌லெக்ட‌ர் அலுவ‌ல‌க‌த்தில் உள்ள‌ உண‌வு க‌ல‌ப்ப‌ட‌ப்பிரிவில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும். சோத‌னையின் போது உரிம‌ம் இல்லை என்றால் ரூ1ல‌ட்ச‌ம் வ‌ரை அப‌ராத‌ம் விதிக்க‌ப்ப‌டும் இவ்வாறு அவ‌ர் பேசினார்.

Thursday, March 15, 2012

மணல் சாலையாக மாற்றம் பெறும் தார்சாலை!வாகன ஓட்டிகள் அவதி!



கீழக்கரை பல இடங்களில் சாலையில் மணல் நிறைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இதனால் மணலில் வாகனங்கள் சிக்கி சிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து சின்னக்கடைத்தெருவை சேர்ந்த தஸ்தகீர் கூறியதாவது,

கட்டிட‌ பணிகளுக்காக சாலையில் மணலை கொட்டுகின்றனர் வேலை முடிந்தவுடன் மணலை சரியான முறையில் அகற்றாமல் சாலையிலேயே குவிந்து சாலை முழுக்க மணல் ஆக்கிரமித்து தார் சாலை மணல் சாலையாக மாறிவிடுகிறது.புதியதாக சாலை அமைத்து சில மாதாங்களிலேயே மணல் சாலையாக மாறிவிடுகிறது. நகராட்சிக்கு இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்துள்ளோம்.

இது போன்ற‌ ம‌ண‌ல் சாலையில் பைக்,டிவிஎஸ் போன்ற‌வ‌ற்றில் செல்வோர் ம‌ற்றும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாண‌வ‌ர்க‌ள் நிலை த‌டுமாறி கீழே விழுந்து காய‌ம்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ப‌ல‌ ந‌ட‌ந்துள்ள‌து.

என‌வே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுத்து க‌ட்டிட‌ம் க‌ட்டும் காண்டிராக்ட‌ர்கள், ம‌ண‌லை ரோட்டில் கொட்டினால் குறிப்பிட்ட‌ நேர‌த்தில் ம‌ண‌லை அள்ள‌ வேண்டும் என்ப‌தை வ‌லியுறுத்த வேண்டும் இல்லையென்றால் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காண்டிராக்ட‌ர்க‌ளுக்கு அபராத‌ம் விதிக்க‌ வேண்டும் என்றார்

கீழக்கரை ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி சப்ளை !பொதுமக்கள் புகார்!




கீழக்கரை ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் குறைந்ததாக, புழுத்துப் போய் இருப்பதாக கீழக்கரை பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கீழக்கரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் தரமில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

கீழக்கரையில் ரேசன் அரிசி வாங்குவோர் கூறியதாவது,
அரசு இலவசமாக அரிசி கொடுத்து வருவது ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், இந்த அரிசி வர, வர தரம் குறைந்து வருகிறது. புழுத்துப் போன நிலையில் வழங்கப்படும் இந்த அரிசியை கோழி கூட உண்ண மறுக்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித பலனில்லை,” என்றார்.

என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அதிகாரிகாரிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொண்டு த‌ர‌மான‌ அரிசியை வ‌ழ‌ங்க வேண்டும் என்று பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

Wednesday, March 14, 2012

கீழ‌க்க‌ரை ந‌கராட்சி செய‌லிழ‌ந்து விட்ட‌து !க‌வுன்சில‌ர் குற்ற‌ச்சாட்டு!



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் செய‌ல்பாடுக‌ள் முட‌ங்கியுள்ள‌தாக‌ ந‌க‌ராட்சி க‌மிஷ‌ன‌ரிட‌ம் புகார் ம‌னு அளித்துள்ள‌தாக‌ தெரிவித்துள்ளார்.

இம்ம‌னுவில் குறிப்பிட்டுள்ள‌தாவ‌து,

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் செயல் இழந்து காணப்படுகின்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலேரியா கொசு புகை அடிக்கும் இயந்திரம் வாங்கி ஒரு சில நாட்கள் மட்டுமே புகை அடிக்கப்பட்டு இது வரை தொடர்ந்து புகை அடிக்கப்படவில்லை இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் மலேரியா உற்பத்தி ஆகும் ஊராக கீழக்கரை திகழ்கின்றது.
கீழக்கரையில் இருக்கும் வாறுகால்கள் பல இடத்தில் தூர்வாராமல் இருப்பதுடன் பல இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றபடாமல் இருக்கின்றது.
இந்த நகரில் 2012 அன்று வாழும் போது ஏதோ கற்காலத்தில் (நாகரிகம் இல்லாத காலத்தில்) வழுகின்ற மன பக்குவமே ஏற்படுகின்றது.

எனவே ! பொதுமக்கள் நலன் கருதி நகரின் நலன் மீது அக்கரை செலுத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

கவுன்சிலரின் பதவியை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷனிடம் புகார் !


க‌வுன்சில‌ர் சுரேஷ்

முன்னாள் க‌வுன்சில‌ர் வேலுச்சாமி

தற்போதைய 1வது கவுன்சிலர் சுரேசின் பதவியை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கீழக்கரை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி மனு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து புகார் ம‌னுவில் கூறியுள்ள‌தாவ‌து,


கீழக்கரை நகராட்சியில் 1- வது வார்டு கவுன்சிலராக உள்ள R.சுரேஷ் என்பவர் அக்டோபர் 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவில் உண்மை தகவல்களை மறைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கீழக்கரை நகராட்சியில் R.சுரேஷ் 1 ஏப்ரல் 2009 முதல் 31 மார்ச் 2012 ஆம் நாள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தினசரி மார்க்கட் வசூல் செய்யும் உரிமம் பெற்று கிழக்கரை நகராட்சி மூலம் வருமானம் அனுபவித்து வருகின்றார். கீழக்கரை நகராட்சி அலுவலக கடித நாள்:- 19.01.2012 இதனை உறுதிபடுத்துகின்றது.

நகராட்சியில் தினசரி மார்க்கட் வசூல் மூலம் வருமானம் அனுபவித்து கொண்டு இருக்கும் R.சுரேஷ் என்பவரின் வேட்பு மனு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 49(2) (C)-ன் படி இவரின் வேட்பு மனு கீழக்கரை நகராட்சி தேர்தல் அதிகாரியான R.போஸ் என்ற ஆணையரால் நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இவருடைய வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 50(1) (d)-ன் படி நகராட்சியில் குத்தகை மூலம் பலன் அனுபவித்துக்கொண்டு இருப்பவர் கவுன்சிலர் பதவி வகிக்க தகுதி அற்றவர் என்று வரையரை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மதிப்பிற்குரிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் உண்மை தகவலை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்து கீழக்கரை நகராட்சியில் கவுன்சிலராக உள்ள R.சுரேஷ் என்பவரை பதவி நீக்கம் செய்து ஆணை வழங்க வேண்டுமாறும் உண்மைத் தகவலை வேட்பு மனுவில் மறைத்தற்காக இவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வேட்பு மனு பரிசீலனையில் முறைகேடு செய்துள்ள கீழக்கரை நகராட்சி தேர்தல் அதிகாரியான திரு. R.போஸ் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து

ரத்த தானத்தில் சதக் க‌ல்லூரி முத‌லிட‌ம் !1000த்துக்கும் மேற்ப‌ட்டோர் ர‌த்த‌தான‌ம்!



தென்மாவ‌ட்ட இன்ஞினிய‌ரிங் க‌ல்லூரிக‌ளில் ரத்த‌தான‌ம் வ‌ழ‌ங்குவ‌தில் ச‌த‌க் க‌ல்லூரி முத‌லிட‌த்தில் இருப்ப‌தாக‌ ச‌த‌க் இன்ஜினிய‌ரிங் கல்லூரி முதல்வ‌ர் தெரிவித்தார்.

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினிரியங் கல்லூரியில் ரத்த தானம் முகாம் நடைபெற்ற‌து.
இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா தலைமை வகித்தார் முதல்வர் முகம்மது ஜகபர் துவக்கி வைத்தார். பி.ஆர்.ஒ., நஜிமுதீன் வரவேற்றார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் ஞானக்குமார், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் விஜயராஜன், மதன், மேலாளர் ரவி மற்றும் ரத்த சேகரிப்பு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சதக் இன்ஞினியரிங் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகபர் கூறியதாவது:

தென் மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில், கீழக்கரை முகம்மது சதக் இன்ஜி., கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரத்த தானம் அளிப்பதில் முதலிடத்தை பெற்று பரிசு பெற்றுள்ளது. இந்தாண்டும் சாதனை தொடரும் வகையில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ரத்தம் வழங்கினர், என்றார்.

ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், முத்துவேல் உள்ளிட்டோர் செய்தனர்.