Thursday, March 7, 2013

கீழ‌க்க‌ரையில் பட்டமரகிளை ஒடிந்து விழுந்து கூலி தொழிலாளி காயம்!




கீழக்கரை முஸ்லீம் பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பலிவாங்க காத்திருக்கும் பட்டமரம் என்ற தலைப்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  செய்தி வெளியானது.  தற்போது அந்த மரத்தின் ஒரு கிளை முறிந்து சுமை தூக்கிச் சென்ற தொழிலாளி தலையில் விழுந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷடவசமாக தொழிலாளி சிறு காயத்துடன் தப்பினார். அந்த பகுதியில் இருந்தவர்கள் பட்டமரத்தை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜூதீன் கூறுகையில், ‘மூன்று மாதங்களுக்கு முன்பே  செய்தி வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மரம் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் பட்ட மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீன் கூறுகையில், ‘ராமநாதபுரம் ஆர்.டி.ஓ விடம்  செய்தியின் நகலை வைத்து புகார் செய்துள்ளோம். இதுவரை எந்த பதிலும் தரவில்லை’ என்றார்.

கீழக்கரை ஆர்.ஐ. செல்வராஜ் கூறுகையில், ‘பட்ட மரத்தை அகற்ற நகராட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஆர்.டி.ஓவிடம் தெரிவிப்போம்’ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.