Monday, January 30, 2012

கீழக்கரையில் (01-02-12)புதன்கிழமை மின்சார தடை !


கீழக்கரை பகுதியில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி,காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை மறுதினம் (01-02-12)காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Sunday, January 29, 2012

கீழக்கரை தோட்டத்தில் அதிரடிப்படைக்கு பயிற்சி !
கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் இன்று காலை அதிரடிபடையை சேர்ந்த 40 பேருக்கு மாவட்ட காவல்துறை எஸ்.பி காளிதாஸ் மகேஸ்குமார் பயிற்சியளித்தார்.கலவரம் ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் அளித்து பயிற்சியளித்தார்.
Saturday, January 28, 2012

கீழ‌க்கரையில் திருட‌ப்ப‌ட்ட‌ ந‌கைக‌ள் மீட்பு !(ப‌ட‌ங்க‌ள்)
கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ சேக் அலாவுதீன் ம‌ற்றும் ந‌சுருதீன்
வெளிநாட்டிலிருந்து திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான கீழக்கரை வந்திருந்த மேலத்தெருவை சேர்ந்த‌ தொழில் அதிபர் முகம்மது அலி(30) என்பவர் வீட்டில் கடந்த ஜனவரி 3ம்தேதி(2012) கைபையில் வைத்திருந்த லட்சக்கணக்கணக்கில் மதிப்புள்ள‌ நகைகள் கொள்ளைய‌டிக்கப்பட்டன. இது தொடர்பாக எஸ்.பி காளிராஜன் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,எஸ்.ஐ கனேசன் மற்றும் டிஎஸ்பி முனியப்பன் தலைமையில் காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக‌‌ ஏர்வாடியை சேர்ந்த சிக்கந்தர் மகன் நசுருதீன் ,மாயாகுளம் பள்ளி வாசல் தெரு ஹாஜா நஜிமுதீன் மகன் சேக் அலாவுதீன்(25)ஆகியோரை போலீசார் கைது செய்த‌ன‌ர்.

இது குறித்து காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவ‌ன் கூறுகையில் ,

பொதும‌க்க‌ளின் அஜாக்கிர‌தை திருடர்க‌ளுக்கு சாத‌க‌மாகிற‌து.விலை உய‌ர்ந்த‌ ந‌கைக‌ளை பாதுகாப்புட‌ன் வைத்து கொள்ள‌ வேண்டும் என்றார்.

கீழக்கரையில் குடியரசு தினவிழா கொண்டாட்ட‌ம் !கீழக்கரை நகராட்சியில் நகராட்சி தலைமை எழுத்தாளர் சந்திரசேகரன்,துணை தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் தலைவர் ராபியத்துல் காதரியா கொடி ஏற்றினார்.

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் ராமநாதபுரம் மனமகிழ் மன்றம் வாசு கொடி ஏற்றினார். கல்லூரி மாணவியர் பேரவை தலைவி ஹீசைனியா நன்றி கூறினார்.சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக் தாவுத்,அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யூசுப் சுலைஹா மருத்துவமனையில் டாக்டர் செய்யது அப்துல் காதர் கொடியேற்றினார்.
கீழக்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,ஏர்வாடியில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் கொடியேற்றினர்.

கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தினவிழா பள்ளி வளாகத்தில் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் தலைமையில் கீழக்கரை மின் வாரிய பொறியாளர்(பள்ளியின் முன்னாள் மாணவர்) மின் வாரிய உதவி பொறியாளர் நிசாக் ராஜா கொடியேற்றினார்.மாண‌வி தானிஷா ப‌ர்வின் வ‌ர‌வேற்றார்.விழாவில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை நகராட்சி தலைவர் ராபியத்தில் காதரியா பாராட்டினார்.முன்னாள் க‌வுன்சில‌ர்க‌ள் முக‌ம்ம‌து காசிம்,முக‌ம்ம‌து ஜ‌மால் இப்ராகிம்,ப‌ள்ளிக‌ளின் த‌லைமை ஆசிரிய‌ர்க‌ள் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ்,த‌ன‌லெட்சுமி,நிர்வாக‌ அலுவ‌ல‌ர் ம‌லைச்சாமி உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் க‌ல்லூரிக‌ளில் முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் கொடியேற்றினார்.தாளாள‌ர் யூசுப் சாகிப், க‌ல்லூரி முத‌ல்வ‌ர்க‌ள் அலாவுதீன்,முக‌ம்ம‌து ஜ‌காப‌ர் ,அபுல் ஹ‌ச‌ன் சாத‌லி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் ந‌ல பாதுகாப்பு க‌ழ‌க‌ம் சார்பாக‌ ந‌டைபெற்ற‌ விழாவில் துணை த‌லைவ‌ர் மாணிக்க‌ம் தேசிய‌ கொடி ஏற்றி வைத்தார். விழாவில் க‌ழ‌க‌ நிர்வாகிக‌ள் ,துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன், ட‌வுன் காஜி காத‌ர் ப‌க்ஸ் ஹுசைன் ,க‌வுன்சில‌ர் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌மீதுகான் த‌லைமையில் துணை த‌லைவ‌ர் முருகான‌ந்த‌ம் ராம‌நாதபுர‌ம் ச‌ட்ட‌சபை தொகுதி இளைஞ‌ர் காங்கிர‌ஸ் துணை த‌லைவ‌ர் ஹ‌ச‌னுதீன் ,மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் லாபிர் ஹுசைன் முன்னிலையில் தியாகி ச‌வுக‌த் ம‌த்திய‌ கொடி க‌ம்ப‌த்தில் முன்னாள் க‌வுன்சில‌ர் ஜின்னா சாகிபு கொடி ஏற்றினார்.
ஹ‌மீதியா ஆண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளியில் கீழ‌க்க‌ரை உஸ்வ‌துன் ஹ‌ச‌னா முஸ்லீம் ச‌ங்க‌த்தின் இணை செய‌லாள‌ர் ஜுனைத் த‌லைமையேற்று கொடியேற்றினார்.த‌லைமை ஆசிரிய‌ர் ஹ‌ச‌ன் இப்ராகிம் வ‌ர‌வேற்றார். ப‌ள்ளியின் ஆசிரிய‌ர்க‌ள் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

மாண‌வியின் க‌ல்விக்கு உத‌வி
கீழ‌க்க‌ரை ம‌ஹ்துமியா உய‌ர் நிலை ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌ விழாவில் ப‌ள்ளியின் தாளாள‌ர் கொடி ஏற்றினார்.விளையாட்டு போட்டிக‌ள் ந‌டத்த‌ப்ப‌ட்டு ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.
இவ்விழாவில் க‌ட‌ந்த‌ 2010 - 2011 10ம் வ‌குப்பு தேர்வில் ந‌க‌ரில் முத‌ல் ம‌திப்பெண் பெற்ற‌ முபார‌க் நிஷா என்ற‌ மாண‌வியின் மேற்ப‌டிப்புக்கான‌ செல‌வை துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன்,க‌வுன்சில‌ர்க‌ள் செய்ய‌து க‌ருணை ,அன்வ‌ர் அலி,அஜ்ம‌ல் கான்,முகைதீன் இப்ராகிம்,சாகுல் ஹ‌மீது,ஜெய‌ பிர‌காஷ்,இடி மின்ன‌ல் ஹாஜா ந‌ஜிமுதீன்ஆகியோர் ஏற்றுக்கொள்வ‌தாக‌ அறிவித்து அம்மாணவிய‌யை பாராட்டின‌ர்.


`

Thursday, January 26, 2012

சைக்கிளில் இந்தியாவை சுற்றும் வெளிநாட்டு தம்பதியினர் கீழக்கரை வருகை !


இந்தியா முழுவது சைக்கிளில் சுற்றி வரும் 58 வயதான நியுசிலாந்தை சேர்ந்த கணவன்,மனைவி நேற்று கீழக்கரை வந்தனர்.

நியுசிலாந்தில் பிறந்து லண்டனில் வசித்து வரும் ராபர்(58),மேரிமொரிசன் தம்பதியினர் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி கோவாவிலிருந்து சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.இவர்கள் நேற்று கீழக்கரை வந்தனர்.நேற்று வரை இவர்கள் இந்தியா முழுவதும் சுமார் 2000த்துக்கு அதிகமான கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் கூறுகையில் ,
2000ம் ஆண்டிலிருந்து இதுவரை 85 நாடுகளுக்கு சென்றுள்ளோம்.மற்ற நாடுகளை விட இந்திய மக்களின் நடைமுறை பழக்க வழக்கங்கள் எங்களை கவர்ந்துள்ளது.நாங்கள் செல்லும் கிராமங்களில் எல்லா மக்கள் அன்புடன் வரவேற்பு தருகின்றனர்.அவர்களுடன் பழகுவதன் மூலம் பல் வேறு கலாச்சாரங்களை நாங்கள் அறிய முடிகிறது. இந்திய உணவு வகைகள் மிகவும் பிடித்துள்ளது. நாளொன்றுக்கு 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் செல்கிறோம்.நாளை பாண்டிச்சேரி செல்வதற்கு முடிவு செய்துள்ளோம் என்றனர்.

ஆயிர‌க்கணக்கானோர் கலந்து கொண்ட‌ மத நல்லிணக்க பேரணி !ஆயிர‌க்கணக்கானோர் கலந்து கொண்ட‌ மத நல்லிணக்க பேரணி !

ஏர்வாடியில் ராமநாதபுரம் நேரு கேந்திரா மற்றும் சதக் கல்லூரி ,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் தினம் மற்றும் மத நல்லிணக்க பேரணியை கலெக்டர் அருண்ராய் தொடங்கி வைத்தார்.


இப்பேரணியில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி,ஒருங்கினைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ்,ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது அலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலாடி வட்ட வழங்கல் தாசில்தார் சேகர் ,மற்றும் அதிகாரிகள் ,ஆந்திர,கர்நாடக,மகாரஸ்ட்ரா,குஜராத்,உத்தரபிரேதேசம்,மாநில இளைஞர்கள் மற்றும் முகம்மது சதக் கல்லூரிகளின் மாணவ,மாணவிகள் 1000த்துக்கு மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டு மக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்த‌
பதாகைகளை ஏந்தி சென்றனர்.

ஏர்வாடியிலிருந்து புறப்பட்ட பேரணி ஏர்வாடி தர்ஹாவில் முடிவுற்று, அங்கு உலக அமைதிக்காகவும் ,மத நல்லிணக்கத்திற்காகவும் இஸ்மாயில் ஆலிம் துஆ ஓதினார்.இதில் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

Wednesday, January 25, 2012

க‌லெக்ட‌ரிட‌ம் துணை சேர்ம‌ன் மற்றும் கவுன்சிலர்கள் புகார் ம‌னு (படங்கள்)

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராயிடம்,துணை சேர்மன் ஹாஜா முகைதீன்
,கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,அன்வர் அலி,கருணை,ஜெயபிரகாஷ்,இடி மின்னல் ஹாஜா உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரில் கூறியிருப்ப‌தாவ‌து,

நகராட்சி அலுவலகத்தில் புதிய‌ கட்டிட‌ வ‌ரைப‌ட‌ அனும‌தி பெற‌ பொது ம‌க்க‌ள் 6 மாத‌ம் காத்திருக்க‌ வேண்டியுள்ள‌து.

பிற‌ப்பு,இற‌ப்பு சான்றித‌ழ் வ‌ழ‌ங்குவ‌தில் தாம‌த‌ம்.
பொது சுகாதார‌த்தில் ந‌க‌ராட்சி ப‌ணியாள‌ர்கள்,மேற்பார்வையாளர்கள் செய‌ல்பாடு மிக‌வும் மோச‌ம்.
இவ‌ர்க‌ளை க‌ண்காணிக்க வேண்டிய ப‌ணியை சிற‌ப்பாக‌ செய்ய‌ ந‌ல்ல‌ அதிகாரிக‌ள் இல்லை.

ந‌க‌ராட்சியில் மூன்று சுகாதார‌ வாக‌ன‌ ஓட்டுந‌ர்க‌ளின் ப‌ணி திருப்திக‌ர‌மாக‌ இல்லை.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் உள்ள‌ இள‌நிலை உத‌வியாள‌ர்க‌ள் ம‌ற்றும் வ‌ரிவ‌சூல் பணியாள‌ர்க‌ளில் ஒரு சில‌ர் த‌விர‌ ம‌ற்ற‌ அனைவ‌ரின் செய‌ல்பாடுக‌ள் மோச‌மாக‌ உள்ள‌து.இத‌னால் அலுவ‌ல‌க‌த்தில் ப‌ணிக‌ள் முட‌ங்கி போய் உள்ள‌து.

வ‌ரி வ‌சூல் ம‌ற்றும் குடிநீர் வ‌சூல் மிக‌வும் ம‌ந்தமாக உள்ளது.

கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு முறையான பதிலளிப்பதில்லை
மேற்கண்ட அனைத்து குறைபாடுகளையும் நீக்கப்பட்டு நகராட்சி அலுவலக நிர்வாகம் தூய்மையாகவும்,விரைவாகவும் நடைபெற வேண்டுமென்றால் பொறுப்பற்ற முறையில் செயல்படும் அனைவரையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.

இது வ‌ரை ந‌க‌ராட்சி ஆணைய‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டவில்லை
சுகாதார‌ ஆய்வாள‌ர் மாற்ற‌ப்ப‌ட்டு இர‌ண்டு மாத‌ங்க‌ளாகி விட்ட‌து .இது வ‌ரை நிய‌ம‌ன‌ம் இல்லை .18-01-12ல் ஓவ‌ர்சீர் மாற்ற‌ப்ப‌ட்டு விட்டார்.

என‌வே கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு உட‌ன‌டியாக‌ ஆணையாள‌ர் ,சுகாதார‌ ஆய்வாள‌ர் ம‌ற்றும் ஓவ‌ர்சீர் ஆகியோர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

மேலும் ந‌க‌ராட்சியில் காலியாக‌ உள்ள் பிட்ட‌ர்,ஆபிஸ் அஸிஸ்டெண்ட், ஆகிய‌ ப‌ணியிட‌ங்க‌ள் நிர‌ப்ப‌ப‌ட‌ வேண்டும் கீழக்கரை பேரூர‌ட்சியாக‌ இருந்த‌ போது ப‌ணிய‌ம‌ர்த்த‌ப்ப‌ட்ட‌ ஊழிய‌ர்களின் எண்ணிக்கையை ந‌க‌ராட்சியாக‌ த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்ட‌ பிற‌கு அதிக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை.

கீழ‌க்க‌ரை ந‌கராட்சியில் ப‌ணியாள‌ர்க‌ளின் ப‌ற்றாக்குறையை க‌ருத்தில் கொண்டு புதிய‌ ப‌ணியிட‌ங்க‌ளுக்கு அர‌சின் அனும‌திக்காக‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் இருந்து அர‌சின் பார்வைக்கு அனுப்ப‌ப‌ட்டுள்ள‌து.இது குறித்து அரசின் ஆணைக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு புகார் ம‌னுவில் கூற‌ப்ப‌ட்டுள்ளது.

இரண்டாவது முறையாக அதே தேதியில் நகைகளை கொள்ளையடித்த கும்பல்!2பேர் கைது


வெளிநாட்டிலிருந்து திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான கீழக்கரை வந்திருந்த மேலத்தெருவை சேர்ந்த‌ தொழில் அதிபர் முகம்மது அலி(30) என்பவர் வீட்டில் கடந்த ஜனவரி 3ம்தேதி(2012) கைபையில் வைத்திருந்த 38 பவுன் உள்பட ரூ15 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைய‌டிக்கப்பட்டன. இது தொடர்பாக எஸ்.பி காளிராஜன் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,எஸ்.ஐ கனேசன் மற்றும் டிஎஸ்பி முனியப்பன் தலைமையில் காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.


இந்நிலையில் கொள்ளைக்கு உதவியாக இருந்ததாக‌ ஏர்வாடியை சேர்ந்த சிக்கந்தர் மகன் நசுருதீன் என்பவரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர் .

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2011ம் ஆண்டு இதே ஜனவரி 3ம் தேதி திருமண விழாவில் கலந்து கொள்ள கீழக்கரை வந்திருந்த‌ மேலத்தெருவை சேர்ந்த முஜம்மில் என்பவர் வீட்டில் 115 பவுன் மற்றும் 5.75 லட்சம் ரொக்கம் திருடியவர்கள் இந்த திருட்டிலும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரிவ வந்தது.குறிப்பாக ஏற்கெனவே கீழக்கரையில் சென்ற வருடம் திருடியதாக கைது செய்யப்பட்ட மாயாகுளம் பள்ளி வாசல் தெரு ஹாஜா நஜிமுதீன் மகன் சேக் அலாவுதீன்(25) சம்பந்தப்பட்டிருப்பதாக‌ தெரிய வந்ததால் போலீசார் அவரை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருட்டு குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு திருட்டுக்களுமே ஒரே தேதியில் அவர்கள் வெளிநாடு பயணம் புறப்பட தயாராக இருந்த போது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

மாவட்ட கைப்பந்து போட்டி கீழக்கரை மூர் அணி கோப்பையை கைப்பற்றியது !
மாவட்ட கலெக்டர் அருண்ராயுடன் வெற்றி பெற்ற கீழக்கரை இளைஞர்கள்


மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், கீழக்கரை மூர் வாலிபால் அணி சுழற் கோப்பையை வென்றது.


ராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் அபிராமி சில்க்ஸ், ஆயிஷா டெக்ஸ்டைல்ஸ் இணைந்து 14வது ஆண்கள், மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற மாவட்ட சாம்பியன் கைப்பந்து போட்டியை நடத்தின. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்த இப்போட்டியில், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள், கைப்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.மாணவிகளுக்கான போட்டியில், புதுமடம் அரபிஒலியுல்லா பள்ளி மாணவிகள் முதலிடமும், பரமக்குடி கே.ஜே. முஸ்லீம் பள்ளி மாணவிகள் 2வது இடமும் பெற்றனர். மாணவர்களுக்கான போட்டியில் சித்தார்கோட்டை முகமதியா பள்ளி மாணவர்கள் முதலிடமும், கீழக்கரை இஸ்லாமியா மே.நி.பள்ளி மாணவர்கள் 2வது இடமும் பெற்றனர்.ஆண்களுக்கான இறுதி போட்டியில் கீழக்கரை மூர் வாலிபால் கிளப் அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைப்பற்றியது. 2வது இடத்தை கீழக்கரை மைபா கிளப் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றது குறித்து மூர் விளையாட்டு அணியின் நிர்வாகி ஹசனுதீன் மகிழ்ச்சி தெரிவித்தார்.வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட கைப்பந்து கழகத்தலைவர் ரவிச்சந்திரராமவன்னி தலைமை வகித்தார். செயலாளர் ராமசுந்தரம் வரவேற்றார். கலெக்டர் அருண்ராய் வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சுழல்கோப்பையை வழங்கினார். எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலசுதந்திரதாஸ், கைபந்து கழக நிர்வாகிகள் டாக்டர் கியாதுதீன், கே.ஆர். செழியன், வழக்கறிஞர் சோமசுந்தரம், ரோட்டரிசங்க தலைவர் முனியசாமி, ரோட்டரி துணை ஆளுனர் தினேஷ்பாபு, சண்முகராஜேஸ்வரன், அபிராமி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி அன்சர்அலிகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tuesday, January 24, 2012

கல்லூரி வேலை வாய்ப்பு முகாமில் வேப்கோ- டிவிஎஸ் நிறுவனத்துக்கு 38பேர் தேர்வு !

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் சென்னை செங்கல்பட்டு வேப்கோ - டிவிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 38 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


மாணவர்களுக்கான‌ தேர்வை, வேப்கோ-டிவிஎஸ் நிறுவனத்தின் சீனியர் எக்ஸ்யூகியூடீவ் முத்துமாலை,மற்றும் லியோ மனித வள மேம்பாட்டுதுறை அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில் 38 மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வ‌ளாக‌ தேர்வுக்கான‌ ஏற்பாடுக‌ளை க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் ,வேலை வாய்ப்பு ஒருங்கினைப்பாள‌ர் சேக் தாவுத் ம‌ற்றும் அலுவ‌ல‌ர்க‌ள் செய்திருந்தன‌ர்.

10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலதிட்ட உதவிகள் !

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் சார்பில் நலிவுற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு சேவை இயக்க தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அவை முன்னவர் செய்யது இபுராகிம் முன்னிலை வகித்தார்.


கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் தங்கவேலன், கலங்கரை விளக்கம் பொறியாளர் குமார்ராஜா, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், தொழிலதிபர் முகம்மது முகைதீன், சிறு தொழில் மீனவர் சங்க செயலாளர் அட்டப்பா நல்ல இபுராகிம், மற்றும் பத்மநாபன், தங்கமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 10க்கும் மேற்பட்ட நலிவுற்ற பெண்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கவிஞர் நூர்முகம்மது நன்றி கூறினார்.

கீழை இளையவனின்‌ புதிய வலைதளம் துவக்கம் !கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு ச‌மூக‌ நலப்ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ரும் இளைஞ‌ர் சாலிஹ் ஹுசைன் ,எழுத்து ப‌ணியில் ஆர்வ‌முள்ள‌ இவ‌ர் கூறிய‌தாவ‌து,


கீழை கீழை இளையவன் IAS வழிகாட்டி' என்ற பெயரில் அரசு தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை, வழிகாட்டுதல்களை நமதூர் மாணவர்களிடமும் , அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோர்களிடமும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கம் செய்துள்ளோம். இந்த தளத்திற்கு உங்கள் மேலான ஆதரவை தருமாறும் கேட்டுக் கொள்கிறேன். என்றார்.


தளத்தின் விலாசம் : http://www.keelaiilayyavanias.blogspot.com/

சென்னை கருத்தரங்கம் !கீழக்கரை,காயல்பட்டிணம் உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் பங்கேற்பு !


நிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர்....

கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா அருகில் கணவர் ரிஸ்வான் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் சேகர்,ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் அர்ச்சுணன் ஆகியோர்..


நகர உள்கட்டமைப்பு வசதி குறித்த"முனிசிபாலிகா 2012' கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி பங்கேற்றார்.

இதில், மாநகராட்சி மேயர்கள்,கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா, காய‌ல்ப‌ட்டிண‌ம் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ஆபிதா உள்ளிட்ட நகராட்சி தலைவர்கள் உட்பட ஏராளமான‌ உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

க‌ருத்தரங்கையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில்;உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், குடிநீர் வாரிய திட்டங்கள்,நீர்நிலைகள் மேம்பாடு,மெட்ரோ ரயில் திட்டம்,மாநகராட்சி திட்டங்கள்,சி.எம்.டி.ஏ., விதிமுறைகள் விளக்கம்,நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள்,நவீன திடக்கழிவு மேலாண்மை உபகரணங்கள்,எரிசக்தி துறை உபகரணங்கள்,காற்றாலை மாதிரிகள் ஆகிய‌ தலைப்புகளில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியில் கலந்து கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இவற்றை பார்த்து, விளக்கங்களை பெற்றனர்.

இது தவிர, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற வளர்ச்சி திட்டம், நகர்புற உள்ளாட்சிகளுக்கான நிர்வாக திறன், பேரழிவு மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து விவாதம் நேற்று பிற்பகலில் நடந்தது.நகர உள்ளாட்சிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது.

க‌ருத்தரங்க‌‌ம் ஆங்கில‌த்தில் நடைபெற்றதால் காயல்பட்டிணம் நகராட்சி தலைவர் ஆபிதா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்ளிட்ட பெரும்பாலான‌ உள்ளாட்சி பிர‌திநிதிக‌ள் க‌ருத்துக்க‌ள் புரிய‌வில்லை என‌ புகார் தெரிவித்த‌ன‌ர்.இது குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள கருத்தரங்கம் முடிந்த பிறகு, இங்கு பேசிய விஷயங்கள் தமிழில் தொகுத்து வழங்கப்படும் என‌ தெரிவித்த‌ன‌ர்.
கருத்தரங்கத்தை த‌மிழிலேயே ந‌ட‌த்தியிருக்க‌லாம் என‌ பெரும்பாலானோர் க‌ருத்து தெரிவித்த‌ன‌ர்

பணி நேரத்தில் ஆளில்லாத வாகனமாக நகராட்சி அலுவலகம்!க‌வுன்சில‌ர்க‌ள் குற்றச்சாட்டு !


பெரும்பாலான‌ நேர‌ம் ஆளில்லா க‌மிச‌ன‌ர் அலுவ‌ல‌க‌ம்

பணி நேரத்தில் ...விடுமுறை தினமா என்று நினைக்க‌ தோன்றும் அலுவ‌ல‌க‌ம்

ஒருவ‌ர் ம‌ட்டும் ப‌ணியில் .....த‌னிகாட்டு ராஜா...


கீழ‌க்க‌ரை ந‌கராட்சி நாளொன்று ஏராள‌மான‌ ம‌க்க‌ள் ப‌ல் வேறு ப‌ணிக‌ளுக்காக‌ ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்துக்கு வ‌ருகை த‌ருகின்ற‌ன‌ர்.ஆனால் ப‌ணி நேர‌த்தில் ஊழிய‌ர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவ‌ல‌க‌த்தில் இருப்ப‌தில்லை இத‌னால் பொதும‌க்க‌ள் பெரிதும் பாதிக்க‌ப்ப‌டுவ‌தாக 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் ம‌ற்றும் 20வ‌து வார்டு க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா உள்ளிட்டோர் குற்ற‌ம் சாட்டுகின்ற‌ன‌ர்.இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறிய‌தாவ‌து,
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி பணி நேரத்தில் அலுவ‌ல‌கத்தில் பெரும்பாலான ஊழிய‌ர்க‌ள் மற்றும் அதிகாரிகள் இருப்ப‌தில்லை இவ‌ர்க‌ள் இருக்கைக‌ள் காலியாக‌வே உள்ள‌து ஒரு சிலர் மட்டும் பணியில் உள்ளனர் என்று பொது ம‌க்க‌ள் புகார் கூறி வருகின்றனர்.இன்று நான் ம‌ற்றும் க‌வுன்சில‌ர் ஹாஜா ஆகியோர் நக‌ராட்சி அலுவலகம் வ‌ந்து பொதும‌க்க‌ள் குற்ற‌ச்சாட்டு உண்மை என்ப‌தை நேரடியாக‌ உண‌ர்ந்தோம்.

இது போன்ற‌ நிலைமை நீடித்தால் ஏராள‌மான‌ பொதும‌க்க‌ள் தங்களின் குறைகளை நிறை செய்ய முடியாமல் பெரும் துன்ப‌த்துக்குள்ளாவார்க‌ள் என்ப‌தை பணி நேரத்தில் அலுலவலகத்துக்கு வராதவர்கள் உண‌ர‌ வேண்டும்.மேலும் கீழ‌க்க‌ரைக்கு இது வ‌ரை க‌மிச‌ன‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌வில்லை கூடுத‌ல் பொறுப்பாக‌ கீழ‌க்கரையையும் சேர்த்து க‌மிச‌ன‌ர் முஜிபுர் ர‌ஹ்மான் க‌வ‌னித்து வ‌ருகிறார்.அவ‌ரால் கீழ‌க்க‌ரை அலுவ‌ல‌க‌த்துக்கு வ‌ர‌ முடிவ‌தில்லை இத‌னால் க‌மிச‌ன‌ர் அலுவ‌ல‌க‌ம் பூட்டியே உள்ள‌து.என‌வே உட‌ன‌டியாக நகராட்சி க‌மிஷ‌ன‌ர் நிய‌மிக்க‌ வேண்டும் இது குறித்து நான் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ம‌னு அனுப்பியுள்ளேன் என்றார்.இது குறித்து காலையிலிருந்து நகராட்சியில் வீடு சம்பந்தமாக சான்றிதழ் பெற்று செல்ல‌ காத்திருந்த‌ அசாருதீன் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து,


ஏதோ விடுமுறை தினத்தில் அலுவலகம் வ‌ந்து விட்டோமோ என்று நினைத்தேன்.டீ குடிக்க‌ சென்றாலும் சிறிது நேர‌த்தில் திரும்பி விட‌லாம் ஆனால் ப‌ல‌ ம‌ணி நேர‌மாக‌ ஊழியர்க‌ள் வ‌ர‌வில்லை. ஒரு வேளை வெளியே சொந்த‌மாக‌ தொழில் செய்கிறார்க‌ளோ என்று எண்ண‌ தோன்றுகிற‌து.இவர்களை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரியான க‌மிச‌னரும் அலுவ‌ல‌க‌ம் வ‌ருவ‌தில்லை. பணிகள் குறித்த அரசின் விதிமுறைகளை இவர்கள் கடைபிடிப்பதில்லை என‌வே உரிய‌வ‌ர்க‌ள் உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது குறித்து ப‌ணி நிமித்த‌மாக‌ சென்னை சென்றுள்ள‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது ,

இந்த குற்றச்சாட்டு குறித்து விசார‌ணை செய்து உரிய ‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும் என்றார்.

Monday, January 23, 2012

கீழக்கரை கல்லூரியில் பல் வேறு மாநிலங்களிலிருந்து குவிந்த மாணவர்கள் !நிகழ்ச்சியில் அமைச்சர் சுந்தர்ராஜன்,மாவட்ட கலெக்டர் அருண் ராய்,சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ்,நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.
இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா சார்பாக தேசிய ஒருமைபாட்டு முகாம் முகம்மது பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் தலைமையில் தொடங்கியது.

இதில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் துவக்கி வைத்து பேசினார். இம்முகாமில் முகம்மது சதக் கல்லூரி நிர்வாகிகள் பாலிடெக்னி கல்லூரி முதல்வர் அலாவுதீன் ,முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர்,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தர பாண்டியன், மற்றும் குஜராத், மகாராஷ்டிரா ,உத்தர பிரேதேசம்,ஆந்திரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 100 இளைஞர்களும்,தமிழ்நாட்டு மாணவர்கள் 50 பேரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராபர்ட் ஜேம்ஸ் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சேவைகள் செய்த மூன்று இளைஞர்களுக்கு அமைச்சர் மற்று மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினர் செய்யாதீர்கள்

Sunday, January 22, 2012

பொதுமக்கள் புகார் எதிரொலி ! மீண்டும் அமைக்க‌ப்ப‌டும் சாலை !


மீண்டும் அமைக்கப்படும் சாலை

சோதனையிடும் கமிஷனர்தரமற்ற சாலை
திமுக‌ ஆட்சி கால‌த்தில் சிற‌ப்பு சாலைக‌ள் திட்ட‌த்தில் நிதி ஒதுக்க‌ப்பட்டிருந்த நிலையின் தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் மூலம் முந்தைய திட்டமான‌ சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த சாலைகள் அவசர கோலத்தில் அள்ளி தெளித்த கோலம் போன்று தரமற்ற சாலைகளாக இருப்பதாக நம் கீழக்கரை டைம்ஸ் வலைதளம் ,தினகரன் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
முந்தைய செய்தி :-
http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_03.html

இதனையடுத்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா வலியுறுத்தலின் பேரில் கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை சோதனையிட்டதின் பேரில் மீண்டும் சீராக சாலையை அமைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடற்கரை பாலம் அருகில் போடப்பட்ட சாலை மீண்டும் சீர்படுத்தபட்டு அமைக்கப்படுகிறது.

Saturday, January 21, 2012

கீழக்கரை நகராட்சியில் வரலாறு காணாத கூச்சல்,குழப்பம் !


குர் ஆனை வைத்து"சொல்ல‌வில்லை" என்று ச‌த்திய‌ம் செய்யும் துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன். குரானில் ச‌த்திய‌ம் செய்யாதீர்கள் என்று கூறி குரானை வாங்குவ‌த‌ற்கு பாயும் க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம்.
வாக்கு வாத‌த்தில் க‌வுன்சில‌ர்க‌ள்
கீழ‌க்க‌ரை நகராட்சி கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்தில் தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.கூட்டம் தொடங்கியது முதல் நிறைவு வரை அமளி நிலவியதால் பரபரப்பு காணப்பட்டது.

நகராட்சியில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி .....

அஜ்மல் கான் (11வது வார்டு):- கீழக்கரைக்கு நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவா ? அல்லது அவர் கணவர் அமீர் ரிஸ்வாணா ? பொது மக்களுக்கும்,நிர்வாகிகளுக்கும் குழப்பமாக உள்ளது என்றும் மேலும் அமீர் ரிஸ்வான் நிர்வாகத்தில் தலையிடுகிறார் இது அரசின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது.

தலைவர் ராபியத்துல் காதரியா :- உங்கள் வீட்டு பெண் தலைவராக வந்தால் நீங்கள் வரமாட்டீர்களா ,பெண் என்பதால் வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்.கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தில் வந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.பொய்யான புகார்களை கூறுவதையும் நோட்டிஸ் வெளியிடுவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் மேலும் துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஒரே நபருக்கு நான்கு பணிகளுக்குக்கான டெண்டரை வழங்கும்படி தெரிவித்தார்கள்.அவர் கூறியபடி நடக்காததால் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.


துணை தலைவர் ஹாஜா முகைதீன்:-
நான்கு பணிகளை ஒரே நபருக்கு வழங்க நான் உங்களிடம் சொல்லவில்லை(துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன் திடீரென‌ குர் ஆனை எடுத்து வர சொல்லி "சொல்லவில்லை" என்று குர் ஆனை வைத்து கொண்டு சத்தியம் செய்தார் அருகிலிருந்த‌ க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் உட‌ன‌டியாக‌ குரானில் ச‌த்திய‌ம் செய்யாதீர்க‌ள் என்று கூறி பாய்ந்து சென்று குரானை வாங்கினார்.)

இதனையடுத்து சபையில் அதிர்ச்சி நிலவியது.கீழக்கரை வராலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் ..சுரேஷ் :- கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ப‌குதிக‌ளில் ந‌டைபெற்ற‌ க‌ழிவு நீர் வாய்கால்களை துப்புர‌வு செய்யும் ப‌ணி முறையாக ந‌டைபெற‌வில்லை.


முகைதீன் இப்ராகிம்(18வ‌து வார்டு):- ந‌க‌ராட்சிக்கு சொந்த‌மான‌ கிண‌றுக‌ள் 96 இதில் 50 கிண‌றுக‌ள் த‌னியார் ஆக்கிர‌மிப்பில் உள்ள‌து.அதிகாரிக‌ள் உட‌ன‌டியாக‌ ஆய்வு மேற்கொண்டு ப‌ல‌ கோடி ரூபாய் ம‌திப்புள்ள‌ அர‌சு சொத்துக்க‌ளை மீட்க‌ வேண்டு.மேலும் ந‌க‌ராட்சி த‌ற்போது விட‌ப்ப‌ட்டுள்ள‌ டெண்ட‌ரில் முறைகேடுக‌ள் ந‌டைபெற்றுள்ள‌து. முறையாக‌ ம‌று டெண்ட‌ர் விட‌ வேண்டும்.இடி மின்ன‌ல் ஹாஜா (20வ‌து வார்டு):- சேதுக்க‌ரை குடிநீர் திட்ட‌த்தில் உய‌ர் திற‌ன் கொண்ட‌ 10 மின் மோட்டார்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்டிருந்த‌து இதில் 8 மோட்டார்க‌ள் த‌ற்போது மாயாமாகியுள்ள‌து .மேலும் கீழ‌க்கரையில் அமைக்க‌ப்ப‌டும் சாலைக‌ள் ஒரு வார‌த்தில் காணாம‌ல் போகிற‌து என‌வே ரோடு அமைப்ப‌தில் காட்டும் ஆர்வ‌த்தை ம‌க்க‌ளின் முக்கிய‌ பிர‌ச்ச‌னையான‌ குடிநீர்,குப்பை,சாக்க‌டை இவற்றிலும் காட்ட‌ வேண்டும் .அன்வ‌ர் அலி (7வ‌து வார்டு) :- த‌ச்ச‌ர் தெருவில் உள்ள‌ உய‌ர் மின் கோபுர‌ விள‌க்கில் வய‌ர்க‌ள் த‌னியார் ரோடு போடும் நாச‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து. இதை அவ‌ர்க‌ளே ச‌ரி செய்வ‌தாக‌ உறுதி அளித்திருந்த‌ன‌ர் ஆனால் ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் இத‌ற்கு ரூ60636 செல‌வு செய்திருப்ப‌தாக‌ தீர்மான‌ம் கொண்டு வ‌ந்திருப்ப‌து வேடிக்கையாக‌ உள்ள‌து.

இது தவிர‌ இன்னும் ப‌ல் வேறு விவாத‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌ன‌. ந‌க‌ராட்சி கூட்ட‌ம் மாலை 4/30 ம‌ணியில் இருந்து இர‌வு 7.45 வ‌ரை ந‌டைபெற்ற‌து. இதில் ப‌ல‌ முறை மின் த‌டை ஏற்ப‌ட்ட‌தால் க‌வுசில‌ர்க‌ள் பேசுவ‌தை க‌வ‌னிப்ப‌தில் மிகுந்த‌ சிர‌ம‌ம் ஏற்ப‌ட்ட‌து. கூச்ச‌லும்,குழ‌ப்ப‌முமாக‌‌ கூட்ட‌ம் நிறைவு பெற்ற‌து. ஒரு சில‌ தீர்மாண‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.


ந‌க‌ராட்சி கூட்ட‌ம் குறித்து ராபியத்துல் காத‌ரியா கூறுகையில் , கூட்ட‌த்தை அமைதியான‌ முறையில் ந‌ட‌த்த‌ விட‌க்கூடாது என்ற‌ நோக்க‌த்தில் சில‌ர் ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர்.இது போன்ற‌ செய‌ல்க‌ள் ஊரின் ந‌ல‌னை பாதிக்கும்.மேலும் துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் குறிப்பிட்ட‌ ந‌ப‌ருக்கு டெண்ட‌ரை வ‌ழ‌ங்க‌ சொன்னார் என்று நானும் ச‌த்திய‌ம் செய்வதாக‌ கூறினேன்.இப்போதும் சொல்கிறேன் எப்போதும் ,எங்கேயும் அவ‌ர் சொன்ன‌து உண்மை என்று ச‌த்திய‌ம் செய்ய‌ த‌யார் என்னை ப‌ற்றி ம‌க்க‌ளுக்கு தெரிந்தால் போதும். த‌ற்போது ந‌க‌ராட்சி ந‌ன்றாக‌ செய‌ல்ப‌டுவ‌தை த‌டுப்ப‌த‌ற்காக‌ இதுபோன்ற‌ இடைஞ்ச‌ல்க‌ளை த‌ருகிறார்க‌ள். க‌வுன்சிலர்க‌ள் சில‌ரும்,துணை தலைவ‌ர் ஆகியோர் என்னிடம் நகராட்சி நிகழ்ச்சிகளுக்கு கணவர் இல்லாமல் வ‌ர‌ சொல்கிறார்க‌ள் என்னால் அப்ப‌டி வ‌ர‌ முடியாது ச‌கோத‌ர‌ர்க‌ள் அல்ல‌து க‌ண‌வ‌ருட‌ன்தான் வ‌ருவேன்.துணை சேர்மேன் அவர்கள் வேலுச்சாமி உள்ளிட்ட‌ இர‌ண்டு பேருட‌ன்தான் வ‌ருகிறார்.ஒரு பெண்ணாக‌ நான் க‌ண‌வ‌ருட‌ன் வ‌ர‌க்கூடாதா? ஒரு பெண்ணாக‌ நான் எடுத்த‌ இந்த‌ முடிவுக்கு‌ ‌ ஊர் ம‌க்க‌ள் க‌ண்டிப்பாக‌ ஆத‌ர‌வு த‌ருவார்க‌ள் என்றார்.

ந‌க‌ராட்சி கூட்ட‌ம் கூறித்து அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பொருளாள‌ர் ஹ‌மீது ர‌ஹ்மான் கூறிய‌தாவ‌து,இரு த‌ர‌ப்பும் ஊர் ந‌ல‌னை க‌ருத்தில் கொண்டு செயல்ப‌ட‌ வேண்டும்.இரு த‌ர‌ப்பும் ஒற்றுமையாக‌ செயல்ப‌ட்டால் தான் ஊரின் முன்னேற்ற‌த்திற்கு வ‌ழி வ‌குக்கும் என்ப‌து கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பாகும் என்றார்