Monday, April 30, 2012

கீழக்கரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது !


பட விளக்கம்:- நகராட்சி சேர்மன் ராவியத்துல் காதரியா வீட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு பல் வேறு இடங்களில் பிறகு சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிழக்கரை நகரிலும் இப்பணி தொடங்கியது. நகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இப்பணி நடைபெற்று வருகிறது.வீடு வீடாக சென்று இப்பணியை தொடர்ந்து வருகிறார்கள்.
மக்களின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டுமென்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

குப்பைகளை தாங்களே அகற்றிய அல் ஹிலால் சங்கத்தினர் ! நகராட்சி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு!






புது கிழக்குதெரு பட்டாணி அப்பா தர்ஹா பகுதியில் ஏராளமான குப்பைகளை குவிந்து கிடந்தது. நீண்ட காலமாக இப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் பல முறை நகராட்சியிடம் முறையிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி குப்பைகளை தாங்களே அகற்ற நேர்ந்ததாக அல் ஹிலால் சஙகத்தினர் தெரிவித்தனர்.

இப்பணியில் அச்சங்கத்தை சேர்ந்த செயலாளர் அப்துல் ஹாதி இணை செயலாளர் அப்பாஸ் ஆலிம் ,முகம்மது இஸ்ஹாக் ஆகியோர் தலைமையில் ஜகுபர் சாதிக்,ரஹம்த்துல்லா,அப்துல் ஹக்கீம்,சித்தீக் மரைக்கா,யூசுப் அன்சாரி,அபுதாஹிர்,மதார்ஷா ஆசாத் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


இது குறித்து அப்துல் ஹாதி மற்றும் அப்பாஸ் ஆலிம் ஆகியோர் கூறுகையில்,
பல முறை நகராட்சி நிர்வாகத்திடமும்,வெல்பேர் டிரஸ்ட் நிர்வாகிகளிடமும் எங்கள் பகுதி குப்பைகளை அகற்ற கோரிக்கை வைத்தோம் ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை வேண்டுமென்றே எங்கள் வார்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறோம் இப்பகுதி மக்கள் வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்கள் எனவே அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்கள் பகுதியை புறகணிக்க கூடாது என்றார்.

Sunday, April 29, 2012

விபத்து அபாயம் !வண்ணாந்துறை வளைவில் சாலையோரம் வீசப்படும் இரும்பு வேகதடுப்பு!



கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே சாலை வளைவில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்ததால் காவல்துறை சார்பில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் இரும்பு தடுப்பு வளைவு வேலிகளை அமைத்திருந்தனர்.ஆனால் லாரிகளில் வருபவர்கள் தடுப்புகளை சாலையோரம் வீசி விட்டு லாரிகளை வேகமாக ஓட்டி செல்வதாகவும் இத‌னால் விப‌த்துக்க‌ள் ஏற்ப‌ட‌ வாய்ப்புள்ள‌தாக‌ பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இது குறித்து ரோட்டரி சங்க நிர்வாகி ஆசாத் கூறுகையில் ,
வாகனத்தில் வருபவர்களின் பாதுகாப்புக்காகத்தான் இந்த ஏற்பாட்டை காவல்துறையினர் செய்துள்ளனர். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் இது போன்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது என்றார்.

நீண்ட காலத்துக்கு பிறகு முதல் முறை ஒரு ம‌ணி நேர‌ம் ம‌ட்டும் மின்த‌டை !



த‌மிழ‌க‌ முழுவதும் பல மணி நேரங்கள் தொட‌ர் மின்வெட்டு நில‌வி வ‌ரும் நிலையில் கீழ‌க்க‌ரை ம‌ட்டும் விதிவில‌க்க‌ல்ல‌ ஆனால் என்றுமில்லா அதிச‌யமாக கீழக்கரையில் பெரும்பாலான இடங்களில் நேற்று இர‌விலிருந்து இன்று இரவு(29-04) வ‌ரை ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் குறைவாக‌ மின்சார‌ம் த‌டைப‌ட்ட‌தாக‌ பொது ம‌க்க‌ள் ம‌கிழ்ச்சி தெரிவித்த‌ன‌ர்.


சின்ன‌க்க‌டை தெருவை சேர்ந்த ராசீக் கூறுகையில் ,

நீண்ட‌ கால‌த்துக்கு பிறகு முதல் முறையாக‌ ஒரு ம‌ணி நேர‌த்திற்கு குறைவாக‌ மின் த‌டை ஏற்ப‌ட்டுள்ளது ம‌கிழ்ச்சிய‌ளிக்கிறது.ஸ்வீட் வழ‌ங்கி கொண்டாடினாலும் த‌கும் என்றார்.

Saturday, April 28, 2012

கீழக்கரையில் இலவசமாக +2வரை தமிழக அரசின் பள்ளி கல்வியுடன் மார்க்க கல்வி ! 30-ஏப் விண்ணப்பம் விநியோகம்!




ஹமீதியா அரபி & எஜுகேசனல் கல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஹமீதியா அரபி & எஜுகேசனல் கல்லூரியில் உலக கல்வியுடன் இணைந்த இஸ்லாமிய மார்க்க கல்வி என்ற அடிப்படையில் மெளலவி- ஆலிம் பட்டப்படிப்புகளோடு கூடிய தமிழக அரசின் 8 முதல் +2 வரையிலான தமிழக அரசின் கல்வி ,ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை இங்கு எவ்வித கட்டணமுமின்றி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது .

மேலும் பள்ளி சீருடை ,பாட புத்தகங்கள் ,எழுது கோல் சாதனங்கள் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது .

வீட்டிலிருந்து வருவதற்கு வாகன வசதியும் வழங்கப்படுகிறது.

சேருவதற்கான தகுதிகள் : -

1,குர் ஆனை பார்த்து ஓத தெரிந்திருக்க வேண்டும்
2.குறைந்த் பட்சம் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
மேலும் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களும் சேர்ந்து பயிலலாம்


விண்ணப்பம் வினியோக நாள் : 30-04-12

விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள் : 20-05-12

நேர்முகதேர்வு: 26-05-12

கல்லூரி துவங்கும் நாள் : 06-06-12


விண்ணப்பம் கிடைக்குமிடம் :- எஸ். அப்பாஸ் அலி ஆலிம்
மொபைல் : 94438053225
99420 55372
நூற்றுக்கு மேற்பட்டோர் பயின்று வரும் இப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட கீழக்கரையை சேர்ந்த மாணவர்கள் ஆலிம்களாக உருவாக உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Friday, April 27, 2012

கீழக்கரை புதிய கடல் பாலத்தில் தரையின் ஒரு பகுதி உடைந்து சேதம் ! (படங்கள்)


சேதமடைந்துள்ள தரையின் ஒரு பகுதி


சேதமடைந்துள்ள சுவர் பகுதி


கீழக்கரையில் கடந்த சில மாதங்களுக்கு 5 கோடிக்கு மேற்பட்ட பட்ஜெட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கடற்கரை ஜெட்டி பாலத்தின் ஒரு பகுயில் தரை பகுதி உடைந்து சேதமடைந்துள்ளதோடு சிறிய அளவில் விரிசலும் காணப்படுகிறது.மேலும் பாலத்தையோட்டு அலைகளின் தடுப்புக்காக சுற்றிலு கட்டப்பட்டுள்ள சுவர் பகுதியும் உடைந்து காணப்படுகிறது. சில மாதங்களிலேயே உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ளோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கூறுகையில் ,

பழைய பாலம் பழுதடைந்தினால் இப்பாலம் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது ஆனால் சில மாதஙக்ளிலேயே இது போன்று உடைப்பு ஏறுபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்திகிறது மேலும் சுற்றுப்புற சுவரும் சேதமடைந்துள்ளது.உடனடியாக சமபந்தபட்டவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசாங்கம் சிறிய உடைப்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக தொழில் நுட்ப நிபுணர்களை கொண்டு கடற்பாலத்தை என்று மறு ஆய்வு செய்ய வேண்டும்.இத்தனை கோடி செலவழித்து கட்டப்பட்ட பாலம் சில மாதங்களிலேயே பழுதடைந்தது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, April 23, 2012

கீழ‌க்க‌ரை வேலை வாய்ப்பு முகாமில் 60 பேர் ப‌ணியில் நியம‌ன‌ம் !


கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கனரக வாகன உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனம் அசோக் லேய்லேண்ட் ஓசூர் வேலை வாய்ப்பு பிரிவு சார்பில் +2,மற்றும் டிப்ளமா தேர்ச்சியடைந்தவர்கள் ,தேர்ச்சி அடையாதவர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கினைப்பாளார் சேக்தாவுத் வரவேற்று பேசினார்.
அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் சார்பில் பத்மநாபன் நேர்முக தேர்வை நடத்தினார்.

110 பேர் கலந்து கொண்ட இத்தேர்வில் 60 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

2-5-12அன்று கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்!



கீழக்கரை நகராட்சி 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

கீழக்கரை நகராட்சியில் நிலவும் மெத்தன போக்கு மற்றும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், கீழ்க்கண்ட 10 அம்ச கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரக் கோரியும் கீழக்கரை நகராட்சி முன்பு 02.05.2012 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நான் மற்றும் கீழ்கண்ட நகர்மன்ற கவுன்சிலர்களால் நடைபெற இருக்கின்றது.

கோரிக்கைகளின் விபரம்:-

1) கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு வகிக்கும் ஆணையர் நகர் மீது அக்கரை இன்றி செயல்படுவதால் இந்த நகராட்சிக்கு பொறுப்பான தனி ஆணையர் நியமிக்க கோரியும்.

2) கீழக்கரை நகராட்சியில் A கிரேடு அதிகாரிகளின் பற்றாக்குறையால் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் செயலிழந்து இருப்பதால் அந்த பதவிகளுக்கு உடனடியாக அதிகாரிகளை நியமனம் செய்யக் கோரியும்.

3) கீழக்கரை நகராட்சியில் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு பொறுப்பற்ற முறையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் D கிரேடு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து பொறுப்பான ஊழியர்களை நியமனம் செய்யக் கோரியும்.



4) கீழக்கரை நகரில் மக்கள் நலப்பணிகள் செய்வதற்கு மன்ற ஒப்புதல் பெற்று ஒப்பந்த புள்ளி (TENDER) நடந்த பின் இதுவரை வேலை நியமன ஆணை (WORK ORDER) கொடுக்காத நகராட்சி ஆனையர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரியும்.

5) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த பெண் பிரதிநிதிகளின் உள்ளாட்சி அமைப்புகளில் உறவினர் மற்றும் கணவரின் தலையீட்டை தடுத்து ஆணை பிறப்பித்ததை மதிக்காமல் மீறி செயல்படும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரியும்.

6) கீழக்கரை தற்போது நகராட்சியாக உயர்ந்து இருப்பதால் நகரின் நலன் கருதி கூடுதல் நிரந்தர துப்புறவு தொழிலாளர்களை நியமனம் செய்யக் கோரியும்.

7) கீழக்கரை மக்கள் மலேரியா மற்றும் கொடிய நோய்களால் அவதிப்படுவதால் நகரின் அடிப்படை தேவைகளான குறிப்பாக கொசு மருந்து அடிப்பது, வாருகால்களில் தூர் வாருவது, சாலைகளில் தேங்கி இருக்கும் மணல்களை அகற்றுவது, தேவைப்படும் இடங்களில் பொது மக்கள் நலன் கருதி வேகத்தடை அமைப்பது, முறையாக குப்பைகளை அகற்றுவது இவைகளை உடனடியாக செயல்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கீழக்கரை நகராட்சிக்கு உத்தரவு செய்யக்கோரியும்.

8) நகருக்கு அரசு ஒதுக்கும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய ஒப்பந்தப்படி ஊழல் நடைபெறாமல் முறையாக வேலைகள் நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு அரசு பொறியாளர் தலைமையில் பொது அமைப்புகளில் பிரதிநிதிகள் குழு அமைக்க கோரியும்.

9) கீழக்கரை பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் நீர்தேக்க தொட்டி சுகாதாரம் இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதை உடனடியாக அகற்றி கூடுதல் கொள்ளலவு உள்ள நீர்தேக்க தொட்டி புதிதாக அமைக்க கோரியும்.


10) கீழக்கரை நகர் மன்ற கூட்டம் நடத்துவதற்கு சுமார் 72 மணி நேரத்திற்கு முன் மாமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு மன்ற நிகழ்ச்சி நிரல் (BOARD AJENDA) படிவத்தை முறையாக வழங்க கோரியும்.

கீழக்கரை நகர் மக்கள் நலன் கருதி நடைபெறும் இந்த உண்ணவிரத போராட்டத்தில் நான் மற்றும் 1. A.ரமேஷ் M.C 2. M.சாகுல் ஹமீது M.C 3. R.தங்கராஜ் M.C
4. S.A.அன்வர் அலி M.C 5. S.அஜ்மல் கான் M.C 6. M.S.முகம்மது மஜிதா பீவி M.C
7. M.L.அருஸியா பேகம் B.SC, M.C 8. A.H.ஹாஜா நஜ்முதீன் M.C 9. D.ஜெயபிரகாஷ் M.C ஆகிய கவுன்சிலர்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்

Sunday, April 22, 2012

அத்திலை தெரு இளைஞ‌ர்க‌ள் முய‌ற்சியால் மின் தொட‌ர்பான‌ பிர‌ச்ச‌னைக்கு தீர்வு !


மின் ஊழிய‌ர்களுடன் இணைந்து ப‌ணியாற்றிய‌ இளைஞ‌ர்க‌ள்




கீழக்கரை அத்திலை தெரு பகுதியில் மின்கம்பங்கள் கீழே விழும் நிலையிலும் ,வயர்கள் அறுந்து விழும் நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக புகார் அளித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா மின்சாரதுறையிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதனையடுத்து மின் துறை உயர் அதிகாரி பாண்டியன் நகராட்சி தலைவருடன் அத்திலை தெருவில் பாதிப்படைந்த மின்கம்பங்களை பார்வையிட்டார் .விரைவில் ச‌ரி செய்ய‌ப்ப‌டும் என்றார்.ஆனாலும் பழுது பார்ப்பது தாம‌தாமாகி வ‌ந்த‌து.

இதனையடுத்து க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ அப்ப‌குதியின் இளைஞ‌ர்க‌ளின் தொட‌ர் முய‌ற்சியின் பேரில் இப்பகுதியில் உள்ள வீடுக‌ளில் வ‌சூல் செய்து புதிய வயர்கள் உள்ளிட்ட உப‌ர‌க‌ர‌ண‌ங‌களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.இதனையடுத்து மின் இலாக‌வின‌ர் 5 ஊழிய‌ர்க‌ளுட‌ன் அத்திலை தெரு ப‌குதியில் ப‌ழுத‌டைந்த‌ வ‌ய‌ர்க‌ள் உள்ளிட்ட‌ மின் உப‌க‌ரண‌ங்க‌ளை மாற்றி ச‌ரி செய்த‌னர்.இப்பகுதியின் 10க்கும் மேற்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ள் மின் ஊழிய‌ர்க‌ளோடு இணைந்து ப‌ணியை மேற்கொண்ட‌ன‌ர்.


நீண்ட‌ காலமாக‌ இருந்து வ‌ந்த‌ பிர‌ச்ச‌னைக்கு முற்றுப்புள்ளி வைத்த‌ இளைஞ‌ர்க‌ள் பாராட்டுக்குறிய‌வ‌ர்க‌ள் என்று அப்ப‌குதியை சேர்ந்தோர் தெரிவித்த‌னர்.

மின் உபகரணங்கள் வாங்குவது மின் இலாகா செய்ய‌ வேண்டிய‌ ப‌ணியாகும்.மின் க‌ட்ட‌ண‌ங்க‌ளை உய‌ர்த்தியும் க‌டுமையான‌ முறையில் வ‌சூல் செய்யும் மின் இலாகா இதுபோன்ற‌ ப‌ணிக‌ளை இனியாவ‌து தங்க‌ளின் துறை மூலமாக‌ ச‌ரிசெய்து கொடுக்க‌ வேண்டும்.இது போன்ற பணிகளை மக்களே செய்து கொள்ள‌ வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவ‌து அரசாங்கத்திற்கு கெட்ட‌ பெய‌ர் ஏற்ப‌டுத்தும் என்ப‌தில் ஐய‌மில்லை.

செய்தி தொகுப்பு : அல்லா ப‌க்ஸ்(செய்திக்குழு)

Saturday, April 21, 2012

இன்று(21-04-12) கிழக்குத்தெருவில் இலவச கண் சிகிச்சை முகாம் !




கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ,பார்வை ஈழப்பு தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சிகிச்சை மதியம் 2 மணி வரை கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை ,கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அருகில் தொடங்கியது.



இத்தகவலை கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி சாதிக் தெரிவித்துள்ளார்.

Friday, April 20, 2012

கீழக்கரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது! நகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி !


பட விளக்கம் :-நகராட்சி ஊழியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நடைபெறுகிறது

கீழக்கரை நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வருகின்ற ஏப் 24 முதல் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி நகராட்சி கமிஷனர் முஜிப் ரஹ்மான் உத்தரவின் பேரில் நகராட்சி மேற்பார்வையாளர் கார்த்திக் தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன் பெல் நிறுவன ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து கமிஷனர் முஜிப்ரஹமான் கூறியதாவது
,
வரும் 24 முதல் சமூக பொருளாதாரம் மற்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.பொது மக்கள் கணக்கெடுக்க வரும் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமான சந்தேகங்களுக்கு 04567 244317 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

கீழக்கரை - ராமநாதபுரம் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்! பொதுமக்கள் புகார்!




கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் அரசு பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ 9 ரூபாய் ஆனால் ஆனால் அரசு பஸ் கண்டக்டர்கள் ரூ10 வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.இது குறித்து கண்டக்டரிடம் பயணிகள் விளக்கம் கேட்டால் வேறு பஸ்சில் பயணம் செய்யுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார்களாம்.இதனால் தனியார் பஸ்களை நாடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அதிகாரிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை விடுத்துள்ளன‌ர்.



இது குறித்து ச‌மூக‌ ந‌ல‌ நுக‌ர்வோர் சேவை இய‌க்க‌த்தின் செய‌லாள‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ணன் கூறுகையில் ,
த‌மிழ‌க‌ அர‌சு ப‌ன்ம‌ட‌ங்கு உய‌ர்த்தியுள்ள‌தை தாங்க‌ முடியாம‌ல் பொது ம‌க்க‌ள் சிர‌ம‌ப்ப‌டும் சூழ‌லில் த‌ற்போது அர‌சு நிர்ண‌யித்த‌ க‌ட்ட‌ண‌த்தை விட‌ கூடுத‌லாக‌ க‌ண்ட‌க்ட‌ர்க‌ள் வ‌சூல் செய்கின்ற‌ன‌ர்.

இது குறித்து ராம‌நாத‌புர‌ம் அர‌சு ட‌வுன் ப‌ஸ்க‌ளின் மேலாள‌ரிட‌ம் புகார் தெரிவித்துள்ளோம் .ஆனால் இது வ‌ரை எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை.என‌வே பொது ம‌க்க‌ளின் ந‌ல‌ன் க‌ருதி மாவ‌ட்ட‌ ஆட்சியர் த‌லையிட்டு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.
இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்.

Thursday, April 19, 2012

கீழக்கரையில் பிரபல நிறுவனம் சார்பில் நாளைமறுதினம்(21-4-12) வேலை வாய்ப்பு முகாம் !



கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளைமறுதினம்(21-4-12) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் அலாவுதீன் கூறியதாவது,

ஓசூரில் கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனத்துக்கு தற்காலிகமாக பணிபுரிய பிளஸ் 2 ஒகேசனல்,ஐடிஐ மற்றும் டிப்ளமா மின்னியல்,மின்னனுவியல்,தொடர்பியல்,கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இயந்திரவியல் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்த. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு நாளைமறுதினம் 21-04-12 சனிக்கிழமை நடைபெற உள்ளது.
18 வயது முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் விபரங்கள் மேலே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது

Wednesday, April 18, 2012

அறிவிப்பு ! (வபாத்)காலமானார் !


தெற்குதெருவை சேர்ந்த மறைந்த‌ யாசீன் நானா அவர்களின் மகன் வடக்குதெரு ஜமாத்தை சேர்ந்த தைக்கா என்ற செய்யது அஹமது கபீர் அவர்கள் இன்று (வபாத்)காலமானர்கள்.

இவர் தனது சகோதரரோடு கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் லூலூ என்ற‌ கடை அருகே வெளிநாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் கடையை நிர்வாகித்து வந்தார்.அன்னாரின் நல்லடக்க‌ம் வடக்குத்தெரு மையவாடியில் இன்று மாலை நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு "மஹ்பிரத்" எனும் மன்னிப்பை அருளி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் சுவனபதியை உரித்தாக்குவானாக ஆமீன்!

தகவல் :-அன்னாரின் குடும்பத்தார்

உழைப்பிற்கு வயதில்லை! 109 வயது 'இளைஞருக்கு" அரசு விருது வழங்க கோரிக்கை!



கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்தவர் செய்யது அபுதாகிர் 109 வயதாகு்ம்
இவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இவர் கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து வருகிறார்.வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்து காட்டாகவும் ,உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் போல் சுறுசுறுப்பாக உழைத்துகொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார்.மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியை பெற்று கொள்ளு்ம் இவர் பேரம் பேசுவதில்லை.

இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும் போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டு விடும் ஆனால் இந்த முதிய வயதிலு்ம் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் உள்ள ஈடுபாடேயாகும்.


இது குறித்து சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் செயலாள‌ர் நல்ல இப்ராகிம் ஆகியோர் கூறியதாவது,

ஆண்டுதொறும் மத்திய மற்றும் மாநில அரசு தங்களின் சிறப்பான செயல்களுக்காக‌ பல் வேறு விருதுகளை அறிவித்து பலரையும் கெளரவப்படுத்துகிறது. அந்த வகையில் உழைப்பிற்கு எடுத்து காட்டாக திகழும் 100ஆண்டுகளை கடந்த மூத்த குடிமகனான அபுதாகிர் அவர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க மத்திய மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்.அவரை கெளரவப்படுத்த வேண்டும் என்றார்.

ஏற்கெனவே இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இக்கால இளைஞர்களுக்கு முன்மாதியாக திகழும் உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று,நீண்ட ஆயுளை பெற உங்களுடன் இணைந்து கீழக்கரை டைம்ஸ் வாழத்துகிறது .

Tuesday, April 17, 2012

கீழ‌க்க‌ரையில் தமுமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு !



கீழக்கரை தமுமுக சார்பில் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக நீர் மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. கீழக்கரை தமுமுக தலைவர் செய்யது இபுராகிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் தஸ்பீக், மமக செயலாளர் அன்வர், கீழக்கரை நகர் செயலாளர் இக்பால், பொருளாளர் சாதிக் முன்னிலை வகித்தனர், இதில் நகர் நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை பகுதியில் கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்ச‌ரிக்கை!(படம்)


பனங்கள் விற்பனைக்கு தடை குறித்தும், மீறி யாராவது விற்பனை செய்தால் புகார் தெரிவிப்பது பற்றியும் திருப்புல்லாணி காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு அறிவுரை தருகிறார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.

பனங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறி விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் தரலாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கீழக்கரை , திருப்புல்லாணி மற்றும் சுற்றுப்பகுதி கிராமப்புறங்களில் பனங்கள் விற்பனை ஜோராக நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் அப்பகுதியில் உள்ள கிராமங்களான சக்திபுரம், பெரியபட்டிணம், காடுகாவல்காரன் வலசை, சேதுகரை, மேதலோடை ஆகிய பகுதிகளில் உள்ளோரை அழைத்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அறிவுரை வழங்கினார்.

அவர் கூறுகையில், “பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை வியாபாரம் செய்யுங்கள். பெண்கள் ஓலைபாய், ஓலை பெட்டிகள் தயார் செய்து வியாபாரம் செய்யுங்கள். கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். “தடையை மீறி யாராவது கள் விற்பனை செய்தால், 84289 90028, 90438 33408 ஆகிய எண்களுக்கு போன் செய்து புகார் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்,” என் றார்.

Monday, April 16, 2012

வேக கட்டுப்பாடு,யூனிபார்ம் உள்ளிட்ட‌ விதிமுறை மீறல்!14 ஆட்டோக்களுக்கு அபராதம்!


பைல் படம்-கீழக்கரையில் அதிக பள்ளி குழந்தைகளுடன் ஆபத்தான ஆட்டோ பயணம்

கீழக்கரை ப‌குதியில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் நூற்றுக்கணக்கான ஆம்னி வேன்களும் இயக்கப்படுகிறது. எப்சி காலவதியாகி புதுபிக்காமலும் ,ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் நிலவி வந்த நிலையில் நேற்று ஆர்டிஓ குலோத்துங்கன் கீழக்கரை பகுதியில் வாகனங்களை திடீர் சோதனை செய்தார் இதில் எப்சி காலவதியாகி இயக்கபட்ட இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்து கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் அதிவேகம் மற்றும் யூனிபார்ம் அணியாமல் ஓட்டியது என 14 ஆட்டோக்களுக்கு ரூ500 அபராதம் விதித்தார்

இது குறித்து சுல்தான் என்பவர் கூறுகையில் ,


பள்ளி நேரத்தில் ஆர்டிஓ சோதனை செய்து அதிகமான குழந்தைககளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கம்பிகளில் உட்கார்ந்து பயணம் செய்யும் குழந்தைகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குப்பை கொட்டும் போராட்ட அறிவிப்பு!க‌வுன்சில‌ரை பிடித்து சென்ற‌ போலீசார் !(படம்)


காவல் நிலையத்தில் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்

கீழக்கரை நகராட்சியின் 18வது கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே நகராட்சியை கண்டித்து இன்று(16-04-2012) நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். http://keelakaraitimes.blogspot.com/2012/04/blog-post_9500.html


இந்நிலையில் இன்று காலை கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இத‌னால் க‌வுன்சில‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டார் என்று செய்தி ப‌ர‌வியது.இதனால் க‌வுன்சில‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் காவ‌ல்நிலைய‌த்தில் குவிந்தன‌ர்.



இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,

என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற கீழக்கரை போலீசார் குப்பை கொட்டும் போராட்ட‌த்திற்கு அனும‌தியில்லை என்றும் போராட்டம் நடத்த கூடாது என்றும் கூறி சுமார் 2 ம‌ணி நேரத்திற்கு மேல் காவல் நிலையத்தில் உட்கார‌ வைத்தன‌ர்.கைது செய்ய‌ப‌டுவோம் என்ற‌ எண்ண‌த்தில் தான் சென்றேன். பின்ன‌ர் காவ‌ல் நிலைய‌த்திலிருந்து விடுவித்து அனுப்பி விட்ட‌ன‌ர்.ஆனாலும் விரைவில் மக்கள் நலனை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்றார்.

நாளை17-04 கீழக்கரையில் உதடு,உள் அண்ணம் பிளவு பாதிப்புக்கு இலவச மருத்து முகாம் !



கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மாவட்ட ஒருங்கினைந்த வளர்ச்ச் திட்டம்,மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம்,மதுரை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு,உள் அண்ணம் பிளவு பட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் கீழக்கரை ஹீசைனியா மஹால் அருகில் உள்ள நகர் நல் இயக்கத்தின் அலுவலகத்தில் நாளை மாலை 3 மணி முதல் 5மணி வர நடைபெறுகிறது.

இதில் இது சம்பந்தமான நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கும் மருந்து உணவு இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை இயக்கத்தின் நிர்வாகிகள் பசீர், ஹாஜா உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

Sunday, April 15, 2012

கீழக்கரை அருகே கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் உடல்! போலீசார் விசாரணை!




கீழக்கரையை அடுத்த பாரதிநகர் கடற்கரையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத உடல் இருதுண்டுகளாக கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாயாகுளம் வி.ஏ.ஓ முருகேசன்,கீழக்கரை விஏஓ வீரசிகாமணி,ஆர்ஸ் செல்வராஜ் மற்றும் எஸ்.ஐ செல்வராஜ் மற்றும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Saturday, April 14, 2012

கீழக்கரை அருகே அம்பேத்கார் பிறந்த நாள் விழா !




கிழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் சேகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ஆணிமுத்து,கிழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் பாவா செய்யது கருணை,சுரேஷ்,கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன்,சரவண பாலாஜி,அம்மா பேரவை ராஜேந்திரன்.ரிஸ்வான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Friday, April 13, 2012

தாசிம் பீவி கல்லூரியில் ஆராய்ச்சி குறித்து ச‌ர்வ‌தேச‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் !



கீழக்கரை,

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தற்கால ஆய்வாளர் ஆராய்ச்சி குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரிவளாகத்தில் நடந்த கருத்தரங்கை உதவி பேராசிரியர் ஹபீஸா கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். காரைக்குடி அண்ணா பல்கலைக்கழக டீன் கருத்த பாண்டியன் தலைமை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். துணைமுதல்வர் நாதிராபானுகமால், ஜிஆர்யூ காந்தி கிராம் மூத்த ஆராய்ச்சியாளர் சாமுவேல் காகூகோ முன்னிலை வகித்தனர்.

அண்ணா பல்கலைக்கழக டீன் கருத்தபாண்டியன் பேசுகையில், “ஆய்வு என்பது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னது போல மெய்பொருள் காண்பது அறிது என்பதற்கிணங்க இருக்கவேண்டும். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு உண்மை பொருளை கண்டுபிடித்து கூறுவதே சிறந்த ஆய்வு,” என்றார். வணிகவியல் துறை தலைவர் ஜாஸ்மின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

ந‌க‌ராட்சியை க‌ண்டித்து ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌ம் முன்பு குப்பை கொட்டும் போராட்ட‌ம்!க‌வுன்சில‌ர் அறிவிப்பு !



18வது வார்டு பகுதியில் குப்பைகளும், வாருகால்களில் தேங்கி இருக்கும் கழிவுகளும் அகற்றபடாமல் இருப்ப‌தாக க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் தெரிவிக்கிறார்.


கீழக்கரை நகராட்சியின் 18வது கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கீழக்கரை நகராட்சியின் 18வது கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவ‌ர் வெளியிட்டுள்ள‌ செய்தியில் கூறியிருப்ப‌தாவ‌து,

கீழக்கரை நகராட்சி எனது 18வது வார்டு பகுதியில் குப்பைகளும், வாருகால்களில் தேங்கி இருக்கும் கழிவுகளும் அகற்றபடாமல் இருக்கின்றது. மேலும் என் வார்டு பகுதிகளில் துப்புரவு பணி முறையாக செய்வது கிடையாது. இது சம்மந்தமாக எனது வார்டு பொது மக்கள் என்னிடம் பல முறை புகார் செய்து உள்ளனர். இதனால் என் வார்டு பகுதியில் பெரும் அளவு சுகாதார கேடு ஏற்படுவதுடன், பொது மக்கள் நோய்களால் அவதி படுகின்றார்கள்.

இது பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் கூறியும் இதுவரை முறையாக எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்வது கிடையாது. கீழக்கரை நகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்து என் வார்டு குறைகளை நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்ல எனது வார்டு பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து 16.04.2012 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகம் முன்பு கொட்ட இருக்கின்றேன்.

இந்த தகவலை தங்களது கவனத்திற்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,

தொட‌ர்ந்து என்னால் சிற‌ப்பாக‌ செய‌ப‌ட‌முடியாம‌ல் இருக்குமானால் க‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்வேன் என்றார்.


இது குறித்து ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவியத்துல் காத‌ரியா த‌ர‌ப்பில் கேட்ட‌ போது,

எல்லா வார்டுகளும் ஒரே மாதிரியான‌ கண்ணோட்ட‌த்துட‌ன்தான் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌.கீழ‌க்க‌ரை ந‌க‌ர் முழுவ‌து சுகாதாரத்தை மேம்ப‌டுத்த‌ ப‌ல்வேறு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ந‌க‌ராட்சி நிர்வாகம் எடுத்து வ‌ருகிறது.விரைவில் குப்பை கிட‌ங்கு ப‌ணிக‌ள் நிறைவ‌டைந்த‌வுட‌ன் குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு ஏற்ப‌ட்டு விடும்.18வ‌து வார்டு க‌வுன்சில‌ரின் குற்ற‌ச்சாட்டில் உண்மையில்லை இவ்வாறு அவ‌ர் த‌ர‌ப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

:

கீழக்கரையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்களுடன் சேர்மன் சந்திப்பு !



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவர் ராவியத்துல் காதரியா சென்னை சென்று கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு ந‌ல‌ திட்ட‌ங்க‌ளை செய‌ப்ப‌டுத்த‌ கோரி சம்பந்தப்பட்ட அமைச்ச‌ர்க‌ளை ச‌ந்தித்து வ‌லியுறுத்தி ம‌னு அளித்துள்ள‌தாக கீழக்கரை நகராட்சி தலைவர் தரப்பில் செய்தி குறிப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேலும் கூற‌ப்ப‌ட்டுள்ள‌தாவ‌து..
கீழக்கரையை தனி தாலுகாவாகும் என‌ அரசு அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தினார். விரைவில் இதற்கான‌ நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்


கீழ‌க்க‌ரையில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செய்லபடுத்தவும்,நகராட்சிக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்கவும் கோரி உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமியை சந்தித்து வலியுறுத்தினார். அனைத்தையும் கவனித்து விரைவில் ஆவண செய்வதாக அமைச்சர் கூறினார்


கீழக்கரையில் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு தொழில்துறை அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இக்கோரிக்கையை கவனத்தி கொண்டு ஆவண செய்யப்படும் என்றதோடு தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு அரசு நிச்சயம் தேவையான அனைத்து உதவிகளை செய்யும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ள

கீழக்கரையில் 80 சதவீதத்துக்கும் மேல் மின் கம்பங்கள் பழுதடைந்து உள்ளது.நகரின் பெரும்பாலான இடங்களில் நடந்து செல்லும் மக்களின் தலையை உரசும் அளவுக்கு பல இடங்களி வயர்கள் தொங்குகிறது.இவை அனைத்தையும் மாற்றி புதியதாக அமைக்கவும் மற்றும் மின் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் வலியுறுத்தப்பட்டது.அவர் இது குறித்து ஆவண செய்யப்படும் என்றார்.

நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது, .கீழக்கரைக்கு நலனுக்கு தேவையானவற்றை செய்து தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர் என்றார்.

Thursday, April 12, 2012

இஸ்லாமியா பள்ளியில் மழலை மாணவ,மாணவியருக்கு பட்டமளிப்பு விழா!


உயர்நிலை பள்ளி மாணவ,மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு பாராட்டி பரிசளிக்கப்பட்டது


கீழக்கரை தெற்குத்தெரு இஸ்லாமியா உயர் நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சென்ற ஆண்டு பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கும் விழா மற்றும் எல்கேஜி,யூகேஜி ,வகுப்பை நிறைவு செய்து 1ம் வகுப்புக்கு செல்லும் பிஞ்சு குழந்தைகளை ஊக்கப்படுத்து வகையில் அவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் தலைமை வகித்தார்.பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ வரவேற்றார்.மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸடிஸ் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் ஜே.எம்1 நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் கலந்து கொண்டு பரிசு மற்றும் பட்டம் வழங்கி பாராட்டினர்.கேஜி மூத்த ஆசிரியர் ராமலதா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் முகம்மது காசிம் மற்றும் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நூற்றாண்டு கண்ட‌ ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் 128 வது ஆண்டு விழா !



கீழக்கரை கிழக்குத் தெருவில் ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியின் 128 வது ஆண்டு விழா இன்று காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கிழக்குத் தெரு ஜமாஅத் உபத் தலைவர். முகைதீன் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்கள்.


கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக் மற்றும் நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொருளாளர் மத்தின் , செயலாளர் சேகு அபூபக்கர் சாகிபு மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.