Monday, September 30, 2013

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி!




கீழக்கரையில் எஸ்.டிபிஐயின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அக்கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர் தலைவர் இஸ்ஹாக்,மாவட்ட தலைவர் நவாஸ்கான்,தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், மற்றும் மாவட்ட ,நகர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

படம் மற்றும் செய்தி : முஜீப்

கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கப்பட வேண்டும்! கீழை ஜமீல் கோரிக்கை!

Photo : AS Traders

கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கப்பட வேண்டும்! இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜ‌மீல் கோரிக்கை

 ராமநாத‌புர‌ம் மாவட்டத்திற்கு 5 சட்டமன்ற தொகுதிகள்  வரை இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அவைகள் முறையே, கடலாடி, இராமநாதபுரம், பரமக்குடி, முதுக்குளத்தூர் மற்றும் திருவாடனை. ஆனால் தேர்தல் கமிசன் செய்த தொகுதி மறு சீரமைப்பில் நாம் ஒரு தொகுதியினை இழந்து விட்டோம்.நம் மாவட்டத்தில் மொத்தம் வாக்காளர் எண்ணிகை 8,86,659 ஆகும். இந்த 4 தொகுதியும் 2 இலட்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ளது.
முதுகுளத்தூர் - 254,552
இராமநாதபுரம் - 218,330
பரமக்குடி - 201,912
திருவாடனை - 211,865

ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள விருதுநகரின் வாக்காளர் எண்ணிக்கை 12,32,249 ஆகும். இத்தனை வாக்காளர்கள் கொண்ட இந்த மாவட்டத்திற்கு ராஜ பாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுளி என 7 சட்டமன்ற தொகுதிகளாம். ஒவ்வொரு தொகுதியும் சுமார் 1 இலட்சத்தி 80 ஆயிரம் வாக்காளர்களுக்கும் கீழ்தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விருதுநகர் தொகுதி 1 இலட்சத்தி 65 ஆயிரம் வாக்காளர்களைதான் கொண்டு உள்ளது.

ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எல்லா தொகுதிகளும் 2 இலட்சத்தி 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் கொண்டுள்ளது. அதிலும் முதுகுளத்தூர் தொகு 2 இலட்த்தி 54 ஆயிரம் வாக்காளர்களை கொண்டு இருக்கிறது.
விருதுநகர் மட்டும் அல்ல, பிரபலங்கள் போட்டியிடும் சென்னையிலுள்ள பல தொகுதிகளும் வாக்காளர்கள் மிக குறைவாக இருக்கின்றனர். (-ம்) எக்மோர், துறைமுகம், ராயபுரம் போன்ற தொகுதிகள். ராயபுரம் தொகுதி வெறும் 1 இலட்சத்தி 45 ஆயிரம் வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளது.

10,24,119
வாக்காளர்களை கொண்ட நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு 6 தொகுதிகள். அதில் 3 தொகுதிகள் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவே. கிள்வலூர் தொகுதியில் 1 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

12
இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டத்திற்கு 7 தொகுதிகள், 10 இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களுக்கு 6 தொகுதிகள். ஆனால் எட்டரை இலட்சம் வாக்காளர்கள் உள்ள நம் இராமநாதபுரத்திற்கும் மட்டும் 4 தொகுதிகள் மட்டும்?

இராமநாதபுரம் மாவட்டத்தின் மீது மட்டும் அரசுக்கு என்ன கோபம்? இது குறித்து ஏன் யாரும் அக்கறை செலுத்தவில்லை? ஒரு தொகுதியினை இழப்பதால் நாம் அரசின் அத்தனை நலத்திட்டங்களையும் இழக்கின்றோம். மிகவும் பின் தங்கிய, வறட்சி மாவட்டம் என பெயர் எடுத்த நம் மாவட்டத்தை புறம் தள்ளுவது ஏன்?

விருதுநகர் மாவட்டத்தில் .சிதம்பரம், வைகோ உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியிட்டு வெற்றி பெறும் தொகுதிகள் இருப்பதால் அந்த மாவட்டத்திற்கு கூடுதல் தொகுதிகளோ...

விருதுநகர் மாவட்டம் போல், தொகுதிக்கு 1 இலட்சத்து 75 ஆயிரம் பேர் என எடுத்தால், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் 5 தொகுதி ஒதுக்கி இருக்கலாம். மாவட்டத்திற்கு அதிக வருமானம் தரும் கீழக்கரை நகராட்சியினை புதிய தொகுதியாக அறிவித்து இருக்கலாம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் இழந்த ஒரு தொகுதியினை மீண்டும் கொண்டு வர வேண்டும் கோரிக்கையை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன் வைத்தால்.... பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இவாறு அவர் கூறினார்

மாநில அளவிலான செஸ் போட்டிக்கு கீழக்கரை மாணவ,மாணவியர் உள்ளிட்ட 10 பேர் தேர்வு!


மாநில அளவில் தேர்வு பெற்ற இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி சாலோம் மற்றும் மாணவன் கோகுல் நாதன் பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டிசுடன்

தமிழ்நாடு அரசு தமிழ்மாநில செஸ் கழகம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் செஸ் கழகம் இணைந்து மாவட்ட அலவிளான செஸ்போட்டியை ராமநாதபுரம் சிஎஸ்ஐ பிஎட் கல்லூரியில் நடத்தியது. ராமநாதபரம், கீழக்கரை, எமனேஸ்வரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவிகள் உள்பட 136 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் ஒன்பது சுற்றுகள் நடந்தன. இறுதி சுற்றில் 110 மாணவ, மாணவிகளில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேனிலைப்பள்ளி சாலமன்

ரத்தினசேகரன்(49) முதல் பரிசு பெற்றார்.

கீழக்கரை சேதுபாண்டி(26) 2வது பரிசும், எமனேஸ்வரம் நாகராஜன்(24) 3வது பரிசும் பெற்றனர்.

மாநில அளலிலன போட்டிக்கு மேற்கண்ட 3 பேர் மற்றும் கீழக்கரை அப்துல்ரகுமான், பரமக்குடி சவுராஸ்டிரா பள்ளி சந்திரசேகர், ராமேஸ்வரம் கேந்திரியா வித்யாலயா பள்ளி ரோஹிந்த், ராமநாதபுரம் பாஸ்கரவேலு,

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேனிலைப்பள்ளி கோகுலநாதன், ராமேஸ்வரம் எஸ்பிஏ மகளிர் மேனிலைப்பள்ளி மரியஏஞ்சலின்தில்பா, கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேனிலைப்பள்ளி சலோம் ஆகிய 10 பேரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கைத்தறிதுறைத் அமைச்சர் சுந்தரராஜ் பரிசு வழங்கினார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் முனியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுவார்ட்ஸ் செஸ்அகாடமி தலைவர் பால்மாறன், செயலாளர் ராக்லாண்ட்மதுரம் செய்திருந்தனர்.

கீழக்கரை கடல் பகுதியில் கரை ஒதுங்கும் கடல் வாழ் அரிய உயிரனங்கள் !

கீழக்கரை அருகே பக்கீரப்பா தர்ஹா கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய கடல் வாழ் உயிரனம்
சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை அருகே மங்களேஸ்வரி கடற்கரை பகுதியில் ஒதுங்கிய திமிங்கலம்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில‌ ஆண்டுகளாக‌ டால்பின்கள்,கடல் பசு ஜெல்லி வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன.. அவற்றை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய கடல் பகுதியில் மிகுந்த‌ கடல் வளங்கள் நிறைந்து படர்ந்துள்ள அற்புதங்கள், மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் உற்பத்தியில் 35 சதவீதம் மீன் உற்பத்தி, மன்னார் வளைகுடா கடலில் இருந்தே கிடைக்கிறது . கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியும் ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌தாகும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் 21 தீவுகளும் ஏராள‌மான‌ பவளப்பாறைகளும் உல‌கின் அரிவ‌கை உயிர‌ன‌ங்க‌ளும் இங்கு உள்ள‌து. கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப்பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் ஏராளமான உயிரினங்கள் அதிக‌ள‌வில் உள்ள‌து. இதில், அரிய வகை உயிரினங்களான பவள உயிரினங்கள்,ஜெல்லி வகை மீன்கள் கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.பாலூட்டி இன‌ங்க‌ளான‌ திமிங்க‌ல‌ங்க‌ல்,டால்பின்க‌ள் அதிக‌ள‌வில் உள்ள‌து அழிந்து வரும் இவ்வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது சாக்கடை நீர் கலப்பு,அரிய கடல் வாழ் உயிரின்ங்களை வேட்டையாடுதல் போன்ற வற்றால் இவ்வங்கள் அழிந்து வருகின்றன.இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது  குறித்து கடல் ஆர்வலர் கூறியதாவது,

இது ஜெல்லி வகை மீனாக இருக்கலாம்.தற்போது இவ்வகை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது உலகளவில் சாதாரணமான ஒன்றுதான். இம்மாற்றம் நீரின் சூழ்நிலையில் தட்பவெப்ப மாற்றத்தினால் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. ஜெல்லி மீன்கள் இறந்து ஒதுங்கியதற்கு தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் மனித செயல்பாடுகளினால் கடலில் கலக்க கூடிய கழிவு நீரினால் ஏற்பட்ட உயிர்உருப்பெருக்கம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்றார்