Saturday, December 31, 2011

கீழக்கரை குப்பை கிடங்கை சுற்றுலா தலமாக்குவோம் !எக்ஸ்னோரா அமைப்பு உறுதி


கீழ‌க்க‌ரை குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு காண்ப‌த‌ற்காக‌ உஸ்வ‌துன் ஹ‌ச‌னா சார்பில் ச‌த‌க்க‌த்துல்லாப்பா வளாக‌த்தில் க‌ல‌ந்தாய்வு கூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.இக்கூட்ட‌த்தில் முக்கிய‌ அழைப்பாளாராக‌ எக்ஸ்னோரா சார்பில் அத‌ன் நிறுவ‌ன‌ர் நிர்ம‌ல் க‌லந்து கொண்டார் .
முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளும் ,ஏராள‌மான‌ பொதும‌க்க‌ளும் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர்

நிக‌ழ்ச்சியை தொகுத்த‌ளித்து பேசிய‌ லாபிர் .. கீழ‌க்க‌ரை ந‌க‌ரை சுத்த‌மாக்க‌ நாம் அனைவ‌ரும் இணைந்து ப‌ணியாற்ற‌ வேண்டும்."ஒரு சில‌ர் வ‌ருட‌த்தில் 15நாட்க‌ள்தான் வ‌ருகிறோம் ந‌ம‌க்கு ஏன் இந்த‌ முய‌ற்சி" என்றார்கள் அவ‌ர்க‌ளுக்கு நான் சொல்லி கொள்வது, பிற‌கு ஏன் இங்கு வ‌ருகிறீர்க‌ள் அங்கேயே இருந்து கொள்ள‌லாமே ந‌மது ம‌ண் ந‌ம‌து ஊர் என்ற‌ உண‌ர்வு அனைவ‌ருக்கும் வ‌ர‌ வேண்டும்.இன்ஷா அல்லா நாம் அனைவரும் இணைந்து இதற்கான முயற்சிகளை தொடங்குவோம் என்றார்.

முகம்மது ஹீசைன், கீழக்கரையின் இளைய தலைமுறையினருக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அவர்களையும் இந்த பணிகளில் இணைத்து கொள்ள வேண்டும் என்றார்.

எக்ஸ்னோரா அமைப்பின் த‌லைவ‌ர் நிர்ம‌ல் பேசிய‌ போது,எனக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் லாபிர் அவ‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌லினார் இங்கு வ‌ந்தேன்.ஏற்கென‌வே 2 முறை வ‌ந்துள்ளேன் ஆனால் இங்கு சுகதாரத்தில் எந்த‌ மாற்ற‌மும் இல்லை இந்த‌ முறையாவ‌து சுகாதாரம் குறித்த திட்ட‌ங்களை செய‌ல்ப‌டுத்த‌
ப்ப‌டும் என்று ந‌ம்புகிறேன்.கீழ‌க்கரையை விட‌ மோச‌மான‌ நிலையில் இருந்த‌ ப‌ம்ம‌லை அழ‌குப‌டுத்த‌ உத‌வியுள்ளோம்.என‌வே கீழ‌க்க‌ரை அழ‌கு ந‌க‌ராக்க‌ முடியும் அத‌ற்கான‌ அனைத்து முய‌ற்சிக‌ளுக்கும் எக்ஸ்னோர‌ அமைப்பு துணை நிற்கும்.நீங்க‌ள் அனைவ‌ரும் உற்சாமாக‌ இருப்பாதால் மாத‌ம் 1 முறை கீழ‌க்க‌ரை வ‌ந்து இத‌ற்கான‌ ப‌ணிக‌ளில் இணைந்து கொள்வேன்.கீழக்கரை நகராட்சியின் 12 ஏக்க‌ர் குப்பை கிட‌ங்கை குப்பைகளுக்கான மறுசுழற்சி முறையை நிறுவி அப்பகுதியை சுற்றுலா த‌ல‌மாக‌ மாற்ற‌ முடியும்.ஏற்கென‌வே த‌மிழ‌க‌த்தில் 30 இட‌ங்க‌ளில் இதை செய‌ல்ப‌டுத்தியுள்ளோம்.விரைவில் சுத்த‌மான‌ கீழ‌க்க‌ரையாக‌ மாற்றுவோம் என்றார்.

கேர‌ளாவை சேர்ந்த‌ க‌ழிவுநீரிலிருந்து எரிவாயு த‌யாரிக்கும் ப‌ணியில் ஈடுப‌ட்டு வ‌ரும் ராஜேந்திர‌ன் பேசியாதவது,
க‌ழிவு நீரிலிருந்து எரிவாயு த‌யாரிக்கும் திட்ட‌த்தை ப‌ல‌ இட‌ங்க‌ளில் செய‌ல்ப‌டுத்தியுள்ளேன்.இங்கும் என்னால் செய‌ல்ப‌டுத்த‌ முடியும் என்றார்.

மாவட்ட கலெக்டர் அருண்ராய் பேசும் போது, நான் ச‌ந்தித்த‌ ஊர்க‌ளில் கீழ‌க்க‌ரை போன்று சுகாதார‌கேடான‌ ந‌க‌ராட்சியை பார்த்த‌தில்லை.நான் ப‌த‌வியேற்ற‌தும் பெற்ற‌ முத‌ல் புகாரே கீழ‌க்க‌ரை சுகாதார‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌த்தான்.மேலும் த‌ற்போது கீழ‌க்க‌ரையில் குறைந்த‌‌ அளவே சுகாதார‌ ப‌ணியாளர்க‌ள் உள்ளார்க‌ள்.இன்னும் 35 ந‌ப‌ர் தேவைப‌டுகிறது.அர‌சு இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் அது வ‌ரை கீழ‌க்க‌ரையிலுள்ள‌ த‌னியார் அற‌க்க‌ட்ட‌ளைக‌ள்,தொண்டு நிறுவ‌ன‌ங்கள் தங்கள் செலவில் தேவைப‌டும் பணியாள‌ர்க‌ளை கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு த‌ர‌லாம்.இதற்காக அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பை ஏற்ப‌டுத்தினால் அத‌ற்கு நானே த‌லைவ‌ராக‌ இருந்து செய‌ல்ப‌ட‌ த‌யாராக‌ உள்ளேன்.இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌லெக்ட‌ராக‌வும்,த‌னிப‌ட்ட‌ ம‌னிதானாக‌வும் கீழ‌க்க‌ரைக்கு உத‌வ‌ த‌யாரா உள்ளேன் என்றார்.

ஈடிஏ மேலான்மை இய‌க்குந‌ர் சலாஹீதீன் பேசும் போது,

இப்பிர‌ச்ச‌னையை தீர்க்க‌ அனைத்து உத‌விக‌ளையும் செய்ய‌ த‌யராக‌ உள்ளேன் என்றார்

ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லா பேசும்போது...
தமிழகத்தில் மோசமான நகராட்சியாக கீழக்கரை இருந்து வந்தது.ஒரு வழியாக பிரச்சனைக்குறியதாக இருந்த 12 ஏக்க‌ர் குப்பை கிட‌ங்கில் ப‌ணியை துவ‌க்குவ‌த‌ற்கு மாவட்ட ஆட்சியர் ,திலையேந்தல் பஞ்சாயத்து தலைவர் ,கீழக்கரை நகராட்சி தலைவர் ஆகியோர் கூட்டாக அமர்ந்து பேசி அப்பிர‌ச்சனை முடிவை நெருங்கி விட்ட‌து.விரைவில் அங்கு சுவர் கட்டுப‌ணியை துவ‌க்க‌ப்ப‌டும் மேலும் அங்கு நிர்ம‌ல் சொன்ன‌து போல் சுற்றுத‌ல‌மாக‌ மாற்றுவ‌த‌ற்கு அர‌சிட‌ம் அத‌ற்கான‌ முய‌ற்சியை மேற்கொள்வேன் என்றார்.


பின்ன‌ர் கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

ச‌த‌க் க‌ல்லூரி இய‌க்குநர் யூசுப் க‌லெக்ட‌ரிட‌ம் , கீழ‌க்க‌ரை கட‌ற்க‌ரை அருகே ஏராள‌மான‌ இட‌ங்க‌ள் ஆக்கிர‌ம‌க்கப்ப‌ட்டுள்ள‌து.இத‌ற்கு அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று நேர‌டியாக‌ கோரிக்கை வைத்தார்.

அஹமது புஹாரி நன்றி கூறி பேசும் போது..
கீழக்கரையிலிருந்து கடற்கரை வழியாக நான் செல்லும் போது 3 கிலோ மீட்டர் மிகுந்த அசுத்தமாக காட்சியளித்தது.ஆனால் அதை தாண்டியவுடன் மிக அற்புதமாக கடற்கரை திகழ்கிறது.மேலும் மிக அருமையான ஒரு கடற்கரையை நாம் கீழக்கரையில் பெற்றுள்ளோம் அதை பாதுகாப்போம். இதற்கான முதல் படியை அடி எடுத்துள்ளோம் விரைவில் இப்பிரச்சனையை தீர்ப்போம்.
இந்நிகழ்ச்சி குறித்து சேகு ச‌த‌க் இப்ராகிம் கூறுகையில்,
கவுசிலர்க‌ளும் மற்ற தெரு அமைப்புகளும் ,பொதுமக்களும் மிக குறைந்த அளவில் கலந்து கொண்டது மிகுந்த வேதனையான விஷயம் வருடத்தில் பத்து நாட்கள் ஊரில் இருக்கும் அவர்கள் அக்கறை எடுத்து செய்யும் பொது விசயத்தில் வருடம் முழுவதும் ஊரில் இருக்கும் நாம் நம்முடைய பங்களிப்பை செய்யாமல் இருப்பது மிகுந்த வேதனையான விஷயம்,இதில் நடந்த உரையாடலை பொதுமக்கள் கேட்காமல் இருந்ததும் வருத்த பட வேண்டிய விஷயம்,அழைப்பு இல்லாவிட்டாலும் ஊரின் நன்மை கருதி இனிமேல் ஊர் பொது விச‌யத்தில் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் கீழக்கரை முன்னேறும்.குப்பை இல்லாத ஊர் என்று பெயர் எடுப்போம்.ஊரின் முக்கிய‌மான பிரச்சனைக்கு நடைபெற்ற க‌ருத்த‌ர‌ங்கில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் இல்லாத‌து மிகுந்த‌ ஏமாற்ற‌தை அளிக்கிற‌து என்றார்.

நகராட்சி கமிஷனர் இல்லாத கீழக்கரை நகராட்சி !

கீழக்கரை நகராட்சியில் கமிசனர் மூன்று மாதங்களுக்கு முன் இட மாறுதல் செய்யப்பட்டார்.எனவே ராமநாதபுரத்தில் கமிசனராக பணிபுரியும் முஜிபுர்ரஹ்மான் கீழக்கரையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். கடந்த மூன்று வாரங்களாக இவர் கீழக்கரை வரவில்லை இதனால பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. சுகாதார அதிகாரி பணியிடமும் காலியாக உள்ளது.

இது குறித்து அசினா என்பவர் கூறுகையில் , கீழக்கரை நகராட்சியில் நிரந்த கமிசனர் இல்லாததால் கட்டிட வரைபடம் ஒப்புதல் மற்றும் வரி மாறுதல் சம்பந்தமான பணிகள் முடங்கியுள்ளன. சுகாதார அதிகாரி இல்லாததால் பிறப்பு,இறப்பு சான்றிதழ்கள் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக நிரந்தர கமிசனர் மற்றும் சுகாதார அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார்.

Friday, December 30, 2011

புது கிழக்கு தெருவில் புதிய சங்கம் உதயம் !
கிழக்கரை புதுகிழக்கு தெருவில் அல்ஹிலால் பொதுநல சங்கம்திறப்பு விழா சங்கத்தின் தலைவர் சகுபர் சாதிக் நடைபெற்றது.இவ்விழாவிற்கு பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் கிழக்குதெரு ஜமாத் தலைவர்,செயலாளர்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ,கவுன்சிலர்கள்அன்வர் அலி,முகைதீன் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சங்கத்தின் இணை செயலாளர் அப்பாஸ் அலி வரவேற்றார்.பி.ஆர்.ஓ ஜஹாங்கிர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சீனா தானா அறக்கட்டளை நிறுவனர் செய்யதுஅப்துல் காதர்,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

இச்சங்கத்தின் மூலம் ஏராளமான நலப்பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக நிர்வாகிகளில் ஒருவரான ஜஹாங்கிர் அரூஸி தெரிவித்தார்.
இவ்விழாவில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

தாசிம் பீவி கல்லூரி பிரம்மாண்ட விழாவில் விஜய் டிவி"நீயா நானா" கோபிநாத் சிற‌ப்புரை!

கீழ‌க்க‌ரை தாசிம் பீவி ம‌க‌ளிர் க‌ல்லூரியில் முன்னாள் மாண‌விய‌ர் பேரவை சார்பில் மாபெரும் விழா நடைபெற்ற‌து. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் விஜ‌ய் டிவி புக‌ழ் கோபிநாத் க‌ல‌ந்து சிற‌ப்புரையாற்றினார்.

இன்று காலை நடைபெற்ற‌ விழாவில் ப‌ரீசுன் ந‌பா கிராத் ஓதினார். க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா வ‌ர‌வேற்புரையாற்றினார். க‌ல்லூரி தாளாள‌ர் ர‌ஹ்ம‌த்நிசா த‌லைமையுரை நிக‌ழ்த்தினார். சீத‌க்காதி டிர‌ஸ்ட் செய‌லாள‌ர் காலித் புகாரி, கிரஸண்ட் குழும பள்ளிகளின் இயக்குநர் சரிபா அஜீஸ் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளை கெள‌ர‌வித்த‌ன‌ர்.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌லந்து கொண்ட‌ கோபிநாத் பேச்சில் சில குறிப்புகள் மட்டும் ...


அழகின் அடையாளமாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள‌ பெண்கள் அந்த மாயையை உடைத்தெறிய வேண்டும் அறிவின் அடையாளமாக சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.பேஸ்புக் போன்ற சமூக தளங்கள் மூல‌மாக‌ ப‌ல்வேறு ச‌மூக‌ பிர‌ச்ச‌னைக‌ளை ப‌ற்றி விவாதிக்க‌ வேண்டும்.ஆணுக்கு உள்ள‌ அனைத்து குணங்ளும் பெண்க‌ளுக்கும் உண்டு வெட்க‌ம்,கோப‌ம்,பொறுமை ஆனால் பெண்க‌ள் ம‌ட்டுமே வெட்க‌ப்ப‌டுவார்க‌ள் என‌பதாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள் ஆனால் உண்மை அப்ப‌டி இல்லை ஆண்க‌ளுக்கு வெட்க‌ப்ப‌டும் குண‌ம் உண்டு இது போன்ற‌ ஏராள‌மான‌ விச‌ய‌ங்க‌ள் பெண்க‌ளுக்கு ம‌ட்டுமே என்று பெண்களை அடிமைபட்டுத்துவதற்காக‌ த‌வ‌றாக‌ சித்த‌ரிக்க‌ப்ப‌டுள்ள‌து.


அமெரிக்கா போன்ற‌ வெளிநாடுக‌ள் த‌ங்க‌ள் நாடுக‌ளில் உள்ள‌ குப்பைக‌ளை விற்ப‌னை செய்யும் க‌ள‌மாக‌ இந்தியாவை பய‌ன் ப‌டுத்துகின்ற‌ன.த‌ற்போது உள்ள‌ த‌லைமுறையினர் விழித்தெழுந்து இந்திய‌ தயாரிப்புக‌ளை உருவாக்க‌ வேண்டும் .புதிய‌ க‌ண்டுபிடிப்புக‌ளை உண்டாக்க‌ வேண்டும்.பெண்களுக்கு எதிரி ஆண்கள் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் இந்த‌ பின்த‌ங்கிய‌ ப‌குதியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தாசிம் பீவி மகளிர் க‌ல்லூரியை ஆர‌ம்பித்த‌ வெற்றிக‌ர‌மாக செய‌ல்ப‌டுத்திய‌ பாராட்டுக்குறிய‌வ‌ரும் ஒரு ஆண்தான்.மேலும் பெண்க‌ள் ச‌மைய‌ல் அறையிலிருந்து வெளியில் வ‌ந்து ச‌முக‌த்தில் ப‌ங்கு ஆற்ற‌ வேண்டும் .தொட‌ர்ந்து ஒரு மணி நேரம் பேசிய‌ கோபிநாத் ப‌ல் வேறு நிக‌ழ்வுக‌ளையும்,பெண்க‌ளின் க‌ட‌மைக‌ளையும் ப‌ற்றி விரிவாக‌ எடுத்து கூறினார். பின்ன‌ர் கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

பொதுமேலாளர் தாவுத்,க‌ல்லூரி மேலாள‌ர் அஜிஸ் உள்பட நிர்வாகத்தினர் விழாவுக் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த‌ன‌ர்

புவேனேஸ்வ‌ரி ந‌ன்றி கூறினார்.இவ்விழாவில் ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

Wednesday, December 28, 2011

தாசிம் பீவி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு விழா மற்றும் பேரணி !


கல்லூரி தாளாளர் ரஹ்மத் நிஷா எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு குறித்த இதழை வெளியிட தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஜெயக்குமார் பெற்று கொண்டார்.

செஞ்சுருள் சங்கம் மற்றும் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டக்குழு ஆகியவை இணைந்து எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு வார விழா கல்லூரியின் தாளாளர் ரஹ்மத்நிஷா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக‌ தாசிம் பீவி கல்லூரி வளாகத்தில் தொடங்கி கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை மாணவிகள் பேரணியாக சென்று எய்ட்ஸ் விழிப்புணவு துண்டு பிரச்சுரங்களை விநியோகித்தனர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் இது தொடர்பாக வண்ணக்கோலப்போட்டி ,கவிதை எழுதும் போட்டி , நாடகங்கள் மற்றும் பேச்சுபோட்டியும் நடைபெற்றது. இதில் செஞ்சுருள் இயக்க மாவட்ட மேலாளர் ஜெய்குமார் உள்ளிட்டோர் பேசுகையில், ஹெச் .ஐ வியால் பாதிக்கப்பட்டவர்கள ஒதுக்கி வைக்காமல் அன்புகாட்டி அரவணைத்து தகுந்த சிகிச்சை அளித்தால் அவர்களது வாழ்நாளை நீட்டிக்க முடியும்.கல்லூரி தாளாளர் ரஹ்மத்நிஷா உள்பட பலர் விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பேசினர்.இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்

கீழக்கரையில் அடமானம் என்ற பெயரில் வீடு மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் கும்பல் !கீழக்கரையில் சிலர் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை தாங்களின் பணதேவைகளுக்காக வட்டி தொழில் செய்பவர்களிடம் தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து பின்னர் சிக்கலில் சிக்கி கொள்வது நடந்தேறி வருகிறது.வெளியூரை சேர்ந்த சிலர் ரவுடிகள் உதவியுடன் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த தொழிலில் ஈடுபடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ம‌னித‌னின் அடிப்ப‌டை தேவைக‌ளான‌ உணவு உடை இருப்பிட‌ம் என்பார்கள் அந்த வகை நாம் வாழும் வீடு நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வீட்டையே அடமானம் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவனை அவனுடைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீடு மற்று சொத்துக்களை அபகரிக்கும் கும்பல் கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் அமோக‌மாக‌ செய‌ல்ப‌டுவ‌தாக‌ குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌டுகிற‌து.


பைனான்ஸ் என்ற பெயரில் வட்டி தொழில் செய்பவர்கள், சிறு கடை முதல் பெரிய கடைகள் வரையும், வட்டிக்கு பணம் கொடுத்து, தினமும் வசூல் செய்கின்றனர். சிலர் சொத்துக்களை அடமானம் எழுதி கொடுத்து கடன் பெறுகின்றனர். இதில் இன்னும் சிலர் சொத்துக்களை விலைக்கு வாங்குவதற்கு பயன்படுத்தபடும் கிரைய ஒப்பந்தம் பத்திரம் எழுதி பதிவு செய்யும் முறையை பயன்படுத்தி, வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர். இதையும் கடந்து ஒருபடி மேல்சென்று, கடன் கேட்பவர்களின் முழுசொத்துக்களையும், பைனான்ஸ் தொழில் செய்பவர் பெயரில் கிரையப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு, அதன்பேரில் கடன் வழங்கப்படுகிறது. இம்முறை நம்பிக்கை என்ற அடிப்படையில் நடப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பத்திரம் எழுதி கொடுத்த பின்பு, வாங்கப்படும் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போகும்போது, சொத்துக்களை இழப்பதை தவிர வேறுவழியில்லாமல் போய் விடுகிறது.

மேலும் ஒரு சிலர் முறையாக பணத்தை திருப்பி செலுத்தினாலும் சொத்தை திருப்பி ஒப்படைக்காமல் அவர்களே அபகரித்து கொள்வதாக கூறப்படுகிறது.
ஒரு சில சமயத்தில், பணம் கொடுத்தவர் இறந்து போய்விட்டால், பணத்தை யாரிடம் செலுத்தி, மீண்டும் சொத்துக்களை மீட்பது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு பைனான்ஸ் என்ற பெயரில், சொத்துக்களை அபகரித்து வருகின்றனர். .கிரையப் பத்திரம் எழுதும் செலவும், கடன் வாங்குபவர்களின் தலையில் கட்டப்படுகிறது.இதுமட்டுமில்லாமல், மீட்டர் வட்டி கணக்கில் வட்டியும் வசூல் செய்யப்படுகிறது.
இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. பைனான்ஸ் என்ற பெயரில் மோசடி செய்து வரும் கும்பலிடம் சென்று, சொத்துக்களை கிரையம் எழுதி கொடுத்து பணம் வாங்கி, சொத்துக்களை இழந்து வருகின்றனர். தற்போது, சொத்துக்களின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சொத்துக்களை கிரையம் வாங்கும் பைனான்ஸ்(வட்டி) தொழில் நடத்துபவர்கள் சொத்துக்களை திருப்பி தருவார்கள் உறுதி கூற முடியாது.


இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த அம்ஜத் கூறுகையில் ,
எனக்கு தெரிந்த‌ சிலர் இதுப்போன்ற கும்பலிடம் சிக்கி சொத்துக்களை இழந்துள்ளார்கள்.கீழ‌க்கரையில் ப‌ல்வேறு அமைப்புக‌ளும் ,இய‌க்க‌ங்க‌ளும் வ‌ட்டியில்லா கட‌ன் திட்ட‌ங்க‌ளை செய‌ல்ப‌டுத்தி வ‌ருகிறார்கள்.ஆனாலும் சில‌ர் உட‌ன‌டி ப‌ண‌த்தேவைக்காக‌ இதுபோன்ற‌ சொத்துக்க‌ளை அப‌க‌ரிக்கும் கும்ப‌லிட‌ம் சிக்கி கொள்கிறார்க‌ள். வ‌ட்டி என்ற‌ பெய‌ரில் சொத்துக்க‌ளை அப‌க‌ரித்து கொள்கிறார்கள்.ம‌க்க‌ள் விழிப்புண‌ர்வோடு இருந்து இது போன்ற‌ சிக்க‌லில் சிக்கி கொள்ளாம‌ல் இருக்க‌ வேண்டும் .மேலும் அர‌சு இது போன்ற‌ அடியாட்க‌ளுட‌ன் மிர‌ட்டி திரியும் இக்கும்ப‌ல் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

Monday, December 26, 2011

கீழக்கரையில் சாலை மறியல் !15க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது !பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக்கொடி காட்ட புறப்பட்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை -ஏர்வாடி முனை ரோட்டிலும் தேமுதிகவினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் .தேமுதிகவின் கீழக்கரை நகர் செயலாளர் மதிவாணன் தலைமையில் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மேகவர்ணம்,பொருளாளர் ராமகிருஸ்ணன்,முன்னாள் நகர செயலாளர் ஜாபிர் உள்பட 15க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட இவர்களை இவர்களை கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன்,தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் கைது செய்தனர்.

(டிச28 புதன்)இலவச மருத்துவ முகாம்! சர்க்கரை,இதய நோய், உள்ளிட்டவைக்கு இலவச பரிசோதனை !


சென்னை லைப்லைன் மருத்துவமனை மற்றும் கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் டிசம்பர் 28ல் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைபள்ளியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் வயிறு சம்பந்தமான நோய்கள்,புற்று நோய்,இதய நோய்,சீறுநீரக பாதிப்பு ,சர்க்கரை நோய் ,எலும்பு மூட்டு உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனையும்,பரிசோதனையும் நடைபெறும் மேலும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டாக்டர் ராஜ்குமார் தலைமையில் 10 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளிக்க உள்ளார்கள்.

இம்முகாமை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாவட்ட செயலாளர் சலீமுல்லாகான் ஆகியோர் துவக்கி வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Sunday, December 25, 2011

கீழக்கரை ஹமீதியா பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா! !கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச சைக்கிள் வழங்கும் விழா மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்கத்தலைவர் எஸ்.ஏ.செய்யது அப்து காதர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார்.இதில் 110 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.மேலும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி,உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க துணை தலைவர் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர்,செயலாளர் அமீர்தீன் ,ஹபீபுல்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழா இறுதியில் ஆசிரியர் ஆறுமுக நன்றி கூறினார்.

கீழக்கரை கடற்கரையில் திடீர் சுவைமிகு குடிநீர் ஊற்று! ஏராளமானோர் குவிந்தனர்.

கீழக்கரை மீனவர் குடியிருப்பு பகுதி கடற்கரையில் இன்று காலை திடீர் என்று சிறிய அளவில் நல்ல தண்ணீர் ஊற்று உருவாகியது.அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மிகுந்த சுவையுடன் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தோர் கூறினர். தொடர்ந்து ஊற்றிலிருந்து தண்ணீர் சுரந்து வருகிறது.

உப்பு கரிக்கும் கடல் தண்ணீர் அருகே நல்ல தண்ணீர் கிடைத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியபடவைத்தது. இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஊற்று தண்ணீரை பருகியும் ,குடங்களில் வீடுகளுக்கும் எடுத்து சென்றனர்..

அப்ப‌குதியை சேர்ந்தோர் கூறிய‌தாவ‌து,
கீழக்கரை ஒரு குடம் தண்ணீர் ரூ 5 க்கு மேல் விற்கும் நிலையில் இது போல் பல இடங்களில் நீர் ஊற்று உருவாகினால் மகிழ்ச்சியாக இருக்கும் மேலும் இந்த ஊற்று தண்ணீர் தொடர்ந்து சுரந்தால் மிகவும் உதவியாக இருக்கும் .இப்பகுதியில் ந‌ல்ல‌ த‌ண்ணீர் சுர‌ப்ப‌து இதுவே முத‌ல் முறை இப்பகுதி கடலில் சுனாமிக்கு பிற‌கு ப‌ல்வேறு மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்ந்து வ‌ருகிற‌து. க‌ட‌ல் நிற‌ மாற்ற‌ம்,உள்வாங்குவ‌து போன்ற‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்தேறிய‌து. என‌வே இப்ப‌குதியில் க‌ட‌ல் சார்ந்த‌ ஆய்வுக‌ள் மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ன‌ர்

Saturday, December 24, 2011

"கீழை இளையவன்" என்ற பெயரில் புதிய வலைதளம் !


சாலிஹ்


கீழை இளையவன் www.keelaiilayyavan.blogspot.com என்ற பெயரில் புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தை சாலிஹ் என்ற இளைஞர் துவக்கியுள்ளார்.அபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) ஆகியோர் இணைந்து ப‌ணியாற்றுகின்ற‌ன‌ர்.

இந்த வலைதளத்தை தொடங்கியுள்ள சாலிஹ் என்ற‌ இளைஞர் பல்லாண்டு காலமாக‌ நுக‌ர்வோர் அமைப்புக‌ளில் இணைந்து ப‌ல்வேறு ச‌மூக‌ ப‌ணிக‌ளை ஆற்றியுள்ளார்.இந்த‌ குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ இஸ்மாயில் ம‌ரிக்கா கூறுகையில் ,கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான சிந்த‌னையாள‌ர்க‌ள்,எழுத்தாளர்க‌ள் உள்ள‌ன‌ர்.இதே போன்று ஒவ்வொருவ‌ரும் ச‌மூக‌ அக்கறையுடன் த‌ங்க‌ளுடைய‌ ப‌ங்க‌ளிப்பை ச‌மூக‌த்துக்கு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.இத்த‌ள‌ம் மேன்மேலும் வ‌ள‌ர்ச்சி பெற‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை இறைஞ்சுகிறேன் என்றார்.

கீழ‌க்க‌ரை டைம்ஸ் சார்பாக‌ இத்த‌ள‌த்திற்கு ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ளை தெரிவித்து கொள்கிறோம்.

கீழக்கரையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை !

கீழக்கரை லட்சுமிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த குமார்(22) இவரை சம்பவத்தன்று அவரின் தந்தை பாலகுரு "ஏன் வீட்டிற்கு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை" என்று கண்டித்தாராம் இதனால் மனம் உடைந்த ஆனந்தகுமார் ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கனேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

தமுமுக மற்றும் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற‌ இலவச கண் மருத்துவ முகாம் !


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,மனித நேய மக்கள் கட்சி ,மாவட்ட பார்வை தடுப்பு இழப்பு சங்கம்,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா அரபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இம்முகாமில் ஏராளமான பொது மக்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர். ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ கலந்து கொண்டு இம்முகாமை துவங்கி வைத்தார். கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்பட ஏராளமானோர் இம்முகாமிற்கு வருகை புரிந்தனர்

கீழக்கரையில் ஏழு ஆட்டோக்கள் பறிமுதல் ! ஆர்.டி.ஓ அதிரடி !


(பைல் படம்) இந்த செய்தி சம்பந்தப்பட்ட படம் அல்ல‌

கீழக்கரையில் முறையான ஆவணங்கள்(ஆர்.சி.புத்தகம்,வாகன தணிக்கை) இல்லாமல் ஓட்டிய ஏழு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழக்கரையில் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோவன் கீழக்கரை ஏர்வாடி ரோட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் இந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து சஹாப்தீன் என்பவர் கூறுகையில் , வாரம் ஒருமுறை இது போன்ற ஆய்வுகள் மேற்கொண்டால் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓட்டும் டிரைவர்களும்,ஆவணங்கள் இல்லாத மினி வேன்கள்,ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் அதிகளவில் பிடிபடும் என்றார்.

Friday, December 23, 2011

கீழக்கரை சாலைகளில் உறிஞ்சும் குழாய்கள் மூலம் கழிவுநீர் அகற்றம் !


கீழக்கரையில் பல்வேறு சாலைகளில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது.இதை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் உறிஞ்சும் குழாய்கள் பொருத்தப்பட்ட லாரிகள் மூலம் சாலைகளில் உள்ள கழிவு நீர் அகற்றப்பட்டு வருகிறது.


இது குறித்து மஹ்மூது சுல்தான் என்பவர் கூறுகையில்,நகராட்சி சார்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட‌ தற்காலிக நடவடிக்கைக்கு நன்றி .அதேநேரத்தில் கழிவு நீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதற்கு சாலைகளை சீராக அமைத்தல்,சாலை ஓரங்களில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை பராமரித்தல்,போன்றவற்றை கண்காணித்தால் இது போன்ற சூழ்நிலை ஏற்படாது.எல்லாவற்றிர்க்கும் மேலாக நீண்ட கால திட்டமான‌ பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றார்.

Thursday, December 22, 2011

கீழக்கரையில் பொது மக்களிடம் வாஷிங் மெஷின் தருவதாக நூதன மோசடி !


திற‌ப்பு விழா(வாஷிங் மிஷின்) அழைப்பித‌ழ்
கீழக்கரையில் கடந்த சில நாட்களாக டிப் டாப்பாக டிரஸ் அணிந்து கொண்டு 2 நபர்கள் அனைத்து தெருக்களுக்குக்கும் சென்று, "20ஆம் தேதி ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில ஸ்ரீமகாசக்தி பர்னிச்சர் திறக்க உள்ளோம். அதனால் விளம்பரத்திற்க்காக ரூ 3500க்கு ஒரு மின்சார‌ அடுப்பும் அதற்கு இலவசமாக ஒரு மிக்ஸியும் தற்போது தருவோம் கடை திறப்பு விழா அன்று அழைப்பிதழை எடுத்து வாருங்கள் வாஷிங் மிஷின் தருவோம்" என்று சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்துள்ளனர். 20ம்ந்தேதி கடைதிறப்பார்கள் வாஷிங் மிஷின் வாங்கி வரலாம் என்று பணம் கொடுத்தவர்கள் ராமநாதபுரம் சென்றனர்.ஆனால் அப்பகுதியில் எந்த கடையும் புதிதாக திறக்கவுமில்லை வாஷிங் மிஷின் கொடுக்கபடவுமில்லை.இதனால் பணம் கொடுத்தவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.நூதனமான முறையில் நடைபெற்ற மோசடி என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து நெய்னா என்பவர் கூறுகையில், நான் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன்.நான் வீட்டில் இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்கள் என் வீட்டிற்கு வந்து தற்போது ரூ3500 தந்தால் ஒரு கரண்ட் அடுப்பும் ,மிக்ஸியும் தந்து விடுவோம் கடை திறப்பு விழாவிற்கு நீங்கள் வரும் போது வாஷிங் மிஷின் தந்து விடுவோம் என்று சொல்லி ரூ 3500 பெற்று கொண்டு ரூ 2000 மதிப்புள்ள மிக்சியும்,மின்சார அடுப்பையும் கொடுத்து சென்றுள்ளனர். பின்னர் நாங்கள் வாசிங் மிஷின் வாங்கி வரலாம் என்று ராமநாதபுரம் சென்றால் அப்படி கடை எதுவும் திறக்க வில்லை.எல்லாம் ஏமாற்று வேலை இது போல் ஆசாமிகள் வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.

இது குறித்து ஜாஹிர் என்பவர் கூறுகையில் ,சில வருடங்களுக்கு முன்பு உங்க‌ளுக்கு குக்கர் ப‌ரிசு விழுந்துள்ளது எங்கள் கடையில் வந்து பரிசை வாங்கி செல்லுங்கள் என்று சொல்லி குலுக்கல் தொகை ரூ100மட்டும் தாருங்க‌ள் என்று சில‌ர் ஏராள‌மானோரிட‌ம் ஏமாற்றி வாங்கி சென்ற‌ன‌ர்.த‌ற்போது கொஞ்ச‌ம் வித்தியாச‌மாக‌ ரூ 2000 பொருளை கொடுத்து ரூ 3500 வாங்கி சென்றுள்ளார்க‌ள். ம‌க்க‌ள்தான் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் நாம் அதிக‌ லாப‌த்துக்கு ஆசைப்ப‌டுவ‌தால்தான் மோச‌டிக்கார‌ர்க‌ள் எளிதாக‌ ஏமாற்றி விடுகிறார்க‌ள்.காவ‌ல்துறையும் இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்

அவர்க‌ள் கொடுத்த‌ அழைப்பித‌ழில் ஸ்ரீமகாசக்தி பர்னிச்சர் ஐ.எஸ்.ஓ முத்திரை பெற்ற‌ நிறுவ‌ன‌ம் என்று அச்சிட்டிருந்த‌து குறிப்பிட‌த‌க்க‌து

கீழக்கரையில் (டிச29 வியாழன்) மூன் டிவி சார்பில் மறை குர்ஆன் மனன போட்டி!


கீழக்கரையில் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா அரங்கத்தில் 29-12-11 வியாழக்கிழைமை அன்று காலை 8.30 மணியளவில் "ஆற்றம் மிகு ஹாஃபிழ் யார்" என்ற தலைப்பில் மறை குர்ஆன் மனனப்போட்டி நடைபெற உள்ளது.ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.எம். சாகும் ஹமீது ஜமாலி (தலைவர் சுலைமான் ஆலிம் அறக்கட்டளை,தலைவர்-ராமநாதபுரம் ஷரிஅத் கோர்ட்) மற்றும் டாக்டர் தைக்கா சுஐபு ஆலிம் (மேனேஜிங் டிரஸ்டி தைக்கா அருஸிய்யா,கீழக்கரை.கெளரவ தலைவர்- தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை,சேர்மன்-கண்ணாடி வாப்பா ஹமிதிய்யா அரபிக் கல்லூரி) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தலைமை ந‌டுவ‌ராக‌ துபாய் இஸ்லாமிய‌ விவாக‌ர‌த்துறையின் அஸிஸ்டென்ட் டைர‌க்ட‌ர் ஜென‌ர‌ல் டாக்ட‌ர் ஒம‌ர் எம் அல் க‌த்தீப் ப‌ங்கு பெற உள்ளார்.மேலும் ந‌டுவ‌ர்க‌ளாக‌ மெள‌ல‌வி அப்ரார் அஹ்ம‌து காஸிமி ம‌ற்றும் மெள‌ல‌வி ஸித்தீக் அலி ஆலிம் ஆகியோர் செய‌ல்ப‌ட உள்ள‌ன‌ர்

நிகழ்ச்சியின் துவக்கத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் த‌வ்ஹீத் (ஆசிரிய‌ர் ம‌த‌ர‌ஸா ஹாமித்திய்யா மற்றும் ம‌ஹ்ழரா ,காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்) கிராஅத் ஓதுகிறார். சீனா தானா என்ற‌ செய்ய‌து அப்துல் காத‌ர்(நிறுவ‌ன‌ர்:சீட் டிர‌ஸ்ட் & சீனா தானா டிர‌ஸ்ட்-சென்னை) வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார்.

சுலைமான் ஆலிம் ம‌ஹ்ழ‌ரி (த‌லைமை நிக‌ழ்ச்சி ஆலோச‌க‌ர்-மூன் டிவி) நிக‌ழ்ச்சியை அறிமுக‌ம் செய்து வைக்கிறார்.

செய்யது அப்துல் காதர்(தலைவர் சங்கம் கீழக்கரை),மெளலவி செய்யது மஸ்வூத் ஆலிம்(முதல்வர்-கீழக்கரை புகாரியா அரபிக் கல்லூரி),மெளலவி ஹாஜா முயீனுத்தீன்(பேராசிரியர் உஸ்மானிய அரபிக் கல்லூரி,மேலப்பாளையம்),மெளலவி ஸலாஹுத்தீன்(முதல்வர் அல்மதரசத்துல் அரூஸிய்யா,கீழக்கரை) ஆகியோர் வாழ்த்துரை வழங்க் உள்ளனர்.

பி.எஸ்.ஏ.ஆரிஃப் புஹாரி ர‌ஹ்மான் (பி.எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான் யுனிவர்சிட்டி) விருது வ‌ழ‌ங்குகிறார். செய்ய‌து எம் ச‌லாஹுத்தீன்(நிறுவ‌ன‌ர் :க‌ண்ணாடி வாப்பா ஹ‌மீதிய்யா அர‌பிக் க‌ல்லூரி கீழ‌க்க‌ரை & சென்னை) ப‌ரிசு வழ‌ங்கி பாராட்டி பேசுகிறார்.

மூன் டிவியில் ஒளிப‌ர‌ப்பப்ப‌டும் இந்நிக‌ழ்ச்சியை ஆசிப் அஹ‌ம‌த் குரைஷி (கிரிஈடிவ் ஹெட் & புரோகிராம் - மூன் டிவி) இய‌க்கி வ‌டிவ‌மைக்கிறார். மெள‌ல‌வி சாலிஹ் சேட் (முதல்வர்-கண்ணாடி வாப்பா அரபிக் கல்லூரி)ந‌ன்றி கூறுகிறார்.

போட்டியின் முத‌ல் இர‌ண்டு சுற்றுக‌ளில் ப‌ங்கேற்ற‌வ‌ர்க‌ளுக்கு லேண்ட் மார்க் ஹோட்ட‌ல்ஸ் & சூட்ஸ் -துபாய், சார்பில் ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் .
இந்நிக‌ழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தர நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு மூன் டிவி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள‌ அறிவிப்பில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

Wednesday, December 21, 2011

கீழக்கரையில் 23டிசம்பர் வெள்ளியன்று இஸ்லாமிய கருத்தரங்கம் !அனைத்து ம‌த‌த்தின‌ரும் க‌ல‌ந்து கொள்ள‌ அழைப்பு !


கீழக்கரையில் 23 டிசம்பர் 2011 (வெள்ளிக்கிழமை) அன்று இஸ்லாமிய கருத்தரங்கம் !அனைத்து ம‌த‌த்தின‌ரும் க‌ல‌ந்து கொள்ள‌ அழைப்பு !

கீழக்கரையில் நாளை மறுதினம் 23ந்தேதி ஹுசைனியா மகாலில் "நமது சமுதாயம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது" என்ற தலைப்பில் இஸ்லாமிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது இவ்விழாவில் கடையநல்லூரை சேர்ந்த மெளலவி அப்துல் பாசித் அபுல் புஹாரி சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

மெளலவி முகம்மத் கடாஃபி (ராமேஸ்வரம்),
சிராஜ் மீரான் ஃபிர்தெளஸி (இமாம் மஸ்ஜிதுல் பிலால்,ராமநாதபுரம்)
மெளலவி அப்துல்லாஹ் (ராமநாதபுரம்)ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

மஃரிப் தொழுகை மஹாலிலேயே நடைபெறும்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது .

இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

பயானுக்கு(உரை) பின்பு கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ந‌டைபெறும் என்றும் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஃபிக்ருல் ஆஃகிர் இஸ்லாமிய ஒருங்கிணைப்பு சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நன்றி : தகவல் :- செய்யது மாஹின் & மிஸ்பாஹுல் அமீன்

கீழ‌க்க‌ரை பகுதி க‌டலில் பாம்புக‌ள் !கீழக்கரை கடற்கரையில் படகு கயிற்றில் பின்னப்ப்பட்டு இறந்த நிலையில் பாம்பு (பைல் படம்)
ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌ கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதியில் க‌ட‌ல் பாம்புக‌ள் இருப்ப‌தாக‌ மீன‌வ‌ர்க‌ள் தெரிவிக்கின்றனர்.

க‌ட‌ல் வாழ் உயிர‌ன‌ங்க‌ளின் உல்லாச‌ புரியாக‌ சொல்ல‌ப்ப‌டும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் ப‌வ‌ள‌ பாறைக‌ள் ,அரிய‌ வ‌கை க‌ட‌ல் உயிர‌ன‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌.ஊர்வ‌ன‌ இனத்தை சேர்ந்த‌ க‌ட‌ல் பாம்புக‌ள் 11 வ‌கைக‌ள் இருப்ப‌தாக‌வும்,மொத்த‌ம் 70 வ‌கையான‌ சிற்றின‌ங்க‌ள் இருப்ப‌தாக‌ ஆய்வுக‌ள் தெரிவிக்கின்ற‌ன.

இந்நிலையில் கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதியில் பாம்புக‌ள் உள்ளது சில சமயம் கடலின் மேல் பகுதியில் காண முடிகிறது ,சில சமயம் பாம்புகள் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்குங்கிறது இது வரை பாம்புகளால் எந்த ஆபத்தும் ஏற்பட்டதில்லை என்று மீன் பிடி தொழிலில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌ர்

இது குறித்து க‌ட‌ல் ஆர்வ‌ல‌ர் ஒருவ‌ர் கூறிய‌தாவ‌து, இந்த கடல் பாம்புக‌ளில் சில‌ வ‌கை ந‌ல்ல பாம்பின் விஷ‌த்தை விட‌ 4 ம‌ட‌ங்கு வீரிய‌ம் உடைவையாக‌ உள்ள‌து. ஆனால் ம‌னித‌ர்க‌ள் துன்புறுத்தினால் ம‌ட்டுமே தாக்கு குண‌ம் ப‌டைத்தவை.மேலும் சில‌ நாடுக‌ளில் மக்கள் இவ்வ‌கை பாம்புக‌ளை விரும்பி சாப்பிடுவதால் ந‌ல்ல‌ விலைக்கு விற்க‌ப்ப‌டுகிற‌து.

வால் பகுதி தட்டையாக இருந்தால் விஷத்தன்மை கொண்டதாகவும் கூர்மையானதாக இருந்தால் விஷமில்லாத பாம்பாகவும் அறியப்படுகிறது.மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் இக்கடல் பாம்புகள் தீண்டி யாரும் இறந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை.குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் இவ்வினங்கள் நிலத்திலோ அல்லது தண்ணீரிலோ வாழ முடியாது. ஏனெனில் இவை கடல் தண்ணீரில் மட்டுமே வாழ்வதற்கு ஏற்ற வகையில் இயற்கையாகவே இதன் உடலமைப்பு இருக்கிறது. விசைப்படகுகள் மூலம் இறால் மீன்களைப் பிடிக்க செல்லும்போது அதன் வலையில் இவையும் சிக்கி இறந்துவிடுகின்றன. சின்னஞ்சிறு மீன் குஞ்சுகளைப் பிடித்து தின்று உயிர் வாழும் இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினம் கடலின் சுற்றுப் புறச் சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது'' என்றார்.

Tuesday, December 20, 2011

கீழ‌க்க‌ரையில் மீன் ப‌த‌னிடும் நிலைய‌ம்! மீன‌வ‌ர்க‌ள் கோரிக்கை !பைல்(ப‌ழைய) ப‌ட‌ம்

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.மீன்கள் அதிக அளவில் பிடிபடும் சமயங்களில் வெளியூர் சென்று கொள்ளளவு அதிகமுள்ள மீன் பதனிடும் நிலையங்களில் மீன்களை சேமித்து வைக்க வேண்டியுள்ளது.இதனால் செலவு அதிகமாகி வருகிறது.ஏற்கெனெவே பல்வேறு பிரச்சனைகளில் மீன் பிடி தொழில் நசிந்து வருகிறது அதிலும் இது போன்ற செலவுகள் அதிகமாகும் போது மேலும் சிக்கலாகிறது என மீனவர் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.என‌வே கீழ‌க்க‌ரையிலேயே அர‌சு மீன் ப‌த‌னிடும் நிலைய‌ம் அமைக்க‌ வேண்டும் என‌ மீன‌வ‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து மீன் தொழிலில் ஈடுபடும் இப்ராகிம் என்ப‌வ‌ர் கூறுகையில் ,

கீழ‌க்க‌ரை முற்றிலும் குளிரூட்ட‌ப்ப‌ட்ட‌ மீன் ப‌த‌னிடும் நிலைய‌த்தை அர‌சு அமைக்க‌ வேண்டும் என‌ நீண்ட‌ கால‌மாக‌ கோரிக்கை விடுத்து வ‌ருகிறோம். இதுவ‌ரை ஏற்க‌ப‌ட‌வில்லை.நாளொன்றுக்கு 2 ட‌ன்னுக்கு அதிக‌மாக‌ இப்ப‌குதியில் மீன்க‌ள் பிடிப‌டுகிற‌து.மீன் ப‌த‌னிடும் நிலைய‌ம் கீழ‌க்க‌ரையில் அமைக்க‌ப்ப‌ட்டால் இங்கேயே பதப்படுத்தி கொள்ளளாம். சுற்றியுள்ள‌ ஏராள‌மான‌ கிராம‌ மீனவ‌ர்க‌ளும் ப‌ய‌ன் பெறுவார்க‌ள்.என‌வே அர‌சு இது குறித்து க‌வன‌ம் செலுத்தி மீன் ப‌த‌னிடும் நிலைய‌ம் அமைத்து நலிந்து வரும் மீனவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு சலுகை விலையில் கட்டணங்களை பெற வேண்டும்.இத‌ன் மூல‌ம் இப்ப‌குதியில் இத்தொழில் வ‌ள‌ம் கொழிக்கும் என்றார்.

Monday, December 19, 2011

அடிக்கடி விபத்து ! பல்லாங்குழியாக கீழக்கரையின் முக்கிய சாலை !
கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை பெட்ரோல் பங்க் வரை உள்ள வள்ளல் சீதக்காதி சாலையை சில வருடங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை அமைத்தது.இந்த சாலை நெடுஞ்சாலைதுறையின் பொறுப்பில் உள்ளது.
தற்போது இந்த சாலையில் பல்லாங்குழி விளையாடலாம் என்ற அளவில் குண்டும் குழியுமாக உள்ளது. அதிலும் தற்போது பெய்த மழையால் அதிகம் சேதமடைந்து ரோட்டில் கழிவு நீர் தேங்கி மோசமான நிலையில் உள்ளது.

குறிப்பாக பழைய காவல் நிலையம் அருகில் உள்ள விஏஓ அலுவலகம் எதிரில்,சுடுகாட்டுக்கு எதிர்புறம்,நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகில் டிராவல்ஸ் அலுவலகங்கள் எதிரில் என மூன்று இடங்களில் அதிக அளவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் டூவீலர்களில் சென்றோர் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தோர் கூறியதாவது, இந்த சாலையை நெடுஞ்சாலைதுறை அமைக்கும் போது ஒரெ சீராக இல்லாமல் மேடு பள்ளமாகவே அமைத்தார்கள்.எனவே மழை காலங்களில் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலை சேதமடைகிறது. த‌ற்போது மீண்டும் இந்த‌ சாலையை சீர‌மைத்து ச‌ரியான‌ முறையில் அமைக்க‌ வேண்டும்.நெடுஞ்சாலைதுறை அதிகாரிக‌ளின் இத‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்ற‌ன‌ர்.


இது குறித்து கீழக்கரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் கூறியதாவ‌து,
இது சம்பந்தமாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளேன்.விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். இந்த சாலையை சீர் செய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.

Sunday, December 18, 2011

நிலத்திற்கான அரசின் மதிப்பீடு மறுபரிசீலனை!கலெக்டரிடம் முஜீப் மனு


ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராயை கீழக்கரை முஜீப் சந்தித்து மனு அளித்தார் .கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,


தமிழக அரசால் அமல்படுத்தபட உள்ள இடம் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டுதல் மதிப்பு சட்டத்தில் இடம் மற்றும் மனைகளுக்கான‌ மதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கீழக்கரைப்பகுதி ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் .ஏழை எளிய மக்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள அதிக விலையில் இடத்தை வாங்கவோ, பத்திரத்தை பதிவு செய்ய‌வோ முடியாது. என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ துறையின் மூல‌ம் உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்து அமல் படுத்த பட உள்ள இந்த இட வழிகாட்டுதல் சட்டத்தை ம‌றுப‌ரிசீல‌னை செய்ய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க பரிந்துரைக்க‌ வேண்டும். இவ்வாறு மூஜிப் அம்ம‌னுவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஏற்கென்வே நமது தளத்தில் வெளி வந்த செய்தி :-
http://keelakaraitimes.blogspot.com/2011/11/blog-post_28.html

இலவச மிக்ஸி,கிரைண்டர் வழங்கும் விழா !


பயனாளி ஒருவருக்கு இலவச மின் விசிறியை அமைச்சர் சுந்தராஜன் மற்றும் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.


கீழக்கரை அருகே உள்ள நத்தம் குளபதத்தில் இலவச மிக்ஸி,கிரைண்டர் மின் விசிறி வழங்கும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் ஏராள‌மான‌ ப‌ய‌னாளிக‌ளுக்கு இல‌வ‌ச‌ மிக்ஸி,கிரைண்ட‌ர் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.இவ்விழாவிற்கு கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்,தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர்,திருப்புல்லானி ஒன்றிய‌த்த‌லைவ‌ர், கீழ‌க்க‌ரை நக‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்

தமுமுக கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்வு !


கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக பொதுக்குழுக் கூட்டம் 16 ; 12 :2011 அன்று மாலை 6 :30 மணிக்கு கீழக்கரை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காயல் ஜகரிய அலீம் சிறப்புரையாற்றினர். பின்னர் கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

விபரம் கீழ் வருமாறு :-
தலைவர்: ஐ.செய்யது இபுராகிம். 9789396930
செயலாளர்: ஹெச்.சீனி ஜகுபர் சாதிக். 9150730600
பொருளாலர்: ஏ.சேக் தாவுத் சாதிக். 9940911554
மமக செயலாளர்: எம்.ஏ.ஹமீது இக்பால். 9442522114
துணை தலைவர்: அபுதாகிர்
துணை செயலாளர்: புகாரி. 948721489
மமக துணை செயலாளர்:கே.ராஜா ஹூசைன். 9047015891

Saturday, December 17, 2011

கீழக்கரை முழுவதும் புகைபோக்கி இய‌ந்திர‌ம் மூல‌ம் கொசும‌ருந்து அடிக்கும் ப‌ணி துவ‌க்க‌ம் !பொதுவாக மழை காலம் வந்து விட்டால் கொசுக்கள் மிக அதிகமாக வந்துவிடும். சாலைகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் வேகமாக பரவும். இதனால் மலேரியா,டெங்கு நோய்களும் உருவாகிறது. தற்போது கீழக்கரை நகரில் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் கீழக்கரை நகரில் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வ‌ருகிற‌து.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து,
பழைய இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் உடனடி நடவடிக்கையாக புதிய‌தாக‌ இர‌ண்டு புகை போக்கி இய‌ந்திர‌ங்க‌ள் வாங்க‌ப்ப‌ட்டு கீழக்கரையில் உள்ள‌ அனைத்து வார்டுக‌ளிலும் கொசு ம‌ருந்து புகை ப‌ர‌ப்பும் ப‌ணி துரிதமாக துவங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

சாலையா ? கழிவுநீர் சாலையா ?கீழக்கரை 17வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு ஜாமியா நகர் பள்ளிவாசல் அருகே நீண்ட நாட்களாக சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சாஹிர் என்பவர் கூறுகையில் ,புதுத்தெரு ஜாமியா நகர் தொழுகைப்பள்ளி அருகே கழிவு நீர் தேங்கியுள்ளதை நீங்கள் காணலாம்.இந்த வழியாகத்தான் ஹமீதிய ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர்.இந்த கழிவு நீரை தாண்டிதான் செல்கின்றனர்.சில சமயம் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் கீழே விழுந்து அடிபடும் நிலையும் ஏற்படுகிறது.கீழக்கரை நகராட்சிக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது வரை சுத்தம் செய்யப்படவில்லை.தயவு கூர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கேட்ட போது, இதற்கு நிரந்தர தீர்வு(கழிவு நீர் தொட்டி அமைக்க) காண்பதற்கு 5 சென்ட் இடம் தேவைபடுகிறது இதற்காக‌ உரியவர்களிடம் பேசி வருகிறோம்.விரைவில் இப்பிரச்சனையை தீர்ப்போம் என்றார்.

அப்பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கூறுகையில் ,நிரந்தர தீர்வு வரும் வரை கழிவுநீர் அகற்றும் லாரிகளில் உறிஞ்சும் குழாய்கள் மூலம் கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

+1 தேர்வில் நபிகள் பெயர் பிழையாக அச்சடிப்பு !மாணவர்கள் ஆவேசம் !


பைரோஸ் கான்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரையாண்டு தேர்வு தமிழ் முதல் வினாத்தாளில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என இருந்ததால், பெரியபட்டினத்தில் முஸ்லிம் அமைப்பு மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் 18வது கேள்வியில் "அபூபக்கருடைய அன்பின் ஆற்றலும், நரிகள் நஞ்சு தீர்த்து அருளியதும்' என்ற கேள்வி இடம் பெற்றது. இதில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என பிழையாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சிக்கும் ஆவேசத்துக்குள்ளாகினர்.
பெரியபட்டினம் பி.எப்.ஐ., நகர் தலைவர் முகம்மது சலீம், மாவட்ட செயலாளர் அசன் அலி, எஸ்.டி.பி.ஐ.,தொகுதி தலைவர் பைரோஸ் கான் மற்றும் ஏராளமானோர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

அங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் தமிழாசிரியர் முருகனிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.
எஸ்.டி.பி.ஐ., தொகுதி செயலாளர் பைரோஸ் கான் கூறியதாவது:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் விதமாகவும் கேள்வி அமைந்துள்ளது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் செல்லம் கூறியதாவது: அச்சுப்பிழையால் இந்த தவறு நேர்ந்தது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி தவறை சரி செய்ய கூறியிருந்தோம். இதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Friday, December 16, 2011

கீழக்கரை சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் நகராட்சி தலைவர் மனு !
கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து கடற்கரையில் உள்ள பெட்ரோல் பங்க் வரை அமைந்துள்ள வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்க ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் சென்று அத்துறை அதிகாரி பவுன் ராஜிடம் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா மனு கொடுத்தார்.

விரைவில் இது தொடர்பாக மேல் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டு சாலை சீரமைக்கபடும் என்று பவுன் ராஜ உறுதியளித்தார்.இந்த‌ சாலை நெடுஞ்சாலை துறை பொறுப்பில் இருந்து வ‌ருகிறது.
கீழ‌க்க‌ரையில் முக்கிய‌ சாலையான வள்ளல் சீதக்காதி சாலை குண்டும் குழியுமாக‌ காண‌ப்ப‌டுகிற‌து.நீண்ட‌ கால‌மாக‌ இந்த‌ சாலையை சீர‌மைக்க‌ கோரிக்கை இருந்து வ‌ருவ‌து குறிப்பிட‌ த‌க்க‌து.