Thursday, November 28, 2013

இஸ்லாமியா பள்ளியில் சமையல் கலை நிகழ்ச்சி!ஏராளமான மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு!











இந்நிலையில் சமையல் கலை ஆர்வத்தை வளர்க்கும் விதமாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவியருக்கான சமையல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 10, +1 ,+2 மாணவியர் பங்கேற்று புதிய வகை உணவுகளை தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக  பள்ளியில்  பிரத்யோகமாக  சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நூற்றுக்கணக்கான உணவு வகைகளை மாணவியர் தயாரித்திருந்தனர்.இதில் தந்தூரி வகை உணவுகள்,வட நாட்டு உணவு வகைகள்,சில்லி சிக்கன்,ஸ்டப்ட் ப்ரோட்டா,குலோப்ஜாம்,கேரட் அல்வா  மற்றும் புதிய சிறுதானியங்களை கொண்டு தயாரித்த உணவுகளான கம்பு இட்லி, கம்பு சட்னி, ராகி தோசை,சோள தோசை, உள்ளிட்ட  வித விதமான சைவ மற்றும் அசைவ வகைகளை உருவாகியிருந்தனர்.
கீழக்கரை ஸ்பெசல் உணவான வட்டலப்பமும் செய்திருந்தனர்.
மேலும் புதிய வகை உணவுகளை தயாரித்து மாணவியரே புதிய பெயரிட்டு மெனுவாக தயார் செய்திருந்தனர்.இந்த உணவு வகைகளை உண்ணுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவியர் விளக்கினர்.


மிகுந்த ஆர்வத்துடன்  இந்நிகழ்ச்சியில் மாணவியர் பங்கேற்றனர்.இவர்களின் சமையல் படைப்புகளை பள்ளி நிர்வாகிகள்,ஆசிரிய ஆசிரியைகள் பார்வையிட்டு   பாரட்டினர்.



இது குறித்து பள்ளியின் தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற சிலரின் சொல்வழக்கை புறந்தள்ளி இக்காலத்தில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். 

இன்று படிக்கும் பெண்களுக்கு சமையல் எதற்கு என்று சொல்வது போன்று சமையல் செய்யவே தெரியாது என்று பெண்களில் ஒரு பகுதியினர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக எங்கள் பள்ளி மாணவியரின்  சமையல் கலை ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

பங்கேற்ற மாணவியரின் ஆர்வத்தை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.மேலும் இனி ஒவ்வொரு வருடமும் இது போன்று நிகழ்ச்சிகள் பள்ளியில் நடத்தப்படும்.

மேலும் சத்து பற்றாக்குறையை தவிர்க்க பழைய உணவு வகைகளை நாம் உண்ணும் உணவில் சேர்ப்பது அவசியம் எனபதை உணர்த்தும் வகையில்  சிறுதானியங்களைக்கொண்டு தயாரிக்கும் உணவினை உண்ணும் பழக்கத்தினை குழந்தைகளிடையே ஏற்படுத்த வேண்டும். நமது நாட்டின் பாரம்பரிய உணவுப்பயிர்களான கம்பு, கேழ்வரகு,   கைக்குத்தல் அரிசி, கோதுமை ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைளை சாப்பிட்ட நமது முன்னோர்கள் ஆரோக்கியத்துடனும், உடல் பலத்துடனும் இருந்தனர். என்றார்.

கல்லூரி மாணவியருக்கு அதிகளவில் இவ்வகையான நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
முதல் முறையாக கீழக்கரையில் பள்ளி மாணவியருக்கு சமையல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.






Wednesday, November 27, 2013

பேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்!மெத்தனமாக இருப்பதாக நகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்


கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வணிக வளாகத்தின் சேதமடைந்த பகுதி உடைந்து டூவீலர் மீது விழுந்து கிடக்கிறது.
கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் டூவீலர் ஒன்று சேதமடைந்தது. இது மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் விழுந்ததால் உயிர் பலி தவி்ர்க்கப்பட்டது.
கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இது கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வளாகத்தில் தற்போது மீன், காய்கறி கடைகளும் கூட்டுறவு ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த வளாகத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
இந்த வணிக வளாகத்தின் சைன்சைடு பகுதி பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்தது. மக்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் விழுந்தால் உயிர் பலி ஏற்படக்கூடும். அதனால் நகராட்சி நிர்வாகம் சைன்சைடு பகுதியை புதுப்பிக்க வேண்டும் என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தினகரன் செய்தி வெளியிட்டிருந்தது. இதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வணிக வளாகத்தின் சைன்சைடு பகுதி திடீர் என்று இடிந்து விழுந்தது. அதில் அங்கிருந்த டூவீலர் ஒன்று சேதமடைந்தது. இது பகல் நேரத்தில் நடந்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
21வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது: “நகராட்சியின் பழமையான வணிக வளாகத்தை சீரமைக்க பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளும், தலைவரும் கூறினார்கள். ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது இரவு நேரத்தில் நடந்ததால் உயிர் பலி தவிற்க்கப்பட்டுள்ளது. இதனியாவது நகராட்சி வணிக வளாகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, கீழக்கரையில் சேதமடைந்துள்ள நகராட்சியின் வணிக வளாகத்தை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்கு வலியுறுத்தியும்,நகராட்சி திட்டப்பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இவற்றை கண்டித்து ஆர்ப்பட்டம் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் நகர் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன் ,குருவேல் ,மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி,கல்யாணசுந்தரம்,கண்ணகி முன்னிலை வகித்தனர். மேலும் நிர்வாகிகள் விக்டர்,கருப்பசாமி,முருகேஷ்குமார்,பழனிசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளாக பலனில்லாத மின்சார டிரான்ஸ்பார்மர்!


கீழக்கரை 21வது வார்டு வடக்குத் தெரு தட்டான் தோப்பு அருகில் அமைக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மின்சார வாரிய டிரான்ஸ்பார்மர்.
கீழக்கரையில் 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை 21வது வார்டு வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா தர்ஹாவுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அதிகளவிலான வீட்டு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதானல், சீரான மின்சாரம் கிடைக்காததால் வீடுகளில் அடிக்கடி மின் இணைப்பு பழுதடைந்து வந்தது. கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகள் தட்டான் தோப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்தனர். இதிலிருந்து ஒரு சில மாதங்களில் புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிடும், பழைய டிரான்ஸ்பார்மரில் உள்ள பெரும்பகுதியான இணைப்புகள் மாற்றப்படும். அதன் பிறகு எந்த வீடுகளில் மின் இணைப்பு பழுது ஏற்படுவது முழுமையாக தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், அதிகாரிகள் கூறியது எதுவுமே நடக்கவில்லை. புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. துருபிடித்து வீணாகி வருகிறது. பொது மக்களின் நலன் கருதி 4 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு கொண்டுவராத டிரான்ஸ்பார்மரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கீழக்கரையில் பூட்டியிருந்த வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு!மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது!


கீழக்கரை அஹமது தெருவை ஹசனா லெப்பை மனைவி ரஹ்மான் பீவி(49) இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டிலிருந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள 8 1/2 பவுன் மதிப்புள்ள நகையை திருடி சென்றுள்ளதாக காவல் துறையில் புகார் செய்தார்.

இதன் பேரில் எஸ்.ஐ கோட்டைசாமி தலைமியிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

கீழக்கரையில் பிடிபட்ட இருதலைமணியன் பாம்பு!வனத்துறையிடம் ஒப்படைப்பு!


 old (file picture)

கீழக்கரை தொலைபேசி நிலைய வாசல் பகுதியில் இருந்து துணை போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 3 அடி நீளமுள்ள இருதலை மணியன் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள்  ஏர்வாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து வனச்சரகர் ஜெயராமன் உத்தரவின் பேரில் வனவர் இன்னாசிமுத்து தலைமையிலான ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று இரு தலைமணியன் பாம்பை கைப் பற்றினர். ஏர்வாடி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற பின்னர் நேற்று காலை திருப்புல்லாணி அருகே சதுப்புநில காட்டு பகுதியில் அந்த பாம்பை கொண்டு சென்றுவிட்டனர்.


photo : thanks.Dinathanthi (Mr.Azad)

இதேபோல ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினக ரன் என்பவரது வீட்டு முருங்கை மரம் அருகில் அதிசய பறவை ஒன்று மயங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. நீண்டநேரம் அசைவற்று நின்று கொண்டிருந்ததால் சந் தேகமடைந்த தினகரன் இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ராமநாத புரம் வனச்சரகர் கணேசலிங் கம் தலைமையிலான வனத் துறையினர் அந்த பறவையை பிடித்தனர்.அப்போது இது அபூர்வ வகையான நீலத்தாழை கோழி  எனப்படும் "பர்ப்பிள் சுவாப் ஹென்'. அழகாக காட்சியளிக்கும் இவை, பெரும்பாலும் நதிகள், குளங்கள் உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் வசிக்கும். எளிதில் காண முடியாத வகையில் புதர்களில் மறைந்தே வாழும். புழுக்கள் மற்றும் சிறிய மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்ளும். பறவைகள் அதிகபருந்து உள்ளிட்ட பறவைகள் தாக்கியதால் அது அதிர்ச்சியில் அப்பகுதியில் நின்றிருக்கக்கூடும் என்றும் வனத்துறையினர் தெரிவித்த னர். மேலும் அந்த பறவைக்கு சிகிச்சை அளித்து தேவிபட்டி னம் வனப்பாதுகாப்பு இடத் தில் காட்டுப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்.


கீழக்கரை அருகே கிணறு தோண்டும் போது விபத்து! புதைந்த இருவர் மீட்பு!


 படம் : பாலாஜி ,சன் ரைஸ் ஸ்டுடியோ

 கீழக்கரை அருகே ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், கிணறு தோண்டியபோது, மண் சரிந்ததில், மண்ணிற்குள் புதைந்த இருவர், உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூ.1.40 கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ராமநாதபுரம் ஒப்பந்ததாரர் அருணகிரி ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர் அறை அருகே, கிணறு தோண்டும் பணியை, பாப்பாக்குடியை சேர்ந்த 5 பேர், நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கினர்.

மதியம் 12.40 க்கு திடீரென மண் சரிந்தது. இதில் இளையராஜா, 29, கழுத்தளவுக்கும், கருப்பையா, 30, இடுப்பளவுக்கும் மண்ணுக்குள் புதைந்தனர். ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 மண் அள்ளும் இயந்திரங்களின் உதவியுடன், மண்ணை அள்ளினர். 

கழுத்தளவிற்கு புதைந்த இளையராஜா மூச்சு விட திணறியதால், டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தி, முதலுதவி அளித்தனர். 2 மணி நேர முயற்சிக்கு பின், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
இதில் காலில் பலத்த வலி காரணமாக இளையராஜா, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருப்பையா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.


Tuesday, November 26, 2013

வபாத் அறிவிப்பு (காலமானார் )!


கீழக்கரை கிழக்குதெருவை சேர்ந்த மர்ஹீம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும் ,மர்ஹூம் செய்யது முஹம்மது(காட்டரபி) மர்ஹீம் அரபி ஷாஹுல் ஹமீது,மர்ஹும் கதீஜா உம்மா மற்றும் அரபி ஹம்ஷா ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் உம்மு ஹபீபா ஆகியோரின் கணவரும் ஹலிஃபுதீன் ,ஷபியுதீன் ,ரபீஷா ஆகியோரின் தகப்பானாரும்,அரபி நூர்ல் அமீன் அவர்களின் மாமனாரும்,நுஃமான்,ஜபருல்லாஹ்,கன்ஸுல்லாஹ் ஆகியோரின் மாமாவும்,
அமீன் ஸாஹிப்,நிஸார்,நூருல் ஆபிதீன்,இஸ்மாயில்,அஜ்மல்,அஸ்ஃபர்,நூர் முஹம்மது,இஸ்மாயில் மரிக்கா ஆகியோரின் பெரியவாப்பாவுமான ஜனாப் செய்யது அப்துல் காதர்(85) பெரிய அரபி அவர்கள் இன்று (26/11/13) வபாத்தானார்கள்(காலமானார்)

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


தகவல்: இஸ்மாயில் மரிக்கா













Monday, November 25, 2013

தேங்காய் நார் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை! கீழக்கரை பகுதியில் அமைக்க கோரிக்கை!



 மத்திய கயிறு வாரிய தலைவர் பி.பாலச்சந்திரன் நேற்று டெல்லியில் கூறியதாவது;-

“தேங்காய் நார் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத பசுமை மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். முதல் கட்டமாக அடுத்த 6 மாதங்களில் 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தலா 10 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 6 தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.


தமிழகத்தில் இரு இடங்களில்
அவற்றில் இரு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். கேரளாவில் இரண்டு இடங்களிலும் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தலா ஒரு இடங்களிலும் இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு தொழிற்சாலையும் தலா ரூ.60 கோடி

தேங்காய் நார் கழிவுகள் மூலம் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சுற்றுச்சூழலை மாசு படுத்தாத இந்த மின் உற்பத்தியில் இறங்க தனியார் தொழில் முனைவோர் முன்வரவேண்டும். அவர்களுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்பட இதர வழிகாட்டுதல் உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம்.

தேங்காய் நாரில் இருந்து புதிய பொருட்களை உற்பத்தி செய்வதற்காக கொச்சி மற்றும் பெங்களூரில் இரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேங்காய் நார் கழிவுகளை உரமாக பயன்படுத்தினால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும். மண்ணை விட 8 மடங்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் சக்தி இதற்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்று பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் நிறைந்து காணப்படுகிறது.லட்சக்கணக்கான தேங்காய்கள் இங்கிருந்து விற்பனைக்கு வெளியூர் செல்கின்றன.

ஆனால் இதுவரை அரசு சார்பில் தென்னை தொடர்பான தொழிற்சாலைகள் இப்பகுதியில்  இல்லை.தற்போது தமிழகத்தில் 2 இடங்களில் தேங்காய் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதால் இப்பகுதியின் எம்.பி எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இத்தொழிற்சாலை அமைய முயற்சி எடுக்கலாம்.

மேலும் தனியாரும்  இதற்கான முயற்சியில் இறங்கினால் அதற்கு வேண்டிய உதவிகளை செய்வதாக அரசு அறிவித்திருப்பதால் கீழக்கரை பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்கள் இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த சூழ்நிலையில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் பெரும் வரவேற்பும் தொழில் வளர்ச்சியும் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை




இஸ்லாமியா துவக்கப்பள்ளி கட்டிட பணிக்கு ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ 5 லட்சம்


கீழக்கரை தெற்குதெருவில் இஸ்லாமியா துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியின் நிர்வாகம் மூலம் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளது.இப்பணிக்கு எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ ஐந்து லட்சம் வழங்கிய ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏவுக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிக்கப்பட்டது.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்,

 ரூ 25 லட்சம் செலவில் இப்பணி நிறைவடைந்துள்ளது.இதற்கான தொகையில் ஒரு பகுதியான ரூ 5 லட்சத்தை எம்.எல்.ஏ நிதியிலிருந்து வழங்கிய ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஜமாத் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்

ராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்!



கீழக்கரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலை  முக்கிய வழியாக இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன மேலும் இச்சாலையில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்பகுதி வழியாக தார்பாய் போடாமல், திறந்தவெளியில் மணல் எடுத்துச் செல்வதால், காற்றில் பறந்து, ஏராளமான மணல் சாலையில் விழுகிறது.மேலும் சாலையில் மணல் கொட்டுவதால், சாலையோரம் குவியலாக காணப்படுகிறது. இதில், இருசக்கர வாகனங்களில் செல்வேர், சறுக்கி விழும் அபாயம் உள்ளது.சாலை பணி நடைபெறுவதற்காக கொட்டுவதாக கூறினாலும் கொட்டிய மணலை உடனே அள்ளாமல் நாள் கணக்கில் சாலையில் குவிந்து கிடக்கிறது.

 இதற்கு பயந்து, பெரும்பாலான வாகன ஓட்டிகள், நடுரோட்டில் செல்வதால், நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணல் குவியலை அகற்றுவதுடன், தார்பாய் போடாமல் மணல் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு, அபராதம் விதிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Sunday, November 24, 2013

துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு!


செய்தி :தினகரன்
துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த புதிய விமான சேவையால் பயண நேரமும், செலவும் அதிகளவில் குறைவதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையம் ரூ.128 கோடியில் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்ட பின், முதல் முறையாக கொ ழும்புக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் கடந்த 2012, செப்.20ல் துவக்கியது. இதனை தொடர்ந்து 2வது சர்வதேச விமானத்தை மதுரையில் இருந்து துபாய்க்கு நேற்று முன்தினம் இயக்கியது. நேற்று அதிகாலை 3.50 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்னை வழியாக காலை 9.35 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது. துபாயில் இருந்து விடப்பட்ட முதல் விமானம் என்பதால், விமான நிலையத்தின் சார்பில் வாட்டர் சல்யூட் அடித்து ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் துபாயில் இருந்து வந்த பயணிகளை ஸ்பைஸ் ஜெட் விமான நிலைய சேவைப்பிரிவு முதுநிலை துணைத்தலைவர் கமல்கிங்கோரானி, விற்பனை பிரிவு முதுநிலை துணைத்தலைவர் ராஜா, துணைப் பொது மேலாளர் ரஞ்சீவ், மதுரை விமான நிலைய ஸ்பைஸ்ஜெட் மேலாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த புதிய சேவை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணம் செய்த துபாய் வாழ் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த  அமுதஅரசன்,கோவில்பட்டியை சேர்ந்த ஜெகநாதன்,  நெல்லையை சேர்ந்த மீரான் கூறுகையில், 
கடந்த 3 ஆண்டுகளாக மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் இயக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இப்போது தான் ஸ்பைஸ்ஜெட் மூலம் எங்களது கனவு நிறைவேறியுள்ளது. தென் தமிழகத்தில் இருந்து சென்று துபாயில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சேவை மிகப்பெரிய உதவியாக அமையும். இதனால் பயண நேரம் பல மணி நேரம் குறைகிறது. டிக்கெட் உள்ளிட்ட பல வழிகளில் பணமும் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பும், தொழில் வளமும் பெருகும் என்றனர்.
மதுரை செல்லூரை சேர்ந்த ராமமூர்த்தி (கார்பென்டர்), அவரது மனைவி காளீஸ்வரி கூறுகையில், இதுவரை சென்னை சென்று,
 அங்கிருந்து வேறு விமானம் மூலம் துபாய் சென்று வந்தோம். இதனால் சமயத்தில் துபாய் செல்வதற்கு 2 நாட்கள் கூட ஆகும். உணவு, தங்குமிடம், அலைச்சல் என பல வழிகளில் சிரமங்களை அனுபவித்து வந்தோம். தற் போது நேரடியாக சில மணி நேரங்களில் மதுரைக்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தினரை அடிக்கடி துபாய் அழைத்துச் செல்லவும் ஆசையாக உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்திற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி� என்றனர்.

Saturday, November 23, 2013

கீழக்கரைக்கு போக்குவரத்து காவலர்கள் !ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ வலியுறுத்தல்!







ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கீழக்கரை வருகை பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவரின் பயணத்தின் போது கீழக்கரையில் கட்டபட்டு வரும் இஸ்லாமிய துவக்கப்பள்ளியை பார்வையிட்டார்.
மேலும் பழைய குத்பா பள்ளி ஜமாத் நிறுவாகத்தில் உள்ள மக்தூமியா உயர்நிலை பள்ளியை பார்வையிட்டார். அவரிடம் எம் எல் ஏ நிதியில் கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கீழக்கரை நகர் தமுமுக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.எல்.ஏ கூறியதாவது.

2012மத்திய அரசின் புள்ளியல் துறை சார்பாக நடந்த கணக்கெடுப்பில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 42 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது.இதில் 1லட்சத்து 39ஆயிரத்து 91 பேர் மரணமடைந்துள்ளனர்.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 67 ஆயிரத்து 757 விபத்துகள் நடைபெற்றுள்ளது.இதில் 16 ஆயிரத்து 175 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் இரு சக்கர விபத்தில் பலியானவர்கள் மட்டும் 15 ஆயிரத்து 422பேர் ஆவார்கள் எனவே இரு சக்கர விபத்துகள்தான் அதிகளவில் நடைபெற்றுள்ளது.இதற்கு காரணம் ஹெல்மெட் அணியாமலும்,செல்போன் பேசி கொண்டு ஓட்டுவதுதான். மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்றவைகளால் விபத்துகள் நடைபெற காரணமாகி விடுகிறது.எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமுமுக சார்பில் கீழக்கரையில் டிச 7 முதல் 13 வரை சாலை பாதுகாப்பு வார விழா பிரச்சாரம் பேரணி நடத்தப்படுகிறது.இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் .

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றாலும் பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை அதே போல் சீட்பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும்.இதனால் விபத்துகள் நடைபெறும் போது விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்க முடியும்.

கீழக்கரையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிலர் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குகின்றனர்.டூ வீலரை 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களும் ஓட்டுகின்றனர்.இதனை தடுக்க வேண்டும்.கீழக்கரைக்கு போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் இதற்காக சட்டசபையில் வெட்டு தீர்மாணம் கொண்டு வந்துள்ளேன்.

மேலும் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஸ்பீடு ரேடார் கருவியை ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


18வது வார்டில் தொடரும் அவலம்! நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!




18வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் நிறைந்தும் பல இடங்களில் உடைந்தும் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியாவை சந்தித்த தெற்குதெரு முஸ்லிம் பொது நல சங்கத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று கொண்ட நகராட்சி தலைவர் விரைவில் சீர் செய்து தருவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் தற்காலிகமாக உடனடி நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை அகற்றவும்,மூடி போட அமைத்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சூஃபியான் கூறுகையில்,

இது வரை இப்பகுதியின் கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுபோன்று மக்கள் பணியாற்றாமல் இருப்பதற்கு எதற்கு கவுன்சிலர் பதவி? கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சளில் உள்ளார்கள்.சேர்மனுடன் கவுன்சிலர் முஹைதீன் இப்ரஹிம்சுஃப் நடத்தும் பனிப்போரால் பாதிக்கப்படுவது எங்கள் மக்கள்தான்.

எனவே சேர்மன் அவர்கள் எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பிரச்சனைக்கு உடனடியாக தற்காலிக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது ! பல்லாண்டு கனவு நனவானது!



படங்கள்: பரக்கத் அலி
 2வது சர்வதேச விமான சேவையாக நேற்றிரவு மதுரையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட்டின் முதல் விமானம் புறப்பட்டு துபாய் சென்றடைந்தது.

இதற்கான துவக்க விழா நேற்று மதுரை விமான நிலையத்தில் நடந்தது. மதுரை சுங்கத்துறை கமிஷனர் பாஹ்கீம் அகமது, இணை கமிஷனர் மீனலோசனி, விமான நிலைய இயக்குநர் சங்கையா பாண்டியன், தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், ஸ்பைஸ்ஜெட் விமான நிலைய சேவை அதிகாரி கமல்சிங்கோரானி, விற்பனை பிரிவு முதுநிலை அதிகாரி ராஜா, துணைப் பொது மேலாளர் ரஞ்சீவ், கமாண்டர் குருசரண்சிங், இமிகிரேஷன் அதிகாரி விக்டர், டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, ஸ்பைஸ்ஜெட் மதுரை மேலாளர் பாலாஜி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். கேக் வெட்டப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து பயணிகளுக் கான முதல் டிக்கெட்டை ரத்தினவேலுக்கு சுங்கத்துறை கமிஷனர் பாஹ்கீம் அகமது மற்றும் மீனலோசனி வழங்கினர்.
முதல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், மதுரை டிராவல் கிளப், தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். இந்த விமானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தூதுக்குழுவை சேர்ந்த 36 பேர் சென்றனர். துபாய், அபுதாபி, கெய்ரோ செல்லும் இந்த தூதுக்குழு சுற்றுலா வளர்ச்சி, உணவு பதப்படுத்துதல் குறித்த கருத்தரங்கில் பங்கேற்கிறது.
ஸ்பைஸ்ஜெட் சேவை குறித்து சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா கூறுகையில்,

 தென் தமிழக மக்களின் கோரிக்கையை ஸ்பைஸ் ஜெட் ஆர்வத்துடன் நிறைவேற்றித்தருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. துபாய்க்கு நேரடி விமானம் இயக்குவதன் மூலம் பணம், நேரம் பெருமளவு மிச்சமாகும். மேலும் தென் தமிழகத்தில் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளம் பெரும். ஏற்றுமதியும், வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றார்


விமானத்தில் பயணம் செய்து துபாய் வந்த கீழக்கரையை சேர்ந்த பரக்கத் அலி கூறுகையில், 
தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் சேவை என்றார்.

Friday, November 22, 2013

உலக இஸ்லாமியர்களில் செல்வாக்குமிக்க 500பேரில் ஒருவராக கீழக்கரை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் தேர்வு!



உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக  தேர்வு உலகில்  முக்கிய தலைவர்கள் ,தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தொழித்துறை பிரிவில் உலகில்  செல்வாக்குள்ள இஸ்லாமியர்கள் என்று 24 நபர்கள்(2013/2014) தேர்வு செய்யப்பட்டு அதில் இந்தியாவிலிருந்து ஒருவராக தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பி.எஸ்.அப்துர் ரஹமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 http://themuslim500.com/ http://themuslim500.com/profile/abdur-rahman-b-s என்ற இணையதளத்தில் காணலாம்





இவரை பற்றி சிறு குறிப்பு உதவி - மஹ்மூத் நெய்னா :


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இந்திய தொழிற்துறையின்முன்னோடியும்தமிழகத்தில்பெரும்செல்வாக்குகொண்டவரும்தயாளகுண சீலருமான சேனா ஆனா  என்றுஅழைக்கப்படும் வள்ளல் பிஎஸ்அப்துர்ரஹ்மான்  ஐக்கியஅரபுஎமிரேட் நாட்டின் துபாயைதலைமையிடமாக கொண்டு இயங்கிவரும்ரியல் எஸ்டேட்கட்டுமாணம்மற்றும் வர்த்தக துறைகளில் மிகவும் சக்தி வாய்ந்த .டி. அஸ்கான் மற்றும் ஸ்டார் குழுமநிறுவனங்களின்  நிறுவன பங்குதாரரும், துணை தலைவரும் ஆவார்.

பிஎஸ்அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராகவும்தமிழகம் முழுவதும் உள்ளஎண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராகவும்காப்பாளராகவும் இருந்துவருகிறார். கல்வி, தொழில், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் சமூக நல்லிணக்கம்சார்ந்த துறைகளில் இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து கடந்த 2005 ஆம்ஆண்டு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம்,இவருக்கு  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி,

முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர்  ,கலைஞர் இன்றைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புடன் திகழ்ந்தவர்.

இவர் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுநலன்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளார்.

 இது தொடர்பான செய்தியை காண... http://keelakaraitimes.blogspot.ae/2013/10/blog-post_31.html