Monday, April 4, 2011

ஏர்வாடியில் அவலம்! பட்டினியால் ப‌ரிதவிக்கும் மனநோயாளிகள் !


கீழக்கரை, ஏப்.4: ஏர்வாடியில் அனாதையாக விடப்படும் மனநோயாளிகள், உண்ண உணவின்றி பசியுடன் பரிதவித்து வருகின்றனர். அவர்களின் பசிபோக்கி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் ஏர்வாடி தர்காவில், மனநோயாளிகளை பராமரிக்க வழியின்றி அனாதையாக உறவினர்கள் தள்ளி விட்டு செல்லும் கொடுமை இன்றளவும் தொடர்கிறது. இவ்வாறு விடப்படும் மனநோயாளிகள் இருபதுக்கும் மேற்பட்டோர், நகரில் அனாதைகளாக, சுற்றித்திரிகின்றனர். பரிதாபத்திற்குரிய வகையில் திரியும் இவர்கள், கைகளில் கிடைத்தவற்றை சாப்பிட்டு, பசியாற்றி வந்தனர். தவிர வெளியூர்களிலிருந்து வரும் யாத்ரீகர்கள் வழங்கும் பழங்கள், அன்னதானம் ஆகியவை காரணமாகவும் மன நோயாளிகளுக்கு உணவு கிடைத்து வந்தது. தற்போது தேர்தல் சமயமாக இருப்பதாலும், தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் யாத்ரீகர்கள் உணவு பொருட் களை எடுத்து வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக வாகன சோதனை, பயணிகளின் உடமைகள் சோதனை காரணமாக உணவு பொருட்களை கொண்டு வருவதில்லை. இதனால் அன்னதானம் வழங்குவதும் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் மன நோயாளிகள் பசியுடன் பரிதவிக்கின்றனர். பலர் ரோடுகளில் மயங்கிய நிலையில் கிடக்கின்றனர். இவர்களை காப்பாற்றி பராமரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏர்வாடி தர்காவில் மன நோயாளிகளை தள்ளிவிட்டு விட்டு செல்லப்படுவதையும் தடுக்க முன்வரவேண்டும் என¢ற கோரிக்கை எழுந்துள¢ளது. அப்பகுதியை சேர்ந்த ஹமீது கூறுகையில், ‘ஏர்வாடியில் அனாதையாக விடப்படும் மனநோயாளிகள் நிலை, அவலத்தின் உச்சமாக உள்ளது. பிச்சைக்காரர்களாவது, வேண்டியதை கேட்டு பெற்று பசியை போக்கிக் கொள்வார்கள். ஆனால் மனநலம் பாதித்தவர்களோ, கேட்கக்கூட உணர்வின்றி பசியில் சுருண்டு கிடக்கின்றனர்‘ என்றார்.


இது குறித்து தர்கா கமிட்டி இளைஞர் பேரவை செயலாளர் சர்தார் கூறியதாவது, ‘மன நோ யாளி களை அவர்களின் உறவினர்களே, அனாதை யாக விட்டு செல்லும் கொடுமை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது இதில் பெண் மன நோயாளிகளும் அடங்குவர். எங்களால் இயன்ற அளவுக்கு மன நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இதற்குமேல் அதிகாரிகள்தான் நடவடிக்கையில் இறங்க வேண்டும்‘ என் றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.