Tuesday, November 19, 2013

தனி தாலுகா உள்ளிட்ட கிடப்பில் உள்ள கீழக்கரை நகருக்கான திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை!


 கீழக்கரை நகருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் உள்ளது,இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.தி.மு.., ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டை நெருங்கும் சூழ்நிலையில் தி,மு.., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, கீழக்கரை தனித்தாலுகா திட்டம், தொடர்ந்து கிடப்பில் உள்ளதால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்

கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும், அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு, 17 கி.மீ.,தூரத்தில் உள்ள ராமநாதபுரம் சென்று வருகின்றனர். பணம், நேர விரையத்துடன், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

கீழக்கரையை தனித் தாலுகாவாக்க, மக்கள் நீண்ட காலமாக கோரி வந்தனர். கடந்த 2010ல் தனித் தாலுகாவாக ஆக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. கீழக்கரை முள்ளுவாடி அருகே, தாலுகா அலுவலகம் கட்ட, கீழக்கரை சதக் அறக்கட்டளையினர் இலவசமாக நிலம் வழங்க முன் வந்தனர். அந்த இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.


வேட்பாளர்களும் வாக்குறுதியில் தனித்தாலுகா திட்டத்தை முதன்மைப்படுத்தி ஓட்டு சேகரித்தனர். .தி.மு.., அரசு பொறுப்பேற்றதும், கீழக்கரை தனித்தாலுகா அமைக்கும் பணி துவங்கிவிடும் என மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

 இரண்டு ஆண்டுகளை கடந்தும், அரசு தரப்பில் எவ்வித ஆயத்தப்பணிகளும் துவங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதி  எம்.எல்.., ஜவாஹிருல்லா இது குறித்து தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருவதாக தெரிவித்திருந்தார் ஆனால் இது வரை எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை.

பாதாள சாக்கடை திட்டம் :- கீழக்கரையில் 21 வார்டு கள் உள்ளன, இங்கு 300க் கும் அதிகமான குறுகிய தெருக்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். குறு கிய தெருக்களிலும் ஏராள மான அடுக்கு மாடி வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத் திகரிக்கப்படாமல் கடலில் கலக்கிறது. இதனால் கீழக் கரை கடல் பகுதி மாசடை ந்து வருகிறது. இதனால் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரனங்கள் அழிந்து வருவதாக கடல்சார் ஆர்வலர்கள் எச்சரித்த வண்னம் உள்ளனர்.
மேலும் நகரின் பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தே ங்கி நிற்கிறது. பெரும்பா லான இடங்களில் தற்போது கழிவுநீர் கால்வாய்களுக்கு மூடிகள் போடப்பட்டாலும் கழிவு நீர் சீராக ஓடாமல் தேங்கி நிற்பதால் சீர்கேடு ஏற்பட்டு, மலேரியா, டெங்கு உள் ளிட்ட நோய்கள் பரவ காரணமாகி விடுகிறது.

மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பல நாட்களாக சாலையில் தேங்கி நிற்கிறது. பல்லாண்டுகளாக   கீழக்கரையில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என கீழக்கரையின் சமூக நல அமைப்புகளை சேர்ந்தோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

கடந்த திமுக ஆட்சி காலத்தில் கீழக்கரையில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து பா தாள சாக்கடை திட்டத்திற் கான ஆய்வு பணிகள் நடந் தன.  பாதாள சாக்கடை அமைக்க ரூ.24 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் பங்களிப்பு 10 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டது. கீழக்கரை யில் 5 இடங்களில் சுத்திகரி ப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வும் நடந்தது. 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இத்திட்டம் கிடப் பில் போடப்பட்டது. தற்போது திட்ட மதிப்பீடும் பல மடங்காக உயர்ந்துள்ளது.ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா இத்திட்டம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியதாகவும் கூறினார். இருப்பினும் இன்று வரை இத்திட்டம் துவங்குவதற் கான எவ்வித அறிகுறியும் இல்லை.


கீழக்கரை கடலோர பூங்கா :
கீழக்கரை நீண்ட கடற்கரையை உள்ளடக்கிய நகராகும் சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சார்பில் பூங்கா கீழக்கரையில் இல்லை. கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதியாக அனைவரும் அள்ளி தருவது கீழக்கரைக்கு பூங்கா அமைப்போம் என்பது தான்.
 புதிய ஜெட்டி பாலம் அமைக்கப்பட்ட பின் மீன் துறைக்கு சொந்தமான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாலை நேரத்தில் கடலின் அழகை ரசிக்க ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர்.
 மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் கடல் பாலத்தில் அமர்ந்து வருகின்றனர். 
பாலம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் காலி இடம் உள்ளது. அந்த இடத்தை கையகப்படுத்தி சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து சமூக நல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். நகராட்சிதலைவர் ராவியத்துல் கதரியா விரைவில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து சென்னையில் அப்போதைய அமைச்சர் கோகுல இந்திராவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அரசு சார்பில் இதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதற்கான இடம் தேர்வு செய்யப்படும் என்றும், 
அருகில் உள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ள நகராட்சி சார்பில் மீன் வளத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது. ஆனால் மாதங்கள் கடந்தும் இதற்கான பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு கீழக்கரை நகர் குடிநீர் தேவை தீர்க்கப்படும் என என பல ஆண்டுகளாக அறிவிப்புகள் வந்தமயமாக உள்ளது.

சமீபத்தில் அரசு ராமநாதபுரம் மாவட்டத்துக்கென பலகோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.இத்திட்டமும் கிடப்பில் போடப்படாமல் செயல்படுத்த வேண்டும் என கீழக்கரை சமூக நல  அமைப்புகளின்  நிர்வாகிகளான தங்கம் ராதாகிருஸ்னன்,செய்யது இப்ராஹிம் போன்றோர் ஏற்கெனவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் மீன் பதனிடும் நிலையம்,தென்னை தொடர்பான தொழிற்சாலை என்று பல்வேறு அரசு சார்ந்த தொழில் பேட்டைகள் அமைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது.

தமிழக அரசு கீழக்கரை நகராட்சிக்கு புதிய சாலை அமைப்பது,குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்கு நிதிகளை ஒதுக்கி செயல்படுத்தி வந்தாலும்  மக்கள் பிரதிநிகள்  கீழக்கரைக்கு தனி தாலுகா உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளையும் உடனடியாக செயல்படுத்த அரசை வலியுறுத்த வேண்டும்.
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கீழக்கரை நகராட்சியை அதிமுக கைப்பற்றியது. எனவே ஓட்டளித்த மக்களின் நம்பிக்கையை காக்கும் விதமாக உடனடியாக கீழக்கரையில் நலதிட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 

2 comments:

 1. தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்...மேலும் விபரங்கள் அறிய http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_19.html

  -அன்புடன்-
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

  ReplyDelete
 2. கீழக்கரை அலி பாட்சாNovember 19, 2013 at 9:19 PM

  குறிப்பாக கல்விச் சாலைகள் நிறைந்த நமதூரில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் இருப்பிடம், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ்கள் பெற மாணவச் செல்வங்களும் அவர்களின் அன்பு பெற்றோர்களும் தாலூகா அலுவலகம் இல்லாமல் படும் துயரங்கள் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று.குறைந்த படசம் முறைப்படியான அலுவலகம் வருவதற்கு முன்பாக வி.ஒ இருப்பது போல ஆர்.ஐ ஒருவர். தாசில்தார் ஒருவர் நியமிக்கப்பட்டு மக்களின் இடர்களை கலைய வேண்டும்.

  எதிர் வரும் நாடாளு மன்ற தேர்தலில் ஆளுகின்ற கட்சிக்கு ஓட்டு தேவை என்றால் அதற்கு முன் விரைந்து செயல் பட வேண்டும்.சட்ட மன்ற உறுப்பினரும் தான் சார்ந்த கூட்டணிக்கு ஓட்டு சேகரிக்க வரும் முன் இப் பிரச்சனை தீர்க்கப் பட வேண்டும். வெறும் வாக்குறுதிகளோ, விளக்கமோ தேவை இல்லை. கேட்டு கேட்டு புளித்து விட்டது.

  கடல் அட்டை பிரச்சனை என்னவாயிற்றோ?

  ஆர்ஆர்.எஸ்.மடை - மண்டபம் ரோடு குறுக்கு சாலை பயன் பாட்டிற்கு வருவது எப்போதோ? நாம் கடலின் குறுக்கேயே பாலம் போட்டவர்கள்.இதற்கு தடையாக இருக்கும் மேம் பாலத்தை ஒழுங்கு செய்ய எவ்வளவு காலம் தான் தேவையோ?
  அரசுக்கு சீர் செய்ய மனமில்லையோ!!!
  சட்ட மன்ற உறுப்பினருக்கும் இச் சாலையை புழக்கத்திற்கு கொண்டு வர ஆர்வம் தான் இல்லையோ? நேரம் தான் இல்லையோ?

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.