Sunday, August 4, 2013

கீழக்கரையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி!

 
 
photo by AS Traders(kafarkahan) கீழக்கரை அஹமது தெரு அஸ்வான் சமூக நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
 
 
 



முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் தலைமை வகித்தார். இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர் முகம்மது ஜகாபர் வரவேற்றார். முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், செய்யது ஹமீதா கலைக்கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி,
கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் இப்தாரில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., நஜ்முதீன் செய்திருந்தார்.


ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில், தாளாளர் எஸ்.எம்.யூசுப் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார்.வட்டார போக்குவரத்து அலுவலர் காத்தலிங்கம் மாவட்ட டவுன் காஜி சலாஹுதீன்,உஸ்வதுன் ஹசனமுஸ்லிம்ச் சங்க செயலாளர் ஜினைது,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர் ,ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இப்தாரில் கலந்து கொண்டனர்
 கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார். செயலாளர் தங்கம் ராதா கிருஷ்ணன் வரவேற்றார். அவை முனைவர் செய்யது இபுராகிம் முன் னிலை வகித்தார். மாவட்ட காஜி ஸலாஹூத்தீன் பங்கேற்றனர்.

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சாபில் நடைபெறும் இப்தாரில் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்

கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தாளாளர் டாக்டர் சாதிக் தலைமை வகித்தார்.கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் தலைவர் சேகு அபுபக்கர்,துணை தலிவர் அமீர்,கல்விக்குழு உறுப்பினர்கள் செய்யது இப்ராஹிம்,ஹிசைன் அப்துல் காதர்,செய்யது ஜகுபர்,தொடக்கப்பள்ளி தாளாளர் ஜவஹர் சாதிக்,மஹ்மூது கரீம்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இப்தாரில் கலந்து கொண்டனர்

ஏர்செல் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இபதார்  நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்றனர்.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.