Saturday, November 23, 2013

18வது வார்டில் தொடரும் அவலம்! நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!




18வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் நிறைந்தும் பல இடங்களில் உடைந்தும் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியாவை சந்தித்த தெற்குதெரு முஸ்லிம் பொது நல சங்கத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று கொண்ட நகராட்சி தலைவர் விரைவில் சீர் செய்து தருவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் தற்காலிகமாக உடனடி நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை அகற்றவும்,மூடி போட அமைத்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சூஃபியான் கூறுகையில்,

இது வரை இப்பகுதியின் கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுபோன்று மக்கள் பணியாற்றாமல் இருப்பதற்கு எதற்கு கவுன்சிலர் பதவி? கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சளில் உள்ளார்கள்.சேர்மனுடன் கவுன்சிலர் முஹைதீன் இப்ரஹிம்சுஃப் நடத்தும் பனிப்போரால் பாதிக்கப்படுவது எங்கள் மக்கள்தான்.

எனவே சேர்மன் அவர்கள் எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பிரச்சனைக்கு உடனடியாக தற்காலிக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.