ராமேஸ்வரம்&தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து கீழக்கரை, ஏப்.7: தேர்தலுக்கு பிறகு ராமேஸ்வரம்&தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார். ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் வாசன் நேற்று கீழக்கரை வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ராகுல் காந்தி 2 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரின் பிரசாரம் திமுக கூட்டணியின் அமோக வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். இளைஞர்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்படும். தேர்தல் முடிந்தவுடன் தூத்துக்குடி & கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். அதே போல் ராமேஸ்வரம் & தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும் இணைப்பது குறித்து ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் உறவு வலுப்பட, மக்கள் நலத்திட்டங்களை அதிகம் நிறைவேற்ற திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்‘ என்றார். பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி, காங். பிரமுகர்கள் வக்கீல் முனியசாமி, கீழக்கரை ஹமீதுகான், ஹசனுதீன், லாபிர், மீனவர் அணி தேவதாஸ், திமுக நகர் செயலாளர் பசீர் அகமது, முஸ்லீம் லீக் ஹமீது ரஹ்மான் பங்கேற்றனர். முன்னதாக கீழக்கரை எல்லையில் கூட்டணி கட்சிகள் சார்பில் வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.