Wednesday, November 27, 2013

பல ஆண்டுகளாக பலனில்லாத மின்சார டிரான்ஸ்பார்மர்!


கீழக்கரை 21வது வார்டு வடக்குத் தெரு தட்டான் தோப்பு அருகில் அமைக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மின்சார வாரிய டிரான்ஸ்பார்மர்.
கீழக்கரையில் 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை 21வது வார்டு வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா தர்ஹாவுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அதிகளவிலான வீட்டு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதானல், சீரான மின்சாரம் கிடைக்காததால் வீடுகளில் அடிக்கடி மின் இணைப்பு பழுதடைந்து வந்தது. கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகள் தட்டான் தோப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்தனர். இதிலிருந்து ஒரு சில மாதங்களில் புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிடும், பழைய டிரான்ஸ்பார்மரில் உள்ள பெரும்பகுதியான இணைப்புகள் மாற்றப்படும். அதன் பிறகு எந்த வீடுகளில் மின் இணைப்பு பழுது ஏற்படுவது முழுமையாக தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், அதிகாரிகள் கூறியது எதுவுமே நடக்கவில்லை. புதியதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. துருபிடித்து வீணாகி வருகிறது. பொது மக்களின் நலன் கருதி 4 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு கொண்டுவராத டிரான்ஸ்பார்மரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.