கீழக்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை ஆதரித்து முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் பேசினார்
சேது திட்டத்தை முடக்கிய ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்
கீழக்கரை, ஏப். 7:
சேதுசமுத்திர திட்டத்தை செயல்படவிடாமல் தடுத்த ஜெயலலிதாவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
ராமநாதபுரம் தொகுதி காங். வேட்பாளர் ஹசன்அலி, முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி பகுதிகளில் காதர்முகைதீன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார். ஆனால் கருணாநிதி வாடிய பயிரை மட்டுமல்ல வாடிய உயிரையும் கண்டு வாடுகிறார். அதனாலேயே மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினார். ஜெயலலிதா கோடநாட்டில் ஏழைகளுக்கு சொந்தமான நடைபாதையை அபகரித்தார். கருணாநிதி, தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டி: தமிழர்களின் பல்லாண்டு கனவான சேது சமுத்திர திட்டம் திமுக கூட்டணி அரசால் முழு வடிவம் பெற்று செயல்பட இருந்தது. ஜெயலலிதாவால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் தடுக்கப்பட் டுள்ளது.
சேதுசமுத்திரம் திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட் டிருந்தால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.