Sunday, July 3, 2011

கீழக்கரையில் மணல், ஜல்லி விலை உயர்வால் கட்டிட தொழில் பாதிப்பு

கீழக்கரை, ஜூலை 3&
கீழக்கரையில் மணல், ஜல்லி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கட்டு மான பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மணல் விலையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை வைத்துள்ளனர்.
ராமாதபுரம் மாவட் டம் கீழக்கரையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டிராக்டர் மணல்
600 ஆக இருந்தது தற் போது 800
ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ஜல்லி கற்கள் இரண்டரை யூனிட்
9500 ஆக இருந்தது, தற்போது 11 ஆயிரமாக உள்ளது. சிமென்ட் விலையும் ஒரு முடை
280 ஆக இருந்தது 310 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டிடம் கட்டும் உரிமையாளர்கள் வேலையை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதையடுத்து பல்வேறு தரப்பிரனரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மணல் வியாபாரம் செய்யும் டிராக்டர் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘மணல் எடுக்க பெர்மிட் வாங்குவதற்கு அதிகாரிகள் அதிகமாக பணம் கேட்கின்றனர். அதனால்தான் மணல் விலையை உயர்த்தியுள்ளோம்’ என்றார்.
சமூக ஆர்வலர் முகைதீன் இபுராகிம் கூறுகையில், ‘அதிகாரிகள் பெர்மிட் வழங்குவதோடு சரி அதை எப்படி பயன்படுத்துகின்றனர் என்று பார்ப்பதில்லை. ஒவ்வொரு மணல் வியாபாரியும் பெர்மிட் பேப்பரில் தேதி நேரம் குறிப்பிடாமல் மணல் அள்ளுகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் வருவது தெரிந்தால் தேதி நேரத்தை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இப்படி ஒரு பெர்மிட் பேப்பரை கையில் வைத்து கொண்டு பலமுறை மணல் அள்ளுகின்றனர். இது அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. இதனால் அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் நிலைமையை கருத்தில் கொண்டு மணல் விலையை குறைப்பதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.