Friday, July 22, 2011

கீழக்கரை கல்லூரியில் பயின்ற மாணவர் இந்திய கப்பல் படை அதிகாரியாக தேர்வு !

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கப்பல் படை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 2004 முதல் 2007 வரை மெரைன் பிரிவில் படித்து தேசிய மாணவர் படையின் கப்பல் பிரிவு மாணவராக இருந்த அருண்குமார் இந்திய கப்பல் படை பிரிவில் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.

அருண்குமார் கூறுகையில் தேசிய மாணவர் படையின் கப்பல் பிரிவில் பெற்ற பயிற்சிகள் எனது தேர்வுக்கு மிகவும் உதவியாக இருந்ததாக கூறினார். தற்போது இவர் கேரளாவில் உள்ள எழுமாலா அடிப்படை பயிற்சி பள்ளியில் பயின்று வருகிறார்.இவரை முகம்மது சதக் டிரஸ்ட் தலைவர் ஹமீது அப்துல் காதர் இயக்குநர்கள் யூசுப் மற்றும் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

1 comment:

  1. தவாழ்த்துக்கள் அருண் ....கல்லூரியில் படித்த மாணவனை அரசு உத்தியோகத்தில் வேலை செய்ய துண்டிய நிர்வாகத்துக்கு தன் சமுதாய மாணவர்களையும் , தன் ஊரை சார்ந்தே மாணவர்களையும் துண்டவில்லையே........ ஏபோ திருந்துமொ இந்த ஊரும் இந்த சமுதாய மக்களும் .......

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.