கீழக்கரை அனைத்து ஜமாத் சார்பில் பத்திரபதிவு துறை தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கீழக்கரை நகரில் கடந்த பல வருடங்களாக,வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்தமாக இடம் பெற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளீர்கள் என்பதை அறிந்தோம்.மேற்படி கட்டிடத்திற்கு கீழக்கரை நகரில் இருந்து 2 கிமீ தொலைவில் மருதன் தோப்பு என்ற இடத்தில் இடம் பெற்று கட்டிடம் கட்ட இருப்பதை அனைத்து பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்படி இடம் பெண்கள் மற்று வயதானவர்கள் சென்று வருவதற்கு பாதுகாப்பற்றது என்பது அனைத்து மக்களின் எண்ணமாகும்.
அந்த இடத்தில் பத்திர பதிவுக்கு தேவையான எந்த பொருள் வேண்டுமென்றாலும் அதை பெறுவதற்கு கீழக்கரை நகருக்குள்தான் வர வேண்டிய சூழல் உள்ளது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து புதிதாக கட்ட உள்ள சார்பதிவாளர் கீழக்கரை நகருக்குள் அமைத்திட ஆவன செய்யுமாறு கேட்டு கொள்வதோடு அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.
இது குறித்து சமூக நல ஆர்வலர் குத்புதீன் ராஜா கூறியதாவது,
கீழக்கரை நகருக்குள் இருந்த மின் கட்டண வசூல் மையத்தை ஊருக்கு வெளியே கொண்டு சென்றதால் இன்று வரை பொதுமக்கள் சிரமமடைந்து வருகிறார்கள்.தற்போது பத்திர அலுவலகத்தையும் ஊருக்கு வெளியே அமைத்தால் கீழக்கரை பகுதி மக்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தி விடும்.
ஊருக்கு வெளியே திறக்க வேண்டிய மதுபான கடைகளை மட்டும் ஒன்றிர்க்கு மூன்றாக கீழக்கரை நகருக்குள் திறக்கும் அரசாங்கம் மக்களுக்கு தேவையான அலுவலகங்களை கீழக்கரை நகருக்கு வெளியே எடுத்து செல்லும் காரணமென்ன?
இது போன்ற முக்கிய அலுவலகங்களை உள்ளூர் மக்களின் கருத்து கேட்காமல் வெளியே அமைக்க முயல்வது கண்டிக்கதக்கது.உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.