
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூதி கிராமத்தில் தான் வளர்த்து வந்த ஆடுக்கு உணவு வைக்க சென்றார் அம்சவல்லி(40),அச்சமயத்தில் பலத்த இடியுடன் , மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அம்சவல்லி இறந்தார். இந்நிலையில் இவ்விபத்தில் அவர் வளர்த்த ஆட்டு குட்டியும் அவர் அருகிலேயே உயிரிழந்தது.தினமும் வளர்ப்பு ஆடு சாப்பிட்ட பின் தான் தான் அம்சவல்லி உணவு அருந்துவாராம் சாவிலும் கூட தனது வளர்ப்பு ஆட்டு குட்டியை பிரியாமல் உயிரிழந்தது அப்பகுதி மக்களை மன வேதனையில் ஆழ்த்தியது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.