கீழக்கரை, ஆக. 6: கீழக்கரை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில், பல கிணறுகள் மற்றும் ஊருணிகள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கீழக்கரையில் 25 ஆண்டுகளுக்கு முன் 95 பொதுக்கிணறுகள், 10 ஊருணிகள் இருந்தன. கிணற்றுக்கு அருகே வீடு, கோயில், மசூதி, பள்ளிகள் கட்டுபவர்கள் அருகே உள்ள பொதுக் கிணற்றையும், ஊருணியையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து கட்டிவிடுகின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுக்கிணறுகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நில மோசடி வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி ஆணையர் போஸ் கூறியது: கீழக்கரையில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்பு சம்பந்தமாக ராமநாதபுரம் வட்டாட்சியருக்குக் கடிதம் அனுப்பி உள்ளோம்.
அது சம்பந்தமாக, கீழக்கரைக்கு வரும்போது நில அளவையர்கள் மூலம் கிணறுகள் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு முறையான நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ரியாசுதீன் கூறுகையில் , நடவடிக்கை வரவேற்கதக்கது. அதே சமயம் ஒரு சிலர் இதை காரணமாக வைத்து மிரட்டி பணம் பறிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.