Saturday, August 27, 2011

பள்ளி வேன் - லாரி மோதல் ! கீழக்கரை மாணவர்கள் ,ஆசிரியை உள்பட 8பேர் காயம்








































கீழக்கரை நுழைவு வாயில் அருகில் பள்ளி வேனும் செங்கல் லாரியும் மோதி கொண்டதில் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் கீழக்கரையை சேர்ந்த மாணவர்கள் முகம்மது பர்ஹான்(8),லிங்கேஸ்வரன்(9),ரஹீம்(8), ரிபாத்(10) முஹைபீர்(16),ரபீக்(13) ஆகிய மாணவர்களும் ஆசிரியை ஹசீபா(21) ராமநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் முருகன்(40), ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் உதவியுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


இது குறித்து இப்பகுதியை சேர்ந்த இப்ராகிம் கூறுகையில்,இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.சிறுவர்களும் வாகனத்தை இயக்குகின்றனர். ஓட்டுநர்கள் பெரும்பாலானோருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை மேலும் ,தாறுமாறாக வாகனத்தை இயக்குவது , அதிக வேகத்தில் ஓட்டுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்

1 comment:

  1. நல்லம் பெற இறைவனிடம் துவா செய்கிறான் !!!

    முக்கியமாக : ஓட்டுனர் முருகன் அவர்களுக்கு என் நன்றியும், துவாஉம பலி இல்லாமல் , சிறு காயத்தோடு பிள்ளைகளை தப்பிகவைத்தே மிக்க பெரிய விசயம் ......தங்களும் நலம் பெற வாழ்த்துகள் சஹோதர !!
    இறைவனுக்கு நன்றி !!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.