கீழக்கரை அருகே முள்ளுவாடி செல்லும் சாலை அருகே ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கீழக்கரை - ஏர்வாடி சாலையில் கீழக்கரை நோக்கி பைக்கிலும், புல்லந்தையை நோக்கி ஆட்டோவிலும் சென்று கொண்டிருந்தனர்.
இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பைக்கில் சென்ற கீழக்கரையை சேர்ந்த அல்லாபிச்சை மகன் அமீன்(20) ,ஆட்டோவில் சென்ற புல்லந்தையை சேர்ந்த இருவர் உள்பட3 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.