கீழக்கரை அருகே ஸ்ரீநகர் என்ற இடத்தில் அமுதா பாலு என்பவர் நான்கு குடிசைகள் அமைத்து வாடகைக்கு கொடுத்திருந்தார். வசந்தா, ராஜா, ரத்தினவள்ளி ,குமார் ஆகியோர் நான்கு குடிசையில் குடியிருந்து வந்தனர்.இந்த குடிசைகளில் நேற்று நடந்த தீ விபத்தில் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்து ரூ2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது. இதில் பாதிக்கப் பட்டவர்களை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் உடனடியாக நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கி கீழக்கரை தமுமுக சார்பாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். அவருடன் கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், முஸ்தகீன், பக்கர் மாவட்ட பொருளாளர் முஜீபு ரகுமான் ஆகியோர் வந்திருந்தனர்.
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வின் உடனடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாரட்டினர்.
இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் முக்கிய பிரமுகர் கீழை ஜமீல் கூறியதாவது, இதுவரை பணியாற்றிய எம்.எல்.ஏக்களில் மிகச் சிறப்பான பணியினை சகோதரர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் செய்து வருகிறார்கள். அல்லாஹ் அவர்களது பதவி காலம் முழுவதும் இதே சுறுசுறுப்பினை வழங்கி பணியாற்ற உதவி செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.