Wednesday, August 24, 2011

இஸ்லாமியர்களுடன் என்றென்றும் நட்பு தொடரும் ! கீழக்கரையில் சரத்குமார்.எம்.எல்.ஏ உறுதி !




கீழக்கரை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சி ரோட்டரி சங்க தலைவர் செய்யது இப்ராகிம் தலைமையில் இன்று மாலை கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் .எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது,
இஸ்லாமியர்களுடன் நீண்ட காலமாக எனக்கு நெருங்கிய நட்பு உள்ளது . அது என்றென்றும் நீடிக்கும் ,நிலைத்திருக்கும் .மேலும் எனக்கு கீழக்கரையில் பாக்கர் உள்பட நெருங்கிய நண்பர்கள் பலர் உள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இப்ராகிம்,மேல்நிலை பள்ளி தாளாளர் சாதிக்,ரோட்டரி சங்க செயலாளர் சுப்பிரமணியன்,பட்டயத்தலைவர் அலாவுதீன்,டாக்டர் ஜவாஹிர் ஹீசைன்,அ.இ.ச.ம.க மாவட்ட செயலாளர் அப்துல் பாசித்,நகர் செயலாளர் பந்தே நவாஸ்,மாவட்ட தலைவர் சுப.கோவிந்த்,பொருளாளர் பூமிநாதன்,திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ஆனந்த்,மற்றும் நகர் பொருளாளர் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சரத்குமார் வருகையை முன்னிட்டு டி.எஸ்.பி முனியப்பன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.





3 comments:

  1. ஏம்ப்பா ஒங்கலுக்கு வேற வேளாயே கிட்டாயதா .......... மூத்திரம் பேன் துட்டு தொலிச்சி வுட்டு போறரவனுக்கு தொப்பியே போட்டு நோம்பு காஞ்சிய குடுக்குறீன்களே, இந்த பணத்த உன்மயான நோன்பாலிக்கு செலவழிச்சா நான்மாயாவது கிடைக்கும் ............
    உங்களெ திருத்தவே முடியாது!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. ஏசப்பா கோடான கோடி நன்றி ஏசப்பா.................
    கோடான கோடி நன்றி ............

    ReplyDelete
  3. பெயரிள்ளதவருக்கு .....உங்களுடைய கருத்து வரவேற்க தக்கது ஆனால் தங்கள் உபயோக்கும் வார்த்தைகள் தவறானது .......

    இவர் இதனால் இஸ்லாம்மை பற்றி சிறிதாவது தெரிய வாய்ப்புகள் வரும் ...
    நம் சமுதாயத்தை பற்றி தவறாக சித்தரிக்கும் செய்திகளால் வரலாறு மற்ற படுகிறது ......மற்று மதத்தினர் தொப்பி போடுவதினால் மார்க்கம் ஒன்னும் மதிப்பு குறையாது அவருடைய என்னத்தை பொருத்து இறைவன் மனமாற்றம் கொடுப்பான் ......தங்கள் மேல் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.