Tuesday, August 23, 2011

காரைக்குடி ,கீழக்கரை வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் பாதை ! அப்துல் ரஹ்மான் எம்பியிடம் கோரிக்கை மனு !காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். காரைக்குடி-தூத்துக்குடி வரை அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே நடந்தது. ஆயத்தப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இப்பகுதிகளுக்கு ரயில் பாதை என்பது கனவாகி விடுமோ என்று மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன் என்பவர் மே மாதம் 19ல் தகவல் உரிமை சட்டம் முலம் இத்திட்டம் குறித்த நிலையை அறிய கேட்டதின் பேரில் புதிய ரயில் பாதை பணிகளின் நிலை குறித்து ரயில்வே துறை அவருக்கு அனுப்பிய கடிதத்தில், கீழக்கரை வழியாக காரைக்குடி-கன்னியாகுமரி ரயில் பாதை சர்வே முடிந்த நிலையில் இதன் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய வழித்தட வரை படம் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இப் பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து ரயில்வே போர்டுக்கு அனுப்பப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது இத்திட்டம் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான்.அவர்களிடம் கீழக்கரை ஹமீது யாசின் www.keelakaraitimes.blogspot.com மற்றும்www.keelakarai.in,www.keelakarai.com ஆகிய வலைத்தளங்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுத்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அப்துல் ரஹ்மான்.எம்.பி உறுதியளித்தார்

6 comments:

 1. என்ன பயன் ஊர்மக்களே ?????
  நிக்கள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கின்றீர் ....எதற்கு முடியாத காரியத்தை திரூம்ப திரும்ப செய்து கொண்டு இருகின்றிர் ??????
  அப்படி புகைவண்டி அமைத்தால் தங்கள் ஊரில் உள்ளவர்ஹல் இங்கு வந்து வேலைய பக்க பாபங்கள ?????

  அதும் தி மு க MP டைய ??? sorry முஸ்லிம் லீக்குடைய ????....
  28 வருடம் வெளிநாட்டில் இருந்தவருக்கு எப்படி இந்தியாவில் உள்ள நம்சமுதயத்தை பத்தி தெரியும் .....இதற்கு பதில் அவர் வளைகுடாவில் Mp யஹா இருந்துகிலம் !!!!

  விடிக்க தெரியாத ஊரும் மக்களும் !!!!

  ReplyDelete
 2. 28 வருடம் என்று வளைகுடாவில் எம்பி இருந்தார் என்ற தகவலுடன் எழுதுவதிலிருந்து நீங்கள் யார் என்பதை ஊகிக்க முடிகிறது. உங்களுக்கு தனிபட்ட முறையில் அப்துல் ரஹ்மானுடன் வெறுப்பு இருந்தால் அதை இதில் காட்ட வேண்டாம்.
  பிரச்சினைகளை சமுதாய பார்வையுடன் அணுகுங்கள்.

  வஸ்ஸலாம்,
  ஹமீது ரஹ்மான்

  ReplyDelete
 3. 28 வருடம் என்று வளைகுடாவில் எம்பி இருந்தார் என்ற தகவலுடன் எழுதுவதிலிருந்து நீங்கள் யார் என்பதை ஊகிக்க முடிகிறது. உங்களுக்கு தனிபட்ட முறையில் அப்துல் ரஹ்மானுடன் வெறுப்பு இருந்தால் அதை இதில் காட்ட வேண்டாம்.
  பிரச்சினைகளை சமுதாய பார்வையுடன் அணுகுங்கள்.

  வஸ்ஸலாம்,
  ஹமீது ரஹ்மான்

  ReplyDelete
 4. திரு ஹமிட் ரகுமான் அவர்களே உங்கள் மேல இறைவனின் சாந்தி உண்டாகட்டும் ....நான் தங்கள் நினைபதுபோல் நான் கட்சி சார்ந்தே இயக்கத்திஇல் இல்லை நண்பரே !!!

  சமுதாய பறை உள்ளத்தினால் தான் முதல் பத்தியில் குறிபிட்டு உள்ளனன் .......
  இவரிடம் அகத பொழப்புக்கு மனுகுடுப்பது பொறுக்கமுடியவில்லை ...நம் சமுதாயத்தை பற்றி அவதுரை பரப்புகின்ற சினிமாவை கண்டித்து இப்தார் நிகழ்சிக்கு வருகை தரும் சினிமாக்காரர் மற்றும் மண்புமிகும் தென்காசி அடமன்ற உறுபினர் சரத் குமார் இடம் மனுகுடுதிருதல் வராஎற்று இருபேன்.....தங்கள் பயானம்,புகழ் காமெடி,வானம் படம் பார்த்திர ????
  பாருங்கள் அப்பறம் தெரியும் !!!!
  வருத்தமாக உள்ளது நண்பரே அதுநாள் தான் கருது தெரிவித்து உள்ளன்

  ReplyDelete
 5. அப்துல் ரஹ்மானின் பணிகள் உங்களுக்கு தெரியுமா நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்து அவரைஅறிவேன். உங்கள் கருத்துகள் குழப்பமானவையாக உள்ளது.வேண்டுமென்றே நீங்கள் எழுத்துக்களை தவறாக எழுதுகிறீர்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. இவ்வளவு எழுதும் நீங்கள் உங்கள் பெயரையும் எழுதலாமே.பிறகு நீங்கள் எழுதுவது சரியா ,தவறா என்ற முடிவுக்கு வரலாம் .ஏனென்றால் துவேஷத்தை வளர்த்து முஸ்லீம் சமுதாயத்தினர் போல் நடித்து நமது சமுதாயத்தில் குழப்பம் செய்வதற்காக நிறைய ஆட்கள் புணை பெயரில் எழுதுகிறார்கள்.

  வஸ்ஸலாம், ஹமீது ரஹ்மான்

  ReplyDelete
 6. இந்த பெயருக்கு என்ன குறை ஹமிட் அவர்ஹலே ????
  இந்தே பெயர் தன நம் சமுதாயத்தை குற்றவாளி இல்லை என்று இந்த இந்திய தேசத்துக்கும் , உலகத்துக்கும் ஏடுத்து சொன்னது....அவர்மட்டும் இன்று வரைக்கும் இருந்துதல் பாசிசவாதிகள் குற்றவளிகுண்டில் இருந்திருப்பர் !!!!
  நம் சமுதாயம் திப்பு சுலதனைய மறந்த சமுதாயம் ..இவரை மாறாக எதனை நாள் சஹோதர ??? அவர் நினைவஹா தன் இந்த பெயர் ..இவர் பெயரில் வருபவர் இறைவனின் அணையஹா குழப்ப மாட்டார்,குழம்பியவரும் அல்ல....

  தங்கள் என்னை தபஹா நினைத்து இருகிரிர் !!!
  திரு அப்துல் ரகுமானை பத்தி தவறான எண்ணம் எனக்கு இல்லை
  என்னுடைய ஆதங்கம் ஆஹாத பொழப்புக்கு மனுகுடுத்து தன் சஹோதர !!!
  சமுதாயத்தை பற்றி தவரஹா சித்தரிக்கும் சினிமாவை பற்றி ஏன் மனு குடுக்கவில்லை உங்கள் ஊர் சார்பாக சரத் குமார் அவர்களிடம் /??? அவர் முன்னால் சினிமா சங்க தலைவர் இல்லையா ????......இப்ட்டருக்கு வர வில்லைய ??
  இதுதான் என்னுடை ஆதங்கம் மற்ற படி ஒனும் இல்லை ...

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.