Thursday, August 11, 2011

கீழக்கரை மருத்துவமனையில் கலெக்டர் அதிரடி ! பொதுமக்கள் பாராட்டு


கீழக்கரைக்கு இன்று காலை திடீர் விசிட் அடித்த மாவட்ட கலெக்டர் அருண்ராய் நகராட்சிக்கு வந்தார். அங்கு நடைபெற்று கொண்டிருந்த அலுவலக பணிகளை பார்வையிட்டார் பிறகு நகராட்சி செயல் அலுவலர் போஸை உடன் அழைத்து சென்று அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள உள் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள கழிப்பிடங்கடங்களை பார்வையிட்டு அதிருப்தி தெரிவித்தார் பின்னர் ஊழியர்களை அழைத்து சரியாக வேலை செய்யவில்லை என்றால் வேறு ஊருக்கு மாற்றி விடுவேன் என்று எச்சரித்தார்.மேலும் நோயாளிகளுக்கு சமைத்து வைத்திருக்கும் உணவுகளை பார்வையிட்டு ,சாப்பிட்டு சோதனை செய்தார்.முட்டை கொடுப்பதில்லையா என்று கேட்ட பின் அவித்த முட்டையை காண்பித்த்னர் அதில் ஒரு முட்டையை சோதனைக்காக பார்வையிட்ட பின் பழைய முட்டையாக இருப்பதை கண்டு கோபம் கொண்டு ஏ ன் முட்டை இந்த கலரில் உள்ளது என்று கேட்டு தலைமை மருத்துவ அதிகாரியை அழைத்து நீங்கள் பார்ப்பதில்லையா என்று கேட்டு இனிமேல் இப்படி நடந்தால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

கலெக்டரிடம் திடீர் விஜயம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,

( தோணி பாலம் அருகில் குப்பை கொட்டும் இடத்தில் கோர்ட் உத்தரவின் படி சுற்று சுவர் கட்டுவதற்கு தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து பணியை செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர் ஆகையால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று 15-07-11 அன்று கீழக்கரை காவல் நிலையத்தில் நகராட்சி சார்பாக புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் இல்லை அதேபோல் புதிய பஸ் நிலையம் அருகில் கழிவு நீர் தேங்குவதை தடுப்பதற்கு புதிய குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இது குறித்தும் நகராட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது )

இரணடு புகார்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்தேன் இது குறித்து எஸ்.பி யிடம் பேசி பாதுகாப்புடன் இரண்டு பணிகள் நடப்பதற்கும் ஆவண செய்யப்படும் என்றார்.

மாவட்ட கலெக்டரின் ஆய்வு பணி குறித்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பட விளக்கம் : கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரப்படும் முட்டையை ஆய்வு செய்து தலைமை மருத்துவ அதிகாரியை எச்சரிக்கை செய்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.