Tuesday, May 3, 2011

கீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் ! இளைஞர்கள் கோரிக்கை





மூர் ஹசனுதீன்

கீழக்கரையில் பல்வேறு அணிகள் சார்பில் கிரிக்கெட்விளையாட்டு சூடு பிடித்துள்ளது.சிறந்த வீரர்களை உருவாக்க இங்கு கிரிக்கெட் பயிற்சி மையம் அமைக்க வேண்டு்மென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுமுறை காலம் துவங்கிவிட்டதால் கீழக்கரையில் மாணவர்கள் ,இளைஞர்கள் ஏராளமானோர் கிரிக்கெட் விளையா்ட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.மார்னிங் ஸ்டார்,சவுத் ஸ்டா்ர் என்று ஐபிஎல் ரேஞ்சுக்கு தங்களி்ன் அணிகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளனர்.இந்த அணிகளில் சிலர் 130கிலோ மீட்டர் வேகத்தில் துல்லியமாக ,நேர்த்தியாக பந்து வீசுபவர்களு்ம் உள்ளனர்.ஆனா்ல் இவர்களுக்கு முறையான பயிற்சியில்லாததால் வெறும் பொழுது போக்கிற்காக விளையாடி செல்கின்றனர்.இப்பகுதியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைத்தால் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்குதெருவை சேர்ந்த அசாரூதீன் கூறுகையில் , இப்பகுதியில் முண்ணனி வீரர்களை கொண்டு 15 நாள் ,30 நாள பயிற்சி முகாம்கள் நடத்தினா்ல் இப்பகுதியிலிருந்து சிறந்த வீரர்கள் உருவாகி வருவார்கள் என்றார்.
இது குறித்து மூர் விளையாட்டு கிளப் தலைவர் ஹசனுதீனிடம் கேட்ட போது, நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசளித்து ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் .மேலு்ம் அரசின் விளையாட்டு துறை ஆதரவளித்தால் நாங்களே முண்ணனி கிரிக்கெட் வீரர்களை அழைத்து வந்து இலவச பயிற்சி முகாம்களை நடத்த தயராக உள்ளோம் என்றார்.,





Monday, May 2, 2011

கீழக்கரை அருகே ஆட்டோ - டூ வீலர் மோதல் !

4 நாட்களுக்கு முன் நடைபெற்ற விபத்தில் சேதமான வாகனங்கள்

கீழக்கரை முள்ளுவாடி அருகே ஆட்டோ மற்றும் டூ வீலர் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் காயமடைந்தந்தனர். காயமடைந்தோர் விபரம் கீழக்கரையை சேர்ந்த பைக்கில் பயணம் செய்த இருதயராஜ்(36),சி.இருதயராஜ்(46).ஆட்டோவில் பயணித்த ஏர்வாடியை சேர்ந்த சுல்தான்(65),மாயகுளத்தை சேர்ந்த அலிப்தீன்(20),இப்ராகி ஷா(28) ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகின்றனர்.

கீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம பைக் அகற்றப்பட்டது


ஒரு மாதத்திற்கு மேலாக சின்னக்கடை தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பைக்



சின்னக்கடை தெருவிலிருந்து கீழக்கரை காவல் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்ட பைக்


கீழக்கரை மே.2. கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு மாதத்திற்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மர்ம பைக் கீழக்கரை போலீசாரால் அகற்றப்பட்டது. டயர்கள் கழற்றப்பட்டு எலும்பு கூடு போல் காட்சியளித்த இந்த பைக் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இது குறித்து தெற்கு தெருவை சேர்ந்த சேகு சதக் இப்ராகிம் கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக இந்த பைக் நிறுத்தப்பட்டிருந்தது.இப்பகுதியில் உள்ளோர் தங்களுடையது இல்லை என்று கூறி விட்டார்கள் என்றார்.

இது குறித்து டி எஸ் பி முனியப்பனிடம் கேட்ட போது, இந்த டூ வீலர் யாருடையது என்பது பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது போன்று மர்மமான முறையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் தர வேண்டும் என்றார்

Sunday, May 1, 2011

கீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை !

கீழக்கரை,
கீழக்கரையில் கடைகளில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கீழக்கரையில் பெரும்பாலான கடைகளில், தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஐஎஸ்ஐ தர முத்திரையில்லாதது மட்டுமின்றி, குடிநீரும் தரமற்றதாக உள்ளது. குடிநீரை பருகினால், உடலுக்கு பல்வேறு நோய் வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கீழக்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘கீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் தாராளமாக விற்பனையாகிறது. இதனை வாங்கி பருகுவோர், நோய் வரும் அபாயம் உள்ளது. வள்ளல் சீதக்காதி மணிமண்டபம், சதக்கத்துல்லாஅப்பா தர்ஹா ஆகியவற்றை காண கீழக்கரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களும் தாகம் தணிக்க இங்குள்ள கடைகளில் குடிநீர் பாக்கெட் வாங்கி பருகி சிரமமடைகின்றனர். தவிர காலாவதி உணவு பாக்கெட்டுகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.
மக்களின் நலன்கருதி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக களமிறங்கி ஆய்வு நடத்த வேண்டும்‘ என்றார்.
களமிறங்குமா சுகாதாரத்துறை?

கீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்

கீழக்கரை, :
கீழக்கரையில் புறா பந்தயம், மே 4ம்தேதி துவங்குகிறது. இதையொட்டி முன்னோட்ட பயிற்சி போட்டிகள் நேற்று நடந்தன.
கீழக்கரை பகுதியில் புறாக்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. கேபிசி புறா கிளப் சார்பாக மே 4ம்தேதி முதல் புறா பந்தயம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக போட்டி பங்கேற்பாளர்கள் நேற்று கீழக்கரையில் புறாக்களுக்கு பயிற்சி போட்டியை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன. வீட்டுக்கு 2 புறா வீதம் பறக்கவிடப்பட்டது. வெளியே பறக்க விடும் புறாக்களில், நீண்ட நேரம் பறந்து வீடு திரும்பிய புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கேபிசி கிளப் தலைவர் சபீயுதீன், செயலாளர் வலம்புரி செய்யது இப்ராகிம் கூறுகையில், ‘மே 4ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஒரு வாரம் கீழக்கரையில் புறா போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்கவுள்ளன. புறாக்கள் உள்ளூரிலேயே பறக்கவிட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு புறாவுக்கும், ஒரு நடுவர் நியமிக்கப்படுவர்‘ என்றனர்.
புறாக்கள் வளர்க்கும் ஜலால் கூறுகையில், ‘என் வீட்டு மொட்டை மாடியில் புறாக்கள் வளர்க்கிறேன். கூண்டுகள் அமைக்காமல் புறாக்களை அதன் போக்கிலேயே சுதந்திரமாக விட்டு விட்டேன். பச்சை பயறு, கோதுமை, கம்பு ஆகியவற்றை புறாக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். புறா பந்தயத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்‘ என்றார்.

உயரே பறக்குது கறிக்கோழி'

கீழக்கரை,
ஆழ்கடல் மீன்பிடி தடை காரணமாக வரத்து குறைந்ததால், மீன் பிரியர்களின் கவனம் கறிக்கோழியை நோக்கி திரும்பியுள்ளது. கிராக்கி காரணமாக, கீழக்கரை பகுதியில் கறிக்கோழி விலை எகிறி, கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆழ்கடல் மீன் பிடிப்புக்கான தடை அமலில் உள்ளதால், மீன் பிரியர்களின் கவனம் கோழி இறைச்சியை நோக்கி திரும்பியுள்ளது. கறிக்கோழிக்கு கிராக்கி அதிகரித்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கீழக்கரை பகுதியில் சில்லரை விலையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு கிலோ உரித்த கோழி தற்போது ரூ.140லிருந்து ரூ.160 வரை விற்பனையாகிறது. தோல் நீக்கப்பட்ட கறி இன்னும் அதிக விலையில் விற்கப்படுகிறது. மீன்பிடி தடை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக கோடைகாலத்தில் கோழி இறைச்சி நுகர்வு குறையும். ஆனால் மீன் பிடி தடை காரணமாக தற்போது, மாவட்டம் முழுவதும் கறிக்கோழியின் தேவை அதிகரித்துள்ளது. கறிக்கோழி விற்பனையும், விலை உயர்வும் கடைக்காரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், கடும் விலை உயர்வு நுகர்வோருக்கு சிரமத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கீழக்கரை தெற்குத்தெருவை சேர்ந்த சாவன்னா கூறுகையில், ‘இந்த விலையேற்றத்தால் சாமானியர்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கீழக்கரையில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கோழி இறைச்சி கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் ஒரு விலை வைத்து விற்கிறார்கள். அனைத்து கடைகளிலும் மார்க்கெட் விலையை நிர்ணயித்து ஒரே விலையில் விற்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்! கீழக்கரையில் விபத்து அபாயம்


கீழக்கரை,
கீழக்கரையில் லைசென்ஸ் பெறாதவர்கள், சிறுவர்கள் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச்செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கீழக்கரையில் அறுநூறுக்கும் அதிக ஆட்டோக்கள், இருநூறுக்கும் அதிக மினிவேன்கள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதனை இயக்கும் டிரைவர்களில் சிலரிடம் லைசென்ஸ் இல்லை. ஒருபுறமிருக்க, கோடை விடுமுறையையொட்டி சிறுவர்கள் பலர் ஆர்வத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். ஆட்டோ ஓட்ட அதிக சிரமமில்லை என கருதி, கீழக்கரையில் சாலைகளில் தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். தவிர, குறுகலான சந்து, வீதிகளிலும் புகுந்து அசுரவேகத்தில் செல்வது, பாதசாரிகளை அச்சுறுத்துகிறது.
தவிர, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இயங்கி வந்த மினி வேன்கள், கோடை விடுமுறையையொட்டி உள்ளூர் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதனை ஓட்டும் சிலர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இதுபோன்ற விதிமீறல்கள் விபத்து அபாயத்தை உருவாக்கியுள்ளது. அசம்பாவிதம் நேரும் முன்பு, போக்குவரத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மினி வேன் டிரைவர் காதர் கூறுகையில், ‘ஓட்டுநர் உரிமம் இல்லாத சிலர், பொழுது போக்குக்காக வாடகை மினி வேன் இயக்குகிறார்கள். இவர்களால் முறையாக லைசென்ஸ் பெற்றுள்ள எங்களை போன்ற ஓட்டுனர்களுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது. விதிமீறுவோர் மீது நடவடிக்கை வேண்டும்‘ என்றனர்.
கீழக்கரையை சேர்ந்த ஹசன் அப்துல் கூறுகையில், ‘வாகனம் ஓட்ட தகுதியான வயதை எட்டாதவர்களும், லைசென்ஸ் பெறாதவர்களும் வாகனங்களை இயக்குவது அச்சத்திற்குரியதாக உள்ளது.
போக்குவரத்து போலீசார் பாராமுகமாக இருப்பதே இதுபோன்ற விதிமீறல்கள் அதிகரிக்கவும், விபத்து அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது‘ என்றார்.

நகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோம் ! தமுமுக முஜீப்



கீழக்கரை.மே.1

தமுமுகவை சேர்ந்த கீழக்கரை பிரமுகர் முஜீப் கூறுகையில் ,

இன்சா அல்லாஹ் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெறுவார்.

கீழக்கரையில் தமுமுக பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இதனால் இப்பகுதி மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்று வருகிறது எனவே இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தலில் கீழக்கரை நகராட்சியை தமுமுக கைப்பற்றும்.இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனை





கீழக்கரை.மே.1.கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஆயிசத் அப்சா பிளஸ் 1 தேர்வில் திக மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளிகளில் முதல் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்ட அளவில் 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவிக்கு மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி ராதாகிருஸ்ணன் பரிசு வழங்கி பாராட்டினார். மேலு்ம் இஸ்லாமியா பள்ளிகளி்ன் தாளாளர் முகைதீ்ன் இப்ராகிம் மற்று்ம் ஆசிரிய ,ஆசிரியைகள் மாணவி ஆயிசத் அப்சாவை பாரட்டினர்.

டீயின் விலை ரூ1 ! அசத்தும் வியாபாரி !







கீழக்கரை.மே 1. தமிழகம் முழுவதும் டீயின் விலை குறைந்தது ரூ5க்கு விற்கபடுகிறது.இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்த மன்சூர்கான்(35) என்பவர் கீழக்கரை சாலை தெரு பகுதி தெருவோரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.இவர் கடையில் ஒரு டீ ரூ 1க்கு விற்பனை செய்து அனைவரை ஆச்சரியபடுத்துகிறார்.டீயின் சுவையும் நன்றாக உள்ளதாக கடைக்கு வருபவர்கள் கூறுகின்றனர்.இதனால் இவரின் கடையில் இடைவிடாத வியாபாரம் நடைபெறுகிறது. ஒவ்வொரு டீக்கும் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய அட்டை டம்ளரைத்தான் பயன் படுத்துகிறார் .

இது குறித்து இந்த ரோட்டோர கடையை நடத்தும் மன்சூர் கூறியதாவது, ஒரு லிட்டர் ரூ32க்கு வாங்கி அதில் 72டீ தயார் செய்கிறேன்.நாளொன்றுக்கு 700 டீ விற்பனையாகிறது.நான் தனியாளாக இருந்து செயல்படுவதால் எனக்கு செலவு அதிகமில்லை .நல்ல லாபமும் கிடைக்கிறது.பத்து நாளில் நஷ்டம் ஏற்பட்டு வியாபாரத்தை நிறுத்தி விடுவாய் என்று நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் தொடர்ந்து 4 மாதங்களாக வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்றார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த முஜிப் கூறுகையில். ரூ 1க்கு டீ என்ற போது முதலில் நம்பவில்லை.தற்போது நானும் இக்கடையின் ரெகுலர் கஸ்டமராகி விட்டேன் என்றார்.

Sunday, April 17, 2011

கீழக்கரையில் காஸ் சிலிண்டர் குவியலால் ஆபத்து


கீழக்கரை, ஏப்.17:
வீடுகளில் விநியோகிப்பதற்காக, கீழக்கரையில் குடியிருப்பு பகுதியில் மொத்தமாக குவித்து வைக்கப்படும் காஸ் சிலிண்டர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கீழக்கரை நகரில், 6 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஐஓசி டீலர் மூலம் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு, காஸ் நிரப்பிய சிலிண்டர்களை குடோன்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு பதிலாக குடியிருப்புகள் நிறைந்த தெருக்களில் மொத்தமாக ஏஜென்சியினர் இறக்கி விட்டு செல்கின்றனர். குறிப்பாக வீடுகள் நெருக்கம் மிகுந்த கீழக்கரை சின்னக்கடை தெரு சாலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலிண்டர்களை விநியோகித்து முடிக்க ஒரு வாரம் ஆகிவிடும். அதற்குள் அடுத்த சிலிண்டர்கள் கொண்டு வந்து அதே இடத்தில் அடுக்கி வைக்கப்படுகின்றன. எப்பொழுதும் இங்கே சிலிண்டர் குவியலை காணமுடிகிறது.
கேட்பாரற்று கிடக்கும் இந்த சிலிண்டர்கள் மீது அவ்வழியே செல்லும் வாகனங்கள் மோதி விட்டால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள இப்பகுதி மக்கள், இதுகுறித்து ஏஜென்சியினரிடம் வலியுறுத்தியும் பலனில்லை. குடோனை ஏற்பாடு செய்து, அங்கிருந்து சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்பகுதியில் கடை நடத்துவோர் சிலர் கூறுகையில், ‘கடந்த நான்கு வருடமாக இங்கேதான் காஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்படுகின்றன. பொதுவாக எந்தவொரு விபத்தும் நேரிடும் வரை விழிப்புணர்வு பிறப்பதில்லை. எனவே பெரும் ஆபத்து நேரிடும் முன்பு, குடியிருப்புவாசிகளின் நலன்கருதி, காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு குடோன் வசதியை ஏஜென்சியினர் ஏற்படுத்த வேண்டும்‘ என்றனர்.

Saturday, April 16, 2011

கீழக்கரை வாக்குசாவடி வாரியாக பதிவான வாக்குகள் விபரம்

கீழக்கரையில் 35 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மொத்த வாக்காளர்கள் எண்ணிகை 22 ஆயிரத்து 299 ஆகும். காலையிலிருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்குசாவடிகளில் பதிவான விவரம்:
வாக்குசாவடி எண் ஏவி25ல், வாக்களர்கள் எண்ணிக்கை 529. பதிவான வாக்குகள் 529. ஆண் 156 பெண் 178. ஏவி 26ல் வாக்காளர்கள் எண்ணிக்கை 685. பதிவான வாக்குகள் 521. ஆண் 247 பெண் 274. ஏவி27ல் மொத்த வாக்குகள் 1035. பதிவான வாக்குகள் 751. ஆண் 276 பெண் 475. ஏவி 28 மொத்த வாக்குகள் 141. பதிவானது 76. ஆண் 35 பெண் 41,ஏவி 29 மொத்த வாக்குகள் 423. பதிவான வாக்குகள் 219 ஆண் 56 பெண் 163. ஏவி 30ல் மொத்த வாக்குகள் 711. பதிவானது 358 ஆண் 133 பெண் 225. ஏவி 31ல் மொத்த வாக்குகள் 729 பதிவான வாக்குகள் 341 ஆண் 126 பெண் 215,ஏவி 32ல் மொத்த வாக்குகள் 670 பதிவான வாக்குகள் 523 ஆண் 178 பெண் 345, ஏவி 33ல் மொத்த வாக்குகள் 1038 பதிவான வாக்குகள் 413 ஆண் 139 பெண் 274, ஏவி 34ல் மொத்த வாக்களர்கள் 630 பதிவான வாக்குக்கள்320 ஆண் 112 பெண் 208.
ஏவி35ல் மொத்த வாக்காளர்கள் 611 பதிவான வாக்குகள் 342 ஆண் 126,பெண்216 ,ஏவி36ல் மொத்த வாக்களர்கள் 664 பதிவான வாக்குகள் 336 ஆண் 105 பெண் 231,ஏவி37ல் மொத்த வாக்காளர்கள் 384 பதிவான வாக்குகள் 177 ஆண் 68 பெண் 109,ஏவி38ல் மொத்த வாக்களர்கள் 587 பதிவான வாக்குகள் 256 ஆண் 90 பெண் 166,ஏவி 39ல் மொத்த வாக்குகள் 842 பதிவான வாக்குகள் 469 ஆண்166 பெண் 303,ஏவி40ல் மொத்த வாக்களர்கள் 695 பதிவான வாக்குகள் 367 ஆண் 129 பெண் 238,ஏவி41ல் மொத்த வாக்களர்கள் 735 பதிவானது 367 ஆண் 119 பெண் 248,ஏவி42ல் மொத்த வாக்களர்கள் 662 பதிவான வாக்குகள் 327 ஆண்112 பெண் 215 ,ஏவி43ல் மொத்த வாக்குகள் 535 பதிவான வாக்குகள் 334 ஆண் 133 பெண்201.
ஏவி 44ல் மொத்த வாக்குகள் 712 பதிவான வாக்குகள் 488 ஆண் 252 பெண் 236 ,ஏவி45ல் மொத்த வாக்குகள் 1454 பதிவான வாக்குகள் 1078 ஆண் 531 பெண் 545,ஏவி46ல் மொத்த வாக்குகள் 581 பதிவான வாக்குகள் 304 ஆண் 122 பெண் 182 ,ஏவி 47ல் மொத்த வாக்குகள் 567 பதிவான வாக்குகள் 313 ஆண் 115 பெண் 198 ,ஏவி 48ல் மொத்த வாக்குகள் 1013 பதிவானது 555 ஆண் 218 பெண் 337,ஏவி 49ல் மொத்த வாக்குகள் 564 பதிவான வாக்குகள் 389 ஆண் 167 பெண் 222,ஏவி 50ல் மொத்த வாக்குகள் 944 பதிவானது 597 ஆண் 246 பெண் 351,ஏவி 51ல் மொத்த வாக்குகள் 307 பதிவான வாக்குகள் 188 ஆண் 78 பெண் 110, ஏவி 52ல் மொத்த வாக்குகள் 744பதிவான வாக்குகள்409 ஆண்99 153பெண் 256.
ஏவி53ல் மொத்த வாக்குகள் 505 பதிவான வாக்குகள் 314 ஆண் 134 பெண் 180 ,ஏவி 54ல் மொத்த வாக்குகள் 708 பதிவான வாக்குகள் 354 ஆண் 135 பெண் 219, ஏவி55ல் மொத்த வாக்குகள் 944 பதிவான வாக்குகள் 483 ஆண் 290 பெண் 193,ஏவி 56ல் மொத்த வாக்குகள் 1303 பதிவான வாக்குகள் 842 ஆண் 308 பெண் 534 ,ஏவி 60ல் மொத்த வாக்குகள் 1054 பதிவான வாக்குகள் 801 ஆண் 409 பெண் 392,ஏவி 61ல் மொத்த வாக்குகள் 843 பதிவானது 637 ,ஏவி 62ல் மொத்த வாக்குகள் 695 பதிவான வாக்குகள் 509. சதவீதம் 68.

Wednesday, April 13, 2011

கீழக்கரையில் வாக்குபதிவு விறுவிறுப்பாக துவங்கியது




கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளில் வாக்குப்பதிவு துவங்கியது



கீழக்கரை சி.எஸ்.ஐ . பள்ளியில் வாக்குபதிவு துவங்கியது

Friday, April 8, 2011

கீழக்கரையில் ஜவாஹிருல்லாஹ் வாக்கு சேகரித்தார் !



கீழக்கரையில் சுகாதார சீர்கேட்டை சீர்படுத்துவேன் ! மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் பேட்டி






கீழக்கரை.ஏப்ரல்.-08.ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணியின் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரையில் பல் வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். பின்னர் கீழக்கரையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் வெற்றி பெற்றால் கீழக்கரையில் சுகாதார சீர்கேட்டை களைவேன்.பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்களை பதிக்க ஏற்பாடு செய்வேன்.சேது சமுத்திர திட்டத்தை மத்தி்ய காங்கிரஸ் அரசு முறையாக செயல்படுத்தாமல் வீணடித்து விட்டது.
இத்திட்டத்தினால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவாகவும்,மீனவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை மீனவர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.மத்திய அரசு அறிமுகபடுத்தியுள்ள கடற்கரை மேலான்மை திட்டம் மீனவர்களின் வாழ்வாதரத்தின் உரிமையை பறிக்கும் திட்டம் .இத்திட்டத்தினால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மீனவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பேன்.மிஸ்ரா கமிசன் ,சச்சார் கமிசன் அறிக்கைகளை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது.இஸ்லாமியர்களில் முதுகில் குத்தியது,துரோக, இழைத்தது காங்கிரஸ் அரசுதா்ன் காங்கிரஸ் அரசு சிறுபாண்மையினருக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை.பெரியபட்டணம் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியோ பெரியபட்டணம் என் தொகு்தி இல்லை என்று புறகணித்தார்.
நான் ஹசன் அலி போல் பொழுது போக்கு அரசியல்வாதி அல்ல பல்லாண்டு காலமாக மக்களுக்கான நல பணிகளி்ல் ஈடுபட்டு வருகிறேன். நான் வெற்றி பெற்றால் போதும்,போது்ம் என்று் சொல்லு்ம் அளவுக்கு இப்பகுயில் இருந்து பணியாற்றுவே்ன் என்றார்.பேட்டியின் போது அவருடன் அதிமுக நகர் செயலாளார் ராஜேந்திரன்,தமுமுக சிராஜுதின்,முஜிப்,ஹசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Thursday, April 7, 2011

கீழக்கரை பகுதியில் வாகன சோதனையால் பெண்கள் கடும் அவதி

கீழக்கரை பகுதியில் வாகன சோதனையால் பெண்கள் கடும் அவதி கீழக்கரை, ஏப்.7: கீழக்கரை பகுதியில், தொடரும் வாகன சோதனையால் முஸ்லீம் பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர். கீழக்கரையில் கோஷா அணியும் முஸ்லீம் பெண்கள், மளிகைப்பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யவும், மருத்துவ சிகிச்சை மற்றும் பிற அலுவல்களுக்கு ராமநாதபுரம் சென்று வருகின்றனர். இவர்கள், கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு வேன், ஆட்டோ, கார் ஆகிய வாடகை வாகனங்களை பயன்படுத்துகின்றனர். தற்போது தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் சாலையில் தொடர்ந்து வாகனச்சோதனை நடத்தப்படுகிறது. வாகனங்களில் இருக்கும் பெண்களை கீழே இறக்கி வாகனங்களை சோதனை செய்கின்றனர். இதனால் பெண்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். முஸ்லீம் கோஷா பெண்கள் வாகனத்தில் பயணிப்பதையே தவிர்த்து வருகின்றனர். இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகை வாகன ஓட்டுனர் காதர் கூறுகையில், ‘கடுமையான வாகன சோதனைகளால், முஸ்லீம் பெண்கள் வாகன பயணத்தையே தவிர்த்து வருகின்றனர். இம்மாதம் முழுவதும் எங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார். பெண்கள் பயணிக்கும் வாகனங்களில் நடைபெறும் சோதனைகளை சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும், அல்லது பெண் போலீசாரை சோதனை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை கலங்கரை விளக்கம் இணைப்பது குறித்து ஆராயப்படும். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்






ராமேஸ்வரம்&தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து கீழக்கரை, ஏப்.7: தேர்தலுக்கு பிறகு ராமேஸ்வரம்&தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார். ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் வாசன் நேற்று கீழக்கரை வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ராகுல் காந்தி 2 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரின் பிரசாரம் திமுக கூட்டணியின் அமோக வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். இளைஞர்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்படும். தேர்தல் முடிந்தவுடன் தூத்துக்குடி & கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். அதே போல் ராமேஸ்வரம் & தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும் இணைப்பது குறித்து ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் உறவு வலுப்பட, மக்கள் நலத்திட்டங்களை அதிகம் நிறைவேற்ற திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்‘ என்றார். பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி, காங். பிரமுகர்கள் வக்கீல் முனியசாமி, கீழக்கரை ஹமீதுகான், ஹசனுதீன், லாபிர், மீனவர் அணி தேவதாஸ், திமுக நகர் செயலாளர் பசீர் அகமது, முஸ்லீம் லீக் ஹமீது ரஹ்மான் பங்கேற்றனர். முன்னதாக கீழக்கரை எல்லையில் கூட்டணி கட்சிகள் சார்பில் வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கீழக்கரை 500 பிளாட் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலி வாக்கு சேகரித்தார்





கீழக்கரையில் மமக வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து எஸ்.எம் பாக்கர் பிரச்சாரம் செய்தார்





கீழக்கரையில் மமக வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து எஸ்.எம் பாக்கர் பிரச்சாரம் செய்தார்

கீழக்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை ஆதரித்து முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் பேசினார்


கீழக்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை ஆதரித்து முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் பேசினார்


சேது திட்டத்தை முடக்கிய ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்
கீழக்கரை, ஏப். 7:
சேதுசமுத்திர திட்டத்தை செயல்படவிடாமல் தடுத்த ஜெயலலிதாவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
ராமநாதபுரம் தொகுதி காங். வேட்பாளர் ஹசன்அலி, முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி பகுதிகளில் காதர்முகைதீன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார். ஆனால் கருணாநிதி வாடிய பயிரை மட்டுமல்ல வாடிய உயிரையும் கண்டு வாடுகிறார். அதனாலேயே மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினார். ஜெயலலிதா கோடநாட்டில் ஏழைகளுக்கு சொந்தமான நடைபாதையை அபகரித்தார். கருணாநிதி, தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தார். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டி: தமிழர்களின் பல்லாண்டு கனவான சேது சமுத்திர திட்டம் திமுக கூட்டணி அரசால் முழு வடிவம் பெற்று செயல்பட இருந்தது. ஜெயலலிதாவால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் தடுக்கப்பட் டுள்ளது.
சேதுசமுத்திரம் திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட் டிருந்தால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.

Monday, April 4, 2011

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் வேட்பாளர் ஹசன் அலி ஆதரவு கோரி பேசினார்.




கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் வேட்பாளர் ஹசன் அலி ஆதரவு கோரி பேசினார்.

ராமநாதபுரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் ! பாஜகவினர் பேட்டி !

கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தில் கர்நாடக‌ பாஜகவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர் ஏப். 4: ராமநாதபுரம் தொகுதி பாஜ., வேட்பாளர் துரைகண்ணனை ஆதரித்து கீழக்கரை, மாயாகுளம், புல்லந்தை, அதன் சுற்றுப்பகுதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாஜ கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர். இது குறித்து பெங்களூரு பாரதிய ஜனதா நகர் செயலாளரும், கவுன்சிலருமான தனராஜ் கூறுகையில், ‘கர்நாடக மாநிலத்திலிருந்து பாஜவினர் 3ஆயிரம் பேர், தமிழகத்தில் ஆதரவு திரட்ட வந்துள்ளோம். அதில் ஒரு பகுதியாக 75 பேர் அடங்கிய நாங்கள் ஒரு குழுவாக திருப்பத்தூர், திருமயம், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம். ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை முக்கிய கட்சிகளின் சார்பில் 3 முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகள் பிரிவதால் எங்கள் பாரதிய ஜனதா வேட்பாளர் துரை கண்ணன் அமோக வெற்றி பெறுவார் ‘ என்றார். அவருடன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கவுன்சிலர் பழனி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் ராஜூ, கீழக்கரை இந்து முன்னணி முன்னாள் அமைப்பாளர் தவசிமணி, புல்லந்தை கிளை தலைவர் இளையராஜா, பாரதிய ஜனதா கீழக்கரை நகர் தலைவர் முருகேசன் பங்கேற்றனர்.

ஏர்வாடியில் அவலம்! பட்டினியால் ப‌ரிதவிக்கும் மனநோயாளிகள் !


கீழக்கரை, ஏப்.4: ஏர்வாடியில் அனாதையாக விடப்படும் மனநோயாளிகள், உண்ண உணவின்றி பசியுடன் பரிதவித்து வருகின்றனர். அவர்களின் பசிபோக்கி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் ஏர்வாடி தர்காவில், மனநோயாளிகளை பராமரிக்க வழியின்றி அனாதையாக உறவினர்கள் தள்ளி விட்டு செல்லும் கொடுமை இன்றளவும் தொடர்கிறது. இவ்வாறு விடப்படும் மனநோயாளிகள் இருபதுக்கும் மேற்பட்டோர், நகரில் அனாதைகளாக, சுற்றித்திரிகின்றனர். பரிதாபத்திற்குரிய வகையில் திரியும் இவர்கள், கைகளில் கிடைத்தவற்றை சாப்பிட்டு, பசியாற்றி வந்தனர். தவிர வெளியூர்களிலிருந்து வரும் யாத்ரீகர்கள் வழங்கும் பழங்கள், அன்னதானம் ஆகியவை காரணமாகவும் மன நோயாளிகளுக்கு உணவு கிடைத்து வந்தது. தற்போது தேர்தல் சமயமாக இருப்பதாலும், தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் யாத்ரீகர்கள் உணவு பொருட் களை எடுத்து வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக வாகன சோதனை, பயணிகளின் உடமைகள் சோதனை காரணமாக உணவு பொருட்களை கொண்டு வருவதில்லை. இதனால் அன்னதானம் வழங்குவதும் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் மன நோயாளிகள் பசியுடன் பரிதவிக்கின்றனர். பலர் ரோடுகளில் மயங்கிய நிலையில் கிடக்கின்றனர். இவர்களை காப்பாற்றி பராமரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏர்வாடி தர்காவில் மன நோயாளிகளை தள்ளிவிட்டு விட்டு செல்லப்படுவதையும் தடுக்க முன்வரவேண்டும் என¢ற கோரிக்கை எழுந்துள¢ளது. அப்பகுதியை சேர்ந்த ஹமீது கூறுகையில், ‘ஏர்வாடியில் அனாதையாக விடப்படும் மனநோயாளிகள் நிலை, அவலத்தின் உச்சமாக உள்ளது. பிச்சைக்காரர்களாவது, வேண்டியதை கேட்டு பெற்று பசியை போக்கிக் கொள்வார்கள். ஆனால் மனநலம் பாதித்தவர்களோ, கேட்கக்கூட உணர்வின்றி பசியில் சுருண்டு கிடக்கின்றனர்‘ என்றார்.


இது குறித்து தர்கா கமிட்டி இளைஞர் பேரவை செயலாளர் சர்தார் கூறியதாவது, ‘மன நோ யாளி களை அவர்களின் உறவினர்களே, அனாதை யாக விட்டு செல்லும் கொடுமை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது இதில் பெண் மன நோயாளிகளும் அடங்குவர். எங்களால் இயன்ற அளவுக்கு மன நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இதற்குமேல் அதிகாரிகள்தான் நடவடிக்கையில் இறங்க வேண்டும்‘ என் றார்.

Saturday, April 2, 2011

கீழக்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு



கீழக்கரையி்ல் அசன் அலி ஓட்டு வேட்டை !கீழக்கரையில் இன்று காலை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலி வீடு,வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹசனா முஸ்லீம் சங்கத்தி்லிருந்து தொடங்கி பண்ணாட்டார் தெரு,பு்து தெரு,தெற்கு தெரு ,சொக்கநாதர் தெரு, பிரபு்க்கள் தெரு ,நடுத்தெரு,சாலைதெரு ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.அவருடன் கீழக்கரை நகராட்சி தலைவர் பசீர் அகமது,நகர் இளைஞரணி தலைவர் சுல்தான் செய்யது இப்ராகிம்,ஜமால் பாரூக்,கென்னடி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹமீது கான்,மூர் ஹசனுதீன்,முஸ்லீம் லீக் ஹமீது ்ரஹ்மான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்