Thursday, October 27, 2011
கீழக்கரையில் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் நவ 3ல் திறப்பு !
கீழக்கரை வடக்கு தெருவில் பிரம்மாண்டமாக புதுபிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளி நவ 3ல் மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது.அழகிய முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளியில் பல நூறு பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து கீழக்கரை சென்ற வண்ணம் உள்ளனர்.மசூதி திறப்பு விழாவையோட்டி திறப்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக வடக்குதெரு ஜமாத் நிர்வாக சபை மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளி கட்டிட விரிவாக்க குழு கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ... இவ்விழாவில் ஹாஜி.சேகு முகைதீன் தலைமை தாங்குகிறார். ஹாஜி.அக்பர்கான் வரவேற்புரை நிகழ்த்துகிறார். ஹாஜி மொளலவி ஜைனுல் ஆப்தீன் பாகவி(முன்னாள் முதல்வர் ஜாமிஆ அல் பாக்கியத்துஸ் ஸாலலிஹாத் அரபிக்கல்லூரி,வேலூர்), ஹாஜி.முப்தி முஹம்மது ருஹீல் ஹக் (முதல்வர் ஜாமிஆ அல்வாருல் உலூம் அரபிக் கல்லூரி,திருச்சி,தலைவர் திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா பேரவை) ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.ஹாஜி.ரெத்தின முகம்மது நன்றியுரையாற்றுகிறார்.
இது குறித்து துபாயில் உள்ள நாசா அமைப்பின் நிர்வாகிகள் அகமது மிர்ஷா மற்றும் ஜேனா என்ற ஜெயினுலாப்தீன் கூறியதாவது,
இறைவன் உதவியால் பல்வேறு நல் உள்ளங்களின் முயற்சியால் மசூதியின் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா காண உள்ளது.நாசா சமூக நல அமைப்பும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இணைந்து செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
keele thargavai vaittu mele thola koodathu endru unmayana alahvai payantha muslimkalukku theriyum but ivargal ellam peyer thagi muslimgal.islamin trogigal.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
ReplyDeleteகீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத்தாரின் பெரும் முயற்சியால் கடுமையான பொருளாதார சிக்கலில் இருந்து வல்ல நாயன் கருணையினால் கடந்து அழகிய இறை இல்லத்தை கட்டி முடித்தமைக்கு அவர்களை பாராட்ட வாழ்த்த வார்த்தைகளே கிடைக்காது அத்தனை சிறப்புக்குரிய் பெரும் முய்ற்சி
நவம்பர் 3-ஐ விட நவம்பர் 4 -ல் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையோடு தொடங்க நாடி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்
இருப்பினும் அன்று ஊரே குதுகலிக்கும் கட்டாயமாக குதுகலிக்க வேண்டும்
அந்த நன்னாளை எதிர் பார்த்து எங்கும் நிறைந்த வல்ல ரஹ்மானிடம் துவா செய்பவர்களாக இருப்போமாக ஆமீன்
மேலும் அந்த விழாவில் ஒருத்தர்கூட் விடு ப்டாமல் ஊர் முஸ்லீம் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து அகிலம் அனைத்திற்கும் ரஹிமாகவும் ரஹ்மானகவும் இருக்கும் அல்லாஹு ஜல்லஜலாலுவின் ரஹ்மத்தை பெருவோமாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்த்ஈன்
இஹ்தினஸ் ஸிராத்ல் முஸ்த்கீம்
வஸ்ஸலாம்
அல்லாஹ்வுக்காக கட்டிய பள்ளிய இது....?
ReplyDeleteஹதீஸ் எண் : 489
ReplyDelete“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், கப்ருக்கு சுண்ணாம்பு பூசுவதையும், அதன்மீது உட்காருவதையும், அதன்மீது கட்டிடம் கட்டுவதையும் தடுத்துள்ளனர்”
அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு
ஹதீஸ் எண் : 489
ReplyDelete“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், கப்ருக்கு சுண்ணாம்பு பூசுவதையும், அதன்மீது உட்காருவதையும், அதன்மீது கட்டிடம் கட்டுவதையும் தடுத்துள்ளனர்”
அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு
ஹதீஸ் எண் : 489
ReplyDelete“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், கப்ருக்கு சுண்ணாம்பு பூசுவதையும், அதன்மீது உட்காருவதையும், அதன்மீது கட்டிடம் கட்டுவதையும் தடுத்துள்ளனர்”
அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு