Tuesday, February 5, 2013

சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம்!ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ தமிழக அரசை வலியுறுத்தாமலிருப்பதின் மர்மம் என்ன?இ.யூ.முஸ்லீம் லீக் நிர்வாகி கேள்வி!












பேரா.ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ                           கீழ‌க்க‌ரை ஹ‌மீது ர‌ஹ்மான்



இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லீம் லீக் நிர்வாகிக‌ளின் ஒருவ‌ரான‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீது ர‌ஹ்மான‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்....


இந்திய‌ பெருங்க‌ட‌லில் இருந்து வ‌ங்க‌க‌ட‌ல் ப‌குதிக்கு செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் இல‌ங்க‌யை சுற்றி செல்ல‌ வேண்டியுள்ள‌து.இத‌னால் நேர‌ விர‌ய‌ம் பொருள் விர‌ய‌ம் அதிக‌ரிக்கிற‌து.என‌வே  இந்திய‌ பெருங்க‌ட‌லில் இருந்து வ‌ரும் க‌ப்ப‌ல்கள் இல‌ங்கையை சுற்றி செல்லாம‌ல் பாக்ஜல‌ச‌ந்தி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ப‌குதி வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கு ஏற்ப‌ க‌ட‌ல் ப‌குதியை ஆழ‌ப்ப‌டுத்துவ‌து என‌ திட்ட‌ம் வ‌குக்கப்ப‌ட்டு சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து.இத்திட்ட‌ம் மூல‌ம் க‌ப்ப‌ல் அதிக‌ள‌வில் தென் மாவ‌ட்ட‌ துறைமுக‌ங்க‌ளுக்கு வ‌ருவ‌து அதிக‌ரிக்கும் தென்மாவ‌ட்ட‌ங்க‌ள் வ‌ள‌ம் கொழிக்கும் என‌ ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌து.1860ம் ஆண்டு ரூ50 ல‌ட்ச‌த்தில் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இத்திட்ட‌ம் நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்ட‌தால் ரூ 2500 கோடி திட்ட‌ ம‌திப்பீடு செய்ய‌ப்ப‌ட்ட‌து. நீண்ட‌ கால‌மாக‌ தூசி த‌ட்ட‌ப்ப‌டுவ‌தும் பின்ன‌ர் கிட‌ப்பில் போடுவ‌துமாக‌ இருந்த‌து.அப்போதைய‌ பாஜ‌க‌வின் பிர‌த‌ம‌ராக‌ இருந்த‌ வாஜ்பாயும் இத்திட்ட‌த்திற்கு ஒப்புத‌ல் த‌ருவதாக‌ அறிவித்தார் என்ப‌தும் குறிப்பிடக்க‌து

க‌ட‌ந்த 2004ம் ஆண்டு பிர‌த‌ம‌ர் த‌லைமையிலான‌ ம‌ன்மோக‌ன் த‌லைமையிலான‌ கூட்ட‌ணி ஆட்சி அமைந்த‌து இதில் அங்க‌ம் வ‌கித்த‌ திமுக‌ உள்ளிட்ட‌ கூட்ட‌ணி க‌ட்சிக‌ள் போராடி இத்திட்ட‌த்திற்கு அனும‌தி பெற்ற‌ன‌.இத‌ற்கான‌ நிதியும் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்கான‌ திட்ட‌ப்ப‌ணிக‌ளை பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன்சிங் தொட‌ங்கி வைத்தார்.தென் மாவ‌ட்ட ம‌க்க‌ளின் 150 ஆண்டு கால‌ க‌ன‌வு நிறைவேறிய‌து என்றெல்லாம் அப்போது பேச‌ப்ப‌ட்ட‌து.முதற்கட்டமாக கப்பல் செல்ல வசதியாக நாகை மாவட்டம் கோடியக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்பகுதியில் மணல் அள்ளும் பணிக‌ளை மேற்கொண்டனர்.ப‌ல‌ நூறு கோடி செல‌வு செய்ய‌ப்ப‌ட்ட நிலையில்  ஆனால் தனுஷ்கோடி பணியின் போது ராமேஸ்வ‌ர‌த்திற்கும் மன்ன‌ருக்கும் இடையே உள்ள‌ ஆட‌ம் பால‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ண‌ல் திட்டை ராமர் க‌ட்டிய‌ பால‌ம் அதை இடிக்க‌ கூடாது என‌ பாஜ‌க‌ அர‌சு,அதிமுக‌ போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் சில‌ அமைப்புக‌ளும் எதிர்ப்பு தெரிவித்த‌ன‌.

இது தொட‌ர்பான‌ பிர‌ச்ச‌னை சுப்ரீம் கோர்டுக்கு சென்ற‌து.யாருடைய‌ ம‌ன‌மும் புண்ப‌டாம‌ல் மாற்றுப்பாதையில் இத்திட்ட‌த்தை நிறைவேற்றும் வ‌ழிமுறைக‌ளை காண‌ கோர்ட் த‌ர‌ப்பில் அர‌சுக்கு வ‌லியுறுத்த‌ப்ப‌ட்ட‌து.இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
 க‌மிஷ‌ன் அமைக்கப‌ட்டு ஆய்வுக‌ள் செய்ய‌ப்ப‌ட்டு மாற்று பாதையில் சாத்திய‌மில்லை என்று ப‌ச்சோரி க‌மிஷ‌ன் தெரிவித்ததாக‌ ம‌த்திய‌ அர‌சு தெரிவித்துள்ள‌து.ஆனால் முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா த‌லைமையிலான‌ த‌மிழ‌க‌ அர‌சோ இத்திட்ட‌மே தேவையில்லை என‌ கோர்டில் தெரிவித்ததாக‌ செய்திக‌ள் வெளியாகியுள்ள‌ன‌.

ந‌ம‌து மூத‌தைய‌ர்க‌ளின் திட்ட‌மான‌ சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்டால் முந்தைய கால‌த்தில் துறைமுக‌ ந‌க‌ர‌ங்க‌ளாக‌ இருந்த‌ கீழ‌க்க‌ரை,அதிராம‌ப‌ட்டிண‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு க‌ட‌ல் சார்ந்த‌ ஊர்க‌ள் மீண்டும் வள‌ர்ச்சிபெறும் என‌ எம‌து அகில‌ இந்திய‌ பொது செய‌லாள‌ர் பேராசிரிய‌ர் காத‌ர் முகைதீன் அவ‌ர்க‌ள் கூறிய‌தை நினைவு ப‌டுத்திய‌வ‌னாக‌  ராம‌நாத‌புர‌ம் தொகுதியின் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ உள்ள‌ ஜ‌வாஹிருல்லா அவ‌ர்க‌ளை கேட்கிறேன்....

 இவ்வ‌ள‌வு சிற‌ப்பான‌ திட்டத்தை த‌டுக்கும் நோக்க‌த்தோடு உள்ள‌ முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவிட‌ம் இது குறித்து கூட்ட‌ணி க‌ட்சி என்ற‌ முறையில் ஏன் கேள்வி எழுப்ப‌வில்லை? இத்திட்ட‌ம் நிறைவேறினால் நீங்க‌ள் எம்.எல்.ஏவாக உள்ள‌ ராம‌நாத‌புர‌ம் தொகுதி ம‌க்க‌ள் அதிக‌ ப‌லன‌டைவார்க‌ள் என்ப‌து உங்க‌ளுக்கு தெரியாதா?எத்த‌னையோ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு போராட்ட‌ம் ,ஆர்ப்பாட்ட‌ம் என‌ அறிவிக்கும் நீங்க‌ள் ஏன் தென் மாவ‌ட்ட‌ ம‌க்க‌ளின் 150 ஆண்டு கால‌ க‌ன‌வான‌ சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தை நிறைவேற்ற‌ குர‌ல் எழுப்ப‌வில்லை?

ம‌க்க‌ள் ந‌ட‌ப்ப‌து அனைதையும் க‌வ‌னித்து கொண்டு இருக்கிறார்க‌ள்.வாய் மூடி ம‌வுனியாக‌ இருக்காதீர்க‌ள்.இனியாவ‌து முய‌ற்சி எடுப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறோம்.
உங்க‌ள் க‌ட்சி சார்பில் சேது சமுத்திர‌ திட்ட‌த்தை நிறைவேற்றுவோம் என்ற‌ பாராளும‌ன்ற‌ தேர்த‌ல் வாக்குறுதி அளித்த‌தையும் இத்துட‌ன் இணைத்துள்ளேன்.

மேலும் சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் ப‌ற்றி நான் ப‌டித்த‌வ‌ற்றை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.......

சேது சமுத்திரக் கால்வாய் என்றால் என்ன?

சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். இந்தியப் பொருளாதாரத்திற்கும் இது மிகப் பெரும் ஏற்றத்தைக் கொடுக்கும்.

தற்போது அரபிக் கடலில் இருந்து இந்து மகா கடலுக்கும், இந்து மகா கடலில் இருந்து அரபிக் கடலுக்கும் செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றித்தான் செல்ல வேண்டி இருக்கிறது.
 
காரணம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாக் ஜல சந்தியில், மன்னார் வளைகுடா பகுதியில் ஆழம் குறைவு. இங்கு பெரிய கப்பல்கள் தரைதட்டிவிடும். எனவே, இந்தப் பகுதியில் கடலை ஆழமாக்க வேண்டியுள்ளது. இது தான் சேது சமுத்திரத் திட்டம்.
 

89 கி.மீ நீளம், 12 மீ ஆழம்:

மொத்தம் 89 கி.மீ தூரத்துக்கு கடல் ஆழப்படுத்தப்படும். அதாவது கடலில் கால்வாய் தோண்டப்படும்.

அதாவது மொத்தம் 8.25 கோடி கன மீட்டர் பரப்புக்கு கால்வாய் தூர் வாரப்படும். தோண்டப்படும்போது வரும் மண், கல், பவளப் பாறைகள் போன்றவை கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் 30 அடி ஆழத்தில் கொட்டப்படும்.
 
இலங்கைராமேஸ்வரம் இடையிலான தொடர் பாறைத் திட்டுக்களால் ஆன ஆதம் பாலத்துக்கு அருகே 35 கி.மீ. நீளத்துக்கும், பாக் ஜலசந்தி பகுதியில் 54 கி.மீ. தூரத்துக்கும் சேது சமுத்திரக் கால்வாய் தோண்டப்படும்.

இந்தக் கால்வாய் 300 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். கால்வாயின் ஆழம் 12 மீட்டராக இருக்கும். இரு வழிப் பாதையாக செயல்படும் இந்தக் கால்வாயில் 10 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் (10 மீட்டர் வரை மூழ்கும் பரப்பு கொண்ட) சென்று வர முடியும்.
 

50,000 டன் கப்பல்கள் செல்லலாம்:

அதாவது 50,000 டன் வரை சரக்கு ஏற்றிய கப்பல்கள் இந்தக் கால்வாயில் சென்று வர முடியும். அதே போல காலியாகச் செல்லும் எவ்வளவு பெரிய கப்பலும் இதில் சென்று வரலாம்.

33 மீட்டர் அகலம், 215 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்கள் இக் கால்வாயை பயன்படுத்தலாம்.
 
சேது கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களைக் கண்காணிக்கவும் வழி நடத்தவும் 4 போக்குவரத்து நிர்வாக நிலையங்கள் அமைக்கப்படும். இதில் ஒன்று ராமேஸ்வரத்திலும், ஒன்று கோடியக்கரையிலும், மேலும் இரண்டு கடலில் கால்வாய்க்கு அருகிலும் அமைக்கப்படும்.
 
இக் கால்வாயில் ரோந்துப் படகுகள், இழுவைப் படகுகள், நிலைப்படுத்தும் படகுகள் ஆகியவை தயார் நிலையில் இருக்கும்.


இந்தியாவுக்கு லாபம்:

இந்தக் கால்வாயால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடல் பகுதிகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம் 424 கடல் மைல் அளவுக்குக் குறையும். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 முதல் 30 மணி நேர பயணம் மிச்சமாகும்.
 
வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையை சுற்றி இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்குப் பதில் நேரடியாக இந்திய கடல் எல்லை வழியாகவே இந்தியத் துறைமுகங்களுக்கு வர முடியும். இதனால் வெளிநாட்டு கப்பல் போக்குவரத்தும் அதிகரிக்கும்.

 இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கும், கிழக்குக் கரையில் இருந்து மேற்குக் கரைக்கும் செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் இலங்கை அரசுக்கு ஏராளமான தொகையை நுழைவுக் கட்டணமாகவும், வாடகைக் கட்டணமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. அது இனிமேல் தேவையிருக்காது.
 

தமிழக தொழில் வளர்ச்சிக்கு உதவும்:

மேலும் அரபிக் கடலில் இருந்து இந்து மகா சமுத்திரம், இந்து மகா சமுத்திரத்தில் இருந்து அரபிக் கடலை அடைய வேண்டிய வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையை சுற்றாமல் இந்தியக் கடல் பகுதி வழியாகவே செல்லும். இதனால் இந்தியத் துறைமுகங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பலன்கள் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகும்.
 
ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டனம் உள்ளிட்ட சிறு துமுறைக நகரங்கள் பெரும் அபிவிருத்தி அடையும். தூத்துக்குடி துறைமுகம் மிகப் பெரும் துறைமுகமாக மாறும் வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம் துறைமுகமும் வளர்ச்சி பெறும்.

 இதனால் தமிழகத்தில் கடல் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டனம் ஆகியவற்றில் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

மீன்பிடி தொழிலும் பெரும் வளர்ச்சி காணும். மொத்தத்தில், சேது சமுத்திரத் திட்டத்தால் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் மிகவும் ஏற்றமடையும், வர்த்தகம் பெருகும்.






 

18 comments:

  1. வலியுறுத்தவேண்டியது நமது கடமை.... அதே நேரத்தில் வலியுறுத்தும் தோற்றம் சிறந்ததாக இருக்கட்டும்.

    ReplyDelete
  2. முதலில் .MP அப்துர்ரகுமான்குரல் கொடுத்தாரா விரைவில் இன்ஷா அல்லா MLA குரல் கொடுப்பார்

    ReplyDelete
    Replies
    1. சேது சமுத்திர திட்டத்திற்கு முஸ்லிம் லீக் என்றுமே குரல் கொடுத்து வருவதை சட்ட மன்ற, பாராளுமன்ற ஏடுகளைப் பார்த்து வாருங்கள், தெரியும்

      Delete
    2. இத்திட்டத்திற்காக முஸ்லிம் லீக் எடுத்துள்ள பணிகளை சட்டமன்ற, பாராளுமன்ற ஏடுகளை எடுத்துப் பார்ப்போர் விளங்கிக் கொள்ள முடியும். சேது சமுத்திர திட்டத்திற்கு இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினரின் பங்கு பற்றி கேட்டால், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்தார் என்று கேட்பது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றது.

      Delete
  3. ANY BODY CAN EXPLAIN, HOW MUCH IS THE PORT CHARGES FOR A VESSEL IN SRILANKAN PORT AND THAT IN TUTICORIN, guess that plays a very important role.

    ReplyDelete
  4. Keelakarai abdul RahmanFebruary 5, 2013 at 6:58 PM

    கீழ‌க்க‌ரை அப்துல் ர‌ஹ்மான‌
    முதலில் ராம‌நாத‌புர‌ம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்(MP)

    எங்கே?

    எத்தனை தடவை குரல் கொடுத்தார்?
    எத்தனை தடவை கீழ‌க்க‌ரை வருகை?

    ம‌க்க‌ள் ந‌ட‌ப்ப‌து அனைதையும் க‌வ‌னித்து கொண்டு இருக்கிறார்க‌ள்.வாய் மூடி ம‌வுனியாக‌ இருக்காதீர்க‌ள்.இனியாவ‌து முய‌ற்சி எடுப்பீர்க‌ள் என‌ ந‌ம்புகிறோம்.

    கூட்ட‌ணி க‌ட்சி என்ற‌ முறையில் உள்ள‌ இ.யூ.முஸ்லீம் லீக் நிர்வாகி அவ‌ர்க‌ளை கேட்கிறேன்....

    by
    keelakarai abdul Rahman

    இன்ஷா அல்லா ராம‌நாத‌புர‌ம் தொகுதியின் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ உள்ள‌ ஜ‌வாஹிருல்லா குரல் கொடுப்பார்

    ReplyDelete
  5. சேது சமுத்திர திட்டதால் கீழக்கரைக்கு எந்த நன்மையும் இல்லை மாறாக சுற்று சுழல் பாதிக்கும் அபயம் மற்றும் பவழப்பறை அழியும் அபயம் உள்ளது இது திமுக வின் அரசியல் லாபத்திற்காக போடப்பட்ட திட்டம்

    ReplyDelete
    Replies
    1. பிஜேபியின் ஊதுகுழல் இங்கே கீழக்கரை நியூஸ் என்ற பெயரில் பதிவிட்டிருக்கின்றது. இத்திட்டம் செயல் பட்டால் காங்கிரஸும், திமுகவும் மக்களிடத்திலே என்றும் நிலையான நற்பெயரைப் பெற்று விடுவார்களோ என்கின்ற பிஜேபி மற்றும் அதிமுக கட்சியனரின் கெட்ட எண்ணத் தூதுவரோ இப்பதிவுக்குச் சொந்தக் காரர் என்ற சந்தேகமும் எழுகின்றது. சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாததால் தான் இத்திட்டம் அமுலுக்கே வந்தது என்பதும், அதில் தேர்ச்சி பெற்ற வல்லுநர் குழுவின் சான்றிதழுமே இக்கருத்து முற்றிலும் புறந்தள்ளப் பட வேண்டியது என்று சொல்வதற்குப் போதுமானது. தென் தமிழக மக்களின் நலனைப் புறக்கணிக்கும் இவர்கள் மக்கள் மன்றத்திலே பதில் சொல்லும் நாள் வெகு தொலைவிலில்லை.

      Delete
    2. திட்ட அடிப்படையிலான பிரச்சனைகள்

      தூத்துக்குடியில் ஆரம்பித்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம், சர்ச்சையில் சிக்கியிருக்கிற ஆதம் பாலம் [ராமர் பாலம்] வழியாக பாலக் பே - தலைமன்னார் [இலங்கை] வழியாக கால்வாயினை ஆழப்படுத்துவதுதான். இதன் மூலம் கப்பல்கள் இவ்வழியாக செல்ல முடியும். இதனால் தூத்துக்குடியில் தொடங்கி இலங்கையினை சுற்றிக் கொண்டு போகும் 21 மணிநேரம், 400 நாடிகல் மைல்கள் மிச்சமாகும் என்று சொல்கிறார்கள். இதுதான் 2,400 கோடி ரூபாய்களை கொட்டி நாம் தேடும் வளர்ச்சி. ஆனால், இந்த 21 மணி நேர சேமிப்பு என்பதே பல மாலுமிகளாலும், கப்பல்களில் தொடர்ச்சியாக பணி புரிந்தவர்களாலும் மறுக்கப்படுகிறது.

      இந்திய கப்பற்படையில் 32 வருடங்களாக வேலை பார்த்த பாலகிருஷ்ணன் அவர்கள் ரிடிப்க்கு அளித்த பேட்டியில் சொன்ன சாராசம்சம், 21 மணி நேரம் என்பது கப்சா. அவருடைய வாதத்தின் சாராம்சம்.

      உதாரணத்திற்கு ஒரு கப்பல் கொல்கத்தாவில் புறப்பட்டு தூத்துக்குடிக்கு இலங்கை வழியாக வருகிறது எனின் மொத்த கடற்தூரம் 1227 கடல் நாடிகல் மைல்கள் [Nautical Miles இனி NMs] சேது சமுத்திர திட்டத்தின் வழியாக வந்தால் 1098 NMs மொத்த சேமிப்பு 129 NMs. இது சேமிப்பு தானே என்று கேட்கலாம், ஆனால் விஷயம் அங்கே முடியவில்லை. சாதாரணமாக ஒரு கப்பல் 10-12 கடல் நாட்டில் (knot) பயணிக்கும், அப்படி போனால் இலங்கை வழியாக, தூத்துக்குடி துறைமுகத்தினை அடைய ஆகும் நேரம் 102 மணி நேரம், 15 நிமிடங்கள்.

      சேது சமுத்திரத்தின் வழியாக போனால், ஏற்படக்கூடிய முதல் இழப்பு கப்பலின் வேகம். கப்பலின் வேகத்தினை பாதியாக குறைக்காமல், அவ்விதமான சீற்றமான கடலில் பயணிக்க முடியாது. ஆகவே வேகம் 6 கடல் நாட்டாக இருக்கும். இதில் இன்னொரு விஷயமும் முக்கியம், சேது சமுத்திர திட்ட வரைவின் படி, 30000 டன்னிற்கு மேலான கப்பல்கள் இக்கால்வாயில் பயணிக்க முடியாது. இன்னொரு விஷயமும் இங்கே நடக்கும், சேது சமுத்திர கால்வாய் திறந்த வெளி கடல் அல்ல.ஆகவே ஒரு உள்ளூர் பைலட் கப்பலில் ஏறவேண்டும், ஏனெனில் அவருக்கு தான் கடலின் அசைவுகள் தெரிந்திருக்கும். இப்படி ஒரு உள்ளூர் பைலட்டினை ஏற்ற / இறக்க மொத்தமாய் இரண்டு மணி நேரங்களாகும். 6 கடல் நாட்டில் பயணித்தால் ஆகும் மொத்த நேரம் 100 மணி 30 நிமிடங்கள்.

      இலங்கை வழியாக பயணிப்பதற்கும், சேது சமுத்திர கால்வாய் வழியாக பயணிப்பதற்கும் இருக்கக்கூடிய வித்தியாசம் உண்மையில் 1 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. இதற்காகவா 2,400 கோடி ரூபாய்களை செலவு செய்வீர்கள். ?
      [மொத்த நேர்காணல் இங்கே ]

      ஆக, இத்திட்டத்தினால் நேரம் மிச்சமாகும். கப்பல் வளம் பெருகும். வளர்ச்சி திட்டங்கள் நலமடையும் என்பதெல்லம் utopian wish. இது தாண்டி இன்னொரு விஷயத்தினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரிலையன்ஸ் முதலான பெரும் குழுமங்கள், கப்பல் கட்டும் துறையில் இறங்க இருக்கின்றன. இவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் சாதக/பாதக் அம்சங்களை கண்டிப்பாக அலசி இருப்பார்கள். இந்திய கப்பல் கட்டும் துறை என்பது $20 பில்லியன் டாலர் [by 2020 - யாஹூ செய்தி ] ஈட்டும் என்று கணித்திருக்கிறார்கள். ஆனால் இத்துறையில் முதலீடு செய்யும் எவரும் தூத்துக்குடி உள்ளடக்கிய தெற்கு பெல்டினை சாராமல் இருக்கிறார்கள். அதற்கான காரணம் தான் மேலே சொன்னது.


      Delete


    3. சுற்று சூழல் இழப்புகள்

      மன்னார் வளைகுடா என்பது 10,500 சதுர கிலோமீட்டர் இடம். அது 3,600 வகையான கடற்தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவள வகையறாக்களை உள்ளடக்கியது. இந்தியாவின் 2,200 வகையான மீன் இனங்களில் 450 இங்கே மட்டுமே கிடைக்கக் கூடியதாக தெரிகிறது. இது தாண்டி, 5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன. இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இவை மொத்தமும் வரலாற்று புத்தகங்களில் மட்டுமே பார்க்க கூடிய விஷயமாக மாறி போய்விடும்.
      ஜல்லி No.2: இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாமல்
      திட்டங்கள் இந்தியாவில் நிறைவேறி இருக்கிறதா ? தமிழினம், கலைஞர் என்று வந்தால் மட்டும் எதற்கு பாரபட்சம் பார்க்கிறீர்கள். நர்மதா சரோவர் திட்டத்தில் ஆகாத
      பாதிப்பா, சேது சமுத்திரத்தில் வரப் போகிறது ?
      Fact: Two wrongs can't make a thing right. முதலில் இதனை ஒரு
      இனத்தின் பிரச்சனையாக பாராமல், ஒரு வளர்ச்சித் திட்டமாக பாருங்கள். நர்மதாவிலாவது, இடம்பெயரப்பட்ட மக்களுக்காக போராட மேதா பட்கர், அருந்ததி ராய் போன்ற ஆட்கள்
      இருக்கிறார்கள். ஆனால், இங்கே கொல்லப்படபோவது, கடலின் eco-system, temparature, plants, fisheries, coral. யார் பேசப் போகிறார்கள். இது தாண்டி, இது ஒரு நாட்டுக்கான பிரச்சனையல்ல, பல கடல் எல்லைகளடங்கிய பிரச்சனை.
      இது தாண்டி, பவள தாவரங்கள் கடல் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்ற்கு மேல் மட்டுமே வளரும். ஆதம் பாலத்தின் சராசரி வெப்பநிலை 25 - 32 டிகிரி செல்சியஸ். ஆதம் பாலத்தினை [ராமர் பாலம்] ஆழப்படுத்தினால் சுமார் 85 மில்லியன் கியுபிக் மீட்டர் மண் வெளியேற்றப்படும். இதனை சுற்றுச்சூழல் மேற்பார்வை நிறுவனம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது.
      The course of water currents may be altered causing unprecedentd harm to marine life. இதுதாண்டி, போன ட்சுனாமியில் கேரளா அதிகமாக பாதிக்கப்படாமல் போனதற்கு இம்மணல்திட்டுகள் தான் காரணம். இயற்கை அரணாக இவை செயல்பட்டு வந்தவை அழிக்கப்பட்டால், ஏற்படக்கூடிய இயற்கை வெஞ்சினங்கள் கணக்கிலடங்காதவை. மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால், தமிழக கடல் எல்லையில் ட்சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். பசிபிக் ட்சுனாமி எச்சரிக்கை மையத்தின் கணக்கு படி இந்திய பெருங்கடலில் தொடர்ச்சியாக சிறியதும் பெரியதுமான எழுச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன [பார்க்க: பசிபிக் ட்சுனாமி மைய இந்திய பெருங்கடல் பகுதி]
      ஜல்லி No.3: ட்சுனாமியினை ஆடம் பாலம் [ராமர் பாலம்] தடுக்கும் என்பது நிரூபிக்கப்படாத உண்மை. இதை வைத்துக் கொண்டு பி.ஜே.பி பூச்சி காட்டுகிறார்கள்.
      Fact: இயற்கை அரணாக அமைந்த மண்திட்டுகள் மற்றும் பவள பாறைகளினால் தான் அவ்விடத்தில் கடற் சுழல்கள், மாற்றுகள் அமைந்திருக்கின்றன. இதுவரை பாலக் ஜலசந்தியினை நீந்தி கடக்க முயன்ற நிறைய பேர் தோற்றிருக்கிறார்கள். அவர்கள் சொல்லிய காரணம் "the belt has heavy undercurrents, strong, steady breezes and a rough sea played the villan" 18 கீமீ தூரமடங்கிய இத்திட்டு (தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை) உண்மையான இயற்கை அரண். இதை ராமர் வானரங்களை வைத்து கட்டினாரா, இயற்கையாக அமைந்ததா என்பது வேறு விவாதம்.

      சமூகம், தொழில்சார்ந்த இழப்புகள்

      இது தவிர தூத்துக்குடி உள்ளடக்கிய கடற் சார்ந்த பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலை சார்ந்து உள்ளார்கள். பவள பாறைகளையும், இயற்கையான மீன்வளங்களையும் இத்திட்டத்தின் மூலமாக நிர்மூலமாக்கினால், லாபமடைபவர்கள் யார் ? லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, இலங்கையின் கடற்சார்ந்த பகுதி உள்ளடக்கியவர்களின் வாழ்க்கை இத்திட்டத்தின் மூலம் கேள்விக்குறியாகும் நிலையில் எப்படி இத்திட்டத்தினை ஆதரிக்க முடியும் ?

      பொருளியல், முதலீடு சார்ந்த இழப்புகள்

      Delete
  6. அட ஏங்க அவருக்கு மேசையை தட்டத்தான் நேரமிருக்கு...இதை பத்தி சட்டசபையில பேசினா அம்மா கோச்சிக்குவாங்கல்ல.என்னே அரசியல்?
    நாஸர்.கீழக்கரை

    ReplyDelete
  7. பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாததுக்குலாம் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்யும் இவர்கள்,கோடிக்கணக்கான வருமானத்தையும் வேளை வாய்ப்புகளையும், மாவட்டத்தின் வளர்ச்சியையும் தரும் இதற்காக போராடவில்லை என்றால் இவர்களை மக்களிடம் என்ன கொண்டு போய் நிறுத்தனும்.
    கீழை சம்சுத்தீன்.கத்தார்.

    ReplyDelete
  8. தொகுதி வளர்ச்சிக்கு குரல் கொடுக்கலையான்னு கேட்டா அப்துல் ரஹ்மான் எம்.பி.ஏன் செய்யவில்லை என்று கேட்பதற்கு யாராவது சாட்டையடி பதில் கொடுங்கப்பா. அப்துல் ரஹ்மான் எம்.பி.க்கு என்னா வேத்தா வடியுது?
    ஜாஃபர் அலி- அலய்ன்

    ReplyDelete
  9. அட போங்கய்யா அவருக்கு டிவியில ஒக்காந்து பல்லிளிக்கவே நேரம் பத்தலை அதுல இது வேரயா? அபூ தைமிய்யா.கீழை

    ReplyDelete
  10. இந்த மாதிரி நல்ல விஷயங்கள் நடக்கனும்னா ஹமீதுர் ரஹ்மான் போன்றவர்கள் எங்கள் தொகுதிக்கு MLA வாக வரனும்.முஸ்லிம் லீக் வரக்கூடிய தேர்தலில் இவரை இங்கு நிற்க வைத்தால் வெற்றி நிச்சயம். Sameem Ahamed,Jeddah.

    ReplyDelete
  11. Abbas பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொகுதிக்கும் நாட்டுக்கும் பயனளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற நினைவூட்டினால் அதை ஏன் அப்துல் ரஹ்மான் எம்.பி.செய்யவில்லை என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? Abbas

    ReplyDelete
  12. இந்த ஆக்கத்தின் கருத்து விவாதத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான செய்தியை சொல்லியிருக்கும் சகோதரர்.ஷமீம் அஹமத் அவர்களிக்கு நன்றி! இளவல் ஹமீதுர் ரஹ்மான் அவர்களைப் போன்றல்ல அவரையே சட்டமன்றத்திற்கு அனுப்ப நாங்களும் குரல்கொடுப்போம், தொகுதி மக்களாகிய நீங்கள் அதற்கு வித்திடுங்கள்,அதற்கு தாய்ச்சபையும் தயாராகவே இருக்கும் இன்ஷா அல்லாஹ்.அந்த தகுதியும் திறமையும் அவருக்கு இருக்கிறது என்பதை நாங்களும் நன்குணர்ந்திருக்கிறோம்.இன்ஷா அல்லாஹ் நல்லதே நடக்க வல்லவன் நல்லருள் புரியட்டும்..அன்புடன் அப்துல் ரஹ்மான் - அபுதாபி.

    ReplyDelete
  13. கடல் என்றால் என்ன நீரோட்டம் என்றால் என்ன லாபம் என்றால் என்ன நஸ்டம் என்றால் என்ன என்று தெரியாத பலர் தமிழகத்தில் இத்திட்டத்திற்கு ஆதரவுடன் பேசுகிறார்கள். மன்னார் வலைகுடா பகுதிகள் அதி வேக நீரோட்டம் உடையது, சில மாதங்கலிலேயே தோண்டிய இடம் தெரியாத வண்ணம் போய்விடும். கடலில் நீச்சல் கூட அடிக்க தெரியாதவர்கள் கப்பல் போக்குவரத்து பற்றி பேசுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டு ப்றக்க ஆசை கொள்கிரார்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.