Tuesday, November 8, 2011

கீழக்கரை நகராட்சி தலைவிக்கு ஒரு மடல்! கட்டுரையாளர் :- கீழை ராஸா




அன்புள்ள கீழக்கரை நகராட்சி தலைவி சகோதரி ராபியத்துல் காதரியா அவர்களுக்கு,



எத்தனையோ ஆட்சியாளர்களை பார்த்து, பார்த்து வெறுத்து, என்றாவது நமதூருக்கு ஒரு விடிவுகாலம் வராதா..? என்ற கடைசித் துளி நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு கீழக்கரை வாசியின் ஏக்க மடல்...



உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சின்ன வயசுலே படிச்ச முயல், ஆமை கதை தான் ஞாபகம் வருகிறது. தி.மு.க வைச் சார்ந்த பல முயல்கள் தேர்தல் ஓட்டப் பந்தயத்திற்கு தயாராக காத்திருந்த வேளை, அ.தி.மு.க சார்பாக ஆமையாக நீங்கள் களத்தில் குதித்தீர்கள்! இந்தப் பிள்ளைக்கு ஏன் இந்த்த் தேவையில்லாத வேலை..? என்று சொந்தத்தில் பலரே, உங்கள் காது பட பேச, அவர்கள் அனைவரும் வாயடைக்கும் விதமாக, தி.மு.க வின் அசைக்க முடியாத கோட்டையை தகர்த்தெறிந்து, வரலாற்றில் முதல் முறையாக அ.தி.மு.க ஆட்சி அமைத்து, பெரும் அரசியல் பிண்ணனி இல்லாமல் ஒரு சாதாரண பெண்மணியாக இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறீர்கள்..! வாழ்த்துகள்..



வெற்றி பெற்று விட்டீர்கள்..! வரலாறு படைத்து விட்டீர்கள்..!! இது போதுமா? உங்களை இந்த ஏற்றத்த்தில் தூக்கி நிறுத்தி, வழக்கம் போல் கீழே காத்திருக்கும் எம் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..??
உங்களுக்குக் கிடைத்த இந்த பதவி சுகமா..? இல்லை சுமையா..?? இந்த கேள்வியை முன்னிறுத்தி வரலாற்றைத் திருப்பிப்பாருங்கள்..

எப்படி ஒரு ஆட்சி இந்தியாவிற்கு வேண்டுமென்று, மாகாத்மா காந்தி ஆசைபட்டாரோ, எந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று உலக வரலாறு இன்றும் கொண்டாடுகின்றதோ, அப்படி ஒரு ஆட்சியை அரேபியாவில் தந்த கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நொடியில், அப்படியொரு மகத்தான பதவி கிடைத்ததை நினைத்து அவர் மகிழவில்லை..! மாறாகத் தேம்பித் தேம்பி அழுதார்கள்.. “ அபுபக்கரே உம்மால் சுமக்க முடியாத ஒரு பாரத்தை, அல்லாஹ் என் மீது சுமத்தி விட்டான், இந்த சோதனையை நான் எப்படி கடக்க போகிறேன்..?..” என்ற உமர் (ரலி) அவர்களின் நிலைபாட்டை ஒரு பாடமாக்கிக் கொள்ளுங்கள்...

பதவி, அதிகாரம், அந்தஸ்து இவை எல்லாம், வல்ல இறைவனின் சோதனை தவிர வேறில்லை, மறுமையில் அவன் தந்த சோதனைக்கு கண்டிப்பாக கேள்வி பதில் உண்டு, அதற்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள் சகோதரி...!


எந்த வெற்றிக்கு முன்னும், பின்னும் பல சோதனைகள் காத்திருக்கும்... அப்படித்தான் உங்களுக்கும், ஆட்சியேற்ற மறு நொடியே உங்கள் முன் எண்ணற்ற சவால்கள்...அளவுக்கதிமான எதிர்பார்ப்பு.. என்ன செய்யப் போகிறீர்கள்..?
குப்பை, கழிவு நீர் பிரச்சனை, சுகாதார சீர்கேடு, சாலை சீரமைப்பு, இப்படி எத்தனையோ பிரச்சனைகள் கனவில் கூட வந்து பயமுறுத்தும்...எதிலிருந்து ஆரம்பிக்க, எதை முதலில் முடிக்க என்ற ஏராளமான குழப்ப நிலை நிலவும். ”நீங்க விடுங்க தங்கச்சி நாங்க பார்த்து கொள்கிறோம்”..என்ற இடையூறுகள் கூட அவ்வப்போது நிகழும்...நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?
உங்கள் முன்னிற்கும் பிரச்சனைகளில் பாதி சுத்தத்தைச் சார்ந்தது... இதில் பாதி வேலையை நீங்கள் செய்ய வேண்டும், மீதி வேலையை மக்கள் செய்ய வேண்டும். பாதி வேலையை கூட செய்ய முயலாத முந்தைய ஆட்சியாளர்களைப்போல் தயவு செய்து நீங்களும் இருந்து விடாதீர்கள். குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண ஊர் பெரியவர்கள், செல்வந்தர்கள் பொதுநலவாதிகள், அரசியல் வாதிகள், சமூக அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் இவர்களில் முக்கியமானவர்களை ஒன்று கூட்டுங்கள், ஈகோவை கலைந்து எல்லோருடனும் கலந்து பேசி பொதுவான முடிவுகளை எடுங்கள்..முடிந்தால் அவர்களை வைத்து ”அட்வைஸ் கமிட்டி” ஒன்று அமைத்து அவர்களின் ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்று ஊர் நலத்திற்கு அவர்களின் மதிப்பு மிக்க பங்கினை உங்கள் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்து சாலை சீரமைப்பு மற்றும் கழிவு நீர் தேக்கம்... இவை பொறியியல் துறையைச் சார்ந்தது. அரசு வேலைகளை காண்ட்ராக்ட் எடுக்கும் நிறுவனங்கள் ஏனோ தானோ வென்று வேலை செய்வதும் அதை கண்காணிக்க நியமித்திருக்கும் நபர்களும் அதற்கு துணை போவதுமே காரணம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஊரில் படித்த, இந்தத் துறைகளில் கைதேர்ந்த எத்தனையோ நபர்கள் உள்ளனர். அவர்களை ஒன்று கூட்டி அவர்களிடமிருந்து, ஆலோசனைகளை பெறுங்கள்...ஒரு சாலை, வேலை செய்யும் வேளை, கவனிக்க வேண்டிய விடயங்களை பட்டியலிடுங்கள்...நமதூர் தொழில் கல்வி அறிவை சிறிதேனும் ஊர் நலத்திற்கு பயன்படுத்த உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி தரும். இந்த வகையான ஆலோசனைகளில் வார்டு உறுப்பினர்களை பங்கேற்க செய்து வார்டு வாரியாக இந்த வேலைகளை பிரித்துக் கொடுத்து, இறுதி கட்ட வேலை முடுக்கத்தை உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

இது போன்ற விசங்களால் உங்களால் ஆரம்ப கட்ட சவால்களை தகுதியான ஆலோசனைகளின் மூலம் சமாளித்து விட முடியும்.

அடுத்து அரசு திட்டங்கள்...
அரசு திட்டமா..? அப்படி என்றால் என்ன..? இது தான் நம் சமூகத்தின் நிலை. நம்மில் பெரும்பானோர் அரசு திட்டங்களைப் பற்றி அறியாதவராகவே உள்ளனர். அதைத் தெரிந்தவர்கள் கூட அரசு திட்டங்களைப் பெருவது ஒருவகையான அவமானமென்று எண்ணுபவராகவே உள்ளனர். உண்மையில் அரசு வழங்கும் சலுகைகள்..நமக்கான உரிமைகள்..அதை ஏன் நாம் உதாசீனப் படுத்த வேண்டும்..? நிலவரி, வீட்டுவரி என்று அரசிற்கு எத்தனையோ வரிகளை கட்டும் நாம், அரசாங்கம் தரும் சலுகைகளை ஏன் வீணடிக்க வேண்டும்..?
• முதியோர் ஆதரவெற்றோர் உதவித்திட்டம் – மாதம் ஆயிரம் ரூபாய்.

• ஏழைப் பெண் திருமணம் – ரூபாய் 25000 ரொக்கம், 45 கிராம் தங்கம், இதுவே பட்டம் / மற்றும் பட்டயம் பெற்றோருக்கு –ரூபாய் 50000 ரொக்கம்.

• மீன் பிடி தடைக்கால மீனவர்களுக்கு – ரூ 2000 உதவித்தொகை

• மீன் பிடி அல்லாத கால மீனவர்களுக்கு – ரூ 4000 உதவித்தொகை

• கல்வி, மற்றும் மருத்துவ உதவித்தொகை.

• தொழில் துவங்குவதற்கான கடன் உதவிகள்



இவை எல்லாம் எனக்கு தோன்றிய கற்பனை விசயம் அல்ல...தமிழ்நாடு பட்ஜட் 2011-12 –ல் குறிப்பிடப்பட்ட எண்ணற்ற திட்டங்களில் ஒரு சில உதவிகள் தான் இது.

இப்படி மக்களின் பார்வைக்கு எட்டாத அரசு திட்டங்களை ஆராய்ந்து அதை நமது மக்களுக்கு சென்றடையும் வகையில் ”அரசு திட்ட விழிப்புணர்வு” கூட்டங்களை வார்டு வாரியாக நடத்துவதுடன், அது அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் செய்தல் வேண்டும்.

இவையல்லாது நமதூருக்கென்று பிரத்தேகமாக பொருந்தக் கூடிய , வெளிநாடு திரும்பியோர் மறுவாழ்வு, தொழில் உதவி திட்டம் இவை சார்பாக அரசிடமிருந்து சிறப்பு திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெற முயற்சித்து, அதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் நீங்கள் கீழக்கரை மக்களின் மனதில் மறக்க முடியாத பாகத்தில் பதிவாகி விடுவீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...

பாதாள சாக்கடை திட்டம் இந்த வார்த்தையை, வாக்குறுதியை கடந்த இருபது வருடங்களாக கேட்டு வருகிறோம் இது என்ன ஆனது...?
ஒரு மாநில பட்ஜட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம், நமதூர் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அடையாளம் தெரியாமல் போன கடந்தகால வரலாறுகளை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு பட்ஜெட் - 2009-2010-லிருந்து அந்த திட்ட்த்திற்கான வரிகள் உங்கள் பார்வைக்கு


69. மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்துவதென்ற இந்த அரசின் முடிவின்படி, முதற்கட்டமாக தற்போது ஆறு மாவட்டத் தலைநகரங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சியுள்ள மாவட்டத் தலைநகரங்களில் இப்பணிகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக முக்கிய நகராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்கீழ், வரும் நிதியாண்டில் காரைக்குடி, சாத்தூர், மன்னார்குடி, பொள்ளாச்சி, கொடைக்கானல், பெரியகுளம், பழனி, கீழக்கரை, சிவகாசி மற்றும் மேலூர் ஆகிய நகராட்சிகளில் ரூபாய் 408 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இப்படி கைக்கு வந்து இழக்கப்பட்ட, இது போன்ற திட்டங்களை, ஆளும் கட்சி என்ற அடிப்படையில் அதை மீட்டுத்தர நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரையை சிங்கப்பூராக்க வேண்டும், ஜப்பானாக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மக்களுக்கு அப்படி அந்த நாட்டை மாற்ற அந்த மக்களின் ஒத்துழைப்பு எவ்வகையானது என்பதை நம் மக்கள் அறியும் வகை செய்தல் வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தை மீறி கண்ட இடத்தில் குப்பை கொட்டுவோருக்கு நகராட்சி சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகை அபதாரம் விதிக்க வேண்டும். சட்டம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் தான் குற்றங்கள் குறையும்.
கடைசியாக ஒரு கோரிக்கை, ”ஆயிரம் பேரிடம் அறிவுரை கேளுங்கள் ஆனால் முடிவை மட்டும் நீங்களே எடுங்கள்” என்ற பொன் மொழிக்கிணங்க எல்லா அறிவுரைகளையும் ஆராய்ந்து நீங்களே ஒரு நல்ல முடிவெடுத்து ஊரை தலைநிமிர செய்ய வேண்டும், செய்வீர்கள்..! என்ற நம்பிக்கையுடன் இன்னும் இன்னும் எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அத்தனையையும் ஒரே நாளில் உங்கள் முன் சுமத்த முயலாமல், நீங்களாவது எதாவது செய்வீர்கள் என்ற எதிர்பார்புடன் காத்திருக்கும்...





.-கீழக்கரை வாசி

19 comments:

  1. Abdul Rahman - DubaiNovember 8, 2011 at 3:22 PM

    நம் நாடு சுதந்திரம் (தரித்திரம்) அடைந்து 64 ஆண்டுகளில் சுமார் 64 சதவீத இந்தியர்கள் (அதாவது சுமார் சரி பாதி இந்தியர்கள்) வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வறுமைக் கோடு என்று இவனுகள் வைத்திருக்கும் வரையறை, தினமும் 32 ரூபாய் செலவு செய்யக்கூடிய வசதி (!!!???) உள்ளவர்கள் இந்த வறுமைக் கோட்டுக்கு உள்ளே வர மாட்டார்களாம். இதை சொல்வது நமது (மெத்த) படித்த, பொருளாதார மேதாவி (!!!???) "மண்ணு" மோகன் சிங். நம் நாட்டில் ஒரு நாளைக்கு 32 ரூபாயில் நாய் கூட வாழ முடியாது. அதைவிட கேவலமான இந்த நாட்டில் இந்த பாழாய்போன அரசியல்வாதிகளை எதனால் அடிக்க வேண்டும் என்று அவர்களே கூறட்டும்.

    யதார்த்த உண்மை இப்படியிருக்க, இந்த சகோதரியிடம் நாம் அதிகம் எதிர்பார்ப்பது நமது அறியாமை. இந்த சகோதரியை நான் மதிக்கிறேன் - ஆனால், ஓர் அரசியல்வாதியாக பார்க்கும்போது..... நாய் வாழ் நிமிர்ந்தாலும் நிமிருமே தவிர, நம் இந்திய அரசியல்வாதிகள் ஒருபோதும் திருந்த போவதில்லை.

    இந்த சகோதரியை நான் குறை கூறுவதாக தயவு செய்து யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம்.

    படித்த மாமேதை என்று நம் இந்திய தேசத்தையே அந்த மண்ணு மோகனிடம் கொடுத்து நாம் ஏமார்ந்து போனோம்!!! ஒரு பாவமும் அறியாத இந்த சகோதரியால் என்ன செய்ய முடியும்????

    ReplyDelete
  2. நம் நாடு சுதந்திரம் (தரித்திரம்) அடைந்து 64 ஆண்டுகளில் சுமார் 64 சதவீத இந்தியர்கள் (அதாவது சுமார் சரி பாதி இந்தியர்கள்) வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வறுமைக் கோடு என்று இவனுகள் வைத்திருக்கும் வரையறை, தினமும் 32 ரூபாய் செலவு செய்யக்கூடிய வசதி (!!!???) உள்ளவர்கள் இந்த வறுமைக் கோட்டுக்கு உள்ளே வர மாட்டார்களாம். இதை சொல்வது நமது (மெத்த) படித்த, பொருளாதார மேதாவி (!!!???) "மண்ணு" மோகன் சிங். நம் நாட்டில் ஒரு நாளைக்கு 32 ரூபாயில் நாய் கூட வாழ முடியாது. அதைவிட கேவலமான இந்த நாட்டில் இந்த பாழாய்போன அரசியல்வாதிகளை எதனால் அடிக்க வேண்டும் என்று அவர்களே கூறட்டும்.

    யதார்த்த உண்மை இப்படியிருக்க, இந்த சகோதரியிடம் நாம் அதிகம் எதிர்பார்ப்பது நமது அறியாமை. இந்த சகோதரியை நான் மதிக்கிறேன் - ஆனால், ஓர் அரசியல்வாதியாக பார்க்கும்போது..... நாய் வாழ் நிமிர்ந்தாலும் நிமிருமே தவிர, நம் இந்திய அரசியல்வாதிகள் ஒருபோதும் திருந்த போவதில்லை.

    இந்த சகோதரியை நான் குறை கூறுவதாக தயவு செய்து யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம்.

    படித்த மாமேதை என்று நம் இந்திய தேசத்தையே அந்த மண்ணு மோகனிடம் கொடுத்து நாம் ஏமார்ந்து போனோம்!!! ஒரு பாவமும் அறியாத இந்த சகோதரியால் என்ன செய்ய முடியும்????

    ReplyDelete
  3. நம் நாடு சுதந்திரம் (தரித்திரம்) அடைந்து 64 ஆண்டுகளில் சுமார் 64 சதவீத இந்தியர்கள் (அதாவது சுமார் சரி பாதி இந்தியர்கள்) வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வறுமைக் கோடு என்று இவனுகள் வைத்திருக்கும் வரையறை, தினமும் 32 ரூபாய் செலவு செய்யக்கூடிய வசதி (!!!???) உள்ளவர்கள் இந்த வறுமைக் கோட்டுக்கு உள்ளே வர மாட்டார்களாம். இதை சொல்வது நமது (மெத்த) படித்த, பொருளாதார மேதாவி (!!!???) "மண்ணு" மோகன் சிங். நம் நாட்டில் ஒரு நாளைக்கு 32 ரூபாயில் நாய் கூட வாழ முடியாது. அதைவிட கேவலமான இந்த நாட்டில் இந்த பாழாய்போன அரசியல்வாதிகளை எதனால் அடிக்க வேண்டும் என்று அவர்களே கூறட்டும்.

    யதார்த்த உண்மை இப்படியிருக்க, இந்த சகோதரியிடம் நாம் அதிகம் எதிர்பார்ப்பது நமது அறியாமை. இந்த சகோதரியை நான் மதிக்கிறேன் - ஆனால், ஓர் அரசியல்வாதியாக பார்க்கும்போது..... நாய் வாழ் நிமிர்ந்தாலும் நிமிருமே தவிர, நம் இந்திய அரசியல்வாதிகள் ஒருபோதும் திருந்த போவதில்லை.

    இந்த சகோதரியை நான் குறை கூறுவதாக தயவு செய்து யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம்.

    படித்த மாமேதை என்று நம் இந்திய தேசத்தையே அந்த மண்ணு மோகனிடம் கொடுத்து நாம் ஏமார்ந்து போனோம்!!! ஒரு பாவமும் அறியாத இந்த சகோதரியால் என்ன செய்ய முடியும்????

    ReplyDelete
  4. @Abdul Rahman, உண்மை தான் காக்கா, ஆனால் இந்தியாவில் நமது ஊருக்கும், மற்ற ஊருக்கும் கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது. 5 வருடங்களுக்கு முன் அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தப் பட்ட “ நமக்கு நாமே திட்டம்” ந்மதூரில் பலவருடங்களாகவே புழக்கத்தில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது...

    எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற நாம் அரசிடம் மட்டுமே உதவி எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை..பல புரவலர்கள் ஊருக்கு எதாவது செய்ய வேண்டுமென்று காத்திருக்கிறார்கள்...அவர்களை பொது காரியங்களுக்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டியது மட்டுமே நமதூரின் ஆட்சி யாளர்களின் பணியாக உள்ளது...

    நான் கீழக்கரை வாசியாக விடுத்துள்ள பெரும்பான்மையான கோரிக்கைகள், ஒரு சாதாரண தொண்டுள்ளம் கொண்ட நபராலேயே நிறைவேற்றக் கூடியதே.. என் விருப்பமெல்லாம் பவரில் இருப்பவர்கள் இதில் ஈடுபட்டால் முழுமையான பலன் நமக்கு கிடைக்குமென்பதே...

    இவர்களுக்கு நாம் சொல்லி என்னவாகப் போகிறது என்பதை விட எதாவது ஆகாதா? என்பது தான் என் ஏக்கம்..!

    ReplyDelete
  5. மங்காத்தாவின் அக்காள் மகன்November 8, 2011 at 7:05 PM

    தம்பி ராஜாக்கான் நீ ரெமப தெரமசாலின்னு காட்டுறதுகவண்டி எழுதுன மாறி இருக்கிது உன்மையான அக்கறை இருந்துச்சுன்னா நம்ம தெருதானே ராபியத்தும்மா நெரடியாக இதல்லாம் சொல்லாமே ஏன் இந்த வெட்டி வேலை எல்லாருக்கும் நீ சொன்னதுல்லம் தெரியும்.ஒன்னும் ஆவ போரதில்லை.

    ReplyDelete
  6. மங்காத்தாவின் அக்காள் மகன்November 8, 2011 at 7:09 PM

    தம்பி ராஜாக்கான் நீ ரெமப தெரமசாலின்னு காட்டுறதுகவண்டி எழுதுன மாறி இருக்கிது உன்மையான அக்கறை இருந்துச்சுன்னா நம்ம தெருதானே ராபியத்தும்மா நெரடியாக இதல்லாம் சொல்லாமே ஏன் இந்த வெட்டி வேலை எல்லாருக்கும் நீ சொன்னதுல்லம் தெரியும்.ஒன்னும் ஆவ போரதில்லை.

    நான் அனுப்ன கமெடன்ட் ஏன் இன்னும் வரல‌

    ஏம்பா செய்தி குழு, மங்காத்தாவின் தங்கச்சி மவன்னாதான் போடுவியலோ அக்கா மகன்னா போட மாட்டியலோ

    ReplyDelete
  7. மங்காத்தாவின் அக்காள் மகன்November 8, 2011 at 7:14 PM

    தம்பி ராஜாக்கான் நீ ரெமப தெரமசாலின்னு காட்டுறதுகவண்டி எழுதுன மாறி இருக்கிது உன்மையான அக்கறை இருந்துச்சுன்னா நம்ம தெருதானே ராபியத்தும்மா நெரடியாக இதல்லாம் சொல்லாமே ஏன் இந்த வெட்டி வேலை எல்லாருக்கும் நீ சொன்னதுல்லம் தெரியும்.ஒன்னும் ஆவ போரதில்லை.

    மெல நான் அனுப்ன கமெடன்ட் ஏன் இன்னும் வரல‌

    ஏம்பா செய்தி குழு, மங்காத்தாவின் தங்கச்சி மவன்னாதான் போடுவியலோ அக்கா மகன்னா போட மாட்டியலோ . நா சொன்னதிலெ ஏதவாது அநாகரீகம இரிக்கிதா ஏன் வெளியிட மாடேன்ரியா எல்லரொட கருதையும் மேவி பொடனும் அதன் ஒழுங்கான பதிரிக்கை

    ReplyDelete
  8. மங்காத்தாவின் அக்காள் மகன்November 8, 2011 at 7:14 PM

    தம்பி ராஜாக்கான் நீ ரெமப தெரமசாலின்னு காட்டுறதுகவண்டி எழுதுன மாறி இருக்கிது உன்மையான அக்கறை இருந்துச்சுன்னா நம்ம தெருதானே ராபியத்தும்மா நெரடியாக இதல்லாம் சொல்லாமே ஏன் இந்த வெட்டி வேலை எல்லாருக்கும் நீ சொன்னதுல்லம் தெரியும்.ஒன்னும் ஆவ போரதில்லை.

    மெல நான் அனுப்ன கமெடன்ட் ஏன் இன்னும் வரல‌

    ஏம்பா செய்தி குழு, மங்காத்தாவின் தங்கச்சி மவன்னாதான் போடுவியலோ அக்கா மகன்னா போட மாட்டியலோ . நா சொன்னதிலெ ஏதவாது அநாகரீகம இரிக்கிதா ஏன் வெளியிட மாடேன்ரியா எல்லரொட கருதையும் மேவி பொடனும் அதன் ஒழுங்கான பதிரிக்கை

    ReplyDelete
  9. மங்காத்தாவின் அக்காள் மகன் என்ற பெயரில் எழுதுபவருக்கு ,
    நாகரீகம் பற்றி எழுதியுள்ள நீங்கள் யார் என்பதை வெளிட்டு நாகரீகத்தை கடைபிடித்திருக்க வேண்டும். ஒரே தெரு என்று எழுயுள்ளீர்க‌ள் ஏன் நீங்களே த‌னிப‌ட்ட‌ முறையில் இதை கீழை ராஸாவிட‌ம் சொல்லியிருக்க‌லாமே ஏன்று இங்கு க‌ருத்து ப‌திந்தீர்க‌ள் ?

    பொது மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை,ஆலோசனைகளை இதுபோன்ற கட்டுரைகளாக எழுதி ஊடங்களில் வெளி வந்தால் அது சம்பந்தட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
    உதாரணத்திற்கு நீங்கள் சொல்வதுபோல் தனிபட்ட முறையில் தலைவரிடம் சொல்கிறார் என்று வைத்து கொள்வோம் அவருக்கும் தலைவருக்கும் மட்டும் தான் அந்த பிரச்சனைகள் தெரியும்.நாளை அந்த பிரச்சனைகளை யாருமே கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியும் ஆனால் இது போன்று பத்திரிக்கைகள் மூலமாக மக்கள் அறியும் வகையில் பிரச்சனைகளை,ஆலோசனைகளை எடுத்து சொல்லியும் தலைவர் தீர்த்து வைக்காமல் இருந்தால் பொது மக்கள் சம்பந்தபட்டவர்களை கேள்வி கேட்பார்கள்.இது போல் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

    கீழை ராஸா இந்த கட்டுரையை தன்னோட பணிகளுக்கிடையே பட்ஜெட் போன்றவற்றை ஆய்வு செய்துஎழுதி இருக்கிறார். நிச்சயம் பாராட்டுக்குறியது.கருத்துக்களில் குறைகள் இருந்தால் எடுத்து கூறுங்கள் வரவேற்கிறோம் இது போன்று பொத்தாம் பொதுவாக குறை கூறாதீர்கள். நமதூரில் இவரை போன்றவர்கள் எழுத்து திறமை படைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். அவர்கள் அனைவரையும் வரவேற்று ஊக்கமளிப்பது நிச்சயம் நமது கடமை.

    ReplyDelete
  10. மங்காத்தாவின் தங்கச்சி மகன்November 8, 2011 at 8:16 PM

    தகுந்த நேரத்திரல் தகுதியான துடிப்பான ஆலோசனை வழங்கிய கீழை ராஸாக்கு ஒர் ஓ........

    செயல் பட்டால் நல்லது. ஆனால் செயல்பட்டே ஆக வேண்டும், மதித்து ஓட்டளித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற. இல்லாவிட்டால் தூற்றுவார்கள். ஒரு கட்டத்தில் பலிக்கக்கூடும்

    (மூஸ்லீம்) குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவ்ர், அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்து விடுவாரேயானால்
    சொர்க்கத்தை அவர்களுக்கு அல்லா தடை செய்து விடுகிறான்.
    கூறியவர்:இறை தூதர் (ஸல்)
    அறிவிப்பாளர்:ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்)
    ஸஹிஹ் புஹாரி
    vol:7 book:93 #7151

    பதவியை கைப்பற்றிய பின் நிர்வாகத்தில் ஆண், பெண் பேதம் கிடையாது . கூடவே கூடாது. அல்லாத பட்சத்தில் பதவியை தூக்கி எறியட்டும்

    ஆகவே கடந்த காலங்களை பற்றி பேசிக்கொண்டே இருக்காமல் நல்லதையே நினைப்போம் நல்லதையே நடுவோம்
    இறைவன் கருணை புரிவான் ஊர் மக்களுக்கு வேண்டியாவது

    ReplyDelete
  11. மங்காத்தாவின் தங்கச்சி மகன்November 8, 2011 at 8:16 PM

    தகுந்த நேரத்திரல் தகுதியான துடிப்பான ஆலோசனை வழங்கிய கீழை ராஸாக்கு ஒர் ஓ........

    செயல் பட்டால் நல்லது. ஆனால் செயல்பட்டே ஆக வேண்டும், மதித்து ஓட்டளித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற. இல்லாவிட்டால் தூற்றுவார்கள். ஒரு கட்டத்தில் பலிக்கக்கூடும்

    (மூஸ்லீம்) குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவ்ர், அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்து விடுவாரேயானால்
    சொர்க்கத்தை அவர்களுக்கு அல்லா தடை செய்து விடுகிறான்.
    கூறியவர்:இறை தூதர் (ஸல்)
    அறிவிப்பாளர்:ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்)
    ஸஹிஹ் புஹாரி
    vol:7 book:93 #7151

    பதவியை கைப்பற்றிய பின் நிர்வாகத்தில் ஆண், பெண் பேதம் கிடையாது . கூடவே கூடாது. அல்லாத பட்சத்தில் பதவியை தூக்கி எறியட்டும்

    ஆகவே கடந்த காலங்களை பற்றி பேசிக்கொண்டே இருக்காமல் நல்லதையே நினைப்போம் நல்லதையே நடுவோம்
    இறைவன் கருணை புரிவான் ஊர் மக்களுக்கு வேண்டியாவது

    ReplyDelete
  12. மங்காத்தாவின் தங்கச்சி மகன்November 8, 2011 at 8:29 PM

    கடலோசையின் கனிவான பார்வைக்கு உண்மையினை உரைத்தீர்கள்.
    நன்றி பாராட்டுக்கள்

    ReplyDelete
  13. @மங்காத்தாவின் அக்காள் மகன், பெயர் மாறி இருந்தாலும் நீங்கள் எனக்குத் தெரிந்த ஒரு காக்காவாகத்தான் இருப்பீர்கள்..படித்து விட்டு சும்ம இருப்பதை விட உங்க மனதில் தோன்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றி...

    காக்கா நான் எழுதிய இந்த கட்டுரை, ஒரு தனிமடல் அல்ல, என் சொந்தப் பிரச்சனை அல்ல, ஊர் பிரச்சனை, இது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய பிரச்சனை.என் திறமையை இங்கு எழுதிதான் காட்ட வேண்டுமென்ற நிலையில் நான் இல்லை என்பது, நீங்கள் என்னை அறிந்திருந்தால் கண்டிப்பாக தெரிந்திருப்பீர்கள்.. இது ஒரு வகையான விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது..இது பல பேருக்கு தெரிந்திருக்கலாம்...ஆனால் தெரியாத ஒரு சிலரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பதான விசயமல்ல இது.. நான் சொன்ன இந்த விசயங்கள் என் அறிவுக்கு புலப்பட்டவை..நான் சொல்லாத எத்தனையோ விசயங்களை நீங்கள் தெரிந்திருக்கலாம்... அதை இங்கே பதிவு செய்யுங்கள்.. அது தான் இந்த கட்டுரையின் நோக்கமே தவிர.. என் திறமையை காட்ட வேண்டுமென்பதல்ல...நான் யாரையும் இங்கு குறை கூற வில்லை... அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டுமென்று தான் கூறுகிறேன்... தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சகோதரே...!

    ReplyDelete
  14. தீப்பொறிNovember 9, 2011 at 1:01 PM

    நல்லா சொல்லியிருக்கீங்க.ஆட்சியாளர்கள் என்ற பெயரில் நம்ம ஊரை நாரடித்த அரசியல் நயவஞ்சர்களுக்கு எழுத்துனால் சாட்டையடி கொடுப்பது மட்டும் போதாது...முக்குரோட்டில் வைத்து கல்லால் அடிக்க வேண்டும் அப்பதான் திருந்து வார்கள்.

    ReplyDelete
  15. Assalamu Alaikum.

    I really appreciated the effort and expectation by my friend native peoples to utilize the goverment facilities and to know the loopholes of the goverment act to be forecast by the newly elected president.As he mentioned as a regular problems like road,sewage system...etc is common problems every where.But President should know the infra structure of Keelakarai in and around with the help of Technical peoples.President should form a advisory commitee to decide as he mentioned.
    Regards,
    Salai.S.L.Khaja Muhyideen

    ReplyDelete
  16. மங்காத்தாவின் மச்சி மகன்November 9, 2011 at 8:54 PM

    அதிமுகாவின் அராஜக ஆட்ட்சி கீழக்கரைக்கும் வந்து விட்டது.கதிராயி வந்தா என்ன பண்ணுவாரோ அதைத்தான் இந்த அம்மாவும் பண்ண போறாங்க. பொருத்து இருந்து பாருங்கள், இவங்களுக்கு எல்லாம் இப்படி சொல்லுவது வேஷ்டுதான்.ஜெயலலிதா திருந்தவே மாட்டார் இந்த மக்கள் தான் அவசரப்பட்டு ஊரை மேப்படியான் கிட்டே கொடுத்து விட்டாங்க.

    ReplyDelete
  17. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 9, 2011 at 9:14 PM

    அன்பர் தீப்பொறியின் ஆத்திரத்தை பரிபூரணமாக உணர முடிகிறது.

    அந்த அளவுக்கு ஊரை சர்வ நாசம் பண்ணி விட்டார்கள்,கட்சி பாகுபாடு இன்றி கூட்டணி அமைத்து.இதற்கு நிர்வாக அதிகாரியும் உடந்தை

    நல்ல செய்தி ஒன்று ஊரில் நிலவுகிறது அதாவது அந்த மலை முழுங்கி மகாதேவ அதிகாரி கூடிய விரைவில் மாற்றப்பட இருக்கிறார். அவருக்கு பதிலாக இப்போது இராமநாதபுரத்தில் பணி புரியும் கமிஷனர் சகோ.முஜீப் ரகுமான் வர இருக்கின்ராறாம். இவரைப் பற்றியும் அந்தபகுதி பொது மக்களிடத்திலும் நல்ல அபிப்பிராயம் இல்லை. என்ன செய்வது? அவர் வரவு நல்வரவாகட்டும். பொருத்திருந்து பார்ப்போம் ஊரின் தலையெழுத்து எப்படி மாறுகிறது என்று?
    கடந்த நகராட்சி நிர்வாகத்தில் மக்களின் நலன் காணாது ஊழல் கமிஷனுக்கு ஆசைப்படடு சாலைகள் அமைத்தார்கள் . பழைய சாலைகளை சீரமைக்காது அதன் மேல் 3 இஞ்ச் வரை சல்லிக்கற்களை மணல் பகுதியில் புதிதாக சாலை அமைப்பது போல ப்ழைய சாலையின் மீது போட்டார்கள். இப்படி பல முறை ஒரே சாலையில்.
    அதன் காராணமாக சாலைகள் அபரிதமாக உயர்ந்து பல வீடுகளின் தலைவாயில்கள் சாலையின் மட்டத்தை விட மிகத் தாழ்ந்து விட்டது.கடந்த சில நாட்களூக்கு முன் பெய்த தொடர் மழையில் அவர்கள் பட்ட வேதனைகளை எழுத்தில் கொண்டு வர முடியாத ஒன்று. அதிலும் பாவப்பட்ட ஏழை மக்கள் பட்ட துயரம் சொல்லி மாளாது. குடி இருப்பு வீடுகள் மட்டும் அல்ல. பல வியாபார வளாகங்கள் வாணிபப் பொருளுடன் சீரழிந்தது. இதற்கு யார் பொருப்பேற்பது ?

    சமீபத்திய நகராட்ச்சி வாக்கு பதிவுக்கு சில தினங்களுக்கு முன் குடி நீர் குழாய்கள் அவசரம் அவசரமாக தரம் குறைந்த போலி ஐ.எஸ்.ஐ முத்திரை இட்ட 4 இஞ்ச் பி.வி.சி. பைப்களை பதித்தார்க்ள். சாதாரணமாக நமது வீடுகளில் கழிவு நீர் வெளியேற 4 இஞ்ச் பைப் போடுவோம். நூற்றுக்கணக்கான குடி நீர் இணைப்புகள் கொடுக்கக்கூடிய பைப் 4 இஞ்ச்? எப்படி த்ண்ணீர் வரும் ? இதை கண்காணிக்க வேண்டியது கவுன்சிலர்களின் பொருப்பு இல்லையா? இவர்களை நாற்சந்திகளில் நிறுத்தாமல் விட்டது நமது இழைத்த மாபெரும் தவறா இல்லையா? இதில் வெக்கி தலை குனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயம் அவர்களும் இந்த தேர்தலில் ஓட்டு கேட்டு வ்ந்தார்கள். சொரணை அற்ற நம் மக்களில் சிலர் அவர்களுக்கும் வாக்கை பதிவு செய்தார்கள்.நல்ல வேளையாக இறைவனின் பெருங்கருணையினால் ஒருவரைத் தவிர மற்றவர்கள் தேறவில்லை. அல்ஹம்து லில்லா.

    என்ன செய்வது அன்பர் தீப்பொறி அவர்களே!!! நீங்களும், நானும். அவர்களும் அரபு மற்றும் சீன நாட்டில் இல்லையே? பொருமையாய் இருந்து நாமும் சற்று விழிப்புணர்வுடன் செயல் பட்டால் ஊர் நலம் சற்று முன்னேற்றம் காண்லாம். செய்வோமா?

    ReplyDelete
  18. Dear Kilakkarai brothers and sisters, I would like to appreciate the initiatives taken by all of you to rightfully use the political previliges of the town for the betterment of all the people. I personally do not belong to Kilakkaarai but as a well wisher who had studied in MSEC, Kilakkarai from 1993-98 I would like to post my views on this discussion.
    To be honest, I had to spend most of my precious college years in hospitals because of chronic Malaria, Typhoid and Jaundice than studying at the college. I came to know that it was not just my case but that the whole town's population was suffering a similar fate to a lesser or greater degree. All of this trauma was because of unhealthy sanitary conditions,lack of proper sewerage system, polluted underground water and unsafe drinking water that was available to the town. I always wondered , what was the worth of the town's affluence when there was no conviction and determination to root out the negative factors affecting the most basic of human living needs.

    IGNORANCE, LACK OF COMMITTMENT AND POLITICAL will of the people for a unified and decisive action was very apparent. I'm not saying that other municipalities are better but for the reputation of Kilakkarai and for the exposure that its people have to the whole world, they should ideally be LEADING BY EXAMPLE instead of the squalor and sickness that prevailing in their wards.

    I was really happy that brother RajaKhan has made a sincere effort in bringing AWARENESS not only to his town folks but to his brethren from other cities and towns like me. I wish that this awareness is published in state and national magazines which will help us make a better nation.

    We can excel and prosper only when we accept and act upon our shortcomings rather than sweeping the garbage under the carpet. I also wish success to the new leader and the people of Kilakkarai in their pursuit of a better future.

    Best Regards,
    Abdul Azeez

    ReplyDelete
  19. கருத்துக்களை பதிவு செய்த
    1) அப்துல் ரஹ்மான்
    2)மங்காத்தாவின் அக்காள் மகன்
    3) மங்காத்தாவின் தங்கச்சி மகன்
    4) கடலோசை
    5) மங்காத்தாவின் மச்சி மகன்
    6)தீப்பொறி
    7) காஜா முஹிய்யதீன்
    8)அப்துல் அஜீஸ்

    உங்கள் அனைவருக்கும் நன்றி...மங்காத்தாவின் தங்கச்சி மகன் போன்ற நபர்கள் ஊர் நிலவரம் முழுதும் தெரிந்தவாராக உள்ளனர்,அவர்களைப் போன்றோர் முன் வந்து பொதுவான நல்ல காரியங்களை செய்ய வேண்டும்...உங்களின் எழுத்து உங்கள் பக்குவத்தை காட்டுகிறது..

    தீப்பொறி, மற்றும் மமம போன்றோர் தங்களின் ஆதங்கத்தை ஆக்ரோஷமான முறையில் காட்டியுள்ளீர்கள்...உங்கள் ஆதங்கம் நியாயமானது என்றாலும் பொருமை அவசியமில்லையா...?

    காஜா முஹிய்யதீன் மற்றும் அப்துல் அஜீஸ் ஆகியோர் நமதூர் இல்லை என்றாளும் அவர்களின் எழுத்துக்கள் நம்தூரின் மீது அவர்கள் கொண்ட அக்கரையை காட்டுகிறது.

    இதைப் படித்த நமதூர் மக்களே நமக்கும் இதுக்கும் சம்பந்ந்தமில்லை என்பதைப் போல விலகிச் செல்ல, இவர்களைப் போன்றோர் தங்கள் நேரத்தை ஒதுக்கி கருத்து கூறியுள்ளது உண்மையில் பாராட்டத்தக்கது.

    எல்லாவற்றிற்கும் மேலாக இது போன்ற கட்டுரையை பிரசுகரித்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் என் போன்றோரை ஊக்குவித்து கட்டுரைகளைப் பெற்று, பிரசுகரித்து அதில் வரும் இடர்பாடுகளுக்கும் பதிலளித்து சிறப்பாக செயல்பட்டு வரும் கீழக்கரை டைம்ஸ்செய்திக்குழு நண்பர்கள், யாசீன் மற்றும் அவர்குழுவினருக்கு என் நன்றி கலந்த பாராட்டுகள்...இதில் பதிலளிக்காவிட்டாலும் தொலைபேசியிலும், நேரிலும் இது சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் நன்றி...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.