குர் ஆனை வைத்து"சொல்லவில்லை" என்று சத்தியம் செய்யும் துணை சேர்மன் ஹாஜா முகைதீன். குரானில் சத்தியம் செய்யாதீர்கள் என்று கூறி குரானை வாங்குவதற்கு பாயும் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்.
வாக்கு வாதத்தில் கவுன்சிலர்கள்
கீழக்கரை நகராட்சி கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்தில் தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.கூட்டம் தொடங்கியது முதல் நிறைவு வரை அமளி நிலவியதால் பரபரப்பு காணப்பட்டது.
நகராட்சியில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி .....
அஜ்மல் கான் (11வது வார்டு):- கீழக்கரைக்கு நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவா ? அல்லது அவர் கணவர் அமீர் ரிஸ்வாணா ? பொது மக்களுக்கும்,நிர்வாகிகளுக்கும் குழப்பமாக உள்ளது என்றும் மேலும் அமீர் ரிஸ்வான் நிர்வாகத்தில் தலையிடுகிறார் இது அரசின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது.
தலைவர் ராபியத்துல் காதரியா :- உங்கள் வீட்டு பெண் தலைவராக வந்தால் நீங்கள் வரமாட்டீர்களா ,பெண் என்பதால் வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்.கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தில் வந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.பொய்யான புகார்களை கூறுவதையும் நோட்டிஸ் வெளியிடுவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் மேலும் துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஒரே நபருக்கு நான்கு பணிகளுக்குக்கான டெண்டரை வழங்கும்படி தெரிவித்தார்கள்.அவர் கூறியபடி நடக்காததால் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
துணை தலைவர் ஹாஜா முகைதீன்:-
நான்கு பணிகளை ஒரே நபருக்கு வழங்க நான் உங்களிடம் சொல்லவில்லை(துணை சேர்மன் ஹாஜா முகைதீன் திடீரென குர் ஆனை எடுத்து வர சொல்லி "சொல்லவில்லை" என்று குர் ஆனை வைத்து கொண்டு சத்தியம் செய்தார் அருகிலிருந்த கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் உடனடியாக குரானில் சத்தியம் செய்யாதீர்கள் என்று கூறி பாய்ந்து சென்று குரானை வாங்கினார்.)
இதனையடுத்து சபையில் அதிர்ச்சி நிலவியது.கீழக்கரை வராலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் ..
சுரேஷ் :- கீழக்கரை நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கழிவு நீர் வாய்கால்களை துப்புரவு செய்யும் பணி முறையாக நடைபெறவில்லை.
முகைதீன் இப்ராகிம்(18வது வார்டு):- நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் 96 இதில் 50 கிணறுகள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்களை மீட்க வேண்டு.மேலும் நகராட்சி தற்போது விடப்பட்டுள்ள டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. முறையாக மறு டெண்டர் விட வேண்டும்.
இடி மின்னல் ஹாஜா (20வது வார்டு):- சேதுக்கரை குடிநீர் திட்டத்தில் உயர் திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தது இதில் 8 மோட்டார்கள் தற்போது மாயாமாகியுள்ளது .மேலும் கீழக்கரையில் அமைக்கப்படும் சாலைகள் ஒரு வாரத்தில் காணாமல் போகிறது எனவே ரோடு அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை மக்களின் முக்கிய பிரச்சனையான குடிநீர்,குப்பை,சாக்கடை இவற்றிலும் காட்ட வேண்டும் .
அன்வர் அலி (7வது வார்டு) :- தச்சர் தெருவில் உள்ள உயர் மின் கோபுர விளக்கில் வயர்கள் தனியார் ரோடு போடும் நாசம் செய்யப்பட்டது. இதை அவர்களே சரி செய்வதாக உறுதி அளித்திருந்தனர் ஆனால் நகராட்சி நிர்வாகம் இதற்கு ரூ60636 செலவு செய்திருப்பதாக தீர்மானம் கொண்டு வந்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
இது தவிர இன்னும் பல் வேறு விவாதங்கள் நடைபெற்றன. நகராட்சி கூட்டம் மாலை 4/30 மணியில் இருந்து இரவு 7.45 வரை நடைபெற்றது. இதில் பல முறை மின் தடை ஏற்பட்டதால் கவுசிலர்கள் பேசுவதை கவனிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. கூச்சலும்,குழப்பமுமாக கூட்டம் நிறைவு பெற்றது. ஒரு சில தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி கூட்டம் குறித்து ராபியத்துல் காதரியா கூறுகையில் , கூட்டத்தை அமைதியான முறையில் நடத்த விடக்கூடாது என்ற நோக்கத்தில் சிலர் நடந்து கொண்டனர்.இது போன்ற செயல்கள் ஊரின் நலனை பாதிக்கும்.மேலும் துணை தலைவர் ஹாஜா முகைதீன் குறிப்பிட்ட நபருக்கு டெண்டரை வழங்க சொன்னார் என்று நானும் சத்தியம் செய்வதாக கூறினேன்.இப்போதும் சொல்கிறேன் எப்போதும் ,எங்கேயும் அவர் சொன்னது உண்மை என்று சத்தியம் செய்ய தயார் என்னை பற்றி மக்களுக்கு தெரிந்தால் போதும். தற்போது நகராட்சி நன்றாக செயல்படுவதை தடுப்பதற்காக இதுபோன்ற இடைஞ்சல்களை தருகிறார்கள். கவுன்சிலர்கள் சிலரும்,துணை தலைவர் ஆகியோர் என்னிடம் நகராட்சி நிகழ்ச்சிகளுக்கு கணவர் இல்லாமல் வர சொல்கிறார்கள் என்னால் அப்படி வர முடியாது சகோதரர்கள் அல்லது கணவருடன்தான் வருவேன்.துணை சேர்மேன் அவர்கள் வேலுச்சாமி உள்ளிட்ட இரண்டு பேருடன்தான் வருகிறார்.ஒரு பெண்ணாக நான் கணவருடன் வரக்கூடாதா? ஒரு பெண்ணாக நான் எடுத்த இந்த முடிவுக்கு ஊர் மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என்றார்.
நகராட்சி கூட்டம் கூறித்து அமீரக காயிதே மில்லத் பொருளாளர் ஹமீது ரஹ்மான் கூறியதாவது,
இரு தரப்பும் ஊர் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் ஊரின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது கீழக்கரை மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்
ஐயா துணை தலைவர் ஹாஜா முகைதீன், போதும் இதோட நிறுத்திக்குவோம். தலைவர் ராபியத்துல் காதரியா வந்த பிறகு தான் கீழக்கரை கொஞ்சம் முன்னேறிக்கிட்டு இருக்கு. இதையும் உங்கள் அரசியல் உள்நோக்கதுக்காக நீங்களும் உங்க குரூப்பும் சேர்ந்து கெடுத்து விடாதீர்கள். நர்ஸ் இல்லாமல் டாக்டர் இல்லை, ஸ்டூடன்ட் இல்லாமல் டீச்சர் இல்லை, கணவர் இல்லாமல் தலைவர் ராபியத்துல் காதரியா அவர்களும் இல்லை. நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிமாக இருந்தால் இவர் போன்ற இஸ்லாமியப் பெண்மணியைப் பார்த்து இப்படி கூறி இருக்க மாட்டீர்கள்.கணவர் இல்லாமல் தான் வரணும் என்ற வார்த்தையும் உங்கள் வாயில் இருந்து வந்திருக்காது.குர்ஆனில் சத்தியம் செய்யணும் என்ற எண்ணமும் வந்திருக்காது. மொதல்ல போயி இஸ்லாத்தை படிக்கிற வேலையை பாருங்க. துணை தலைவர் வேலையை எல்லாம் அப்புறம் பாப்போம். இல்லையென்றால் அடக்கி வாசிங்க சரியா...
ReplyDeleteThe two independant councilers'(ward No:12 & 18), activities are not in the interests of the general public of Keelakarai. They have to be disqualified for their involvement in interference in others' family matters and unlawful activities. Their organization," Makkal Nalla Padugapu Khaligam" should be banned, in our town and district so that they do not carry on their activities against public interests. Necessary petition should also be forwarded to the Collector, SP & Muncipal Chairman to disqualify the above 2 undeserving candidates, so that our good work to the town and our state as a whole can be continued for our growth.The above 2 memebers cannot speak about bribe as they themselves are involved in many scams and land scandlas.
ReplyDeleteThanks,\
Yours,
A Keelakarai well wisher
Dear Admin,
ReplyDeleteThe comments which viewers are giving it should displayed like a news, bcos many peoples are not seeing the comments. they are reading the one news then going to another news and not seeing the comments. so requesting you to make the configuration that, comments to display automatically LIKE A NEWS, instead clicking on comments button and seen.
The two independant councilers'(ward No:12 & 18), activities are not in the interests of the general public of Keelakarai. They have to be disqualified for their involvement in interference in others' family matters and unlawful activities. Their organization," Makkal Nalla Padugapu Khaligam" should be banned, in our town and district so that they do not carry on their activities against public interests. Necessary petition should also be forwarded to the Collector, SP & Muncipal Chairman to disqualify the above 2 undeserving candidates, so that our good work to the town and our state as a whole can be continued for our growth.The above 2 memebers cannot speak about bribe as they themselves are involved in many scams and land scandlas.
ReplyDeleteThanks,\
Yours,
A Keelakarai well wisher
அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரரே, மிகவும் சரியாகச்சொன்னீர்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரரே, மிகவும் சரியாகச்சொன்னீர்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரரே, மிகவும் சரியாகச்சொன்னீர்கள்.
ReplyDeleteattn:chairman of kilakarai(நகராட்சி தலைவார்)
ReplyDelete"you please do not bother about such useless condemn"
keep on doing your social services.
millions of peoples behind you to support.
thanks in advance
mohammed shahul
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteசகோதரர் முஹம்மது சொல்வது உண்மையானதுதான். நான் கூட கோஷா பெண் அல்லவா, இந்த பெண் தலைவராக வந்தால் என்ன நடக்கும்? ஊரின் முன்னேற்றம் எப்படி இருக்கும் என கவலைப்பட்டேன். ஆனால் தன் பணியினை மெதுவாக ஆரம்பித்தாலும் நன்றாகவே கவனித்து வருகிறார். முன்னாள் நகராட்சித் தலைவரின் செயல்பாட்டிற்கு இவர் எவ்வளவு மேல்.
ஒரு இஸ்லாமிய பெண் மஹரம் இல்லாமல் வரக்கூடாது. முறையான மஹரமான தன் கணவருடன் அவர் தன் பணியினை செய்வதுதான் சரி.
திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள்தான், அதற்காக அதன் மீது சத்தியம் செய்வது கூடாது. ஒருவர் தன் செயலுக்கு ஆதரவு தேட அல்லாஹ்வின் மீதுதான் சத்தியம் செய்ய வேண்டுமே தவிர, குர்ஆன் மீதோ, கஃபா மீதோ, பெற்றோர் அல்லது பிள்ளைகள் மீதோ சத்தியம் செய்யலாகாது.
தலைவரால் பணி செய்ய இயலாத போதுதான் துணைத் தலைவர், தலைவரின் பொறுப்பை செய்ய வேண்டும். துணைத் தலைவர் என பொறுப்பு கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்காக தலைவரின் பணிகளில் குறுக்கீடு செய்வது நல்லதல்ல.
தலைவர், து.தலைவர் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படி நடந்தால்தான் ஊர் முன்னேறும்.
அல்லாஹ் நல்லருள் புரியட்டுமாக!
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல் முஹம்மது.
Well Said kaka...
Deleteஇருவருமே ஒரே கட்சியை சார்ந்தவர்கள்தான். இருவருமே குரானின் மீது சத்தியம் செய்ய தயார். ஆக மொத்ததில் யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்கள். அதற்க்கு குரானை வைத்து சத்தியம் செய்யனுமா? ஏன் இந்த அசிங்கம்? இப்படியுமா சம்பாதிக்கனும்? இந்த பதவிக்கு வர போட்ட முதலை எடுக்கும் நேரம் வந்துவிட்டதா?
ReplyDeleteஉணறட்டும் என் ஊர் மக்கள்....
dear Keelakarai,
ReplyDeleteThe two independant councilers'(ward No:12 & 18),pointing finger photo pls see
which shows their behaviour......
Thanks,
Yours,
A Keelakarai well wisher
Blogger MJS said...
ReplyDeleteஉட்கட்சிப்பூசல்,
யாராக இருந்தாலும் சரியே மறுமைக்கு பயந்து கொள்ளுங்கள். மறைவானவற்றை அறியக்கூடியவன் இறைவன். அமானிதத்தை உண்பவனுக்கும், உண்ணத் துணை போகக் கூடியவனுக்கும் கடுமையான வேதனை காத்திருக்கிறது (இறை மொழி)
நான்கு சுவர்களுக்குள் என்று இல்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் இருதரப்பினரும் விளக்கம் கொடுங்கள் அது உங்கள் கடமை.
8 January 2012 20:41
Above comments has been registered against the news published in கீழக்கரை சேர்மன் BLOGSPOT, under the topic
"முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றதை திசை திருப்புவதா? அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை நம்ப வேண்டாம் - நகராட்சித் தலைவர் விளக்கம்..."
oru pen enru paarkamal athati pesum aangale ithu ungalukku alaga ? unga sagotharinna ipadithan seiviyyala
ReplyDeletepen pavam pollathathu
nooriya
Very well Kilai Chairman... (enga full supportum ungalukkuthan...) yearukkum payappada vendam....Allah oruvanai thavira....
ReplyDeleteகீழக்கரை நாகராட்சி தலைவி தன் கணவருடன் செல்வது அவசியமான ஒன்றுதான் ஆனால் கணவர் நகராட்சி விசயங்களில் தலையிடுவது தவறான ஒன்றாகும் எனவே கணவர் தன்னை திருத்தி கொள்வது தான் அவர் தான் மனைவிக்கு உதவுவதாகும்
ReplyDeleteகீழக்கரை நாகராட்சி தலைவி தன் கணவருடன் செல்வது அவசியமான ஒன்றுதான் ஆனால் கணவர் நகராட்சி விசயங்களில் தலையிடுவது தவறான ஒன்றாகும் எனவே கணவர் தன்னை திருத்தி கொள்வது தான் அவர் தான் மனைவிக்கு உதவுவதாகும்
ReplyDeleteகீழக்கரை நாகராட்சி தலைவி தன் கணவருடன் செல்வது அவசியமான ஒன்றுதான் ஆனால் கணவர் நகராட்சி விசயங்களில் தலையிடுவது தவறான ஒன்றாகும் எனவே கணவர் தன்னை திருத்தி கொள்வது தான் அவர் தான் மனைவிக்கு உதவுவதாகும்
ReplyDeleteகீழக்கரை நாகராட்சி தலைவி தன் கணவருடன் செல்வது அவசியமான ஒன்றுதான் ஆனால் கணவர் நகராட்சி விசயங்களில் தலையிடுவது தவறான ஒன்றாகும் எனவே கணவர் தன்னை திருத்தி கொள்வது தான் அவர் தான் மனைவிக்கு உதவுவதாகும்
ReplyDelete