Thursday, May 17, 2012

கீழக்கரையில் மாநில தலைவர் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐயில் இணைந்தனர் !





கீழ‌க்க‌ரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் கொடியேற்று விழா ம‌ற்று தெருமுனை பிர‌ச்சார‌ம் ந‌டைபெற்ற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் மாநில‌ த‌லைவ‌ர் தெஹ்லான் பாக்க‌வி முன்னிலையில் கீழ‌க்க‌ரை முன்னால் க‌வுன்சில‌ர் ஜஹாங்கிர் அரூஸ்,500 பிளாட் ஹைத‌ல் அலி ஆலிம்,த‌ர்ம‌ராஜ்.எம்.ஏ.பி.எல்,ஜெய‌குமார்(கும்பிடு ம‌துரை) செய்ய‌து அப்தாகிர்,ப‌ல்லாக்கு என்ற‌ ஹ‌பீப் முஹ‌ம்ம‌து உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் சோஷிய‌ல் டெமாக்ர‌டிக் பார்டி ஆப் இந்தியா க‌ட்சியில் த‌ங்க‌ளை இணைத்து கொண்ட‌ன‌ர்.
அப்துல் ஹ‌மீது ,அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உட‌னிருந்த்ன‌ர்

Wednesday, May 16, 2012

கீழக்கரையில் அதிமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழா !




கீழ‌க்க‌ரையில் அதிமுக‌ அர‌சின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு சாத‌னை விள‌க்க‌ பொதுகூட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.

ந‌க‌ராட்சி துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,சிறுபாண்மை பிரிவு செய‌லாள‌ர் யாசீன்,ந‌க‌ர் பொருளாள‌ர் நார‌ய‌ண‌ன்,விவ‌சாய‌ அணி செயலாள‌ர் பாரூக்,இளைஞ‌ர் அணி செய‌லாள‌ர்
சரவண பாலாஜி ,நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
இந்நிக‌ழ்ச்சியில் 100க்கு மேற்ப‌ட்டோருக்கு அன்னாதான‌ம் மற்றும் இனிப்புக‌ள் வ‌ழ‌ங்கப‌ட்ட‌து

பாபு ,வேல்சாமி,நாக‌ர‌த்தின‌ம்,பார‌தி,கும‌ர‌ன்,சுரேஷ் ம‌ற்றும் ஏராள‌மான‌ அதிமுக‌வின‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் கொடியேற்று விழா!



கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கிளையின் சார்பாக கொடியேற்று விழா மற்றும் தெருமுனை கூட்டம் நகர் தலைவர் செய்யது அபுதாகிர் தலைமையில் முஸ்லீம் பஜாரில் நடைபெற்றது.மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கலந்துகொண்டார்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அப்பாஸ் ஆலிம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில பொது செயலாலர் அப்துல் ஹமீது,மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,துணை தலைவர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் முகம்மது இஸ்ஹாக்,சோமு ,ராமகிருஸ்ணன்,பைரோஸ்கான்,சேகு பகுருதீன்,அ.மு.சுல்தான் மற்றும் பலர் முன்னிலையில் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கொடியேற்றி வைத்து பேசினார். நகர் செயலாளர் அப்துல் ஹாதி நன்றி கூறினார்.

Sunday, May 13, 2012

கீழக்கரை கடல் பகுதிக்கு வந்த கப்பல்!






தகவல் : முஜீப்

மன்னார் வளைகுடாவை சேர்ந்த கீழக்கரை கடல் பகுதியில் மீன் பிடி படகுகளை அதிக அளவில் காணமுடியும் மிக அரிதாக கப்பல்கள் வருகை இருக்கும் அந்த வகையில் கப்பல் ஒன்று தென்பட்டது.

இக்கப்பல் பழுதடைந்து கடலில் தரைதட்டி நிற்கும் கப்பல்களை மீட்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் இழுவை கப்பல் என்று கூறப்படுகிறது. இக்கப்பலை காண ஏராளமனோர் கடற்கரைக்கு வந்தனர்.

Saturday, May 12, 2012

கீழக்கரையில் காவல்துறை அதிகாரி மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு ! குறைதீர்ப்பு நாளில் பரபரப்பு!(ப‌டங்க‌ள்)





கீழ‌க்கரை காவல்நிலையத்தில் காவ‌ல்துறை சார்பாக‌ குறைதீர்ப்பு நாளில் ஏராளாமான‌ பொதும‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்டு கோரிக்கை ம‌னுக்கள் அளித்த‌ன‌ர்.

இந்நிக‌ழ்ச்சியில் காவ‌ல்துறை சார்பில் டிஐஜி ராம‌சுப்பிர‌ம‌ணிய‌ன்.எஸ்பி காளிராஜ் உள்ளிட்டோர் ம‌னுக்க‌ளை பெற்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரையில் புறக்காவ‌ல் நிலைய‌ம் அமைப்ப‌து,போக்குவ‌ர‌த்து காவலர்களை நிய‌மிப்ப‌து,ஏர்வாடியில் அடையாள‌ம் தெரியாத‌ ந‌ப‌ர்க‌ளின் ந‌ட‌மாட்ட‌த்தை க‌ண்காணிப்ப‌து,க‌ள் விற்ப‌னையை த‌டுப்ப‌து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தி பொதும‌க்க‌ள் சார்பில் 42 ம‌னுக்க‌ள் காவ‌ல்துறையின‌ரிட‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா ,கீழ‌க்க‌ரை டிஎஸ்பி தன்னிடம் குறிப்பிட்ட வழக்கிற்காக‌ ல‌ஞ்ச‌ம் கேட்ட‌தாக‌ நேர‌டியாக‌ காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளிட‌ம் குற்ற‌ஞ்சாட்டினார்.

காவ‌ல்துறை ந‌ட‌த்திய‌ குறைதீர்ப்பு நாளில் காவ‌ல்துறை மீது நேர‌டியாக‌ குற்ற‌ச்சாட்டு வைத்ததால் சிறிது நேர‌ம் அதிர்ச்சி நில‌விய‌து.

தொட‌ர்ந்து ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் பொதும‌க்க‌ளின் கோரிக்கைக‌ளை ப‌ரிசீலித்து ஆவ‌ண‌ செய்ய‌ப்ப‌டும் என‌ காவ‌ல் துறை உய‌ர் அதிகாரிகள் தெரிவித்த‌ன‌ர்.

கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் புதிய பொறுப்பாளர் நியமனம் !



கீழ‌க்க‌ரை வெல்பேர் டிர‌ஸ்ட் சார்பில் செய்ய‌ப்ப‌டும் ந‌ல‌ப்பணிகளில் முக்கிய‌ ப‌ணியாக‌ துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு நகர் முழுவதும் வீடு வீடாக‌ சென்று குப்பைக‌ளை அக‌ற்றுவ‌து போன்ற சுகாதாரம் தொடர்பான ப‌ணிக‌ள் ந‌டைபெற்று வருகிற‌து.

இந்நிலையில் கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் பொறுப்பாளர் ஏ.கே.எஸ்.லியாகத் அலி சமீபத்தில் காலமானதை தொடர்ந்து தற்போது கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் பொறுப்பாளராக அப்துல் அஜீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Friday, May 11, 2012

கொசுக்கள் உற்பத்தி நிலையமாக சாலையோர கழிவு நீர் கால்வாய்கள் ! சீரமைக்க கோரிக்கை!


நடுத்தெரு ஜீம்மா பள்ளி அருகே குப்பைகள் நிறைந்து காணப்படும் கழிவு நீர் கால்வாய்


கிழக்கு தெரு பகுதி சாலை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
கீழக்கரையில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சீராக ஓடாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது.மேலும் பல இடங்களில் கால்வாயின் சிமெண்ட் பகுதி உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.

கழிவுநீர் தேங்கி ஒரே இடத்தில் நிற்பதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு அப்பகுதி முழுவதும் நோய்களை பரப்பும் கொசுக்கள் உருவாகிறது.இதனால் அந்தந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.மேலும் சில இடங்களில் கால்வாய்களில் குப்பைகளை அகற்றி விட்டு அங்கேயே விட்டு சென்று விடுகிறார்கள்.இதனால் மீண்டும் அந்த குப்பைகள் கால்வாய்களில் கலந்து விடுகிறது என்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ்துணை தலைவர் மூர் ஹசனுதீன் கூறுகையில் ,

நகர் முழுவதும் இந்த அவல நிலை நீடிக்கிறது.நகராட்சி பதவியேற்ற உடன் இந்த கால்வாய்கள் தூர் வாரப்பட்டன.ஆனால் எவ்வித பிரயோஜமும் இல்லை சில மாதங்களில் தற்போது கால்வாய்களில் அடைப்பும்,உடைப்பும் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றார்

மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் தமீமுதீன் கூறுகையில்,

கால்வாய் அடைப்புகளை சரி செய்யும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை அங்கேயே விட்டு செல்லாமல் அப்பகுதியிலிருந்து அகர்ற வேண்டும்.அது இல்லாம அடைப்புகள சரி செய்வது பலனில்லை என்றார்.

Thursday, May 10, 2012

கீழக்கரையில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்



கீழக்கரை,

கீழக்கரையில் முறிந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை விபத்து ஏற்படும் முன் அகற்ற மின்வாரிம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளிலுள்ள தெருக்களில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பல மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது எப்போது யார் தலையில் விழும் என்ற நிலையில் உள்ளது. விபரீதம் நடக்கும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து 6வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் கூறியதாவது, ஆறாவது வார்டில் இந்து பஜார், மறவர் தெரு உள்பட 4 இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன. மின்கம்பங்களின் அடிப்பாகம் சிதிலமடைந்து முறிந்து விழும் வகையில் உள்ளது.

மின்கம்பத்தின் மேலே செல்லும் மின் கம்பியை தாங்கி நிற்கும் இரும்பு ஆங்கிள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. முறிந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபரீதம் உணர்ந்து முறிந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சேர்ம‌ன் மீது போலீசில் புகார் ! எல்லாம் விள‌ம்பர‌த்துக்காக‌..சேர்ம‌ன் ப‌தில் !




ந‌க‌ராட்சி கூட்ட‌த்தின் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா த‌காத‌ வார்த்தையில் திட்டிய‌தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் புகார் அளித்துள்ளார்.


18வது வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் போலீசில் கொடுத்துள்ள‌ புகார் விப‌ரம் கீழே தரப்பட்டுள்ளது:-

நகராட்சியின் அவசர கூட்டம் 03.05.2012 வியாழன் மாலை 4 மணியளவில் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவி அவர்கள் தலைமையில், நகராட்சி ஆணையர் அவர்கள் முன்னிலையில், துணை சேர்மன் அவர்கள், பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 37 வது பொருளின் மீது விவாதம் நடைபெற்ற போது குறைந்த விலை புள்ளிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்க்கு வேலை வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் மக்கள் பணம் வீணாகாமல் தடுக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு குறைந்த புள்ளிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்க்கு வேலை வழங்க நான் உள்பட பல நகர்மன்ற கவுன்சிலர்கள் வற்புறுத்தினோம்.

ஏதோ சில காரணங்களுக்காக நகராட்சி தலைவி அவர்கள் அவர் குறிப்பிடும் ஒப்பந்ததாரர்க்கு தான் வேலை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதை கருத்தில் கொண்டு நானும், பல உறுப்பினர்களும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதை பொறுத்து கொள்ள முடியாத நகராட்சி தலைவி அவர்கள் என்னை மாமன்ற உறுப்பினர் என்று பாராமல் தன் பதவிக்கும் கண்ணியம் அளிக்காமல் லூ____ மாதிரி பேசாதீர்கள் என்று தகாத வார்த்தைகளால் பேசினார். இதை எதிர்பார்க்காத நான் மாமன்றத்தின் கண்ணியம் கருதி நகராட்சி தலைவி அவர்கள் என்னை தவறாக பேசியது பற்றி மன்றத்தில் எந்த விவாதமும் செய்யவில்லை.

நான் மாமன்ற 18 வது வார்டு கவுன்சிலராகவும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளராகவும், பல பொது அமைப்புகளின் பொறுப்பாளராகவும் இருக்கின்றேன்.

மாமன்ற உறுப்பினராகவும், பல பொது அமைப்புகளின் பொறுப்பாளராக இருக்கும் என்னை நகராட்சி ஆணையர் அவர்கள், நகராட்சி ஊழியர்கள், துணைச்சேர்மன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன் மாமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக அவதூறாக பேசிய மாமன்ற தலைவி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றேன்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா த‌ர‌ப்பில் கேட்ட‌ போது,

ந‌க‌ராட்சி கூட்ட‌த்தின் போது முன்னாள் அமைச்சர்‌ அன்வ‌ர் ராஜா உள்ளிட்ட‌ சில‌ர் மீது குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறினார்.அப்போது "ச‌பையில் இல்லாத‌வ‌ர்க‌ளை ப‌ற்றி அவ‌தூறாக‌ பேச‌ வேண்டாம்" என்ற‌ அர்த்த‌தில் அவ்வாறு கூறினேன் அவ‌ரும் அதே ப‌திலை என்னிடம் கூறினார் அத்தோடு பிர‌ச்ச‌னை முடிவ‌டைந்து விட்ட‌து.மேலும் கூட்ட‌த்தின் போது 3வ‌து வார்டில் த‌லையிட்டு இவர் பேசிய‌தால் அந்த‌ வார்டு உறுப்பின‌ர் இவ‌ருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இப்ப‌டிவேண்டுமென்றே இவ‌ர் பிர்ச்ச‌னைக‌ளை எழுப்புவ‌தும்,ப‌ணிக‌ள் செய்ய‌ விடாம‌ல் தொந்த‌ர‌வு செய்வ‌தும் இவ‌ருக்கு வாடிக்கையாகிவிட்ட‌து.இவை அனைத்தையும் இவ‌ர் செய்வ‌து சுய விள‌ம்ப‌ர‌த்திற்காக‌த்தானே த‌விர‌ வேறில்லை. நான் ஒரு பெண் என்று கூட பாராமல் நகராட்சி கூட்டங்களில் கேலியும்,கிண்டலுமாக பேசி இவர் நடந்து கொள்ளும் விதம் முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.இவரின் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு‌ ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஆலோசித்து வ‌ருகிறோம்.

Monday, May 7, 2012

2 நாள் தொடர் திருமணங்களால் களை கட்டிய கீழக்கரை !(படங்கள்)










கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் (05-05-12 / 06-05-12) ஆகிய இரண்டு நாட்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
திருமணங்களையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்தும் ,வெளிமாநிலங்களிலிருந்தும் கீழக்கரையில் குவிந்தனர்.

இத்திருமணங்களால் கீழக்கரை நகர் களை கட்டியது.ஏராளமானவர்கள் தங்களது நண்பர்களின் திருமணங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி பரிமாறி கொண்டனர்.

இறைவன் அருளால் மணமக்கள் எல்லா வளமும் பெற கீழக்கரை டைம்ஸ் மனமார வாழ்த்துக்கிறாது

Sunday, May 6, 2012

விபத்தில் இறந்தவர் உடலை கீழக்கரை அருகே விட்டு சென்ற 108 !நடவடிக்கை எடுத்த போலீசார் .




சிக்கல் அருகே பன்னந்தையை சேர்ந்த திருமலைராஜ், முருகன், மயில்வாகனர் ஆகிய மூவரும் ஏர்வாடியிலிருந்து பன்னந்தைக்கு ரூ வீலரில் சென்றனர்.சம்பவத்தன்று மாலை இதம்பாடல் அருகே பாலத்தில் மோதி மூவரும் பலத்த காயமடைந்தனர்

அங்குள்ள மக்கள் அவ்வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி மூவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க‌ ஏற்றி வ்ந்தனர். மாயாகுளம் தாண்டி சதக் கல்லூரி அருகே சென்ற போது 108 ஆம்புலண்ஸ் எதிரே வந்ததால் ஆட்டோவை நிறுத்தி பலத்த காயமடைந்த மூவரையும் ஏற்றிய போது திருமலைராஜ் மட்டும் இறந்து விட்டது தெரியவந்தது.இறந்த திருமலைராஜ் உடலை 108 ஆம்புலன்சில் ஏற்ற முடியாது என்று கூறி உடலை கீழே இறக்கி வைத்தனர் காயமடைந்த 2 பேரை மட்டும் அழைத்து சென்றனர்.

இறந்து விட்டதாக கூறி ஆட்டோ டிரைவர் திருமலைராஜ் உடலை மீண்டும் ஏற்ற மறுத்து அவரும் ஆட்டோவை எடுத்து சென்றதால் திருமலை ராஜ் உடலை சதக் கல்லூரி அருகே சாலையில் கிடத்தப்பட்டது.உடல் ரோட்டோரத்தில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதியை சேர்ந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆம்புலண்ஸ் மூலம் திருமலைராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை மருத்துவமனை எடுத்து சென்றனர்.

வறுமையை வென்று ஐஏஎஸ் ஆன கீழக்கரை பகுதி இளைஞர்! இந்தியாவில் 5வது இடம்



மத்திய தேர்வானையம் நடத்திய ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 5ம் இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பெற்று எஸ்.கோபால் சுந்தர்ராஜ் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாவிலா தோப்பு பகுதியை சேர்நத இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
விவசாயம் நலிவடைந்ததால் இவர்களின் குடும்பத்தார் இங்குள்ள நிலங்களை விற்று விட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே கடம்பா நகரில் சில ஆண்டுகளுக்கு முன் குடியேறியது.

எல்.கே.ஜி முதல் 2ஆம் வகுப்பு வரை ராமநாதபுரம் லூயிஸ்லெவல் பள்ளியிலும்,3ம் வகுப்பு மென்னந்தி அரசு ஆரம்ம பள்ளியிலும்,

4வது வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கீழக்கரை மாவிலாதோப்பு பள்ளியிலும்,9 முதல் 12ம் வகுப்பு வரை ராமநாதபுரம் செய்யதம்மாள் பள்ளியிலும் படித்தார்.கோவையில் உள்ள விவசாய கல்லூரியில் பிஎஸ்சி பட்டபடிப்பும்.எம் எஸ்சி நியுடெல்லி பல்கலையிலும் படித்தார்.
3 ஆண்டுகளுக்கு முன் தந்தை காலமானார். இந்நிலையில் இவரது மாமர்னார் ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன் உதவியுடன் படித்து வந்தார்.

3 முறை ஐஏஸ் தேர்வில் முயற்சி செய்தி தற்போது ஐஏஎஸ் சாக தேர்வு பெற்று இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளார் .

இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய கல்லூரியில்ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.


கீழக்கரை டைம்ஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Saturday, May 5, 2012

லஞ்சம் வாங்கினால் செய்வினை !நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு ! (படம் )



கீழக்கரை நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமை வகித்தார்.

துணை தலைவர் ஹாஜா முகைதீன் ,கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சி அவசர கூட்டம் தேவை இல்லாதது என்றும் 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்காததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் ஆகியோர் மனு அளித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கமிஷனர் 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நகராட்சி வழிகாட்டுதல் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று சட்ட புத்தகத்தை கையில் வைத்தபடி பதிலளித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி..

கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா - நகராட்சி பொதுநிதியில் எவ்வள்வு தொகை உள்ளது.

கமிஷனர் :- ரூ 1 கோடியே 20 லட்சம் உள்ளது.

கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் :- 3வது வார்டுக்கு கிணறு தூர் வார ரூ30 ஆயிரம் ஒதுக்கியது ஏன்? அப்பணியை என்னிடம் அளித்தால் ரூ10 ஆயிரத்தில் முடித்து தருகிறேன்.

3வது வார்டு கவுன்சிலர் :- உங்கள் வார்டு சம்பந்தப்பட்டதை பேசுங்கள்..ஏன் இதில் தலையிடுகிறீர்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தர்

மக்களின் பணம் வீணடிக்கப்படகூடாது அதனால் பேசுகிறேன் என்று முகைதீன் இப்ராகிம் பதிலுக்கு கூறினார் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய கமிஷனர் : - 30ஆயிரம் என்பது உத்தேச தொகைதான் அதற்கு குறைவாக செலவு செய்ய முன் வருபவர்களுக் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

கவுன்சிலர் பாவா செய்யது கருணை :- நான் கோரிக்கை வைக்காமலே எனது வார்டுக்கு வடிகால் மராமத்து பணிக்கு ரூ50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.எனது வேறு சில பணிகளும் உடனடியாக செய்ய வேண்டியதுள்ளது எனவெ இந்த நிதியை வேறு பணிக்கு பயன்படுத்தலாமே ?

கமிஷனர் முஜிபுரஹ்மான் :- இது குறித்து ஆவண செய்யப்படும் என்றார்.

துணை தலைவர் ஹாஜா முகைதீன் :- 2வது வார்டு உள்ளிட்ட சில வார்டு புறக்கணிக்கப்படுவது ஏன்:-

கமிஷனர் :இது குறித்து கவனிக்க ப்படும்

கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா:- ரூ 2 கோடியே 50 லட்சம் ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கைமாறியதாக பொது மக்கள் தரப்பில் பேசப்படுகிறது.அப்படி யாராவது லஞ்சம் வாங்கியிருந்தால் அவர்களுக்கு செய்வினை வைப்பேன் மேலும் மக்கள் பணத்தை சுரண்டினால் அவர்கள் குடும்பம் விளங்காமல் போகும் என்றார்.

தெரு விளக்கு பணிகளுக்கு ரூ50 லட்சம் டெண்டர் ஒப்புதலுக்கு வந்த போது நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது, இப்பணியை ஒப்பந்ததாரர் மிக குறைந்த தொகைக்கு எடுத்துள்ளார்.எனவே அவர்களால் இப்பணியை சரியாக செய்ய முடியாது என்று கருதுகிறேன் எனவே மறு டெண்டருக்கு விடலாம் என்றார்.

கவுன்சிலர் ஜெயபிரகாஷ் : - குறைந்த விலையில் டெண்டரை எடுத்துள்ளவர் சரியாக பணியை செய்யவில்லையென்றால் அவர்களுக்கான பில்லுக்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்.எனவே மறு டெண்டர் விடவேண்டிய அவசியமில்லை .

மறு டெண்டர் விடக்கூடாது குறைந்த விலையில் டெண்டர் கேட்டவருக்கே கொடுக்க வேண்டும் என்று ஜெயபிரகாஷ்,இடிமின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா இந்த விசயத்தில் லஞ்சம் கைமாறி விட்டதாக நேரடியாக குற்றஞ்சாட்டிதோடு லஞ்சம் கைமாறவில்லையென்றால் மறுடெண்டர் விடக்கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்த சேர்மன் ராவியத்துல் காதரியா உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்


தொடர்ந்து நகராட்சி தலைவருக்கும் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாதம் நடைபெற்றது.

கவுன்சிலர்கள் அஜ்மல் கான்,சுரேஷ் ஆகியோர் மறு டெண்டருக்கு ஆதரவாக பேசினர்.


பின்னர் இறுதி முடிவாக மறு டெண்டர் தேவையில்லை ஏற்கெனவே எடுத்துள்ள ஒப்பந்ததராருக்கே இப்பணியை வழங்கலாம் என்று நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா அறிவித்தார் இதனையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது.

கூட்டத்தில் வைக்கப்பட்ட கீழக்கரை நகர் முழுவதும் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டது.

Friday, May 4, 2012

ஜும்மா பள்ளியில் குத்பா கமிட்டி சார்பாக பி.எஸ்.ஏ அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை !





கீழக்கரை புரவலர் பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்கள் சென்னையில் உடல்நலமில்லாமல் இருப்பதால் அவர் உடல் நலம் பெற்று பூரண குணமடைய குத்பா கமிட்டி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியில் குத்பா தொழுகை நிறைவடைந்து துஆ ஓதப்பட்டது. அனைவரும் அவருக்காக துஆ செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

கீழக்கரை - தில்லையேந்தல் பேச்சுவார்த்தை ! காவல் நிலையத்தில் கடும் வாக்கு வாதம் !






கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான 12 ஏக்கரில் பல் வேறு எதிர்ப்புகளை மீறி சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு கீழக்கரை குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு கட்டப்பட்டு தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானப் பொருட்களுக்கு சிலர், தீ வைத்தனர். இதனால் பணிகள் பாதிப்புக்குள்ளானது.இதையடுத்து மீண்டும் தில்லையேந்தல் பஞ்சாயத்தாரையும் கீழக்கரையை நகராட்சியை சேர்ந்தவர்களையும் அழைத்து கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் முன்னிலையில், நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கமிஷனர் முஜிப் ரஹ்மான் குப்பை கிடங்கால தில்லையேந்தல் ஊராட்சிக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதை எடுத்துரைத்தார்.இதை ஏற்க மறுத்தபடி பேசினர் தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்தோர் ஒரு கட்டத்தில் ஒரு தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்த சிலர் சர்ச்சைக்குறிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்தனர்.இதற்கு கீழக்கரையை நகராட்சியை சேர்ந்த அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.உடனடியாக தலையிட்ட நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்தோர் கலெக்டரிடம் முறையிட போவதாக கூறி கலைந்து சென்றனர்.


இபேச்சு வார்தையின் போது நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன், , திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் செல்வக்குமார், தில்லையேந்தல் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், கீழக்கரை கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கீழக்கரையை சேர்ந்தோர் கூறுகையில் ,

கீழக்கரை குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை என்ற பிரச்சனை தீர்ந்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது மீண்டும் இப்பிரச்சனை தலை தூக்குவது கீழக்கரையில் சுகாதாரா சீர் கேடுக்கு முடிவே வராதா என்று நினைக்க தோன்றுகிறது என்றனர் வருத்தத்துடன்.....

Thursday, May 3, 2012

நகராட்சி கூட்டத்தை தடுக்கலாமா ? சேர்மன் ! உண்மையை நிலை நாட்ட நீதிமன்றம் செல்வோம் !கவுன்சிலர் !

சேர்மன் ராவியத்துல் காதரியா
கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா நஜிமுதீன்
கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்


கீழக்கரை நகராட்சியின் அவரச கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அவசர கூட்டம் ஏன் என்றும் கவுன்சிலர்களுக்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டத்திற்கான அழைப்பு தாமதமாக‌ கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,ஹாஜா முகைதீன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடத்த‌ எதிர்ப்பு தெரிவித்து பதிவு தபால் மூலமாகவும் நேரடியாகவும் இக்கூட்டத்தை ரத்து செய்ய மனு செய்துள்ளனர்.
மக்களுக்கான நலப்பணிகள் நடைபெறாமல் தடுப்பதாக சேர்மன் ராவியத்துல் காதரியா குற்றம் சாட்டினார்

இது நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,

கீழக்கரை எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசலாம் அவற்றை பற்றி கவுன்சிலர்கள் குரல் எழுப்பலாம் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு வீணாக தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.நான் அவசரமாக வெளியூர் செல்ல இருப்பதால் கூட்டத்தை இன்றே நடத்த வேண்டிய சூழ்நிலை வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
திமுக உறுப்பினர் என்ற முறையில் இடிமின்னல் ஹாஜா எது செய்தாலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.அவரோடு சேர்ந்து முகைதீன் இப்ராகிம் மக்கள் நலப்பணிகளை தடுத்து வருகிறார்.அனைத்து கவுன்சிலர்களுக்கு நேற்றே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.அரசின் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. தாமதமாக தகவல் சொன்னதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் 8.30 மணிக்கும் 3 மணி எவ்வளவு நேரம் இடைவெளி? அதிமுகவை சேர்ந்த சேர்மன் என்பதாலும் குறிப்பாக நான் ஒரு பெண் என்பதாலும் இடையூறு செய்து வருகின்றனர்.நகராட்சி கூட்டம் நடத்தாமல் மக்களுக்கான நலப்பணிகளை எப்படி செய்வது ? மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா நஜிமுதீன், முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,

அவசரமாக கூட்டம் நடத்துவது ஏன்? அவசர கூட்டம் நடத்த வேண்டுமென்றால் 24 மணி நேரத்திற்கு முன்னாள் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அப்படி என்றால் மாலை 3மணிக்கு தகவல் சொல்ல வேண்டும்ஆனால் சட்டத்திற்கு புறம்பாக நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. .இக்கூட்டத்தில் 40 பொருள்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென குறிக்கப்பட்டுள்ளது ஆனால் அவசரம் கூட்டம் என்பது அத்தியவசியத்திற்காக நடத்த வேண்டும் குறிப்பாக அவசரக்கூட்டத்தில் 3 பொருள்களுக்கு மேல் விவாதத்திற்கு வைக்க கூடாது.உள்நோக்கத்திற்க்காக சாதரணக்கூட்டத்தை அவசர கூட்டமாக நடத்துகிறார்கள் .அவசர கதியில் 5ஆயிரம் ரூபாய் செலவாகாத பணிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய நகராட்சி மன்ற கூட்ட ஒப்புதலுக்கு வைக்கிறார்கள்.எனவே இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றனர்.



Wednesday, May 2, 2012

கீழக்கரையில் 1ரூபாய்க்கு சப்பாத்தி ! சாலையோர கடை திறப்பு !





கீழக்கரை சாலைதெருவை சேர்ந்தவர் மன்சூர் இவர் ஏற்கெனவே ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் மன்சூர் இன்று மாலை ரூ1 க்கு சப்பாத்தி விற்பனையை தொடங்கினார்.
கீழக்கரை இளைஞர் காங்கிரசின் நிர்வாகிகளில் ஒருவரான மூர் ஹசனுதீன் சாலை தெருவில் பழைய பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில்சாலையோர கடையை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர் சித்தீக் ,சின்னகடை தெரு ராசிக் ,சுல்தான் சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வியாபாரி மன்சூர் கூறியதாவது,
ஒரு சப்பாத்தியை ரூ 15 க்கு விற்பனை செய்து வருகிறார்கள். மக்களுக்கு சேவையாற்றும் எண்ணத்தில் குறைந்த விலையில் தருவதற்காக லாபத்தை குறைத்து விற்பனை செய்கிறேன். குருமாவுக்கு ரூ 1 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளேன்.சப்பாத்திக்கு எண்ணெய் சேர்ப்பதிலை .இதனால் உடல் நல்த்திற்கு நன்மை பயக்கும். மக்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும்.வியாபாரம் தொடங்கு நாளாக இருப்பதால் இன்று மட்டும் சப்பாத்தியை இங்கேயே சாப்பிட அனுமதித்துள்ளேன் நாளை முதல் பார்சல் சர்வீஸ் மட்டும்தான் என்றார்.

அப்பகுதியை சேர்ந்தோர் கூறியதாவது, ரூ 1 ரூபாய்க்கு விற்பனை செய்ய எப்படி இவருக்கு கட்டுப்படியாகிறது என்று தெரியவில்லை .இவர் தொடர்ந்து இந்த வியாபரத்தை செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தி நிலைத்து விட்டாரென்றால் இவர் நிச்சயம் சாதனையாளர்தான் .இவரின் இந்த முயற்சி பாராட்டுக்குறியது என்றனர்.

விடுமுறையில் சிறு தொழிலில் ஈடுபடும் பாராட்டுக்குறிய கீழக்கரை மாணவர்கள் !



பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகள் சுற்றுலா செல்வது,நீச்சல் பயிற்சி ,நடனம் என்று பல்வேறு வகையில் விடுமுறை தினங்களை கழித்து வரும் சூழ்நிலையில் கீழக்கரை பகுதியில் இளம் பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தங்களின் வீடுகளின் அருகிலேயே சிறு கடைகளை நடத்தி வருகிறார்கள்.இதன் மூலம் உழைப்பின் அருமையை இளம் வயதிலேயே கற்று கொள்வதோடு வீணாக பொழுதை கழிக்காமல் இருக்கவும் வாய்ப்பாக அமைவதாக மாணவர்களை பாராட்டுகின்றனர்.

இது குறித்து அம்மாணவர்கள் கூறியதாவது,

காலை,பகல் நேரங்களில் வீடியோகேம்ஸ்,டிவி என்று பொழுது போக்குவதில் எங்களுக்கு விருப்பமில்லை.சிறு முதலீட்டில் இது போன்ற தொழில் செய்வது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.ஆனாலும் மாலை நேரங்களில் விளையாடவும் படிக்கவும் தவறுவதில்லை என்றனர்...

நகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் நிறைவு !







இன்று காலை கீழக்கரையில் நகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் உண்ணாவிரம் தொடங்கினர். தொடர்ந்து நடைபெ
ற்ற உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது மக்கள் நலப்பாதுகாப்பு கழக நிர்வாகி தமீமுதீன் கலந்து நிறைவுற செய்தார் .

கவுன்சிலர்கள் ஜெயபிராகாஷ், அன்வர் அலி,இடி மின்னல் ஹாஜா,சாகுல் ஹமீது, முகைதீன் இப்ராகிம்,அரூசியா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்



கோரிக்கைகளின் விபரம்:-

1) கீழக்கரை நகராட்சியில் பொறுப்பு வகிக்கும் ஆணையர் நகர் மீது அக்கரை இன்றி செயல்படுவதால் இந்த நகராட்சிக்கு பொறுப்பான தனி ஆணையர் நியமிக்க கோரியும்.

2) கீழக்கரை நகராட்சியில் A கிரேடு அதிகாரிகளின் பற்றாக்குறையால் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் செயலிழந்து இருப்பதால் அந்த பதவிகளுக்கு உடனடியாக அதிகாரிகளை நியமனம் செய்யக் கோரியும்.

3) கீழக்கரை நகராட்சியில் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு பொறுப்பற்ற முறையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் D கிரேடு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து பொறுப்பான ஊழியர்களை நியமனம் செய்யக் கோரியும்.



4) கீழக்கரை நகரில் மக்கள் நலப்பணிகள் செய்வதற்கு மன்ற ஒப்புதல் பெற்று ஒப்பந்த புள்ளி (TENDER) நடந்த பின் இதுவரை வேலை நியமன ஆணை (WORK ORDER) கொடுக்காத நகராட்சி ஆனையர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரியும்.

5) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த பெண் பிரதிநிதிகளின் உள்ளாட்சி அமைப்புகளில் உறவினர் மற்றும் கணவரின் தலையீட்டை தடுத்து ஆணை பிறப்பித்ததை மதிக்காமல் மீறி செயல்படும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரியும்.

6) கீழக்கரை தற்போது நகராட்சியாக உயர்ந்து இருப்பதால் நகரின் நலன் கருதி கூடுதல் நிரந்தர துப்புறவு தொழிலாளர்களை நியமனம் செய்யக் கோரியும்.

7) கீழக்கரை மக்கள் மலேரியா மற்றும் கொடிய நோய்களால் அவதிப்படுவதால் நகரின் அடிப்படை தேவைகளான குறிப்பாக கொசு மருந்து அடிப்பது, வாருகால்களில் தூர் வாருவது, சாலைகளில் தேங்கி இருக்கும் மணல்களை அகற்றுவது, தேவைப்படும் இடங்களில் பொது மக்கள் நலன் கருதி வேகத்தடை அமைப்பது, முறையாக குப்பைகளை அகற்றுவது இவைகளை உடனடியாக செயல்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கீழக்கரை நகராட்சிக்கு உத்தரவு செய்யக்கோரியும்.

8) நகருக்கு அரசு ஒதுக்கும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய ஒப்பந்தப்படி ஊழல் நடைபெறாமல் முறையாக வேலைகள் நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு அரசு பொறியாளர் தலைமையில் பொது அமைப்புகளில் பிரதிநிதிகள் குழு அமைக்க கோரியும்.

9) கீழக்கரை பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் நீர்தேக்க தொட்டி சுகாதாரம் இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதை உடனடியாக அகற்றி கூடுதல் கொள்ளலவு உள்ள நீர்தேக்க தொட்டி புதிதாக அமைக்க கோரியும்.


10) கீழக்கரை நகர் மன்ற கூட்டம் நடத்துவதற்கு சுமார் 72 மணி நேரத்திற்கு முன் மாமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு மன்ற நிகழ்ச்சி நிரல் (BOARD AJENDA) படிவத்தை முறையாக வழங்க கோரியும்.

Tuesday, May 1, 2012

அறிவிப்பு ! (வபாத்)காலமானார்கள்!


கீழக்கரை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். K.S.செய்யது இபுறாகீம், பரீதா பீவி ஆகியோர்களின் மகனும், V.K.நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய 'K.S.சாகுல் ஹமீது' அவர்கள் (29.04.2012) இரவு 9 மணியளவில் ( காலமானார்)வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா (30.04.2012) மாலை 5 மணியளவில் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.