Friday, May 4, 2012

கீழக்கரை - தில்லையேந்தல் பேச்சுவார்த்தை ! காவல் நிலையத்தில் கடும் வாக்கு வாதம் !






கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான 12 ஏக்கரில் பல் வேறு எதிர்ப்புகளை மீறி சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு கீழக்கரை குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு கட்டப்பட்டு தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானப் பொருட்களுக்கு சிலர், தீ வைத்தனர். இதனால் பணிகள் பாதிப்புக்குள்ளானது.இதையடுத்து மீண்டும் தில்லையேந்தல் பஞ்சாயத்தாரையும் கீழக்கரையை நகராட்சியை சேர்ந்தவர்களையும் அழைத்து கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் முன்னிலையில், நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கமிஷனர் முஜிப் ரஹ்மான் குப்பை கிடங்கால தில்லையேந்தல் ஊராட்சிக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதை எடுத்துரைத்தார்.இதை ஏற்க மறுத்தபடி பேசினர் தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்தோர் ஒரு கட்டத்தில் ஒரு தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்த சிலர் சர்ச்சைக்குறிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்தனர்.இதற்கு கீழக்கரையை நகராட்சியை சேர்ந்த அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.உடனடியாக தலையிட்ட நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்தோர் கலெக்டரிடம் முறையிட போவதாக கூறி கலைந்து சென்றனர்.


இபேச்சு வார்தையின் போது நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன், , திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க., துணை செயலாளர் செல்வக்குமார், தில்லையேந்தல் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், கீழக்கரை கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கீழக்கரையை சேர்ந்தோர் கூறுகையில் ,

கீழக்கரை குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை என்ற பிரச்சனை தீர்ந்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது மீண்டும் இப்பிரச்சனை தலை தூக்குவது கீழக்கரையில் சுகாதாரா சீர் கேடுக்கு முடிவே வராதா என்று நினைக்க தோன்றுகிறது என்றனர் வருத்தத்துடன்.....

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.