Thursday, May 3, 2012

நகராட்சி கூட்டத்தை தடுக்கலாமா ? சேர்மன் ! உண்மையை நிலை நாட்ட நீதிமன்றம் செல்வோம் !கவுன்சிலர் !

சேர்மன் ராவியத்துல் காதரியா
கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா நஜிமுதீன்
கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்


கீழக்கரை நகராட்சியின் அவரச கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. அவசர கூட்டம் ஏன் என்றும் கவுன்சிலர்களுக்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டத்திற்கான அழைப்பு தாமதமாக‌ கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,ஹாஜா முகைதீன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடத்த‌ எதிர்ப்பு தெரிவித்து பதிவு தபால் மூலமாகவும் நேரடியாகவும் இக்கூட்டத்தை ரத்து செய்ய மனு செய்துள்ளனர்.
மக்களுக்கான நலப்பணிகள் நடைபெறாமல் தடுப்பதாக சேர்மன் ராவியத்துல் காதரியா குற்றம் சாட்டினார்

இது நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,

கீழக்கரை எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசலாம் அவற்றை பற்றி கவுன்சிலர்கள் குரல் எழுப்பலாம் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு வீணாக தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.நான் அவசரமாக வெளியூர் செல்ல இருப்பதால் கூட்டத்தை இன்றே நடத்த வேண்டிய சூழ்நிலை வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
திமுக உறுப்பினர் என்ற முறையில் இடிமின்னல் ஹாஜா எது செய்தாலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.அவரோடு சேர்ந்து முகைதீன் இப்ராகிம் மக்கள் நலப்பணிகளை தடுத்து வருகிறார்.அனைத்து கவுன்சிலர்களுக்கு நேற்றே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.அரசின் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. தாமதமாக தகவல் சொன்னதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் 8.30 மணிக்கும் 3 மணி எவ்வளவு நேரம் இடைவெளி? அதிமுகவை சேர்ந்த சேர்மன் என்பதாலும் குறிப்பாக நான் ஒரு பெண் என்பதாலும் இடையூறு செய்து வருகின்றனர்.நகராட்சி கூட்டம் நடத்தாமல் மக்களுக்கான நலப்பணிகளை எப்படி செய்வது ? மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா நஜிமுதீன், முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,

அவசரமாக கூட்டம் நடத்துவது ஏன்? அவசர கூட்டம் நடத்த வேண்டுமென்றால் 24 மணி நேரத்திற்கு முன்னாள் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அப்படி என்றால் மாலை 3மணிக்கு தகவல் சொல்ல வேண்டும்ஆனால் சட்டத்திற்கு புறம்பாக நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. .இக்கூட்டத்தில் 40 பொருள்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென குறிக்கப்பட்டுள்ளது ஆனால் அவசரம் கூட்டம் என்பது அத்தியவசியத்திற்காக நடத்த வேண்டும் குறிப்பாக அவசரக்கூட்டத்தில் 3 பொருள்களுக்கு மேல் விவாதத்திற்கு வைக்க கூடாது.உள்நோக்கத்திற்க்காக சாதரணக்கூட்டத்தை அவசர கூட்டமாக நடத்துகிறார்கள் .அவசர கதியில் 5ஆயிரம் ரூபாய் செலவாகாத பணிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய நகராட்சி மன்ற கூட்ட ஒப்புதலுக்கு வைக்கிறார்கள்.எனவே இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றனர்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.