Friday, May 11, 2012

கொசுக்கள் உற்பத்தி நிலையமாக சாலையோர கழிவு நீர் கால்வாய்கள் ! சீரமைக்க கோரிக்கை!


நடுத்தெரு ஜீம்மா பள்ளி அருகே குப்பைகள் நிறைந்து காணப்படும் கழிவு நீர் கால்வாய்


கிழக்கு தெரு பகுதி சாலை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
கீழக்கரையில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சீராக ஓடாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது.மேலும் பல இடங்களில் கால்வாயின் சிமெண்ட் பகுதி உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.

கழிவுநீர் தேங்கி ஒரே இடத்தில் நிற்பதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு அப்பகுதி முழுவதும் நோய்களை பரப்பும் கொசுக்கள் உருவாகிறது.இதனால் அந்தந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.மேலும் சில இடங்களில் கால்வாய்களில் குப்பைகளை அகற்றி விட்டு அங்கேயே விட்டு சென்று விடுகிறார்கள்.இதனால் மீண்டும் அந்த குப்பைகள் கால்வாய்களில் கலந்து விடுகிறது என்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ்துணை தலைவர் மூர் ஹசனுதீன் கூறுகையில் ,

நகர் முழுவதும் இந்த அவல நிலை நீடிக்கிறது.நகராட்சி பதவியேற்ற உடன் இந்த கால்வாய்கள் தூர் வாரப்பட்டன.ஆனால் எவ்வித பிரயோஜமும் இல்லை சில மாதங்களில் தற்போது கால்வாய்களில் அடைப்பும்,உடைப்பும் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றார்

மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் தமீமுதீன் கூறுகையில்,

கால்வாய் அடைப்புகளை சரி செய்யும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை அங்கேயே விட்டு செல்லாமல் அப்பகுதியிலிருந்து அகர்ற வேண்டும்.அது இல்லாம அடைப்புகள சரி செய்வது பலனில்லை என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.