சிக்கல் அருகே பன்னந்தையை சேர்ந்த திருமலைராஜ், முருகன், மயில்வாகனர் ஆகிய மூவரும் ஏர்வாடியிலிருந்து பன்னந்தைக்கு ரூ வீலரில் சென்றனர்.சம்பவத்தன்று மாலை இதம்பாடல் அருகே பாலத்தில் மோதி மூவரும் பலத்த காயமடைந்தனர்
அங்குள்ள மக்கள் அவ்வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி மூவரையும் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்றி வ்ந்தனர். மாயாகுளம் தாண்டி சதக் கல்லூரி அருகே சென்ற போது 108 ஆம்புலண்ஸ் எதிரே வந்ததால் ஆட்டோவை நிறுத்தி பலத்த காயமடைந்த மூவரையும் ஏற்றிய போது திருமலைராஜ் மட்டும் இறந்து விட்டது தெரியவந்தது.இறந்த திருமலைராஜ் உடலை 108 ஆம்புலன்சில் ஏற்ற முடியாது என்று கூறி உடலை கீழே இறக்கி வைத்தனர் காயமடைந்த 2 பேரை மட்டும் அழைத்து சென்றனர்.
இறந்து விட்டதாக கூறி ஆட்டோ டிரைவர் திருமலைராஜ் உடலை மீண்டும் ஏற்ற மறுத்து அவரும் ஆட்டோவை எடுத்து சென்றதால் திருமலை ராஜ் உடலை சதக் கல்லூரி அருகே சாலையில் கிடத்தப்பட்டது.உடல் ரோட்டோரத்தில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதியை சேர்ந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆம்புலண்ஸ் மூலம் திருமலைராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை மருத்துவமனை எடுத்து சென்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.