Saturday, May 12, 2012
கீழக்கரையில் காவல்துறை அதிகாரி மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு ! குறைதீர்ப்பு நாளில் பரபரப்பு!(படங்கள்)
கீழக்கரை காவல்நிலையத்தில் காவல்துறை சார்பாக குறைதீர்ப்பு நாளில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை சார்பில் டிஐஜி ராமசுப்பிரமணியன்.எஸ்பி காளிராஜ் உள்ளிட்டோர் மனுக்களை பெற்றனர்.
கீழக்கரையில் புறக்காவல் நிலையம் அமைப்பது,போக்குவரத்து காவலர்களை நியமிப்பது,ஏர்வாடியில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது,கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் 42 மனுக்கள் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா ,கீழக்கரை டிஎஸ்பி தன்னிடம் குறிப்பிட்ட வழக்கிற்காக லஞ்சம் கேட்டதாக நேரடியாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டினார்.
காவல்துறை நடத்திய குறைதீர்ப்பு நாளில் காவல்துறை மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்ததால் சிறிது நேரம் அதிர்ச்சி நிலவியது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து ஆவண செய்யப்படும் என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.