Thursday, May 10, 2012

சேர்ம‌ன் மீது போலீசில் புகார் ! எல்லாம் விள‌ம்பர‌த்துக்காக‌..சேர்ம‌ன் ப‌தில் !
ந‌க‌ராட்சி கூட்ட‌த்தின் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா த‌காத‌ வார்த்தையில் திட்டிய‌தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் புகார் அளித்துள்ளார்.


18வது வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் போலீசில் கொடுத்துள்ள‌ புகார் விப‌ரம் கீழே தரப்பட்டுள்ளது:-

நகராட்சியின் அவசர கூட்டம் 03.05.2012 வியாழன் மாலை 4 மணியளவில் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவி அவர்கள் தலைமையில், நகராட்சி ஆணையர் அவர்கள் முன்னிலையில், துணை சேர்மன் அவர்கள், பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 37 வது பொருளின் மீது விவாதம் நடைபெற்ற போது குறைந்த விலை புள்ளிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்க்கு வேலை வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் மக்கள் பணம் வீணாகாமல் தடுக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு குறைந்த புள்ளிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்க்கு வேலை வழங்க நான் உள்பட பல நகர்மன்ற கவுன்சிலர்கள் வற்புறுத்தினோம்.

ஏதோ சில காரணங்களுக்காக நகராட்சி தலைவி அவர்கள் அவர் குறிப்பிடும் ஒப்பந்ததாரர்க்கு தான் வேலை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதை கருத்தில் கொண்டு நானும், பல உறுப்பினர்களும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதை பொறுத்து கொள்ள முடியாத நகராட்சி தலைவி அவர்கள் என்னை மாமன்ற உறுப்பினர் என்று பாராமல் தன் பதவிக்கும் கண்ணியம் அளிக்காமல் லூ____ மாதிரி பேசாதீர்கள் என்று தகாத வார்த்தைகளால் பேசினார். இதை எதிர்பார்க்காத நான் மாமன்றத்தின் கண்ணியம் கருதி நகராட்சி தலைவி அவர்கள் என்னை தவறாக பேசியது பற்றி மன்றத்தில் எந்த விவாதமும் செய்யவில்லை.

நான் மாமன்ற 18 வது வார்டு கவுன்சிலராகவும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளராகவும், பல பொது அமைப்புகளின் பொறுப்பாளராகவும் இருக்கின்றேன்.

மாமன்ற உறுப்பினராகவும், பல பொது அமைப்புகளின் பொறுப்பாளராக இருக்கும் என்னை நகராட்சி ஆணையர் அவர்கள், நகராட்சி ஊழியர்கள், துணைச்சேர்மன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன் மாமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக அவதூறாக பேசிய மாமன்ற தலைவி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றேன்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா த‌ர‌ப்பில் கேட்ட‌ போது,

ந‌க‌ராட்சி கூட்ட‌த்தின் போது முன்னாள் அமைச்சர்‌ அன்வ‌ர் ராஜா உள்ளிட்ட‌ சில‌ர் மீது குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறினார்.அப்போது "ச‌பையில் இல்லாத‌வ‌ர்க‌ளை ப‌ற்றி அவ‌தூறாக‌ பேச‌ வேண்டாம்" என்ற‌ அர்த்த‌தில் அவ்வாறு கூறினேன் அவ‌ரும் அதே ப‌திலை என்னிடம் கூறினார் அத்தோடு பிர‌ச்ச‌னை முடிவ‌டைந்து விட்ட‌து.மேலும் கூட்ட‌த்தின் போது 3வ‌து வார்டில் த‌லையிட்டு இவர் பேசிய‌தால் அந்த‌ வார்டு உறுப்பின‌ர் இவ‌ருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இப்ப‌டிவேண்டுமென்றே இவ‌ர் பிர்ச்ச‌னைக‌ளை எழுப்புவ‌தும்,ப‌ணிக‌ள் செய்ய‌ விடாம‌ல் தொந்த‌ர‌வு செய்வ‌தும் இவ‌ருக்கு வாடிக்கையாகிவிட்ட‌து.இவை அனைத்தையும் இவ‌ர் செய்வ‌து சுய விள‌ம்ப‌ர‌த்திற்காக‌த்தானே த‌விர‌ வேறில்லை. நான் ஒரு பெண் என்று கூட பாராமல் நகராட்சி கூட்டங்களில் கேலியும்,கிண்டலுமாக பேசி இவர் நடந்து கொள்ளும் விதம் முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.இவரின் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு‌ ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஆலோசித்து வ‌ருகிறோம்.

2 comments:

  1. இந்த இணையத்தின் ஆசிரியர் அவர்களே இவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் தானா? இவர்கள் எதற்காக வேசம் போடுகிறார்கள் என்று தெரிகிறதா? எல்லாம் பணம்............

    ReplyDelete
  2. attn:chairman

    you have to take action against this kind of perople's.otherwise will not perform your social service.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.