Friday, January 20, 2012

கீழக்கரையில் வீடு கட்டும் பணியில் விபத்து ! 2 பேர் பலி !


கீழக்கரை கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா அருகில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இதில் நேற்று கட்டிட வேலையில் விவேகனந்தபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் பாலமுருகன்(22),மேஸ்திரி செல்வராஜ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக இரண்டாவது மாடியில் கட்டப்பட்டிருந்த ஸ்லாப் இடிந்து விழுந்து இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் 108 ஆம்புலண்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதில் சிகிச்சை பலனிக்காமல் பாலமுருகன் நேற்று மரணமடைந்தார்.

இன்று காலை மேஸ்திரி செல்வராஜும் உயிரழந்தார். கீழக்கரை காவல் துறை சப்- இன்ஸ்பெக்டர் கனேசன் விசாரணை செய்து வருகிறார்.

ஆம்புலண்ஸ் வாகனம் தாமதமாக வந்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் குற்றஞ்சாட்டினர்.இது குறித்து துறை ரீதியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

Thursday, January 19, 2012

ஸ்கார்பியோ கார் பயன்படுத்தி ஆடுகளை திருடியதாக இருவர் கைது ! வாகனம் பறிமுதல் !


ஆடுகளை திருட பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்

ஏர்வாடி தர்கா அருகே சின்ன‌ ஏர்வாடியில் ஆடுக‌ளை திருடிய‌தாக‌ இருவ‌ரை போலீசார் கைது செய்த‌ன‌ர்.

இது குறித்து சின்ன‌ ஏர்வாடி ப‌குதியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து ,

இப்பகுதியை சேர்ந்தவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு சென்று கரை திரும்பிய நேற்று முன் தினம் சந்தேகத்திற்கு இடமாக ஸ்கார்பியோ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் ஆடுகளை ஸ்கார்பியோ காரில் ஏற்றி கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை பிடித்து விசார‌ணை செய்த‌தில் ஆடுகளை திருடி செல்வ‌து தெரிய வ‌ந்த‌து . உட‌னடியாக காவ‌ல் துறைக்கு த‌க‌வ‌ல் கூறினோம் என்றன‌ர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஏர்வாடி காவல் துறையினர் விசார‌ணை செய்து ஆடுக‌ள் திருட்டில் ஈடுப‌ட்ட‌தாக கூறப்படும் முக‌ம்ம‌து அன்சாரி ம‌க‌ன் நூருல் ஹ‌க்(26),முக‌ம்ம‌து பாரூக் ம‌க‌ன் நூருல் அமீன்(22) ஆகிய‌ இருவ‌ரையும் கைது செய்த‌ன‌ர்.
திருட்டுக்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ ஸ்கார்பியோ காரையும் போலீசார் ப‌றிமுத‌ல் செய்த‌ன‌ர்.

நீண்ட காலமாக‌ கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் ஆடுக‌ள் திருடு போவ‌தாக‌ புகார் இருந்து வ‌ருவ‌து குறிப்பிட‌தக்க‌து.

18வது வார்டு சின்னக்கடை தெரு செல்லும் வழியில் துரித நடவடிக்கை !


சில‌ நாட்க‌ளுக்கு முன் அப்ப‌குதியில் நிலை



தற்போது குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு சுத்தமாக காண‌ப்ப‌டுகிறது . குப்பைக‌ள் இங்கு கொட்ட‌ப்ப‌டாம‌ல் இருந்தால் தொட‌ர்ந்து இந்த‌ சுத்த‌ம் நீடிக்கும் .

18வ‌து ப‌குதியில் சின்ன‌க்க‌டை தெரு செல்லும் வ‌ழி சாலையில் குப்பைக‌ள் நிறைந்து மிகுந்த‌ சுகாதார‌கேடு ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌ அப்பகுதி ம‌க்க‌ள் புகார் தெரிவித்தனர்.17-01-12 அன்று இது குறித்து நமது கீழக்கரைடைம்ஸில் செய்தி வெளியிட்டிருந்தோம்.பார்க்க :- http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_17.html .

இந்நிலையில் செய்தி வெளியான ஒரு சில தினங்களில் குப்பையாக இருந்த அப்பகுதி உடனடியாக நகராட்சி நிர்வாகத்தால் சுத்தம் செய்யப்பட்டது.உடனடி நடவடிக்கை எடுக்க உதவிய 18வது வார்டு கவுன்சிலருக்கும், நகராட்சி தலைவருக்கும் நன்றி கூறுவதாக அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதியை ஜெயினுலாப்தீன் கூறுகையில், இப்பகுதியில் குப்பைக‌ள் தின‌ந்தோறும் குவிந்து சாலை அசுத்தமாக பலருக்கும் இடையூராக இருந்தது. இப்பிரச்சனையில் கவுன்சிலர் உடனடி நடவடிக்கை எடுத்து சுத்தப்படுத்தியது பாராட்டுக்குறியது. கவுன்சிலர் ஆன பிறகு கண்டு வார்டை கண்டு கொள்ளாத கவுன்சிலர்கள் மத்தியில் உடனடி நடவடிக்கை எடுத்த இவர் மிகவும் பாராட்டுக்குறியவர்.

ஆனாலும் அங்கு மக்கள் நிரந்தரமாக குப்பைகள் கொட்டுவதற்கு தடை செய்யும் வகையில் முறையான‌ அனுமதியுடன் எச்சரிக்கை பலகை வைத்தால் இங்கு குப்பை கொட்டுவதை தடுத்து சுற்று சூழலை பாதுகாக்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்க கீழக்கரை டைம்ஸ் மூலம் கவுன்சிலரை வேண்டி கேட்டு கொள்கிறேன் என்றார்.

மேலும் குப்பையை அகற்றுவதில் கடந்த‌ சில‌ நாட்களாக‌ தொய்வு ஏற்ப‌ட்ட‌தாக‌ பொதும‌க்க‌ள் குற்ற‌ம் சாட்டின‌ர்.பொங்கல் விடுமுறைகளால இந்த தொய்வு ஏற்பட்டதாக நகராட்சி தரப்பில் கூறப்பட்டது,இந்நிலையில் த‌ற்போது ப‌ல‌ இட‌ங்க‌ளில் குப்பையை அக‌ற்றும் ப‌ணி ந‌டைபெற்று வ‌ருகிறது.



Wednesday, January 18, 2012

காலி செய்ய மறுத்ததால் கட்டிடத்தை இடித்ததாக 4 பேர் மீது வழக்கு !ஒருவர் கைது !


கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்
கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் வள்ளல் சீதக்காதி சாலையில் ஹைதர் அலி,சண்முக சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான கட்டிடத்தில் எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தார்.இவரை கட்டிடத்தை காலி செய்ய சொன்னார்களாம்.இவர் காலி செய்யாததால் ஆத்திரமடைந்து ஜேசிபி மூலம் கடையை இடித்ததாக சுப்ரமணியன் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார் .மேலும் புகார் மனுவில், இடித்த போது கடையில் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மூர்த்தி,சண்முக சுந்தரம், இவரது மகன் முருக பூபதி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.ஐ கனேசன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனடியாக மூர்த்தி என்பவரை கைது செய்தனர். மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tuesday, January 17, 2012

அன்பு நகரில் மத நல்லிணக்கம் உள்ளிட்ட முப்பெரும் விழா (படங்கள் )








அன்பு நகரில் அன்பு நகர் முன்னேற்ற சங்கத்தின் 10வது ஆண்டு விழா,பரிசளிப்பு விழா,மத நல்லிணக்க விழா ஆகிய முப்பெரும் விழா சங்கத்தின் தலைவர் தங்கம் ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நகராட்சி தலைவார் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,சங்கத்தின் பொருளாளர் மகாலிங்கம்,துணை தலைவர் ரவி,செயலாளர் கலை செல்வன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,செய்யது கருணை,மீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அரசு பொது +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் அன்பு நகர் பகுதியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்பு நகரை சேர்ந்த புஷ்பராஜ்,பாபு,அருள்,முருகன்,தர்மர் ஆகியோர் செய்திருந்தனர்.

குப்பைகள் அகற்றும் பணியில் தொய்வு!



சொக்கநாதர் கோயில் எதிரில் இஸ்லாமிய பள்ளி மைதானம் அருகே குவிந்துள்ள குப்பைகள்
கீழ‌க்க‌ரையில் சிலநாட்களாக பல இட‌ங்க‌ளில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் உள்ள‌து.இத‌னால் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குப்பைக‌ள் நிறைந்து காண‌ப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து சேகு சதக் இப்ராகிம் கூறுகையில் ,
பல முக்கிய இடங்களில் குப்பைகள் நிறைந்து ஆடு மாடு உலாவும் இடமாக மாறி வருகிறது.கடந்த 5 நாட்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்றார்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறியதாவது,

பொங்கல் விடுமுறையையோட்டி குப்பைகளை அகற்றும் பணிகளை முழுமையாக நடைமுறைபடுத்த முடியவில்லை ஆனாலும் முழுமையாக இல்லாவிட்டாலும் பல இடஙளில் காலை நேரத்தில் குப்பை அகற்றும் பணி நடைபெற்றது.நாளை முதல் அனைத்து இடங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு சுத்தமாக்கப்படும் என்றார்

சின்ன‌க்க‌டை தெரு செல்லும் பகுதியில் குப்பையான சாலை !கவ‌னிப்பாரா க‌வுன்சில‌ர் ?




18வ‌து ப‌குதியில் சின்ன‌க்க‌டை தெரு செல்லும் வ‌ழி சாலையில் குப்பைக‌ள் நிறைந்து மிகுந்த‌ சுகாதார‌கேடு ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌ அப்பகுதி ம‌க்க‌ள் குற்ற‌ம் சாட்டுகின்ற‌ன‌ர்.

அப்ப‌குதியை சேர்ந்த‌ ஃபாசில் என்ப‌வ‌ர் கூறுகையில் ,

18வ‌து வார்டில் சின்ன‌க்க‌டை தெரு செல்லும் வ‌ழியில் முக்கிய‌ சாலையில்( க‌றிக்க‌டை & க‌ருவாடு க‌டை அருகில்)குப்பைக‌ள் தின‌ந்தோறும் குவிந்து சாலை முழுவதும் நிர‌ம்பி வ‌ழிகிற‌து.இத‌னால் இவ்வ‌ழியே ப‌ள்ளிக்கு செல்லும் குழ‌ந்தைக‌ள் மிகுந்த‌ பாதிப்புக்குள்ளாகின்ற‌ன‌ர்.சாலையில் குப்பைகள் சிதறி கிடப்பதால் வாக‌ன‌ ஓட்டிக‌ளுக்கும் மிகுந்த‌ சிர‌ம‌த்துக்குள்ளாகின்ற‌ன‌ர்.அங்கு குடியிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ,வியாபார‌ம் செய்ப‌வ‌ர்க‌ளுக்கும் சுகாதார‌ சீர் கேட்டினால் நோய்க‌ள் ப‌ர‌வும் வாய்ப்புள்ள‌து.

இந்த‌ பிரச்ச‌னை இப்ப‌குதி க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகீமுக்கு தெரியும் .ஏன் இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏற்பாடு செய்யாம‌ல் இருக்கிறார் என்று தெரிய‌வில்லை.என‌வே ந‌கராட்சி நிர்வாக‌ம் மூல‌ம் போர்க்கால‌ அடிப்ப‌டையில் உட‌ன‌டியாக குப்பை அக‌ற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏற்பாடு செய்ய‌வ‌தோடு ரோட்டில் குப்பைக‌ளை கொட்டுவ‌தை த‌டுக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்று இத‌ன் மூல‌ம் கேட்டு கொள்கிறேன் என்றார்

Monday, January 16, 2012

மினி பஸ் பயணத்தில் மின்சார‌ம் தாக்கும் அபாய‌ம் !


மின்சார‌ வ‌ய‌ரை உர‌சிய‌ப‌டி மினி ப‌ஸ்


பஸ்சால் அறுந்து விழுந்த‌ வ‌ய‌ரை அக‌ற்றும் க‌ண்ட‌க்ட‌ர்

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அருகிலுள்ள‌ ஊர்க‌ளுக்கு மின் ப‌ஸ் (சிற்றுந்து) இய‌க்க‌ப்ப‌டுகிற‌து.கீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் ப‌ல் வேறு இட‌ங்க‌ள் வ‌ழியாக‌ செல்லும் இந்த‌ மினி ப‌ஸ்கள் மின் க‌ம்பிக‌ளை உர‌சி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கீழக்கரையை சேர்ந்த சீனி என்பவர் கூறுகையில்,
ந‌க‌ருக்குள் வ‌ல‌ம் வ‌ரும் இந்த‌ ப‌ஸ்கள் மிக‌வும் தாழ்வாக‌ தொங்கி கொண்டிருக்கும் மின்சார‌ வ‌ய‌ர்க‌ளை உர‌சி செல்கிற‌து. ஒரு சில‌ ச‌ம‌யங்க‌ளில் ப‌ஸ்க‌ளின் மேல் புற‌ம் உர‌சி மின்சார‌ வ‌ய‌ர்க‌ள் அறுந்து சாலையில் விழுந்திருக்கின்ற‌ன.நாங்கள் தகவல் தந்து மின் ப‌ணியாள‌ர்க‌ள் வ‌ந்து ச‌ரி செய்துள்ள‌ன‌ர்.

பஸ்சுக்குள் மின்சார‌ம் தாக்கி பெரிய‌ விப‌த்து ஏற்ப‌டுவ‌த‌ற்கு முன் உட‌ன‌டியாக மின் இலாகா பஸ் செல்லும் வழிகளில் தாழ்வான‌ மின் வ‌ய‌ர்க‌ளை ச‌ரி செய்ய‌வேண்டும்.மேலும் கீழக்கரை முழுவதும் பல இடங்களில் மின்சார வயர்கள் பல இடங்களில் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது.மின்சார இலாக இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மினி ப‌ஸ் டிரைவ‌ர்க‌ள் வேக‌மாக‌ வ‌ண்டியை ஓட்டுவ‌தால் அறுந்த‌ வ‌ய‌ர்க‌ளையும் இழுத்து செல்லும் நிலையும் ஏற்ப‌டுகிற‌து.நகருக்குள் வாகனத்தை ஓட்டுகிறோம் என்பதை மனதில் கொண்டு மின் ப‌ஸ் டிரைவ‌ர்க‌ளும் வேக‌த்தை குறைத்து ஓட்ட‌ வேண்டும் என்றார்

Sunday, January 15, 2012

திருப்புல்லாணி பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ 1லட்சம் உதவி !



திருப்புல்லாணி பள்ளிக்கு ரூ 1லட்சம் மதிப்புள்ள பொருள்களை ரோட்டரி சங்கம் வழங்கியது இவ்விழாவில் கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ த‌லைவ‌ர் செய்ய‌து இப்ராகிம் ,ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் ,பிரேசில் குழுவின‌ர் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌லந்து கொண்ட‌ன‌ர்.

மக்கள் கூட்டத்தால் புதிய கடல் பாலத்தில் திடீர் கடைகள் !







கீழக்கரை கடற்கரையில் புதிய (ஜெட்டி)பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் மாலை நேரங்களில் ஏராளமான மக்கள் அங்கு குவிகின்றனர்.குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வருகை அங்கு அதிகளவில் உள்ளது.இதனையோட்டி அங்கு ஒரு சிலர் தள்ளுவண்டிகளில் கடைகளை அமைத்து உணவு பண்டங்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.


இது குறித்து அங்கு வ‌ருகை த‌ந்த‌ ஆசிப் என்ப‌வ‌ர் கூறுகையில்,


இங்கு வ‌ரும் ம‌க்க‌ள் கூட்ட‌த்தை வைத்தே இங்கு பூங்கா அவ‌சிய‌ம் தேவை என்ப‌தை அறிய முடிகிறது.பூங்கா அமைக்கும் வரை பால‌ம் அருகே உள்ள‌ காலியான‌ இட‌த்தில் தற்காலிகமாக ம‌க்க‌ள் அம‌ரும் வ‌கையில் நாற்காலிக‌ளை அமைத்து த‌ர‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.மாலை நேர‌ங்களில் பெண் காவல‌ர்க‌ள் இப்ப‌குதியில் பாதுகாப்பு ப‌ணிக்கு ஈடுப‌டுத்த‌ வேண்டும் என்றார்.


சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல் இந்திராவுடன் நகராட்சி தலைவர்



இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராபிய‌த்துல் காத‌ரியா கூறியதாவ‌து, க‌ட‌ற்க‌ரை ப‌குதியில் பூங்கா அமைப்ப‌து குறித்து ஏற்கென‌வே சென்னையில் சுற்றுலாத்துறை அமைச்ச‌ர் கோகுல் இந்திராவிட‌ம் ம‌னு கொடுத்துள்ளேன் அவ‌ரும் இது குறித்து ஏற்பாடுக‌ளை செய்வ‌தாக‌ உறுதி கூறினார்.இத‌னைய‌டுத்து சுற்றுலா துறையினர் ஆவண‌ செய்வதாக‌ நகராட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்க‌ள்.வெகு விரைவில் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொட‌ங்க‌ப்ப‌டும் என்றார்

பெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை !ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தல் !


பெரியபட்டிணத்தில் சுமார் 25ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் ஊரில் காவல் நிலையம் கிடையாது.எந்த ஒரு பிரச்சனைக்கும் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி காவல் நிலையத்திற்கு சென்று தான் புகார் செய்ய வேண்டும் எனவே பெரிய பட்டிணத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பெரியபட்டிண ஊராட்சி தலைவர் கபீர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, பெரியபட்டிணத்தை சுற்றி ரெகுநாதபுரம், முத்துபேட்டை,வண்ணாங்குணடு ,வலசை,காரான்,குத்துக்கல்வலசை கிராமங்களும் உள்ளது இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் திருப்புலாணி காவல் நிலையம் சென்றுதான் புகார் செய்ய வேண்டும். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.ஆகவே பெரிய பட்டிணத்தில் காவல் நிலையம் அமைத்தால் சுற்றியுள்ள அனைத்து ஊர்களும் பயன் பெறும் என்றார்.இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி மற்றும் கலெக்டருக்கு மனு கொடுக்க உள்ளேன் என்றார்

Saturday, January 14, 2012

காவல் நிலையத்தில் நகராட்சி தலைவர் -துணை தலைவர் கோரிக்கை மனு!


நகராட்சி தலைவர் மனு!

நகராட்சி துணை தலைவர் மனு!

கீழக்கரை காவல் நிலையத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் விதமாக மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. டிஎஸ்பி முனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்ட காவல்துறையினர் மனுக்களை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா மற்றும் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர், "கீழக்கரை பேருந்து நிலையத்தில் சமூக விரோத செயல்களை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தனி ,தனியாக காவல் துறைக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ம‌ற்றும் துணை த‌லைவ‌ர் இருவ‌ரும் புற‌க்காவ‌ல் நிலைய‌ம் அமைக்க‌ வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தனி,தனியாக சென்று மனு கொடுத்தற்கு ப‌திலாக‌ இருவரும் ஒரே ம‌னுவாக‌ கொடுத்திருக்கலாம் இது போன்ற‌ ஊர் ந‌லன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌ங்க‌ளில் இருத‌ர‌ப்பும் கலந்து பேசி இணைந்து செயல்ப‌ட‌ வேண்டும்.

ஊரின் ந‌லனை கருத்தில் கொண்டு அனைத்து நிக‌ழ்வுக‌ளிலும் இருத‌ரப்பும் ஒற்றுமையாக‌ செய‌ல்ப‌டுவ‌து கீழ‌க்க‌ரையின் வ‌ள‌ர்ச்சிக்கு உத‌வும்.இதுவே கீழக்கரை ம‌‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

சீலா மீன் விற்பனையில் முஜீப் குற்றச்சாட்டில் உண்மையில்லை ! மீனவர் சங்க தலைவர் பேட்டி !



கீழக்கரையில் மலிவு விலைக்கு ஆந்திர சீலா மீன்களை வாங்கி அதிக லாபம் வைத்து விற்பதாகவும் ,எடையில் முறைகேடு நடப்பதாகவும் தமுமுகவின் முன்னாள் மாவட்ட பொருளாளர் முஜீப் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து சிறுதொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் கூறுகையில் ,

ஆந்திர பகுதியில் பிடிபடும் சீல மீன்கள் ஐஸ்சில் வைத்து பதப்படுத்தப்பட்டு விற்பதால் ருசி குறைவாகவும் உள்ளூர் மீன்கள் ஐஸ்சில் வைக்காமல் விற்பதால் ருசியாக உள்ளது .மற்றப்படி இரண்டுமே சீலா மீன்கள்தான் .மலிவு விலையில் ஆந்திர சீலா மீன் என்றெல்லாம் முஜீப் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மேலும் எடையில் முறைகேடு இருந்தால் மீனவர் சங்கத்தில் புகார் செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கீழக்கரை மீன்கடை தெருவை சேர்ந்த சுல்தான் கூறுகையில் ,
முஜீப் ஆந்திர சீல மீன் கிலோ 90க்கு கிடைக்கும் என்று தவறான தகவலை கொடுத்துள்ளார். ஆந்திரா சீலா மீன்கள் கிலோ ரூ 300 லிருந்து ரூ350 வரைக்கும் மொத்த மார்கெட்டில் விற்கபடுகிறது.உள்ளூர் வியாபாரிகள் அங்கிருந்து வாங்கி பதப்படுத்தும் செலவு,வாகனங்களி ஏற்றி வரும் செலவு மற்றும் இதர செலவுகளை செய்து அதற்கேற்றார் போல் நியாயமான லாபம் வைத்து தான் விற்பனை செய்கிறார்கள்.
எனவே முஜீப் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Friday, January 13, 2012

இந்திய அளவில் தடகள போட்டிக்கு கீழக்கரை கல்லூரி மாணவர்கள் தேர்வு !




திருச்சி அண்ணா பல்கலைகழக 4வது மண்டல தடகள போட்டி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் நடைபெற்றது.இதில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தங்க பதக்கம் வென்றனர்.

இவர்களில் மாணவர் பாசித், மாணவர் மாதவன் ஆகியோர் இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

த‌டக‌ள‌ போட்டிக‌ளில் வெற்றி பெற்று 5 த‌ங்க‌ ப‌த‌க்கங்க‌ளை வென்ற‌ மாண‌வ‌ர்க‌ளை க‌ல்லூரி தாளாள‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர்,செய‌லாள‌ர் யூசுப் சாகிப், க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ஜ‌காப‌ர்,ம‌க்க‌ள் தொட‌ர்பு அலுவ‌ல‌ர் ந‌ஜிமுதீன்,உட‌ற்க‌ல்வி ஆசிரிய‌ர் சுரேஷ் குமார் ஆகியோர் பாராட்டினார்க‌ள்

Thursday, January 12, 2012

17வது வார்டு ஜாமியா நகர் கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் !நகராட்சி தலைவர்


17வது வார்டு தெற்குதெரு பகுதியில் கவுன்சிலர் ஆனா மூனாவுடன் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா
தலைவர் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா 17வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்பகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அவருடன் அப்பகுதியின் கவுன்சிலர் ஆனா மூனா என்ற காதர் சாகிபு உடன் சென்றார்.







ஜாமியா நகர் பள்ளி அருகே அசுத்தமாக காட்சியளிக்கும் சாலை

கீழக்கரை 17வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு ஜாமியா நகர் பள்ளிவாசல் அருகே நீண்ட நாட்களாக சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறியதாவ‌து ,
17வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு ஜாமியா நகர் தொழுகைப்பள்ளி அருகே கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு 5 சென்ட் இடம் தேவைபடுகிறது.இப்பகுதியில் தெற்குதெரு ஜமாத்துக்கு சொந்தமான இடம் உள்ளது அங்கு கழிவு நீர் தொட்டி மற்றும் பம்ப் அமைக்க‌ 5 சென்ட் இடம் ஒதுக்கி தருமாறு தெற்குதெரு ஜமாத்தார்களிடம் இப்பகுதி கவுன்சிலர் ஆனா மூனாவுடன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன் அவர்கள் இப்பகுதி மக்களின் நலன் கருதி ஆவண செய்வதாக கூறியுள்ளார்கள்.விரைவில் அங்கு கழிவு நீர் அகற்றுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

கீழக்கரையில் வாடகை வாகனங்களுக்கு பெண் டிரைவர்கள் நியமிக்க கோரிக்கை !


இந்தியாவின் முதல் பெண் தொடர்வண்டி(ரயில்) ஓட்டுனர் திலகவதி, கேரளா.

இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் சாவித்ரி, தமிழ்நாடு

கீழக்கரையில் நூற்றுக்கணக்கில் மினி வேன்,கார்,ஆட்டோ போன்ற‌ வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இவற்றில் மினி வேன் மற்றும் ஆட்டோக்கள் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகளை மாத வாடகை அடிப்படையில் ஏற்றி செல்கின்றனர்.
மினிவேன்,ஆட்டோ போன்ற வாகன ஓட்டுநர்களில் சிலருக்கு முறையான உரிமம் இல்லை என்றும் சிறுவர்களும் வாகனங்களை ஓட்டுகிறார்கள்,அதிக வாடகை வசூல் செய்கிறார்கள், என்றும் இன்னும் பல் வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்படுகிறது. இவர்கள் மாணவ,மாணவிகளை ஏற்றி செல்லும் போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை இப்படி ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு நீண்டு கொண்டே போகிறது இது குறித்து அரசின் நடவடிக்கை பெயரளவில் உள்ளதே முறையான நடவ்டிக்கை இல்லை இந்நிலையில் கீழக்கரை கோஷா பெண்கள் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் வாடகை வாகனங்களில் பெண் ஓட்டுநர்களை நியமித்தால் ஊருக்கு நலன் பயக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் ஹசன் அப்துல் காதர்,ஹமீது சதக் ஆகியோர் கூறுகையில்,
கீழக்கரையில் ஏற்கெனவே ஒரு சில பெண் ஓட்டுநர்கள் மாத வாடகை அடிப்படையில் மாணவ,மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்து சென்று வருகிறார்கள்.எவ்வித குறைகளுமின்றி இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே ஆர்வமுள்ள பெணகளுக்கு பெண் பயிற்சியாளர்கள் மூலம் ஓட்டுநர் பயிற்சியளித்து அவர்கள் விரும்பினால் வாடகை வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்யலாம்.இதற்கான முயற்சியில் உள்ளூர் சமூக நல அமைப்புகள் ,அறக்கட்டளைகள் முயற்சி செய்ய வேண்டும் .சதக் கல்லூரி சார்பில் ஓட்டுநர் பயிற்சி மையம் உள்ளது அவர்களும் இந்த பணிகளில் ஈடுபடலாம்.
உள்ளூரில் பெண் டிரைவ்ர்கள் கிடைக்கா விட்டால் வெளியூரிலிருந்து பெண் டிரைவர்களை நியமிக்கலாம் .வாகன உரிமையாளர்களும் ஒத்துழைத்தால்தான் இது சாத்தியம்.நிச்சயம் பெண் ஓட்டுநர்கள் பள்ளி குழந்தைகளை அதிக கவனத்துடன் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் ,இது தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் உடனடியாக இதை நடைமுறை படுத்த முடியாது என்றாலும் படிபடியாக செயல்படுத்தலாம் என்றார்.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே,முகைதீன் இப்ராகிம் கூறுகையில் , பெண்களில் ஒருவர் வாடகை வாகனத்தை இயக்க முன் வந்தால் யாரேனும் ஒருவருக்கு எனது சொந்த‌ செலவில் கார் வாங்கி தர தயாராக உள்ளேன் என்றார்

Wednesday, January 11, 2012

சதக் கல்லூரியில் பிரேசில் நாட்டவர்கள் கலந்து கொண்ட தமிழர் விழா!



கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்மன் முகம்மது சதக் தம்பி நினைவு தமிழ் மன்றம் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் கலை பண்பாட்டு விழா கல்லூரி கலை அரங்கில் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராமசந்திரன் கலந்து கொண்டு பேசினார். மேலும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தமிழர் திருநாளை முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இறுதியாக தமிழ்துறை தலைவர் சதீஸ்குமார் நன்றி கூறினார். ஏராளமான மாணவர்கள் தமிழர் பண்பாட்டை உணர்த்தும் வகையில் வேஷ்டி அணிந்து கொண்டும்,மாணவிகள் சேலை அணிந்தும் விழாவில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உத்தரவின் பேரில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உடனடி நடவடிக்கை!



புத‌ர் ம‌ண்டியிருக்கும் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை வ‌ளாக‌த்தை சுத்த‌ம் செய்யும் ப‌ணி ந‌டைபெறுகிற‌து.
சில நாட்களுக்கு முன் அமைச்சர் சுந்தர்ராஜன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் நிறைந்து, செடிகள் வளர்ந்து சுற்றுப்புறம் சீர் கெட்டிருந்தது இதனை பார்வையிட்ட அமைச்சர் சுந்தர்ராஜன் உடனடியாக அப்பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார் .
இதனையடுத்து உடனடி நடவடிக்கையாக கீழக்கரை அரசு மருத்துமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நகராட்சி மேற்பார்வையாளர் ராமநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

கீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்களுக்கு பரிசு !






கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்டராக்ட் சங்கம்,கீழக்கரை ரோட்டரி சங்கம்,மக்கள் சேவை அறக்கட்டளை,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்திய 23வது சாலை பாதுகாப்பு வார விழா முகம்மது பாலிடெக்னிக் கல்லூரி கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது.முன்னாள் கவுன்சிலர் ஜஹாங்கிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் விபத்துக்கள் இல்லாமலும்,விதிமுறைகளை மீறாமலும் ஆட்டோ ஓட்டிய 6 ஓட்டுநர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன்,நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா ,அறக்கட்டளை நிறுவனர் உமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


இது குறித்து ஓட்டுநர் காதர் கூறியதாவது,


ஓட்டுநர்களுக்கு பரிசளித்து பாராட்டுவது பாராட்டுக்குறியது.அடுத்த முறை என்னென்ன தகுதிகள் அடிப்படையில் இந்த பரிசுகள் வழங்கப்படுகிறது என்பதை அனைத்து ஓட்டுநர்களுக்கும் தெரியப்படுத்தினால் அவர்களும் பரிசுக்கான தகுதிகளை வளர்த்து கொள்வதற்கு ஊக்கமளிக்கும் என்றார்,

Tuesday, January 10, 2012

கடற்கரையில் புதிய பாலம் அருகே குப்பைகளை கொட்டி எரிக்கும் அவலம் !


கீழக்கரையில் குப்பை பிர‌ச்ச‌னைக்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு எட்ட‌ப்ப‌டும் நிலையில் உள்ள‌து.இந்நிலையில் குப்பைக‌ளை கீழக்கரை க‌ட‌ல் ப‌குதியில் கொட்ட‌ப்ப‌டுவ‌தும் த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அதே போல் குப்பை எரிப்ப‌தும் சுற்று சூழ‌லை பாதிக்கும் என்று ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை விடுத்த‌வண்ண்ம் உள்ள‌ன‌ர்.ஆனால் எல்லாவ‌ற்றையும் புறந்தள்ளி விட்டு இன்ன‌மும் ஒரு சிலர் க‌ட‌ற்க‌ரை ப‌குதியில் குப்பைக‌ளை கொட்டுவ‌தோடு மட்டுமில்லாம‌ல் அத‌ற்கு தீ வைத்து சென்று விடுகின்ற‌ன‌ர்.இத‌னால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது மேலும் சுற்று சூழ‌லும் பாதிப்ப‌டைகிறது.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் ஹாஜா முகைதீன் கூறுகையில்,
கீழக்கரை கடற்கரை பகுதியில் இந்த பகுதிதான் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது இதையும் வீணடிக்கிறார்கள்.யாரும் இல்லாத சமயம் இப்பகுதியில் குப்பைகளை கொட்டி தீவைத்து சென்று விடுகிறார்கள்.இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுபவ‌ர்க‌ளால் தான் சுகாதார‌ சீர் கேடு ஏற்படுகிற‌து.இவ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ப‌ற்றி எந்த‌ ப‌ய‌மும் இல்லை.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.