Thursday, January 12, 2012

17வது வார்டு ஜாமியா நகர் கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் !நகராட்சி தலைவர்


17வது வார்டு தெற்குதெரு பகுதியில் கவுன்சிலர் ஆனா மூனாவுடன் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா
தலைவர் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா 17வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்பகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அவருடன் அப்பகுதியின் கவுன்சிலர் ஆனா மூனா என்ற காதர் சாகிபு உடன் சென்றார்.







ஜாமியா நகர் பள்ளி அருகே அசுத்தமாக காட்சியளிக்கும் சாலை

கீழக்கரை 17வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு ஜாமியா நகர் பள்ளிவாசல் அருகே நீண்ட நாட்களாக சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறியதாவ‌து ,
17வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு ஜாமியா நகர் தொழுகைப்பள்ளி அருகே கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு 5 சென்ட் இடம் தேவைபடுகிறது.இப்பகுதியில் தெற்குதெரு ஜமாத்துக்கு சொந்தமான இடம் உள்ளது அங்கு கழிவு நீர் தொட்டி மற்றும் பம்ப் அமைக்க‌ 5 சென்ட் இடம் ஒதுக்கி தருமாறு தெற்குதெரு ஜமாத்தார்களிடம் இப்பகுதி கவுன்சிலர் ஆனா மூனாவுடன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன் அவர்கள் இப்பகுதி மக்களின் நலன் கருதி ஆவண செய்வதாக கூறியுள்ளார்கள்.விரைவில் அங்கு கழிவு நீர் அகற்றுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.