Monday, January 16, 2012

மினி பஸ் பயணத்தில் மின்சார‌ம் தாக்கும் அபாய‌ம் !


மின்சார‌ வ‌ய‌ரை உர‌சிய‌ப‌டி மினி ப‌ஸ்


பஸ்சால் அறுந்து விழுந்த‌ வ‌ய‌ரை அக‌ற்றும் க‌ண்ட‌க்ட‌ர்

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அருகிலுள்ள‌ ஊர்க‌ளுக்கு மின் ப‌ஸ் (சிற்றுந்து) இய‌க்க‌ப்ப‌டுகிற‌து.கீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் ப‌ல் வேறு இட‌ங்க‌ள் வ‌ழியாக‌ செல்லும் இந்த‌ மினி ப‌ஸ்கள் மின் க‌ம்பிக‌ளை உர‌சி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கீழக்கரையை சேர்ந்த சீனி என்பவர் கூறுகையில்,
ந‌க‌ருக்குள் வ‌ல‌ம் வ‌ரும் இந்த‌ ப‌ஸ்கள் மிக‌வும் தாழ்வாக‌ தொங்கி கொண்டிருக்கும் மின்சார‌ வ‌ய‌ர்க‌ளை உர‌சி செல்கிற‌து. ஒரு சில‌ ச‌ம‌யங்க‌ளில் ப‌ஸ்க‌ளின் மேல் புற‌ம் உர‌சி மின்சார‌ வ‌ய‌ர்க‌ள் அறுந்து சாலையில் விழுந்திருக்கின்ற‌ன.நாங்கள் தகவல் தந்து மின் ப‌ணியாள‌ர்க‌ள் வ‌ந்து ச‌ரி செய்துள்ள‌ன‌ர்.

பஸ்சுக்குள் மின்சார‌ம் தாக்கி பெரிய‌ விப‌த்து ஏற்ப‌டுவ‌த‌ற்கு முன் உட‌ன‌டியாக மின் இலாகா பஸ் செல்லும் வழிகளில் தாழ்வான‌ மின் வ‌ய‌ர்க‌ளை ச‌ரி செய்ய‌வேண்டும்.மேலும் கீழக்கரை முழுவதும் பல இடங்களில் மின்சார வயர்கள் பல இடங்களில் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது.மின்சார இலாக இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மினி ப‌ஸ் டிரைவ‌ர்க‌ள் வேக‌மாக‌ வ‌ண்டியை ஓட்டுவ‌தால் அறுந்த‌ வ‌ய‌ர்க‌ளையும் இழுத்து செல்லும் நிலையும் ஏற்ப‌டுகிற‌து.நகருக்குள் வாகனத்தை ஓட்டுகிறோம் என்பதை மனதில் கொண்டு மின் ப‌ஸ் டிரைவ‌ர்க‌ளும் வேக‌த்தை குறைத்து ஓட்ட‌ வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.