Tuesday, January 10, 2012
கடற்கரையில் புதிய பாலம் அருகே குப்பைகளை கொட்டி எரிக்கும் அவலம் !
கீழக்கரையில் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் நிலையில் உள்ளது.இந்நிலையில் குப்பைகளை கீழக்கரை கடல் பகுதியில் கொட்டப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.அதே போல் குப்பை எரிப்பதும் சுற்று சூழலை பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தவண்ண்ம் உள்ளனர்.ஆனால் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு இன்னமும் ஒரு சிலர் கடற்கரை பகுதியில் குப்பைகளை கொட்டுவதோடு மட்டுமில்லாமல் அதற்கு தீ வைத்து சென்று விடுகின்றனர்.இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது மேலும் சுற்று சூழலும் பாதிப்படைகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஹாஜா முகைதீன் கூறுகையில்,
கீழக்கரை கடற்கரை பகுதியில் இந்த பகுதிதான் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது இதையும் வீணடிக்கிறார்கள்.யாரும் இல்லாத சமயம் இப்பகுதியில் குப்பைகளை கொட்டி தீவைத்து சென்று விடுகிறார்கள்.இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களால் தான் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது.இவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் பற்றி எந்த பயமும் இல்லை.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.