
ஆடுகளை திருட பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்
ஏர்வாடி தர்கா அருகே சின்ன ஏர்வாடியில் ஆடுகளை திருடியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து சின்ன ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது ,
இப்பகுதியை சேர்ந்தவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு சென்று கரை திரும்பிய நேற்று முன் தினம் சந்தேகத்திற்கு இடமாக ஸ்கார்பியோ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் ஆடுகளை ஸ்கார்பியோ காரில் ஏற்றி கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் ஆடுகளை திருடி செல்வது தெரிய வந்தது . உடனடியாக காவல் துறைக்கு தகவல் கூறினோம் என்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஏர்வாடி காவல் துறையினர் விசாரணை செய்து ஆடுகள் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் முகம்மது அன்சாரி மகன் நூருல் ஹக்(26),முகம்மது பாரூக் மகன் நூருல் அமீன்(22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருட்டுக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நீண்ட காலமாக கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆடுகள் திருடு போவதாக புகார் இருந்து வருவது குறிப்பிடதக்கது.
Hi Tech திருடர்கள்
ReplyDelete