Wednesday, January 11, 2012

சதக் கல்லூரியில் பிரேசில் நாட்டவர்கள் கலந்து கொண்ட தமிழர் விழா!



கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்மன் முகம்மது சதக் தம்பி நினைவு தமிழ் மன்றம் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் கலை பண்பாட்டு விழா கல்லூரி கலை அரங்கில் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராமசந்திரன் கலந்து கொண்டு பேசினார். மேலும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தமிழர் திருநாளை முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இறுதியாக தமிழ்துறை தலைவர் சதீஸ்குமார் நன்றி கூறினார். ஏராளமான மாணவர்கள் தமிழர் பண்பாட்டை உணர்த்தும் வகையில் வேஷ்டி அணிந்து கொண்டும்,மாணவிகள் சேலை அணிந்தும் விழாவில் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் ஹமீது சுல்தான் காக்கா

    ***>***

    பொங்கலை இவர்கள் தமிழர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர், இஸ்லாமியர்கள் தமிழ் நாட்டிற்குள் வருவதற்கு முன்னர் இருந்தே பொங்கல் தமிழ் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது எனவே இந்த பண்டிகைக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, மேலும் சொல்லப்போனால் இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை கெடுத்த கேட்ட செயல்.இந்த கெட்ட விஷயம் நடந்தது நான் படிக்கும் கல்லூரியில் தான். மிகவும் அவமானமாக உள்ளது. மாணவன் என்ற அடிப்படையில் முதலாம் ஆண்டான சென்ற வருடமே சொன்னோம் யாரும் எங்களின் பேச்சை சட்டை செய்யவில்லை. நான் போஸ்ட் செய்த இந்த பதிவுகளை படிக்கும் எங்கள் கல்லூரியின் இஸ்லாமிய உணர்வுள்ள staff கள் யாரேனும் இதனை அடுத்த வருடம் செய்யாமல் தடுத்தால் அல்லாஹ் அவர்களை மன்னிக்க வாய்ப்புள்ளது. இப்தார் நிகழ்ச்சிக்கு மாற்று மத நண்பர்களிடம் அவர்கள் மனமுவந்து தந்தால் பணம் வாங்குங்கள் என்று சொல்லிய நிர்வாகம் , இந்த பொங்கல் நிகழ்ச்சிக்கு இஸ்லாமியர்களை வற்புறுத்தி பணம் வாங்கியது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்...

    ReplyDelete
  2. அலைக்குமுஸ்ஸலாம் . உங்கள் பதிவுக்கு நன்றி !

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.