Friday, January 20, 2012

கீழக்கரையில் வீடு கட்டும் பணியில் விபத்து ! 2 பேர் பலி !


கீழக்கரை கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா அருகில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இதில் நேற்று கட்டிட வேலையில் விவேகனந்தபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் பாலமுருகன்(22),மேஸ்திரி செல்வராஜ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக இரண்டாவது மாடியில் கட்டப்பட்டிருந்த ஸ்லாப் இடிந்து விழுந்து இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் 108 ஆம்புலண்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதில் சிகிச்சை பலனிக்காமல் பாலமுருகன் நேற்று மரணமடைந்தார்.

இன்று காலை மேஸ்திரி செல்வராஜும் உயிரழந்தார். கீழக்கரை காவல் துறை சப்- இன்ஸ்பெக்டர் கனேசன் விசாரணை செய்து வருகிறார்.

ஆம்புலண்ஸ் வாகனம் தாமதமாக வந்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் குற்றஞ்சாட்டினர்.இது குறித்து துறை ரீதியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

2 comments:

  1. மக்களே ஆம்புலன்ஸ் வரும் வரை காத்து இருக்க வேண்டும் என்று ஏதேனும் சட்டம் இருக்கின்றதா. ஆம்புலன்ஸை குறை கூரும் நாம் ஏதேனும் ஒரு வாகனத்தில் அவர்களை மருத்துவமணைக்கு அலைத்து சென்று இருந்தால் இரண்டு உயிர் இன்று பிரிந்து இருக்காது. கீழைக்கரையில் வாகனத்திற்கா பஞ்சம். நம்மிடம் உதவும் மணப்பன்மை இல்லை என்பதுதன் உன்மை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தவறு இல்லை என்று நான் கூரவில்லை. ஆம்புலன்ஸிற்க்காக காத்திருந்த அந்த ஒரு மணி நேரம்தான் அவர்கள் உயிர் பிறிய காரணம் என்றால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான். இதை நாம் மாற்ற வேண்டும். இது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  2. மக்களே ஆம்புலன்ஸ் வரும் வரை காத்து இருக்க வேண்டும் என்று ஏதேனும் சட்டம் இருக்கின்றதா. ஆம்புலன்ஸை குறை கூரும் நாம் ஏதேனும் ஒரு வாகனத்தில் அவர்களை மருத்துவமணைக்கு அலைத்து சென்று இருந்தால் இரண்டு உயிர் இன்று பிரிந்து இருக்காது. கீழைக்கரையில் வாகனத்திற்கா பஞ்சம். நம்மிடம் உதவும் மணப்பன்மை இல்லை என்பதுதன் உன்மை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தவறு இல்லை என்று நான் கூரவில்லை. ஆம்புலன்ஸிற்க்காக காத்திருந்த அந்த ஒரு மணி நேரம்தான் அவர்கள் உயிர் பிறிய காரணம் என்றால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான். இதை நாம் மாற்ற வேண்டும். இது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.