Thursday, January 12, 2012

கீழக்கரையில் வாடகை வாகனங்களுக்கு பெண் டிரைவர்கள் நியமிக்க கோரிக்கை !

இந்தியாவின் முதல் பெண் தொடர்வண்டி(ரயில்) ஓட்டுனர் திலகவதி, கேரளா.

இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் சாவித்ரி, தமிழ்நாடு

கீழக்கரையில் நூற்றுக்கணக்கில் மினி வேன்,கார்,ஆட்டோ போன்ற‌ வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இவற்றில் மினி வேன் மற்றும் ஆட்டோக்கள் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகளை மாத வாடகை அடிப்படையில் ஏற்றி செல்கின்றனர்.
மினிவேன்,ஆட்டோ போன்ற வாகன ஓட்டுநர்களில் சிலருக்கு முறையான உரிமம் இல்லை என்றும் சிறுவர்களும் வாகனங்களை ஓட்டுகிறார்கள்,அதிக வாடகை வசூல் செய்கிறார்கள், என்றும் இன்னும் பல் வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்படுகிறது. இவர்கள் மாணவ,மாணவிகளை ஏற்றி செல்லும் போது அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை இப்படி ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு நீண்டு கொண்டே போகிறது இது குறித்து அரசின் நடவடிக்கை பெயரளவில் உள்ளதே முறையான நடவ்டிக்கை இல்லை இந்நிலையில் கீழக்கரை கோஷா பெண்கள் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் இப்பகுதியில் வாடகை வாகனங்களில் பெண் ஓட்டுநர்களை நியமித்தால் ஊருக்கு நலன் பயக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் ஹசன் அப்துல் காதர்,ஹமீது சதக் ஆகியோர் கூறுகையில்,
கீழக்கரையில் ஏற்கெனவே ஒரு சில பெண் ஓட்டுநர்கள் மாத வாடகை அடிப்படையில் மாணவ,மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்து சென்று வருகிறார்கள்.எவ்வித குறைகளுமின்றி இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே ஆர்வமுள்ள பெணகளுக்கு பெண் பயிற்சியாளர்கள் மூலம் ஓட்டுநர் பயிற்சியளித்து அவர்கள் விரும்பினால் வாடகை வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்யலாம்.இதற்கான முயற்சியில் உள்ளூர் சமூக நல அமைப்புகள் ,அறக்கட்டளைகள் முயற்சி செய்ய வேண்டும் .சதக் கல்லூரி சார்பில் ஓட்டுநர் பயிற்சி மையம் உள்ளது அவர்களும் இந்த பணிகளில் ஈடுபடலாம்.
உள்ளூரில் பெண் டிரைவ்ர்கள் கிடைக்கா விட்டால் வெளியூரிலிருந்து பெண் டிரைவர்களை நியமிக்கலாம் .வாகன உரிமையாளர்களும் ஒத்துழைத்தால்தான் இது சாத்தியம்.நிச்சயம் பெண் ஓட்டுநர்கள் பள்ளி குழந்தைகளை அதிக கவனத்துடன் பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் ,இது தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் உடனடியாக இதை நடைமுறை படுத்த முடியாது என்றாலும் படிபடியாக செயல்படுத்தலாம் என்றார்.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே,முகைதீன் இப்ராகிம் கூறுகையில் , பெண்களில் ஒருவர் வாடகை வாகனத்தை இயக்க முன் வந்தால் யாரேனும் ஒருவருக்கு எனது சொந்த‌ செலவில் கார் வாங்கி தர தயாராக உள்ளேன் என்றார்

3 comments:

 1. பெண்கள் முன்னுக்கு வருவது தப்பு இல்லை, அனால் கீழக்கரையை பொறுத்தவரை பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று கூறி அந்த பெண்களை சீரளிததுதான் மிச்சம், இதற்கும் மேல் கீழக்கரை பெண்களை சீரழிக்க விரும்பினால் உடனே இந்த பெண் டிரைவர்கள் நியமிக்க கோரிக்கையை கொண்டு வர வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன், இது யாரு மனதையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை, நான் உண்மையான கிழக்கரை வாசிதான், ஏதாவது சந்தேகம் கேட்க வேண்டும் என்றால் உடனே என்னை அழைக்கவும், போன்: +966560014394 , தயவு செய்து இந்த கோரிக்கையை விரும்புவர்கள் தங்களின் தொடர்பு எங்களோடு விரும்பங்களை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன், இப்படிக்கு
  இமாம் ..

  ReplyDelete
 2. வாகனத்த ஓட்டுறதுனால் பெண்கள் முன்னுக்கு வருவாங்கன்டு யார் சொன்னது ?

  இன்னும் ஊரில் எத்தனையோ நல்ல சீதேவிகள் இருக்கும் அதயெல்லம் சொல்லமாட்டிங்க‌
  படிக்க வச்சி என்னத்த சீரழிச்சுடாங்க உங்கள மாரி ஆள்கள் இப்படி சொல்லி விளம்மபரம் செஞ்சிதான் இந்த பேச்சி அதிகாமாயிருச்சு
  இன்னைக்கு மட்டுமா சீரழிவு கீழக்கரையில் மட்டுமில்லா எல்லா இடத்துலயும் தான் அங்கொன்னு ,இங்கொன்னுனு நடக்குது எல்லா டைம்லயும் இரிந்துருக்கும் அந்த காலத்துல்லயும் நடநிதுருக்குது இப்ப மீடியா இரிக்கிறதால அதிகமாதிரி தெரிகிறது.சீர‌ழிவு இதுனால‌தான்டுலாம் சொல்ல‌ முடியாது.டிவி,செல்போன்,இன்டெர்நெட் இப்ப‌டி எத‌ வேண்முனாலும் சொல்ல‌லாம்.ஆனா நம்ம‌,ந‌ம்ம‌ வீட்டுவொல்ல‌ ஒழுக்க‌த்தை க‌டைபிடிச்சால‌ போதும் ஊரு ச‌ரியாயிரும் ஊருண்டு தனியா ஒன்னும் இல்ல‌

  இன்னைக்கு எல்லாத்துக்கு லேடீஸ் வந்துட்டோம்,டாக்டர்,இன்ஞ்சினர்,டிரைவர்
  ஒரு காலத்துல் ஆண்கள் பாத்த பேச மாட்டோம் இப்ப உள்ள‌ சூழ்நிலைக்கு அப்ப‌டி முடியுமா?

  பொம்புல டிரைவர் இருந்தாங்கன்ன ஸ்கூல் பிள்ளைவொல நம்பி அனுப்பலாம்.எங்களுக்கும் சிரமம் குறையும். ஸ்கூலுக்கு மட்டும் இத இம்புரூவ் செய்யலாமே ?
  உஙக்ளுக்கு என்ன வருத்தம் பொறுக்கிவொ தொல்லை கொறஞ்சு போயிரும்ண்டா

  எந்த சமுதாயத்துல பெண்கள் க‌ல்விய‌றிவு பெற்றாங‌க‌லோ அந்த‌ ச‌மூகம்தான் வ‌ள‌ர்ச்சிய‌டையும்.

  உங்க நம்பர்ல எதுக்கு போன் பன்னனும்? நீங்க யாரு ?என்ன அமைப்பு வச்சிருக்கீங்களா? வெளக்கம் சொல்ல முடியுமா?

  அயிசத் ரில்வானா

  ReplyDelete
 3. வாகனத்த ஓட்டுறதுனால் பெண்கள் முன்னுக்கு வருவாங்கன்டு யார் சொன்னது ?

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.