கீழக்கரை பகுதியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான சிறுவர் ,சிறுமிகள் பிச்சை எடுத்து வருகின்றனர்.மிகவும் சோர்ந்து பரிதாப நிலையில் உள்ள இக்குழந்தைகள் தெருக்கள், கடைகள் ஆகிய இடங்களில் பிச்சை எடுக்கின்றனர். கூட்டம் கூட்டமாக குழந்தைகளை அழைத்து வரும் இக்கும்பல் ஒவ்வொரு பகுதிக்கு 2 குழந்தைகள் வீதம் பிச்சை எடுக்க சொல்லி வற்புறுத்துகிறது.ஒரு நாள் முழுவதும் பிச்சை எடுத்த பின் குழந்தைகளிடம் சேர்ந்துள்ள பணத்தை இவர்கள் பிடுங்கி கொள்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் கை,கால்களில் சூடு போடப்பட்ட தடம் உள்ளது.பிச்சை எடுக்க வெளீயூரிலிருந்து சிறுவர்,சிறுமிகள் வேன்,மற்றும் பஸ்களில் அழைத்து வரப்படுகிறார்கள்.பின்னர் அவர்கள் வேறு ஒரு பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.இப்பகுதியில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கு கும்பல் நடமாடுவதால் இப்பகுதியில் உள்ள பெற்றோர் பீதி அடைந்து உள்ளனர்.
இது குறித்து சதக் இப்ராகிம் கூறியதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர்வாடியில் இதே போல் ஒரு கும்பல் செயல் பட்டது.போலீசாரின் நடவடிக்கையால் அங்கிருந்து காலி செய்து விட்டு ஓடினார்கள்,தற்போது கீழக்கரையில் செய்ல்பட தொடங்கி விட்டார்கள். போலீசார் சிறுவர்,சிறுமிகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.