Monday, February 21, 2011

கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கபட வேண்டும் ! கீழை ஜ‌மீல் கோரிக்கை


கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கபட வேண்டும் .இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜ‌மீல் கோரிக்கை


ராமாநாத‌புர‌ம் மாவட்டத்திற்கு 5 சட்டமன்ற தொகுதிகள் கடந்த தேர்தல் வரை இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அவைகள் முறையே, கடலாடி, இராமநாதபுரம், பரமக்குடி, முதுக்குளத்தூர் மற்றும் திருவாடனை. ஆனால் தேர்தல் கமிசன் செய்த தொகுதி மறு சீரமைப்பில் நாம் ஒரு தொகுதியினை இழந்து விட்டோம்.நம் மாவட்டத்தில் மொத்தம் வாக்காளர் எண்ணிகை 8,86,659 ஆகும். இந்த 4 தொகுதியும் 2 இலட்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ளது.
முதுகுளத்தூர் - 254,552
இராமநாதபுரம் - 218,330
பரமக்குடி - 201,912
திருவாடனை - 211,865

ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள விருதுநகரின் வாக்காளர் எண்ணிக்கை 12,32,249 ஆகும். இத்தனை வாக்காளர்கள் கொண்ட இந்த மாவட்டத்திற்கு ராஜ பாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுளி என 7 சட்டமன்ற தொகுதிகளாம். ஒவ்வொரு தொகுதியும் சுமார் 1 இலட்சத்தி 80 ஆயிரம் வாக்காளர்களுக்கும் கீழ்தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விருதுநகர் தொகுதி 1 இலட்சத்தி 65 ஆயிரம் வாக்காளர்களைதான் கொண்டு உள்ளது.

ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எல்லா தொகுதிகளும் 2 இலட்சத்தி 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் கொண்டுள்ளது. அதிலும் முதுகுளத்தூர் தொகு 2 இலட்த்தி 54 ஆயிரம் வாக்காளர்களை கொண்டு இருக்கிறது.
விருதுநகர் மட்டும் அல்ல, பிரபலங்கள் போட்டியிடும் சென்னையிலுள்ள பல தொகுதிகளும் வாக்காளர்கள் மிக குறைவாக இருக்கின்றனர். (உ-ம்) எக்மோர், துறைமுகம், ராயபுரம் போன்ற தொகுதிகள். ராயபுரம் தொகுதி வெறும் 1 இலட்சத்தி 45 ஆயிரம் வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளது.

10,24,119 வாக்காளர்களை கொண்ட நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு 6 தொகுதிகள். அதில் 3 தொகுதிகள் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவே. கிள்வலூர் தொகுதியில் 1 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

12 இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டத்திற்கு 7 தொகுதிகள், 10 இலட்சம் வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களுக்கு 6 தொகுதிகள். ஆனால் எட்டரை இலட்சம் வாக்காளர்கள் உள்ள நம் இராமநாதபுரத்திற்கும் மட்டும் 4 தொகுதிகள் மட்டும்?

இராமநாதபுரம் மாவட்டத்தின் மீது மட்டும் அரசுக்கு என்ன கோபம்? இது குறித்து ஏன் யாரும் அக்கறை செலுத்தவில்லை? ஒரு தொகுதியினை இழப்பதால் நாம் அரசின் அத்தனை நலத்திட்டங்களையும் இழக்கின்றோம். மிகவும் பின் தங்கிய, வறட்சி மாவட்டம் என பெயர் எடுத்த நம் மாவட்டத்தை புறம் தள்ளுவது ஏன்?

விருதுநகர் மாவட்டத்தில் ப.சிதம்பரம், வைகோ உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியிட்டு வெற்றி பெறும் தொகுதிகள் இருப்பதால் அந்த மாவட்டத்திற்கு கூடுதல் தொகுதிகளோ...

விருதுநகர் மாவட்டம் போல், தொகுதிக்கு 1 இலட்சத்து 75 ஆயிரம் பேர் என எடுத்தால், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் 5 தொகுதி ஒதுக்கி இருக்கலாம். மாவட்டத்திற்கு அதிக வருமானம் தரும் கீழக்கரை நகராட்சியினை புதிய தொகுதியாக அறிவித்து இருக்கலாம்.

தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால் இகோரிக்கையை நிறைவேற்ற‌ முடியாது. என்றாலும் இத்தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் இழந்த ஒரு தொகுதியினை மீண்டும் கொண்டு வர யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு? என்ற கோரிக்கையை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன் வைத்தால்.... பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ர‌சூல் தீன் கூறிய‌தாவ‌து, ஜ‌மீல் அவ‌ர்க்ள் வைத்த‌ கோரிகையை அடுத்த‌ தேர்த‌லிலாவ‌து அர‌சு ப‌ரீசிலிக்க‌ வேண்டுன் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.