Saturday, February 26, 2011

கீழக்கரை கல்லூரியில் நுகர்வோர் தின விழா


கீழக்கரை, பிப். 26&ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் தினவிழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமை வகித்தார். பேராசிரியர் ஷேக் அப்துல்லா வரவேற்றார். நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் நெல்லை வேந்தன் திறந்து வைத்தார். அக்மார்க் தரம் பிரித்தல், உணவு பொருளில் கலப்படம், நுகர்வோரின் கடமைகள், உரிமைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக புகார்கள், தீர்வுகள் குறித்து முதுநிலை விற்பனை அலுவலர் அய்யப்பன், பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக உறுப்பினர் புரோஸ்கான், தமிழக அரசு மாநில நுகர்வோர் பாதுகாப்புக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ், ஜெயகாந்தன், கரீம்கனி ஆகியோர் பேசினர்.
பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பாண்டி தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் பேராசிரியர்கள் கதிஜாபேகம், சேகு சகுபான் பாதுஷா, சதீஷ்குமார், நாசர் மாணவர் அப்துல் வாகித் மவுலானா, மாணவி கதீஜா பீவி ஆகியோர் பேசினர். போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் துரைசிங்கம் பரிசு வழங்கினார். பேராசிரியர் நாசர் நன்றி கூறினார். குடிமக்கள் நுகர்வோர் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.