Thursday, February 17, 2011

கீழக்கரை பகுதியில் காஸ் விற்று காசு சம்பாதிக்கும் கும்பல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

கீழக்கரை பிப்.18 கீழக்கரை பகுதியில் காஸ் சிலிண்டர்களுக்கு முன்னெப்போது்ம் இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.இங்குள்ள கா்ஸ் ஏஜென்சியில் 15 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சப்ளை செய்யும் சிலிண்டர்கள் மாதத்துக்கு 6ஆயிரத்து 900 மட்டுமே.டிமாண்ட் அதிகம் சப்ளையோ குறைவு ,பதுக்கல் வாங்கி விற்பது போன்ற வேலைகள்
அதிகரித்திருக்கின்றன.
ஓட்டல் பேக்கரி போன்ற வர்த்தக நிறுவனங்கள்,மினி வேன்,ஆட்டோக்களில் வீ்ட்டு உபயோ்க சிலிண்டர்களை தயக்கமின்றி பயன்படுத்தப்படுகின்றன.
புதிதாக காஸ் கனெக்சன் பெற்ற சிலர் தங்கள் பெயரில் சிலிண்டர்களை பதிவு செய்து வாங்கி விற்கும் தொழிலும் கனஜோராக நடைபெறுகிறது. மற்றவர்கள் பெயரி்ல் உள்ள இணைப்புகளுக்கு கா்ஸ் ஏஜென்சி ஊழியர்களே பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்கும் செயலும் நடக்கிறது.இதனா்ல் கீழக்கரை பகுதியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சி்னையாக மாறி வருகிறது.

இதுகுறித்து தங்கம் ராதகிருஸ்ணன் கூறியதாவது, காஸ் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவங்கள். அதிகரித்து வருகின்றன .வசதி படைத்தவர்கள் சில நூறு ரூபாய்களை கொடுத்து வாங்கி விடுவர் வசதி
இல்லாதோர் பாடு திண்டாட்டம் தான.இது குறித்து இந்தியன்
ஆயில் கார்ப்பேரசன் உயர் அதிகாரிகளைடம் புகார் தெரிவித்தும்
எந்த வித நடவடிக்கையு்ம் இல்லை உடனடி நடவடிக்கை எடுத்தாலதான்
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியு்ம் என்றார்




No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.