Wednesday, February 23, 2011

கீழக்கரை நகருக்கு்ள் மீண்டும் மின் கட்டண அலுவலகம்! நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு


கீழக்கரை நகராட்சி தலைவர் பசீர் அகமது நிருபர்களிடம் மி்ன் துறை அதிகாரிகளின் பணிகளில் அதிருப்தி தெரிவித்தார் .அவர் கூறுகையில், கீழக்கரையில் சாலைகளில் மின் கம்பங்கள் மற்றும் மி்ன் இணைப்புகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் இப்பகுதியி்ல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.சில தினங்களுக்கு முன் உயர் அழுத்த மின் கம்பியில் லாரி உரசியதால் மின் கம்பி அறுந்து கண்ணன் என்ற வாலிபர் உயிரழந்தார்.இவ்விபத்து நடப்பதற்கு முன்பு இது குறித்து கீழக்கரை மி்ன்சார அதி்காரிகளிடம் நடவடிக்கை எடுக்க பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை மறுபடியு்ம் ஒரு விபத்து நடப்பதற்கு முன் நடவடிக்கை தேவை .

மேலும் கீழக்கரையில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மின் கட்டண அலுவலகம் மாற்றல் விசயத்தில் ,கட்டிட உரிமையாளர் காலி செய்ய சொன்னதால். ஊருக்கு வெளியே மாற்றப்பட்ட மின் கட்டண அலுவலகத்தை மீண்டும் கீழக்கரை நகருக்கு்ள் அமைப்பதற்கு ,நடுத்தெரு ஜும்மா பள்ளி ஜமாத்தார்கள் ஒத்துழைப்புடன் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இடம் பெறப்பட்டு விட்டது.மேலும் அமைச்சர் சுப.தங்கவேலன் முயற்சியில் மீண்டு்ம். ஊருக்குள் மாற்றுவதற்கான அரசு தரப்பிலான ஒப்புதல் பெறப்பட்டிருந்தாலும் ஒரு சில மின்துறை அதிகாரிகளின் மந்தமான நடவடிக்கைகளா்ல் இடமாறுதலுக்கான பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.இது குறித்து நகராட்சி சார்பில் பலமுறை சென்று கீழக்கரை மி்ன்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியு்ம் எந்த பலனும் ஏற்படவில்லை.இது போன்ற மக்களி்ன் அத்தியவசிய பிரச்சினைகளி்ல் அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.